ஒபன் சோர்ஸ் மென்பொருள் என்றால் என்ன?
கீழே இருப்பது திண்ணை வலைத்தளத்தில் Thursday October 30, 2003 அன்று வெளியான கட்டுரை.
"ஒபன் சோர்ஸ் என்பது கணினி பென்பொருள் என்பதில் துவங்கி இன்று பல துறைகளில் கையாளப்படும் ஒரு கோட்பாடு/முன்மாதிரியாக உள்ளது.நவம்பர் 2003 wired இதழில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரை இது குறித்த ஒரு நல்ல அறிமுகக் கட்டுரையாக உள்ளது.மனித ஜீனோம் தகவல்கள், அறிவியல் சஞ்சிகைகள் வெளியிடுவது போன்று பலவற்றில் இதன் தாக்கம் உள்ளது. இந்த முன்மாதிரியை எப்படி பயன்படுத்த முடியும்,இதனை அடிப்படையாகக் கொண்டு புதியனவற்றை படைக்க முடியுமா, ஆம் எனில் எப்படி போன்ற கேள்விகளை எதிர் கொள்வது, உபயோகிப்பாளர் பங்கேற்ப்பு,ஒபன் சோர்ஸ் குறித்தும் ஆய்வுகள் நடைபெறுகின்றன. ஒபன் சோர்ஸ் ஒரு கூட்டு முயற்சி மூலம் புதியவற்றை படைப்பது, இருப்பவற்றை மேம்படுத்துவது சாத்தியம் , இதில் அறிவு சார் சொத்துரிமைகள் கூட்டு முயற்சிக்கு இடையூறாக இருக்க வேண்டியதில்லை என்று காட்டியுள்ளது.வளர்முக நாடுகளில் இதனை பலவிதங்களில் பயன்படுத்த முடியும்.Wikipedia என்ற இணைய கலைக்களஞ்சியம் இதற்கு ஒரு நல்ல உதாரணம்.ஆர்வமுள்ள தனி நபர்கள் கூட்டாக செயல்படும் போது project gutenberg போன்ற திட்டங்கள் ஒரு நூலகத்தையே நம் முன் வைக்கின்றன. இதையெல்லாம் ஆராய்ந்த பென்க்லர்(benkler) Coase 's Penguin என்ற கட்டுரையில் ஒபன் சோர்ஸ் 21ம் நூற்றாண்டிற்கான முன்மாதிரி என்று கருத்து தெரிவித்துள்ளார். wired ல் வெளியாகியுள்ள கட்டுரை ஒபன் சோர்ஸ் எவ்வாறு நடைமுறையில் தீர்வுகளை காண உதவுகிறது என்பதை எளிய நடையில் விளக்கியுள்ளது. ஒபன் சோர்ஸ் என்பது ஒரு தத்துவமும் கூட, கோட்பாடும் , நடைமுறையும் ஒன்றை ஒன்று வளப்படுதுவதை இதில் காணலாம்.wiredல் வெளியான கட்டுரையை இணையத்தில் காண http://www.wired.com/wired/archive/11.11/opensource.html
open access journals என்ற புதிய வகை journals வெளியாகியுள்ளன.இவற்றினை இணையத்தில் இலவசமாகப் படிக்க முடியும்.வெல்கம் டிரஸ்ட் உட்பட பல அமைப்புகள் இதை ஆதரிக்கின்றன.
இந்த முறையில் கட்டுரை வெளியிட கட்டுரை எழுதியவர்(கள்) $1500 தர வேண்டும், கட்டுரை மதிப்பிடப்பட்டு பிரசுரத்திற்கு ஏற்கப்பட்டால். Science, Nature போன்ற journal கள் கட்டுரையை
வெளியட பணம் கோருவதில்லை. எனவே இம்முயற்சி வெற்றி பெறுமா என்று சந்தேகிப்பவர்களும் உண்டு.
பென்க்லரின் கீழ்கண்ட கட்டுரைகள் முக்கியமானவை
Benkler. 2002. Coase 's Penguin, or, Linux and The Nature of the Firm. 112 Yale L.J. (Winter 2002-03). Available at http://www.law.nyu.edu/benklery/.
Benkler. 2001. 'A Political Economy of the Public Domain: Markets in Information Goods vs. The Marketplace of Ideas, ' in Expanding the Bound of Intellectual Property: Innovation Policy for the Knowledge Society (R. Dreyfuss, D. Zimmerman, H. First eds.). Oxford. 2001
பென்க்லர் தவிர ஜேம்ஸ் பாய்ல், லாரன்ஸ் லெசிக் எழுதியுள்ளவைகளும் முக்கியமானவை.சில மாதங்கள் முன்பு Research Policy ஒபன் சோர்ஸ் குறித்து ஒரு சிறப்பிதழ் வெளியிட்டது."
என் பார்வையில் ஒபன் சோர்ஸ் திறந்த கட்டற்ற மூலப்பொருள் உதராணத்திற்கு உங்களிடம் ஒரு பொருள் செய்யும் திறமை இருக்கு வைத்துக் கொள்வோம். அது உங்களுக்கு மட்டும் தெரியாமல் அதை எப்படி செய்வது என்று எல்லோருக்கும் கற்றுக்கொடுத்து அதன் மூலம் அதற்கு இன்னும் பல மூலங்கள் மூலம் இணைத்து மெருகேற்றுவதே.
ஒபன் சோர்ஸ் என்றால் என்ன?
"வேறு யாருக்கும் இன்னும் தெளிவாக இருந்தால் தனி மடல் அனுப்பவும் கட்டாயம் பிரசுரிக்கிறேன்."
Jan 3, 2009
எழுதியவர்
Vadielan R
Labels:
Computer
Subscribe to:
Post Comments (Atom)
எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்
-
நண்பர்களே டெலிகிராம் ஆப் வழியாக நிறைய நாவல்கள் மற்றும் திரை விமர்சனங்கள் இருக்கின்றன. அது போல் நானும் நாவல்கள் மற்றும் புத்தகங்களுக...
-
ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 300க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வ...
-
ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 350க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், ...
-
நண்பர்களே உங்களிடம் உள்ள டிவிடி வீடியோவை சுலபமாக AVI கோப்பாக மாற்ற இந்த மென்பொருள் உபயோகப்படும். வேற மென்பொருள் மூலம் செய்தாலும் இதன் இடை...
-
நண்பர்களே நாம் கூகிளில் உள்ள கூகிள் டாக்ஸ் உபயோகப்படுத்தியிருப்போம். அந்த ஆன்லைன் Google docs நிறைய கோப்புகள் சேமித்திருப்போம். அப்படி சேம...
-
நண்பர்களே சிலர் ஆன்டிவைரஸ் எதிர்ப்பு மென்பொருட்கள் நிறுவி இருப்பார்கள். சில நேரம் அந்த ஆன்டி வைரஸ் இருந்தும் சில நேரம் மண்டையை போட்டு விடும்...
-
நண்பர்களே என்னுடைய பதிவு முதல் முறையாக விகடன் குழுமத்தினருடைய யூத்புல் விகடனில் வெளிவந்துள்ளது. என்னுடைய படைப்பை வெளியிட்டமைக்கு விகடன் கு...
-
நண்பர்களே அனைவருக்கும் வணக்கம். உலகத்தில் எத்தனையோ மென்பொருட்கள் இருந்தாலும் சில மென்பொருட்கள் நம் கணணியில் கட்டாயம் இருக்க வேண்டிய மென்பொ...
-
நண்பர்களே செல்பேசிகளுக்கான் இலவச வலை உலாவிகள் உங்களுக்காக 1. ஒபரா மினி - தரவிறக்க சுட்டி 2. யூசி வெப் - தரவிறக்க சுட்டி 3. ஸ...
-
நண்பர்களே அனைவருக்கும் உதவகூடிய 101 தொழில்நுட்ப தளங்களை இங்கே அறிமுகப்படுத்துகிறேன். அனைவருக்கும் இந்த தளங்கள் உபயோகமாக இருக்கும் என்பது த...
1 ஊக்கப்படுத்தியவர்கள்:
நன்றி.Super
தமிழ்நெஞ்சம்
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்