400வது பதிவு மற்றும் SARDU உருவாக்குவது எப்படி?

நண்பர்களே இன்று பலவகையான Rescue Disk களை இணைத்து ஒரு USB Disk வழியாக Boot செய்வது எப்படி என்று பார்க்க போகிறோம்.  இது போல் செய்வதால் என்ன பலன் என்றால் சுலபமாக எந்த கணினியிலும் Rescue Disk வழியாக Boot செய்யலாம்.   பலவகையான Anti Virus மற்றும் Utitlity களை எந்த கணினியில் Bootable ஆக கையாள முடியும்.   இந்த வகைய Rescue USB Disk களை கொண்டு எந்த ஒரு கணினியிலும் உள்ள பிரச்சனைகளை தீர்க்க மிகவும் உதவியாக இருக்கும். இது கணினி சர்வீஸ் என்ஜினியர்களுக்கு மிகவும் பேருதவியாக இருக்கும்.


இது போன்ற USB டிஸ்க் தயாரிக்க குறைந்த பட்சம் 2 ஜிபி பென் ட்ரைவ் இருத்தல் நலம்.


முதலில் பென்ட்ரைவை பார்மெட் செய்து கொள்ளுங்கள்.

பென்ட்ரைவை பார்மெட் செய்யும் போது  FAT 32 ஆக பார்மெட் செய்து கொள்ளுங்கள்.

பிறகு இந்த சுட்டியில் இருந்து SARDU ( Shardana Antivirus Rescue Disk Utility) தரவிறக்கிக் கொள்ளுங்கள்.    SARDU தரவிறக்க சுட்டி

தரவிறக்கிய பிறகு அது ஒரு Zip கோப்பாக இருக்கும்.  அந்த கோப்பை Extract செய்து கொள்ளுங்கள்.

Extract செய்த போல்டரில் இருந்து SARDU மென்பொருளை திறக்கவும். 

அதில் உங்களுக்கு தேவையான அத்துடன் உங்கள் பென் ட்ரைவ் கொள்ளளவுக்குள் தேவையான ஆன்டி வைரஸ் மற்றும் யூட்டிலிட்டிகளை தரவிறக்கிக் கொள்ளுங்கள். 

தரவிறக்கம் முடிந்தவுடன் ஒருமுறை மென்பொருளை மூடிவிட்டு திரும்பவும் திறக்கவும். 
 


( நீங்கள் தரவிறக்கிய கோப்புகள் எந்த ட்ரைவில் நீங்கள் SARDU மென்பொருளை இயக்கினீர்களோ அந்த போல்டரில் ஒரு ISO என்ற போல்டர் உருவாகி அதற்குள் அனைத்து ஆன்டிவைரஸ் ரெஸ்க்யூ கோப்புகள் மற்றும் மென்பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். தேவையென்றால் அந்த கோப்புகளை தனி தனி சிடிக்களில் தனி தனி  ரெஸ்க்யூ சிடிக்களாகவும் எரிக்கலாம்.)

மென்பொருளை திறந்த பிறகு Make USB என்று வலது புறத்தில் உள்ள பட்டனை அழுத்தவும்.

அவ்வளவுதான் முடிந்தவுடன் உங்கள் ரெஸ்க்யூ யூஎஸ்பி ட்ரைவை எங்கு வேண்டுமானாலும் பூட்டபிளாக உபயோகபடுத்தலாம்.

இதற்கு தேவையானவை உங்கள் கணினியில் USB பென் ட்ரைவ் குறைந்தது 2 ஜிபி, இணைய சேவை,  மற்றும் SARDU மென்பொருள்.



இதுவரை பதிவு படித்தவர்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு


நண்பர்களே இது என்னுடைய 400வது பதிவு இதுவரை என்னை ஊக்கமளித்து மேலே கொண்டுவந்த அனைத்து நண்பர்களுக்கும் பதிவர்களுக்கும் இன்ட்லி, தமிழ்10, திரட்டி, தமிழ்மணம் போன்ற திரட்டி நண்பர்களுக்கும்.  எந்த ஒரு நன்றியையும் கூறமால் என் பதிவுகளை தாங்களாகவே Republish அல்லது காப்பி  பேஸ்ட் செய்த சக திருட்டு நண்பர்களுக்கும்.  ஒன்றுமே வருமானம் இல்லாத நிலையில் தமிழ் கம்ப்யூட்டர் என் வலைப்பூவில் வந்த பதிவுகளை தங்கள் புத்தகத்தில் வெளியிட்டு அதன் மூலம் சிறு வருமானம் தந்த தமிழ் கம்ப்யூட்டர் நிறுவனத்திற்கும் அதன் நிறுவனருக்கும்.  என்னால் திரட்டிகளில் இணைக்க முடியாத பொழுது என் பதிவுகளை திரட்டிகளில் இணைத்த கேபிள்ஷங்கர் மற்றும் வால்பையன் அவர்களுக்கும் எனது கோடான கோடி நன்றிகள். 


இத்தனை பதிவுகளுக்கு பிறகு சில நூறு ரூபாய்கள் செலவு செய்து கூகிள் நிறுவனத்தின் கூகிள் ஆட்ஸ் வாங்கியிருக்கிறேன்.  இதன்  மூலமாவது சிறு வருமானம் வர வழி வகுத்துக் கொடுங்கள்.  இந்தியா மட்டுமல்லாமல் வெளி நாடுகளில் வசிக்கும் நண்பர்கள் தங்கள் பதிவுகளை படிக்கும் பொழுது தாங்கள் ஒரு கிளிக் செய்தால் மிகவும் உதவியாக இருக்கும்.  செய்வீர்கள் என்று நினைக்கிறேன்.   என்றும் உங்கள் ஆதரவையும் பங்களிப்பையும் நாடி நிற்கும்  உங்களில் ஒரு நண்பன்.



நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

சட்டரீதியான மென்பொருளுடன் படிப்பதற்கு புத்தகம் மற்றும் பசிக்கு உணவு

நண்பர்களே அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2011

இன்று நாம் பார்க்க போகும் மென்பொருள் யூனிப்ளு சிஸ்டம் ட்விக்கர் UniBlue System Tweaker 2011.   இந்த மென்பொருள் செய்யும் வேலைகள் ஏராளம் என்றாலும் சிலவற்றை மட்டும் பார்ப்போம். 

இந்த மென்பொருள் மூலம் உங்களுடைய மவுஸினால் வலது கிளிக் செய்வீர்கள் அல்லவா அதில்  எளிமையாக மாற்றங்கள் செய்ய முடியும். 

இதன் வழியாக விண்டோஸில் இயங்கும் பயர்வால் விண்டோஸ் அப்டேட்களை நிறுத்தவும் செயல்படுத்தவும் முடியும்.

விண்டோஸ் முதலில் இயங்கும் பொழுது அதாவது Startup போது இயங்கும் மென்பொருட்களை நிறுத்த முடியும்.

இது போன்று நிறைய உண்டு இந்த மென்பொருளில் .

இந்த மென்பொருள் யூனிப்ளு நிறுவனத்தினரால் புது வருட கொண்டாட்டமாக ஜனவரி 15, 2011 வரை இலவசமாக வழங்கப்படுகிறது.  இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒரு படிவத்தை நிரப்பினால் போதுமானது.


முதலில் இந்த தளத்திற்கு செல்லுங்கள் சுட்டி

பிறகு இந்த பக்கத்திற்கு செல்லும்.

இந்த பக்கத்தில் உங்கள் பெயர், ஊர் மற்றும் மின்னஞ்சல் முகவரி தந்து Complete Registration என்ற பட்டனை தட்டுங்கள்

ஒரு சில விநாடிகளில் உங்களுக்கான மென்பொருள் தரவிறக்க சுட்டி மற்றும் மென்பொருளுக்கான உரிமம் எண் Serial Key காட்டப்படும்.   அதன் மூலம் மென்பொருளை தரவிறக்கம் செய்து அந்த உரிமம் எண்ணை உபயோகப்படுத்தி முழு மென்பொருளின் பயனை அடையலாம்.  அத்துடன் உங்களுக்கு  இந்த மின்னஞ்சல் முகவரி ststores@mag.unibluenews.com வழியாக மின்னஞ்சல் வரும்.  அதில் மென்பொருளின் உரிமம் எண் மற்றும் மென்பொருள் தரவிறக்க சுட்டி அனைத்தும் இருக்கும். 

இந்த மென்பொருளை பெற சுட்டி

இந்த மென்பொருள் சலுகை  ஜனவரி 15, 2011 வரை மட்டுமே முந்துங்கள்



எனக்கு பிடித்த ஆன்டிவைரஸ் மென்பொருள்


காஸ்பர்ஸ்கை

இந்த ஆன்டி வைரஸ் மென்பொருளை என் வீடு மற்றும் அலுவலகத்திலும் உபயோகிக்கிறேன்.  அதுமட்டுமல்லாமல் அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய வாடிக்கையாளர்களுக்கும் பரிந்துரைக்கும் மென்பொருள்.  இந்த மென்பொருள் மிக குறைவான விலையில் கிடைக்கிறது ஆன்டி வைரஸ் விலை 450/- ம் இண்டெர்நெட் செக்யூரிட்டி விலை 650/- க்கும் கிடைக்கிறது.  இந்த மென்பொருளை மூன்று கணினிகளில் உபயோகிக்கும்படியும் கிடைக்கிறது.  விலை 950 /- ஒருவர் 650 செலவழிப்பதற்கு பதில் அதில் பாதி விலை 350 /- செலவழித்தால் போதும்.



நண்பர்கள் உறவினர்கள் மூன்று பேர் சேர்ந்து வாங்கினால் காசு மிச்சமாகும்.  சென்னையில் அனைத்து  செல்போன் கடைகள் மற்றும் அண்ணா சாலை ரிச்சி தெருவிலும் கிடைக்கிறது.  எத்தனையோ ஆயிரம் செலவு செய்து கணினி வாங்கி அதன் வழியாக இணையத்தை அணுகினால் அதன் வழியாக கொக்கி போட்டு உள்ளே நுழையும் ஹேக்கர்கள் குழந்தைகளை ஆபாச தளங்கள் மற்றும் வக்கிரம் நிறைந்த தளங்கள், கொலை கொள்ளை போன்ற விளையாட்டு தளங்களில் இருந்து கணினியையும் உங்கள் வருங்கால சந்ததியையும் காப்பாற்ற வேண்டும் என்றால் முதலில் ஆன்டி வைரஸை நிறுவுங்கள்.

கேபிள் சங்கர் புத்தக வெளியீடு

நமது மூத்த பதிவரும் திரைப்பட இயக்குநரும் நண்பருமான கேபிள் சங்கரின் மீண்டும் ஒரு காதல் கதை புத்தகம் வெளியீடு இன்று மாலை ஆறு மணியளவில் நடைபெறுகிறது.  அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்துவோம்



நமது நண்பர் வால்பையன் நிறைய உதவிகள் செய்தவர் அலுவலகத்தில் பதிவை போட்டு விட்டு வீட்டிற்கு வந்து திரட்டிகளில் இணைத்து கொண்டிருந்தேன்.  பிறகு ஒரு முறை அவரிடம் உதவி என்று கேட்டு சென்றேன்.  அவர் உடனே சரி என்று கூறி விட்டார் அன்றைய பதிவு மட்டுமல்ல கடந்த வருடம் வரை என் பதிவை இணைப்பவர் நண்பர் வால்பையன்.  அவர்கள் கடந்த வருடத்தின் இறுதியில் ஒரு உணவகத்தை திறந்துள்ளார்  அவர் வசிக்கும் ஊரிலேயே உணவகத்தை திறந்திருக்கிறார்.  உணவுக்கான ருசிக்கும் கவனிப்புக்கும் நான் கியாரண்டி நண்பர்களே கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் நண்பர்கள அனைவரும் ஒரு நடை போய் ருசித்து வாருங்கள்.   திரும்ப திரும்ப நீங்களே செல்ல ஆரம்பித்து விடுவீர்கள்.  உணவகத்தின் பெயர் பூர்வாஸ் ஃபைன் டைன் பன்னாட்டு உணவு வகைகள் மற்றும் இந்தியாவின் சைவம் மற்றும் அசைவம் அனைத்தும் கிடைக்கும். 


உணவகத்தின் முகவரி

பூர்வாஸ் ஃபைன் டைன்,
#2, வெங்கிடசாமி சாலை கிழக்கு,
ஆர். எஸ். புரம்,
(சிந்தாமணி பெட்ரோல் பங்க் அருகில்)
கோயம்புத்தூர் - 641 002.

தொலைபேசி : 0422 - 4376437




நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

அவுட் போஸ்ட் இண்டெர்நெட் செக்யூரிட்டி மற்றும் புதிய முகம் கொண்ட டொரண்ட் கிளையன்ட்

நண்பர்களே நம் கணினியில் ஆன்டிவைரஸ் வேண்டும் என்றால் முதலில் நம் கணினியில் குறைந்த பட்சம் 512 எம்பி நினைவகம் வேண்டும் அதோடு ப்ரோஸசர் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் மேல் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் நம் கணினியில்  ஆன்டிவைரஸால்  வேலை செய்ய இயலும் 512 எம்பி நினைவகம் நம் பென்டியம் 4 வகைகளில் மட்டுமே அப்கிரேடு செய்ய இயலும் அதோடு அந்த வகை கணினிகளுக்கு மட்டுமே நினைவகங்கள் மார்கெட்டுகளிலும் கிடைக்கிறது அப்பொழுது பென்டியம் 3 மற்றும் அதற்கு முந்தைய கணிகளில் விண்டோஸ் எக்ஸ்பி நிறுவி விட முடியும் ஆனால் ஆன்டி வைரஸ் நிறுவினால் உங்கள் கணினியில் நினைவகத்தை மேம்படுத்துங்கள் என்று பிழைச்சொல் வரும்.  சரி இது போன்ற பயனர்களுக்காகவே ஒரு ஆன்டி வைரஸ் உள்ளது.  அதுவும் ஒரு வருட சட்டரீதியான இலவச உரிமத்துடன் தந்தால் யாராவாது வேண்டாம் என்று சொல்வீர்களா?  யாரும் சொல்ல மாட்டீர்கள்.  இன்னும் பென்டியம் 3 வகை கணினிகள் உபயோகிக்கும் நண்பர்களையும் வாசகர்களையும் எனக்கும் உங்களுக்கும் தெரியும்.
அவர்களுக்காக இந்த மென்பொருள்.   இந்த மென்பொருள் மற்ற ஆன்டி வைரஸக் காட்டிலும் சிறப்பாக செயல்படுகிறது என்பதை மற்ற ஆன்டிவைரஸுடன் சோதித்து பார்க்கப்பட்டதில் இது மிகவும் சிறப்பாக உள்ளதாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மென்பொருள் நிறுவ உங்கள் கணினியில் குறைந்தது 450 மெகாஹெர்ட்ஸ் உள்ள ப்ரோஸசர், 256எம்பி நினைவகம்,  200எம்பி கொள்ளளவுக்கு மேற்பட்ட வன் தட்டு வேண்டும்.  விண்டோஸ் எக்ஸ்பி அதற்கு மேற்பட்ட அனைத்து விண்டோஸ்களிலும் சிறப்பாக செயல்படும்.

இந்த மென்பொருளை தரவிற்க்க சுட்டி


டொரண்ட் வழியாக திரைப்படங்கள் தர விறக்குவோம் அதற்கு நாம் ஒவ்வொரு தடவையும் இணைய உலாவியை திறந்து அதன் வழியாக டொரண்ட் தேடுபொறி வழியாக நமக்கு தேவையான திரைப்படங்களை தேடி அதன் பிறகு அதை தரவிறக்குவோம்.  சில நேரங்களில் அந்த திரைப்படங்களின் தரம் நன்றாக இருக்காது.
 
இவை அனைத்தையும் ஒரே மென்பொருள் வழியாக தேடவும் உயர்தர திரைப்படங்களை தரவிறக்கவும் இந்த மென்பொருள் மிகவும் உபயோகமாகவும் சுலபமாகவும் உள்ளது உபயோகித்து பார்த்ததில் மிகவும் பிடித்து போன மென்பொருளாக எனக்கு ஆகிவிட்டது.  இந்த மென்பொருளை நீங்கள் உபயோகித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு  மென்பொருளை தரவிறக்க சுட்டி    இந்த மென்பொருளின் பெயர் ZButterfly.




உங்கள் ஊக்கமே எனக்கு சிறந்த மருந்து இன்ட்லியில் ஓட்டும் பதிவில் பின்னூட்டம் இட்டால் இன்னும் சிறப்பாக எழுத ஊக்கமாக இருக்கும்.


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

1 ஆண்டிற்கான சட்டரீதியான காஸ்பர்ஸ்கை இண்டெர்நெட் செக்யூரிட்டி

நண்பர்களே மிக அதிகமான வேலை இருந்ததால் தொடர்ந்து எழுத இயலவில்லை அதற்கு பதில்தான் நம் நண்பர்கள் 50க்கும் மேற்பட்டோர் தொழில்நுட்ப பதிவுகளை எழுதி வருகின்றனரே அதனால் நான் சொல்ல நினைக்கும் விஷயங்களை கூட அவர்கள் சொல்கிறார்கள் நல்ல விஷயம் நான் எழுத ஆரம்பிக்கும் போது மொத்தம் ஐந்து தொழில்நுட்ப வலைத்தளங்கள் கூட இல்லை என் குரு பிகேபி அவர்கள்களை பார்த்து எழுத ஆரம்பித்தனர் பிறகு நான் ஆரம்பித்தேன் என்னை பார்த்து சிலர் ஆரம்பித்தனர் அவர்களை பார்த்து இப்பொழுது பலர் எழுத ஆரம்பித்து விட்டனர் தமிழ் தொழில்நுட்ப வலைப்பூக்கள் விரைவில் நூறை எட்டும் அனைத்து பதிவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இதில் நண்பர் ஷிர்டி சாய்தாசன் வேறு மாதம் ஒரு முறை தொழில்நுட்ப பதிவர்களின்  தரவரிசை பட்டியலிடுவதால் நல்ல ஆரோக்கியமான போட்டி  உருவாகியுள்ளது.   தோழர்களே போட்டியிடுங்கள் தவறில்லை பொறாமைபடாதீர்கள்.   ஒருவரின் வலைத்தளம் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு வர அவர்கள் தரும் இழப்புகள் அதிகம்.  அதை என் தொலைக்காட்சி பேட்டியின் போதே சொல்லியிருக்கிறேன்.  ஏன் என்றால் இப்பொழுது கூட ஒரு மென்பொருளை சோதிக்க போய் என் நிறைய கோப்புகளை இழந்துள்ளேன்.  ஷிர்டி சாய்தாசன் அவருடைய வலைப்பதிவில் தரவரிசைப் படுத்துவதால் எத்தனை புதியதாக  கணினி கற்பவர்களுக்கும் கற்றுக் கொடுப்பவர்களுக்கும் மிகுந்த உதவியாக இருப்பதை நானே கண்கூடாக அறிந்திருக்கிறேன்.   ஆகையால் யாரையும்  அநாவசியாமாக குறை கூற வேண்டாம்.  இனி இன்றைய பதிவிற்குள் நுழைவோம்.



கணினி உலகில் இணையம் இல்லாத கணினி  உபயோகிப்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.  அவர்கள் பாதுகாப்பாக இணையத்தில் உலா வரவேண்டுமானால் அவர்களின் கணினியில் ஏதாவது ஒரு ஆன்டி வைரஸ் அல்லது ஆன்டிவைரஸுடன் இணைந்த இண்டெர்நெட் செக்யூரிட்டி மென்பொருட்கள் தேவை.  இதில் இப்பொழுது மிகவும் பிரபலமாக பேசப்படுவது அத்துடம் மிகவும் நன்றாக செயல்படுகிறது என்ற பெயரை தட்டி செல்கிறது காஸ்பர்ஸ்கை இண்டெர்நெட் செக்யூரிட்டி.  இது இலவசமாக 30 நாட்கள் மட்டுமே செயல்படும் வகையில் சோதனை பதிப்புகள் இணையத்தில் தருகிறார்கள்.  உங்களுக்கு காஸ்பர்ஸ்கை இண்டெர்நெட் செக்யூரிட்டி வேண்டுமென்றால் சென்னையில் உள்ள பல கணினி விற்பனையாளர்கள் உள்ளனர்.   அவர்கள் மூலமாக பணம் கொடுத்து ஒரிஜினல் காஸ்பர்ஸ்கை ஆன்டி வைரஸ் மற்றும் இண்டெர்நெட் செக்யூரிட்டி கிடைக்கும்

இதன்  விலை ஒரு கணினிக்கு  ஒருவருடத்திற்கான ஆன்டிவைரஸ் மட்டும் வெறும் முன்னூறு மட்டும் செலவாகிறது. இதே மூன்று கணினிக்கு ஒரு வருடத்திற்கு 600 - 800  மட்டுமே செலவாகிறது.  அதே காஸ்பர்ஸ்கை இண்டெர்நெட் செக்யூரிட்டி ஒரு கணினிக்கு ஒரு வருடத்திற்கு 500 - 600  மட்டுமே செலவாகிறது அதே மூன்று கணினிக்கு ஒரு வருடத்திற்கு 750 - 900 வரை செலவாகிறது.  இப்படி சுலபமாக குறைந்த விலையில் கிடைக்கையில் ஏன்தான் தேவையில்லாமல் உடைக்கப்ட்ட மென்பொருட்களை நாடுகிறார்களோ தெரியவில்லை.  கணினி உபயோகிப்பாளர்களுக்குதான் தெரியாது இது தவறு என்று.  கணினி நிறுவி தரும் நிறுவனங்களின் சர்வீஸ் என்ஜினியர்கள் மற்றும் தனியாக வேலை பார்க்கும் சர்வீஸ் என்ஜினியர்கள் அனைவருமே ஒரு காரணகர்த்தாவாக இருக்கின்றனர்.  முப்பதாயிரம் செலவு செய்து கணினி வாங்குபவர்கள் அதற்கு என்று உபயோகிக்கும் எந்த மென்பொருளையும் இலவசமாக கிடைக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அப்படி நினைப்பவர்கள் லினக்ஸுக்கு செல்லலாமே மிகவும் சுலபமாக நீங்கள் விரும்பும் அனைத்தும் கிடைக்கும்.  சரி விடுங்கள் திருந்த நினைப்பவர்கள் திருந்தட்டும்.

சரி இப்படி சுலபமாக காசே இல்லாமல் ஆன்டிவைரஸ் கணினி மற்ற மென்பொருட்கள் இலவசமாக அந்த நிறுவனமோ அல்லது அந்த நிறுவனத்தின் முகவர்களோ சில மணி நேரம் மற்றும் சில நாட்கள் மட்டும் இலவசமாக சட்ட ரீதியாக ஒரு வருடத்திற்கான லைசென்ஸுடன் தரும் பொழுதாவது அதை நீங்கள் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். 


கீழுள்ள மென்பொருளில் சில பிரச்சனைகள் இருப்பதால் இதை நிறுவவோ தரவிறக்கவோ வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   ஏற்பட்ட தவறுக்கு அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.  தவறை சுட்டிக் காட்டிய பொன்மலர், மற்றும் அன்பரசன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

இப்பொழுது இந்த காஸ்பர்ஸ்கை இண்டெர்நெட் செக்யூரிட்டி மென்பொருள் சீன முகவர்கள் இலவசமாக தரவிற்க்க தருகிறார்கள்  ஒரு வருடத்திற்கான Kaspersky Internet Security 2011 சட்டரீதியாக தருகிறார்கள்.  இதை பெற சில விஷயங்கள் செய்தால் போதும்.




முதலில் இந்த வலைத்தளத்திற்கு செல்லுங்கள்.  சுட்டி



இங்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியை இரண்டு முறை கொடுங்கள்.  பிறகு கீழுள்ள பட்டனை கிளிக் செய்யுங்கள்.



அடுத்த பக்கத்தில் ஒரு  ஐந்து எண்கள் தோன்றும் அதை வலது பக்க பெட்டியில் டைப் செய்யுங்கள். பிறகு கீழுள்ள பட்டனை கிளிக் செய்தால் அடுத்த பக்கத்தில் உங்களுக்கான Kaspersky Internet Security 2011 கீ கிடைக்கும்.





 காஸ்பர்ஸ்கை இண்டெர்நெட் செக்யூரிட்டி சோதனை பதிப்பு தரவிறக்க சுட்டி




இந்த சலுகை  இன்னும் 25 நாளைக்கு மட்டுமே அதாவது டிசம்பர் - 3 - 2010 வரை மட்டுமே.  முடிந்தவரை விரைவில் தரவிறக்கம் செய்து உங்களுக்கான ஒரு வருடத்திற்கான  சட்டரீதியான இலவச காஸ்பர்ஸ்கை இண்டெர்நெட் செக்யூரிட்ட்டியை இலவசமாக பெற்றுக் கொள்ளுங்கள்.

ஓட்டு போட்டு இந்த பதிவை அனைவரிடமும் கொண்டு செல்ல உதவிடுங்கள்


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

வைரஸால் பாதிக்கப்பட்ட கணினியை மீட்க மற்றும் சட்டரீதியான கிளவுட் ஆன்டிவைரஸ் இலவசம்

நண்பர்களே கிளவுட் ஆன்டிவைரஸ் இப்பொழுது அனைத்து நிறுவனத்தினரும் வெளியிட ஆரம்பித்து உள்ளனர்.  பழைய பதிவில் சொன்ன மாதிரி இனி கிளவு ஆன்டிவைரஸ் வகைகள் தான் இனி  அதிகமாக ஆன்டிவைரஸ் உலகில் ஆட்சி செய்ய வாய்ப்பு அதிகம்.  பாண்டா ஆன்டிவைரஸ் நிறுவனம் தன்னுடைய பாண்டா கிளவுட் ஆன்டி வைரஸ் ப்ரோவை இலவசமாக தரவிறக்க தருகிறது.  ஆனால் தன் வலைத்தளம் மூலம் இல்லாமல சில நண்பர்களின் வலைத்தளம் வழியாக தருகிறது.  இந்த பான்டா கிளவுட் ஆன்டிவைரஸ் ப்ரோ பெற நீங்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள் இங்கே கீழே கொடுக்கிறேன்.

இந்த சுட்டி வழியாக இந்த வலைத்தளத்திற்கு சென்றால் அங்கு உங்களுக்கு CNET என்ற வலைத்தளதில் download link என்று லின்க்கை கிளிக் செய்தால் வேறு ஒரு தளத்திற்கு அழைத்து செல்லும் அங்கு உங்கள் பெயர் மின்னஞ்சல் முகவரி கொடுத்து Continue என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.

அடுத்த பக்கத்தில் Place My Order என்பதனை கிளிக் செய்யுங்கள்.

அடுத்த பக்கதில் Get Your Product Nowr என்பதை கிளிக் செய்யுங்கள்.

அடுத்த பக்கத்தில் உங்களுக்கான தரவிறக்க சுட்டி மற்றும்  ஆக்டிவேசன் கோடு உங்களுக்கு காட்சியளிக்கும்.

அதை காப்பி செய்து ஒரு நோட்பேடில் சேமித்துக் கொள்ளுங்கள்.

பாண்டா கிளவுட் ஆன்டி வைரஸை தரவிறக்கி நிறுவி இந்த ஆக்டிவேசன் கோடு கொடுத்தால் உங்களுக்கு ஒரு வருடத்திற்கான இலவச பாண்ட கிளவுட் ஆன்டி வைரஸ் கிடைக்கும்





வால்பேப்பர்கள்

ஹலோவின் வால்பேப்பர்கள் இல்லுஸ்ட்ரேட்டரில் வரைந்தது. 


சுட்டி




 அவெர்ட் ஆன்டி மால்வேர்

உங்கள் கணினியில் ஆன்டிவைரஸ் இருந்து உங்கள் கணினியில் நச்சு நிரல்கள் வந்து அமர்ந்து விட்டனவா அதை அழிக்க முடியாமல் உங்கள் கணினியை பார்மெட் செய்ய போகிறீர்களா.  அதற்கு முன் இந்த மென்பொருளை வைத்து ஒரு முயற்சி செய்து பாருங்கள் எந்த வகை வைரஸ் மற்றும் மால்வேர்களையும் இது நீக்கும் என்று கூறுகிறது. இந்த மென்பொருளின் உள்ளேயே சிசிகிளீனர் இணைந்து வருவதால் தானாக டெம்ப் கோப்புகளில் வைரஸ் இருந்தாலும் நீக்கிவிடும்.  ஆனால் இந்த மென்பொருளை தரவிறக்கி விண்டோஸை சேப் மோடில் இயக்கி அதன் வழியாக ஸ்கேன் செய்தால் பலன் இன்னும் அதிகமாக இருக்கும்.  இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி

 




நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

ஏவிஜி இண்டெர்நெட் செக்யூரிட்டி ஆன்டி வைரஸ் ஒரு வருடத்திற்கு இலவசம் அனைவருக்கும்

நண்பர்களே மிகவும் பிரபல ஆன்டி வைரஸ் நிறுவனம் ஏவிஜி தன் ஏவிஜி ஆன்டி வைரஸ் மென்பொருளை இலவசமாக ஒரு வருடத்திற்கு தருகிறது.  இந்த மென்பொருள் மிகவும் பிரபலமானது.  ஏவிஜி இண்டெர்நெட் செக்யூரிட்டி 2011. இந்த மென்பொருளை தரவிறக்க நீங்கள் செய்ய வேண்டியது.  உங்கள் மின்னஞ்சல் முகவரி  மற்றும் எவ்வாறு உங்களுக்கு இந்த செய்தி தெரிய வந்தது.  என்று குறிப்பிட்டால் போதும் உங்கள் மின்னஞ்சல் முகவரி 2 அல்ல்து 3 நாட்களுக்குள் ஒரு வருடத்திற்கான இலவச கீ வந்து விடும்.  நீங்கள் இந்த பாரத்தை முடித்தவுடன் மென்பொருளுக்கான தரவிறக்க லின்க் வந்து விடும்.



ஒரு வருடத்திற்கான ஏவிஜி இண்டெர்நெட் செக்யூரிட்டி 2011 பெற பதிவு செய்ய வேண்டிய இணையதள முகவரி சுட்டி


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

ஆறு மாதத்திற்கான ஆன்டிவைரஸ் மென்பொருள் இணைய மையங்களில் உங்களுக்கு தேவையான மென்பொருள்

நண்பர்களே  உங்கள் கணினிக்கு ஆன்டி வைரஸ் மென்பொருள் ஆறுமாதத்திற்கான இலவச மென்பொருள் வேண்டுமா.  இந்த மென்பொருள் பெயர் புல்கார்ட் இண்டெர்நெட் செக்யூரிட்டி BullGuard Internet Security 10 இந்த மென்பொருள் ஆன்டிவைரஸ், ஆன்டிஸ்பைவேர், பயர்வால், ஸ்பம்பில்டர், உங்கள் கணினி டேட்டாக்களை அவர்கள் தளத்தில் பேக் - அப் எடுத்து வைக்க 5 ஜிபி இலவச இடம் போன்றவை இலவசமாக தருகிறார்கள்.


இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இந்த தளத்திற்கு சென்று உங்கள் பெயர் மற்றும் உண்மையான மின்னஞ்சல் முகவரி கொடுத்தால் போதும்.  அக்டோபர் பதினைந்தாம் தேதி உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஆறு மாத்திற்கான புல்கார்ட் இண்டெர்நெட் செக்யூரிட்டி மென்பொருள் இலவ்சமாக அனுப்பி வைப்பார்கள்.

இன்றே உங்களுக்கான மென்பொருளுக்கு உங்கள் பெயர் மின்னஞ்சல் முகவரியை கொடுத்து பதிவு செய்து கொள்ளுங்கள்.

உங்கள் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு பனி விலங்கான பெங்குவின் தீம் இலவசமாக பெற இங்கே சொடுக்குங்கள்.  சுட்டி





நீங்கள் சில நேரம் உங்கள் கணினி இல்லாமல் உங்கள் கணினியில் அல்லது இணையதள மையங்களில் உலாவும் போது சில மென்பொருட்கள் இல்லாமல் தவிக்க நேரிடலாம்.  இந்த மாதிரி நேரங்களில் உங்களுக்கு ஆபாத்பாந்தவனாக உதவிக்கு ஓடி வருகிறது ஒரு இனிய இணைய தளம். இந்த இணையதளத்தில் உங்களுக்காக அனைத்து வகையான மென்பொருட்களும் உள்ளது. இணையதள சுட்டி  இதற்கு முதலில் 26 எம்பி அளவுள்ள ஒரு பிரவுசர் ப்ளக் இன் நிறுவ வேண்டும்.  இப்பொழுது எல்லாம் எல்லா இணையதள மையங்களிலும் மிக நல்ல வேகத்தில் இணையம் இருப்பதால் 26 எம்பி என்பது பெரிய விசயமே இல்லை என்பதால் முயற்சி செய்து பார்க்கலாம். 







நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை