இலவசமா கூகிள் ப்ளே ஸ்டோரில் ஆப் வாங்க (Google Opinion Rewards)

நண்பர்களே அனைவருக்கும் வணக்கம் திரும்பவும் புதிய பதிவுடன் உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன்.

இது வரை கூகிள் நிறுவனம்  நிறைய ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்களை அறிமுகப்படுத்துகிறது.  இவ்வாறு அறிமுகப்படுத்தும் அப்ளிகேசன்கள் சில நாட்டில் மட்டும் முதலில் உபயோகத்திற்கு வரும். 

பிறகு படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் உபயோகத்திற்கு வரும்.




அவ்வாறு இன்று வந்துள்ள அப்ளிகேசன் தான் கூகிள் ஒபினியன் ரிவார்ட்ஸ்    ( Google Opinion Rewards)  இந்த ஆப் வழியாக உங்களுக்கு கூகிள் நிறுவனம் சில பல சர்வேக்களை அனுப்பும் அதை திறமையாக முடித்தால் ஒவ்வொரு சர்வேக்கும் ஏற்றாற் போல பணம் கிடைக்கும். 
 

இந்த ஆப் இன்று முதல் இந்தியா சிஙகப்பூர் போன்ற நாடுகளுக்கு உபயோகத்திற்கு வருகிறது.
 
இந்த ஆப் மூலம்  வரும் ஆன்லைன்  பணத்தினை கூகிள் ப்ளே ஸ்டோரில்  ஆப், இசை, படங்கள், போன்றவற்றை வாங்கிக் கொள்ள முடியும்.

இந்த ஆப் தரவிறக்க - கூகிளின் ஒபினியன் ரிவார்ட்ஸ்

இனி தினம் ஒரு பதிவு எழுத முயற்ச்சிக்கிறேன். 

 உங்களுடைய தொடர் ஆதரவினை வேண்டுகிறேன்


 நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

F-Droid Vs Google Play

நண்பர்களே இன்றைய உலகில் போனில் அதிக அளவு விற்பனையாவது ஸ்மார்ட் போன்கள் அதுவும் ஆன்ட்ராய்டு வகை போன்கள் மிக அதிகமாக விறபனையாவதை அனைவரும் அறிந்ததே. ஆன்ட்ராய்ட் ஒரு இலவச இயங்குதளமாகும்.  இந்த வகை இயங்குதள போன்களுக்கு என்று வைத்திருந்த கூகிளின் ஆன்ட்ராய்ட் மார்கெட்டினை கூகிள் ப்ளே என்று பெயர் மாற்றியது சில நாட்களுக்கு முன்புதான் என்பதையும் அறிவீர்கள்.  சரி இந்த வகை ஆன்ட்ராய்ட் இயங்குதள போன்களுக்கு கூகிள் ப்ளே மட்டும்தான் உள்ளதான் என்று பார்த்தால் கூகிளை போன்ற சில தளங்கள் இருக்கதான் செய்கின்றன இதில் ஒரு தளத்தின் எப் ட்ராய்டு  F-Droid.     F-Droid
இந்த தளத்தில் என்ன ஒரு சிறப்பு என்று பார்த்தால் இதில் உள்ள அனைத்து அப்ளிகேசன்களும் இலவசமானவை மட்டுமே.  அதுவும் அனைத்தும் Full Version ஆக கிடைக்கிறது. 


அது மட்டுமல்லாமல் F-Droid நிறுவனத்தின் ஆன்ட்ராய்ட் பிரவுஸர் வழியாக F-Droid இணையத்தளத்தில் ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்களை தேடி உங்கள் மொபைலுக்கு தரவிறக்க  முடியும்.
Android Vs F-Droid
இந்த தளத்தின் மூலம் வெளியிடப்படும் அப்ளிகேசன்கள் உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைலுக்குள் நிறுவி விட்டாலே ஒவ்வொரு முறையும் தானாக அப்டேட் செய்து கொள்ளும்.

 இந்த தளத்திற்கு செல்ல சுட்டி


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை