புகைப்படங்களை அனிமேசன் செய்ய மட்டுமல்ல இன்னும் நிறைய

நண்பர்களே உங்களுக்கு யூட்யூபில் இருக்கும் வீடியோவை தரவிறக்க எத்தனையோ மென்பொருட்கள் வலைத்தளங்கள் தெரியும்.  இருந்தாலும் யூட்யூப் வீடியோ இல்லாமல் வெறும் எம்பி3 ஆக தரவிறக்க ஒரு சூப்பரான வலைத்தளம் இருக்கிறது.  இதில் வெறும் யூட்யூப் லின்க் மற்றும் உங்கள் மெயில் முகவரி கொடுத்தால் போதும். 

அத்துடன் அதில் நான்கு வகையான அவுட்புட் பார்மெட்டில் எடுக்கலாம்.  MP3, OGG, AAC, WMA

மூன்று விதமான குவாலிட்டிகள் உண்டு.  Worst, Medium மற்றும் Best

யூட்யூப் வீடியோக்களை வெறும  ஆடியோ கோப்புகளாக மாற்ற இந்த வலைத்தளம் மிகவும் உதவியாக இருக்கும்.  நேரடியாக உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விடுகிறார்கள்.

குறிப்பு இந்த தளத்தில் விளம்பரங்கள் அந்த தளத்தினை போலவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.  படத்தில் உள்ளது போல தேர்வு செய்யுங்கள்.

Mobile Media Converter Online Link


தினம் ஒரு புதிய ஸ்கீரின் சேவர் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்வதாக இருந்தால் இந்த வலைத்தளம் உதவியாக இருக்கும்.  இந்த தளத்தில் புதிய புதிய ஸ்கீரின் சேவர்கள் தினமும் கிடைக்கிறது.

இதில் விண்டோஸ் மட்டுமல்லாமல் மேக் கணினிகளுக்கும் ஸ்கீரின் சேவர்கள் உள்ளது. 

இந்த தளத்தில் உள்ள வகைகளில் நீங்கள் தேர்ந்தெடுத்து தரவிறக்கிக் கொள்ளலாம். 

இந்த தளத்தில் ரெஜிஸ்டர் செய்ய தேவையில்லை. 

எந்த ஒரு தீங்கும் இல்லாத ஸ்கீரின் சேவர்கள்.

நீங்கள் தேர்ந்தெடுத்த ஸ்கீரின் சேவரை ஒரே கிளிக்கில் டவுன்லோடு  செய்யும் வசதி உள்ளது.

இந்த தளத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுத்து பதிவு செய்தால் புதிய ஸ்கீரின் சேவர் வரும் பொழுது உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி வைக்கப்படும். 

இந்த ஸ்கீரின் சேவர் தளத்திற்கு செல்ல  Daily New Free ScreenSaver Link


உங்களிடம் உள்ள புகைப்படங்களை வைத்து நீங்கள் GIF Animation பைல்கள் உருவாக்க வேண்டும் என்றால் நீங்கள் செல்ல வேண்டிய தளம் இது.  இந்த தளத்தில் உங்கள் கோப்புகளை அப்லோடு செய்து உங்கள் தேவைக்கேற்ப GIF Animation கோப்பாக மாற்றி பெற்றுக் கொள்ளலாம்.  இதில் GIF Animation கோப்பாக உருவாக்கிய பிறகு நேரடியாக உங்கள் கணினியில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.  அல்லது உங்கள் வலைப்பூவில் லின்க்கும் கொடுக்கலாம்.

இந்த தளத்தில் இருக்கும் சில வசதிகள்  Avatar எனப்படும் போரம்களில் உபயோகப்படுத்தும் அளவுக்கு போட்டோக்களை உருவாக்கித் தரும் வசதி.

புகைப்படங்களை ரீசைஸ் செய்யும் வசதி.

இதில் ஏற்கனவே GIF Animation ஆக உருவாக்கி வைத்திருக்கும் கோப்புகளை தரவிறக்க வசதியும் உள்ளது. 

உங்கள் கோப்புகளையும் GIF Animation அவர்களுடைய தளத்தில் வேண்டும் என்றால் மட்டும் சேமித்து வைக்கும் வசதியும் உள்ளது.

உங்கள் GIF Animation செய்த கோப்புகளை நண்பர்களுக்கு நேரடியாக அனுப்பும் வசதியும் உள்ளது.

இது போன்ற பல வசதிகள் உள்ளது. 

இந்த் தளத்திற்கு செல்ல PICASION Site Link


Google நிறுவனம் தற்பொழுது Google Translate பகுதியில் நம் தமிழும் சேர்ந்திருக்கிறது.  இதனால் ஓரளவுக்கு பிழைகள் இல்லாமல் தமிழில் இருந்து வேறு மொழிகளுக்கு மாற்ற்ம் செய்ய முடிகிறது.  நன்றி கூகிள்

Google Translate Link


தமிழர்களின் சார்பாக நன்றி கூகிள் நிறுவனத்திற்கும் இதற்காக உழைத்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கும் நன்றி Thanks To Google & Google Team



நன்றி மீண்டும் வருகிறேன்.

» Read More...

போட்டோ ரெகவரி மென்பொருள் மற்றும் பைரேட்ஸ் தீம்கள் வால்பேப்பர்கள்

நண்பர்களே உங்களிடம் இருக்கும் கைப்பேசிகள் மற்றும் டிஜிட்டல் கேமராக்கள் மூலம் எடுக்கும் புகைப்படங்கள் எவ்வளவு அழகாக இருக்கிறது.  சில நேரங்களில் அந்த கைப்பேசிகளில் இருக்கும் மெமரி கார்டுகளில் தான் அனைத்து புகைப்படங்களும் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.


சில நேரங்களில் நாம் கூட தவறுதலாக புகைப்படங்களை டெலிட் செய்ய நேரிடும். மெமரி கார்டுகளில் பைல் சிஸ்டம் கரப்ட் ஆகலாம். அந்த மெமரி கார்டுகள் சில நேரம் பழுது ஏற்பட்டு நீங்கள் எடுத்த புகைப்படங்கள் எதுவும் இல்லை என்று காட்டலாம்.  அல்லது அந்த கார்டினை பார்மெட் செய்ய வேண்டும் என்ற பிழைச் சொல் வரலாம்.

உதாரணத்திற்கு கீழ்க்கண்டவாறு பிழைச்சொற்கள் காட்டும்
Memory Card Error
Card not initialized
Media is not formatted. Would you like to format it now?
Read error
Memory card locked
Memory Card Corrupted

இது போன்ற பிழைச்சொற்கள் வரும் பொழுது என்ன செய்வது.

எதுவும் செய்ய முடியாது என்று நினைப்பீர்கள்.   ஆனால் இது போன்ற சமயத்தில் சில ரெகவரி மென்பொருட்கள் மூலம் எளிதாக மீட்டலாம்.

அது போன்ற ஒரு மென்பொருள்தான் போட்டோ ரெகவரி மென்பொருள்

இந்த மென்பொருளின் துணை கொண்டு மேற்கண்ட பிழைச்சொற்கள் போன்ற செய்திகள் வரும் பொழுது கூட உங்களுடைய போட்டோக்களை சுலபமாக மீட்டு எடுக்க முடியும்.

இந்த மென்பொருள் மூலம் ஹார்ட் டிஸ்க், அனைத்து வகையான மெமரி கார்டுகளில் இருந்து பழுதுபட்ட புகைப்படங்களை மீட்டு எடுக்க முடியும்.

இந்த மென்பொருள் நோக்கியா, சோனி, நிகான், கேனான் போன்ற புகைப்பட நிறுவனங்களின் கேமராவாக இருந்தாலும்  மீட்டு எடுக்க முடியும்.

புகைப்படங்கள் மட்டுமல்லாமல் ஆடியோ வீடியோ கோப்புகளையும் மீட்டு தருகிறது.

புகைப்படத்தை மீட்டு எடுக்கும் முன் ப்ரிவீயு பார்த்த பிறகு மீட்டு எடுக்கும் வசதி உள்ளது.

போட்டோ ரெகவரி மென்பொருளை தரவிறக்கச் சுட்டி


தொடர்ந்து நல்ல பதிவுகள் எழுத உங்கள் ஊக்கமே என்னை இன்னும் பதிவுகள் எழுத தூண்டும் நண்பர்களே தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள். 

புதிய ஹாலிவுட் திரைப்படங்களின் வரிசையில் இப்பொழுது சக்கை போடு போடும் படம் பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்  இந்த படத்தின் விண்டோஸ் 7 க்கான புதிய தீம் உங்களுக்காக 20+ HD Wallpapers உடன் தருகிறார்கள்.  இதனுடைய சில படங்கள் உங்கள் பார்வைக்கு கீழே






 
 
 

 
 
பைரேட்ஸ் ஆப் தி கரிபியன் தீம் தரவிறக்க சுட்டி


 நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

மெகா வீடியோவில் தொடர்ந்து வீடியோ பார்க்க புதிய சிலந்தி ப்ளேயர்

நண்பர்களே பாடல்கள் கேட்க எத்தனை ப்ளேயர்கள் இருந்தாலும் புதிய ப்ளேயர்களை முயன்று பார்ப்பதில் தவறு ஒன்றுமில்லையே.  நான் எப்பொழுதும் கணினியில் பாட்டு கேட்பதாகாக இருந்தால் Winamp Media Player படம் பார்ப்பதாக இருந்தால் VLC Media Player உபயோகிப்பவன்.  அதனால் புதியதாக வந்திருக்கும் Spider Player பாட்டு கேட்பதற்காக முயன்று பார்த்தேன் நன்றாகதான் இருந்தது.  இதில் நிறைய வசதிகள் உள்ளது

இந்த மென்பொருளின் வசதிகள் தெரிந்து கொள்ள சுட்டி

மென்பொருளை தரவிறக்க சுட்டி

இந்த மென்பொருள் ஒரு Freeware ஆகும்.

Professional Version வருகிறது அதற்கு மென்பொருளை தரவிறக்கி ரெஜிஸ்டர் செய்யும் பொழுது இந்த கோடு கொடுத்தால் போதும்.  27U3Z909I95-KK147A893S4K6Y1M0F-780363812  வ்வளவுதான் முடிந்தது.

இந்த மென்பொருளின் பெயர் Spider ஆகும்.


Unlimited View in Mega Video


நிறைய நண்பர்கள் நேரடியாக படங்களை தரவிறக்கி பார்க்காமல் இணையம் வழியே படம் பார்ப்பவர்கள் உண்டு.  அது மாதிரி பார்ப்பவர்களுக்கு Mega Video என்ற தளம் தெரியாமல் இருக்காது.  

 

இந்த தளத்தில் இலவசமாக 75 நிமிடங்கள் மட்டுமே படங்கள் பார்க்க இயலும் சில படங்கள் 1 மணி நேரத்திற்கும் மேல் இருக்கும்.  இந்த நேரத்தில் நம்மால் கிளைமேக்ஸ் சீன்கள் மட்டுமே பார்க்க இயலாமல் போகலாம்.  இதற்கு ஒரு வழி இருக்கிறது.  இந்த தளத்திற்கு சென்று உங்கள் Mega Video லிங்கை காப்பி செய்து இங்கே கொடுத்தால் போதும் உங்கள் படம் முழுவதுமாக இந்த தளத்தின் ஊடாக தெரியும்.  இணைய தளம்.  சுட்டி

இதற்கான குரோம் ஆடு ஆனும் உண்டு  சுட்டி



 

 Windows 7 Themes Green



Windows 7 பச்சை வண்ண தீம்கள் சில உங்களுக்காக.

தீம் சுட்டி 1

தீம் சுட்டி - 2

தீம் சுட்டி - 3



ஐ ஓ பிட் நிறுவனத்தின் கேம் பூஸ்டர் IOBit Game Booster இலவசமாக பெற இங்கே செல்லுங்கள்.  சுட்டி

இந்த மென்பொருள் மூலம் உங்களிடம் உள்ள விளையாட்டுகளை மிக வேகமாக விளையாடலாம்.  ஆங்காங்கே Struck ஆகி நிற்காது. 



ஒரு அறிவிப்பு 

இந்த வலைத்தளம் மூலம் எனக்கு எதுவும் எந்த ஆதாயமும் கிடைக்காமல் இருந்து வருகிறது. ஆனாலும் தொடர்ந்து பல பதிவுகளை  கஷ்டப்பட்டு தான் இந்த பதிவுகளை எழுதுகிறேன்.  அதனால் நான் எழுதும் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் உபயோகமானவை என்றே நம்புகிறேன்.  இவ்வாறிருக்கையில் வரும் நண்பர்கள் என் வலைத்தளத்தில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்து பார்ப்பதன் மூலம் என்னால் மாதம் ஒரு சிறு தொகையை ஈட்ட முடியும் என்று நம்புகிறேன்.  ஆகையால் பதிவுகளை படிக்கும் நண்பர்கள் விளம்பரங்களை கிளிக் செய்து வருவாயை ஈட்ட உதவி செய்ய வேண்டுகிறேன். உதவுங்கள் இன்னும் தரமான ஆக்கங்களை உருவாக்க உதவுங்கள்.  அத்துடன் இந்த பதிவுகள் தரமுள்ளதாக இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் இதனை பற்றி தெரியபடுத்துங்கள்.  அனைத்து திரட்டிகளிலும் நீங்கள் போடும் ஒட்டுகளினால் இன்னும் உலகம் முழுக்க தமிழர்கள் அனைவருக்கும் போய்ச் சேர ஒரு உங்கள் ஒட்டு ஒரு  வாய்ப்பாக அமையும்.
 
நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

பிடிஎப் கோப்பில் உள்ள தடைகளை நீக்க மற்றும் டெக்ஸ்ட் கோப்புகளை ஸ்கீரின் சேவராக்க

நண்பர்களே இதுவரை எழுதிய பதிவுகள் அனைத்தையும் காண ஒரு சுட்டி உருவாக்கி வலது பக்கம் கொடுத்து வைத்துள்ளேன் புதியதாக நம் வலைத்தளத்திற்கு வரும் நண்பர்கள் நேரடியாக அங்கு சென்று அந்த சுட்டி மூலம் நான் எழுதிய பதிவுகளை காண முடியும்.  அத்துடன் நிறைய கேள்விகள் வருகிறது அதுவும் பின்னூட்டப் பெட்டியிலே வருவதால் இனி தனியாக ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.  அதுவும் வலது பக்கம் மேலே முதலிலேயே கொடுத்திருக்கிறேன்.  உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க..   இனி பாராட்டு என்றால் பின்னூட்டப்பெட்டியிலும் திட்டுவதாக அல்லது ஏதாவது தவறு செய்திருந்தால் அல்லது உங்கள் மனதில் தோன்றும் கணினி குறித்த சந்தேகங்களுக்கு உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க என்ற பகுதியிலும்
கேட்கவும்.  எனக்கு தெரிந்ததை உங்களுக்கு சொல்கிறேன். நண்பர்களே இதுவரை கொடுத்து வந்த ஆதரவை இனியும் தரவேண்டுகிறேன். 

கேள்விகள் கேட்க  சுட்டி

அனைத்து பதிவுகளையும் காண சுட்டி

நாம் கணினியில் உள்ள வீடியோ மற்றும் புகைப்படங்களை நம்மால் ஸ்கிரின் சேவராக உபயோகப்படுத்த முடியும்.  அதுபோல பவர்பாய்ன்ட் கூட ஸ்கிரின் சேவராக உபயோகப்படுத்தலாம்.  ஆனால் டெக்ஸ்ட் கோப்புகளான நோட்பேட் மற்றும் மைக்ரோசாப்டில் உருவாக்கி வேர்ட் கோப்புகளான டெக்ஸ்ட் கோப்புகளை ஸ்கீரின் சேவராக கொண்டுவர முடியுமா?  முடியும் அதை எப்படி செய்வது.  முதலில் இந்த மென்பொருளை தரவிற்க்கிக் கொள்ளுங்கள்.  பிறகு இந்த மென்பொருளை திறந்து உங்களுக்கு தேவையான டெக்ஸ்ட் கோப்பினை தேர்வு செய்யுங்கள்.  பிறகு உங்களுக்கு இந்த ஸ்கீரின் சேவர் எவ்வளவு நேரத்தில் செயல்பட வேண்டும் என் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.  முடிந்தது  இனி நீங்கள் உங்கள் கணினியை எவ்வளவு நேரம் உபயோகப்படுத்தாமல் இருக்கிறீர்களோ அப்பொழுது தானாக இந்த மென்பொருள் இயங்கி டெக்ஸ்ட் கோப்பினை ஸ்கீரின் சேவராக அலங்கரிக்கும்.  இந்த மென்பொருளின் யார் வேண்டுமானாலும் மேம்படுத்தலாம் என்பதே.  அதாவது இது ஒரு திறந்த நிலை கட்டற்ற மென்பொருள்.  இந்த மென்பொருளின் பெயர் கோடுசேவர்

 மென்பொருளை தரவிறக்க சுட்டி


நெருப்பு நரி உலாவி உபயோகப்படுத்துபவர்களுக்கான நீட்சிகள்

டவுண்லோடு ஸ்டேடஸ்பார்
நீங்கள் நெருப்பு நரி உலாவி வழியாக இணையத்தில் கோப்புகள் தரவிறக்கும் பொழுது அந்த கோப்புகள் எவ்வளவு வேகமாக தரவிறக்குகிறது.   இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் தரவிறக்கும் வேகம் என்ன என்பதனை தெரிந்து கொள்ள இந்த நீட்சி மிகவும் உபயோகமாக இருக்கும். 


நீட்சி தரவிறக்க சுட்டி

பாக்ஸ்டேப்

நீங்கள் பார்க்கும் தளங்களை 3டி போன்று காண இந்த நீட்சி உதவுகிறது.  அத்துடன் இதில் ஸ்பீடு டயல் வசதியும் உள்ளது.  நீங்கள் அடிக்கடி செல்லும் தளங்களை ஸ்பீடு டயல் மூலம் விரைவாக அணுகவும் உதவுகிறது.

நீட்சி தரவிறக்க சுட்டி

வெப் 2 பிடிஎப்

நீங்கள் காணும் எந்த ஒரு தளத்தையும் ஒரு பிடிஎப் கோப்பாக மாற்றி தர இந்த நீட்சி உதவுகிறது.

நீட்சி தரவிறக்க சுட்டி


பிடிஎப் அன்லாக்கர்

உங்களிடம் ஒரு நண்பர் ஒரு முக்கியாமான பிடிஎப் தருகிறார்.  அத்துடன் சொல்கிறார் அதன் கடவுச்சொல் மறந்து விட்டது என்று கூறினால் எப்படி இருக்கும் மிகவும் அதிர்ச்சயடைய மாட்டீர்கள்.  என்னடா இது முக்கியமான கோப்பாயிற்றே.  இதன் கடவுச்சொல் எதுவும் எடிட் செய்ய முடியாதே கடவுச்சொல் தெரிந்தால்தானே திறக்கவே முடியும்.  நம்முடைய மேலதிகாரி உடனே வேண்டும் என்று சொன்னாரே என்ன செய்வது  என்று ஒரு  குழப்பமான மனநிலைக்கு தள்ளப்படுவீர்கள். அவ்வாறு நடந்தால் குழப்பமடையாமால் மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் உடனே இந்த மென்பொருளை தரவிறக்குங்கள்.  நேரடியாக திறக்கலாம் இது ஒரு நேரடி மென்பொருள்.  கணினியில் நிறுவ தேவையே இல்லை என்பதன் சிறப்பு.


இந்த மென்பொருள் பெயர் பிடிஎப் அன்லாக்கர்.  இந்த மென்பொருளை கடவுச்சொல் கொடுத்திருந்தாலோ அல்லது பிரிண்ட் செய்யமுடியாமல் தடை செய்யப்பட்டிருந்தாலோ கூட இதனால் இந்த பிரச்சனைகளை  அனாசியமாக களைந்து உங்களுக்கு உடனே கொடுத்துவிடும். 


இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி



நன்றி. மீண்டும் வருகிறேன்.

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை