நண்பர்களே அனைவருக்கும் ஒரு சூப்பரான வீடியோ மாற்றியை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். இப்போதிருக்கும் சூழ்நிலையில் கணினியில் வீடியோ மாற்றி இல்லாத கணினியை காண்பது அரிது. ஆனால் இப்பொழுது இருக்கும் வீடியோ மாற்றிகளில் மிகவும் வேகமாக வேலை செய்யும் வீடியோ மாற்றியை கண்டுபிடித்து நிறுவுவது என்பது மிகவும் கடினம்.
அந்த வகையில் இந்த வீடியோ மாற்றி மிகவும் அருமையான வீடியோ மாற்றி
மிகவும் வேகமானது.
எந்த ஒரு நச்சுநிரல்கள் இல்லை.
எந்த ஒரு கோடேக்குகளும் நிறுவ வேண்டியதில்லை.
எந்த ஒரு வீடியோவிலும் இருந்து எந்த ஒரு வீடியோவிற்கும் மாற்ற முடியும்.
எந்த ஒரு ஆடியோவிலும் இருந்து எந்த ஒரு ஆடியோவிற்கும் மாற்ற முடியும்.
பலதரப்பட்ட வீடியோ கோப்புகளை ஒரு வகையான கோப்பாக மாற்றலாம்.
இந்த வீடியோ மாற்றி மென்பொருளின் பெயர் இயூசிங்
இயூசிங் வீடியோ மென்பொருளை தரவிறக்க சுட்டி
ஒபரா 11 பீட்டா
ஒபரா இணைய உலாவி இப்பொழுது 11 பீட்டா ஆர்சி என்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஒபராவின் புதிய இணைய உலாவியை சோதித்துப் பார்க்க இங்கே சுட்டி
கூகிள் போல்டரை வலையேற்ற
கூகிள் கோப்புகள் இணையதளத்தில் எப்பொழுதும் எந்த ஒரு கோப்புகளையும் பதிவேற்றலாம். ஆனால் போல்டர்களை பதிவேற்ற முடியுமா. இது குறித்து நாம் எப்பொழுதும் சிந்தித்ததில்லை. கூகிள் நிறுவனத்தினர் இந்த வசதியை தானாக செய்து தரும் வரை காத்திருக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். அவர்கள் செய்து தரும் வரை நாம் காத்திருக்க வேண்டாம். அதற்கான ஒரு மென்பொருள் இப்பொழுது வெளிவந்திருக்கிறது.
இந்த மென்பொருளின் பெயர் சைபர்டக் இந்த மென்பொருள் மூலம் சுலபமாக கூகிள் கோப்புகள் இணையத்தளத்தில் வலையேற்றலாம்.
இந்த மென்பொருளை நிறுவி திறந்து கொண்டு அதில் கூகிள் டாக்ஸ் என்பதனை தேர்வு செய்து உங்கள் பயனர் சொல் மற்றும் கடவுச் சொல்லை கொடுத்தால் உங்கள் கூகிள் கோப்புகள் தெரிய ஆரம்பிக்கும். மென்பொருளின் மேலே அப்லோடு என்ற பட்டனை அழுத்தினால் உங்கள் கணினியின் எக்ஸ்பளோரர் தோன்றும் அதில் உங்களுக்கு தேவையான போல்டரை தேர்ந்தெடுத்து அப்லோடு செய்தால் போதும் உங்கள் கூகிள் டாக்ஸ் கணக்கினுள் இந்த கோப்புகள் போல்டரோடு சேமித்து விடும்.
இது ஒரு FTP யாகவும் செயல்படும்.
இந்த மென்பொருள் ஒரு திறந்த நிலை கட்டற்ற மென்பொருள் என்பதும் ஒரு சிறப்பு.
இந்த மென்பொருளில் கூகிள் மட்டுமல்ல அமேசான் S3 என்ற வலைத்தளத்திலும் கோப்புகளை பதிவேற்றலாம்
மென்பொருள் தரவிறக்க சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...