நண்பர்களே நாம் நிறைய வீடியோ மற்றும் ஆடியோ கோப்புகள் மற்றும் புத்தகங்களை தரவிறக்கம் செய்வோம்.
எந்த மாதிரி தளத்தில் செய்வோம் என்றால் Bittorent, Rapidshare,
Megaupload, MediaFire, Hotfile, Netload.in, FIlesonic, Easy-share,
Megashare, மற்றும் Fileserve போன்ற தளங்களில் இருந்து தரவிறக்கம்
செய்வோம். இதில் உள்ள அனைத்திலும் ஒரு பிரச்சனை நேரம் மற்றும் தரவிறக்கும் வேகம்
தான். ஒரு தளங்களில் ஒரு கோப்பினை தரவிறக்கம் செய்ய முயற்சி செய்தால்
முதலில் தரவிறக்க 60 விநாடிகள் வரை காத்திருக்க வேண்டும். அதன் பிறகு
தரவிறக்கம் செய்ய வேண்டும். அது மட்டுமல்லாமல் தரவிறக்க வேகம் மிகவும்
குறைவாகவும் இருக்கும்.
இதை தீர்க்க ஒரு இலவச தளம் உள்ளது. அதன் பெயர் fetch.io இது ஒரு Cloud Computing முறையில் இயங்ககூடிய தளம்.
இந்த வலைத்தளம் மூலம் Bittorent, Rapidshare, Megaupload, MediaFire,
Hotfile, Netload.in, FIlesonic, Easy-share, Megashare, மற்றும்
Fileserve போன்ற தளங்களில் நேரக் காத்திருப்பு இல்லாமல் தரவிறக்க முடியும்.
இதில் ஒரே நேரத்தில் பலதரப்பட்ட தளங்களிலுருந்து தரவிறக்கம் செய்ய முடியும்.
தரவிறக்கப்படும் வீடியோ கோப்புகள் நேரடியாக MP4 ஆக மாற்றி தரும்.
இந்த வலைத்தளத்தில் மூலம் நான் பத்து எம்பி உள்ள வீடியோ கோப்புகள் ஓரு மூன்று விநாடிகளுக்குள் தரவிறக்கித்தந்தது.
இணையத்தள சுட்டி
நண்பர்களே இதுவரை நம்முடைய வலைத்தளத்தின் பெயரை தன்னுடைய வலைத்தளத்தின்
டாப் டென்னில் இடம்பெறச் செய்த நண்பரும் பதிவருமான திரு. பிரபு என்கிற
சாய்தாசன் அவர்களுக்கு எனது நன்றி
இனி நமது வலைத்தளத்தின் சுட்டிகள் அவருடைய டாப் டென்னில் வெளிவராது.
ஏன் வெளிவராது என்று கேட்பவர்களுக்கான பதில் இதற்கு முன் இட்ட பதிவான பிடிஎப் பாஸ்வேர்ட் கண்டுபிடிக்க மற்றும் வைபை வாட்சர் உங்களுக்காக
என்ற பதிவினை நீக்கினால் மட்டுமே நம் பதிவுகள் வெளிவரும் என்று
கூறிவிட்டார். எனக்காக நிறைய உதவிகள் செய்தவர் அதுமட்டுமல்லாமல் நிறைய
அறிவுரைகள் கூறியவர் இருந்தாலும் இதற்கான பதிலை நான் வாசகர்களிடம் இருந்து
எதிர்பார்க்கிறேன். இந்த பதிவினை நீக்கலாமா வேண்டாம் என்று நீங்களே
கூறுங்கள். எனக்கு குழப்பமான மனநிலையில் இருக்கிறேன். வாசகர்களுடைய
உதவியினை எதிர்பார்க்கிறேன்.
வாசகர்களின் விருப்பத்திற்கிணங்க அந்த குறிப்பிட்ட பதிவில் சில பிடிஎப் பாஸ்வேர்ட் கண்டுபிடிக்கும் முறையை நீக்கி விட்டேன். தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டுகிறேன்.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே இதுவரை வெளிவரும் மென்பொருட்கள் வெளியிடும் நிறுவனங்கள் மற்றும் இலவசமாக ப்ரோமோசன் செய்யும் அனைத்துமே நேரடியாக தமிழ் பிளாகிற்கோ தமிழ் தளத்திற்கோ இலவசமாக தந்ததில்லை இப்படி இருக்க ஒரு நிறுவனம் தானாக முன்வந்து ஒன்றல்ல இரண்டு மென்பொருட்கள் கெளதம் இன்போடெக்கிறாக ஒரு மாதத்திற்கு
www.gouthaminfotech.com படிக்கும் அனைவருக்கும் இலவசமாக தர முன் வந்திருக்கின்றனர்
அந்த ஒன்றில் ஒரு மென்பொருள் ஏற்கனவே இருமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நமது தளத்தினை படிப்பவர்களுக்கு சட்டரீதியான இலவசமாக அறிமுகப்படுத்தியிருக்கிறேன். அந்த மென்பொருள் எனது முந்தைய பதிவான
சட்டரீதியான நோவா பிடிஎப் மென்பொருள் தான். இந்த நோவா பிடிஎப் மென்பொருளை நம் தளத்திற்காக ஒரு மாதத்திற்கு இலவசமாக தர சம்மத்தித்திருக்கின்றனர்.
சென்ற முறை பதிவு செய்தவர்களுக்கும் கட்டாயம் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அத்துடன் Registration Name Gouthaminfotech என்று உங்களுக்கு மெயிலில் இருக்கும். சென்ற வழிமுறை போலவே தான் இந்த முறையும் உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி கொடுத்தால் போதும்.
Nova Pdf Creator Free Licenses Registration Page -
http://www.novapdf.com/free/gouthaminfotech.html
Nova Pdf Creator Application Download Page -
http://www.novapdf.com/en/download.html
இந்த தளத்தின் கீழ் பகுதியில் நம் வலைத்தளத்தின் லோகோ இடம்பெற்றிருக்கும்.
அடுத்து இவர்கள் தர இருக்கும் மென்பொருள். பேக்அப் மென்பொருளாகும் Backup4all Lite உங்கள் கணினியில் உள்ள தேவையான கோப்புகளை பேக் அப் செய்து வைக்கவும் தேவையான பொழுது திரும்ப ரீஸ்டோர் செய்யவும். இந்த மென்பொருள் மிகவும் உதவியாக இருக்கும். அத்துடன் இந்த மென்பொருளில் உள்ளிணைந்த சிடி, டிவிடி பர்னர் இருப்பதால் நேரடியாக பேக் அப் செய்து டிவிடி சேமித்துக் கொள்ளலாம். இந்த மென்பொருளின்
மேலதிக தகவலகள் தெரிந்து கொள்ள
சுட்டி
இவர்கள் முதன்முதலில் 1999ம் ஆண்டு Backup4All என்ற மென்பொருளை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். அந்த மென்பொருளை தொடர்ந்து Nova Pdf மென்பொருளை வெளியிட்டனர். இவர்கள் வெளியிட்ட இரண்டு மென்பொருட்களும் பெரிய அளவில் அனைவரையும் சென்றடைந்ததை தொடர்ந்து அனைவருக்கும் தெரிந்த
www.fbackup.com மற்றும்
www.dopdf.com போன்ற மென்பொருட்களை தொடர்ந்து
www.tinyburner.com டைனிபர்னர் என்ற மென்பொருளையும் உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.
அத்துடன்
http://www.software112.com/ என்ற ஒரு வலைத்தளத்தில் விண்டோஸ், லினக்ஸ், மேக் மற்றும் மொபைல் போன்களுக்கான அப்ளிகேசன்கள் சேமித்து வைத்திருக்கும் ஒரு தளமாக நடத்தி வருகின்றனர்.
இந்த மென்பொருட்களை நம் வலைத்தளத்திற்கு தந்து உதவிய நண்பர் Mr. Claudiu Spulber அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியினை என் சார்பாகவும் என் வாசகர்கள் சார்பாகவும் தமிழ் தொழில்நுட்ப வலைத்தளங்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.
இனி நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே மேற்கூறிய இரண்டு மென்பொருட்களையும் நீங்கள் நம் வலைத்தளம் மூலம் சென்று தரவிறக்க வேண்டியது மட்டுமே. இந்த சலுகை நம் வலைத்தளத்திற்காக ஒரு மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. புதியதாக வரும் நண்பர்கள் பார்வையாளர்கள் இந்த மென்பொருளை தரவிறக்க வலது பக்கம் தனி விட்ஜெட் பொருத்தப்பட்டு வருகிறாது விரைவில் அது வழியாக தரவிறக்க லின்குகள் கொடுக்கப்படும். இது போன்ற நிறைய மென்பொருளை நம் வலைத்தளத்திற்கென்றே கொண்டு வர பல நிறுவனங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன். அவர்கள் எல்லாரும் ஒரு சிறு தொகையாவது எதிர்பார்க்கிறார்கள். அதற்கு என்னால் செலவு செய்ய இயலவில்லை உங்களால் முடிந்த உங்கள் சிறு பங்களிப்பை என் வலைத்தளத்தில் தாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் என் நிலைமையை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் ஊக்கமே என் உற்சாகம் உங்கள் பின்னூட்டம் இன்னும் புதிய எழுச்சியைக் கொடுக்கும்.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...