ஸ்லைடு ஷோ பில்டர் இலவசமாக கெளதம் பிறந்த நாள் இன்று

நண்பர்களே மே 13ஆம் தேதி அம்மாக்கள் தினம் கொண்டாடப்படுகிறது.  அம்மாக்கள் தினத்தினை கொண்டாடும் வகையில் வொன்ட்ர்ஷேர் நிறுவனம் புதியதாக ஒரு சலுகை தந்திருக்கிறது.  அதுதான் வொன்டர்ஷேர் நிறுவனத்தின் Wondershare Slideshow Builder Standard இந்த மென்பொருளை இலவசமாக தருகிறது.  இதை நீங்கள் பெறுவது மிகவும் சுலபமான வழியாகும்.
இந்த சுட்டியை கிளிக் செய்து இந்த பக்கத்திற்கு செல்லுங்கள் சுட்டி



அந்த பக்கத்தில் கடைசியில் Get Keycode என்ற ஒரு வாசகம் இருக்கும் அதை கிளிக் செய்தால் உங்கள் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி குடுத்தால் போதுமானது.

உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு மென்பொருள் தரவிறக்க சுட்டியும்.  மென்பொருளை நிறுவிய பிறகு தேவையான லைசென்ஸ் கீ கோடும் அனுப்பியிருப்பார்கள். 

இனி உங்களுக்கான Wondershare Slideshow Builder Standard முற்றிலும் இலவசமாக பயன்படுத்தாலாம். 



இந்த மென்பொருளின் விலை $49.95 இந்திய மதிப்பில் 2500 ரூபாய் மதிப்புள்ளது.  இந்த மென்பொருளின் அடுத்த வெர்சன் Wondershare Slideshow Builder Deluxe ஆகும்.  இந்த மென்பொருளை நிறுவிய பிறகு $12.95 மட்டும் செலுத்தினால் போதுமானது. இதை உங்களுக்கு வேண்டுமானால் மேம்படுத்திக் கொள்ளலாம். தேவையில்லை எனில் விட்டு விடலாம்.

இந்த மென்பொருள் மூலம் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை இந்த சுட்டியில் காணலாம்.  சுட்டி

இந்த மென்பொருள் தரவிறக்க இன்னும் பதினொரு நாட்களே உள்ளது.  உடனே முந்துங்கள்.


இன்று 04/05/2012 என் மகன் பிறந்து ஆறாவது வருடம் முடிவடைந்து ஏழாவது வருடம் தொடங்குகிறது.  ஆறு வருடத்திற்கு முன் RSRM மருத்துவமனையில் வாசலில் தவம் கிடந்தேன் எப்பொழ்து குழந்தை பிறக்கும்.  தாயும் சேயும் நலமாக இருக்க வேண்டும் எதிரில் உள்ள அம்மன் கோவிலில் கற்பூரம் ஏற்றி வழிபட்டு வந்து காத்துக் கொண்டிருந்தேன் இதோ அதோ என்று மாலை நான்கு மணி பத்து நிமிடத்திற்கு வெளி உலகை பார்த்துவிட்டான் என் மகன்.  தாயும் சேயும் நலம் என்று கூறிய செவிலிக்கு ஒரு 500ரூபாயை கொடுத்து என் சந்தோசத்தை பகிர்ந்து கொண்டேன்.

அவனுடைய பெயரில் தான் இந்த வலைப்பதிவையே தொடங்கினேன்.  இன்று வரை என் மகனை போலவே இந்த வலைப்பூவும் வளர்ந்து கொண்டு வருகிறது.  அவன் கணினியில் அமர்ந்து தட்டச்சு செய்து பழக்காமன பிறகு இந்த வலைப்பூவினை அவனுக்கு அன்பளிப்பாக கொடுக்க எண்ணியிருக்கிறேன்.  அவனுடைய ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் கோயம்பேட்டில் உள்ள குறுங்கலீசுவரர் கோவில் வாசலில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு ஒரு வேளை உணவினை வீட்டில் செய்து கொண்டு போய் அவன் கையால் கொடுத்து வருகிறேன்.   அவர்களுடைய வாழ்த்தும் நண்பர்களின் வாழ்த்தும் என் மகனை நோய் நொடியில்லாமல் வாழ வைக்க இறைவனை வேண்டிக் கொண்டு இந்த பதிவினை முடிக்கிறேன்.



 நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

தேவதை பிறந்தநாள் மற்றும் பல மென்பொருட்கள்

நண்பர்களே யுஎஸ்பி ட்ரைவ் மற்றும் யுஎஸ்பி சம்பந்தப்பட்ட பொருட்களை நிறுத்துவதற்கு இந்த மென்பொருள் மிகவும் உபயோகமாக இருக்கும்.  இது ஒரு திறந்த நிலை மென்பொருள் என்பது இன்னும் சிறப்பு வாய்ந்தது.  அத்துடன் இது விண்டோஸ் அனைத்திலும் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது..  இதை இன்னும் மேம்படுத்த நினைப்பவர்கள் இவர்கள் தளத்தில் இருந்து Source Code எடுத்து மாற்றங்கள் செய்தும் கொள்ளலாம்.  இந்த மென்பொருள் வெறும் 1 எம்பிக்குள் அடங்கிவிடும்.  அத்துடன் இது ஒரு போர்ட்டபிள் மென்பொருளாகும்.  இந்த மென்பொருளின் பெயர் USB Disk Ejector இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி

இன்று மொபைல் போன்கள் இல்லாதவர்களை பார்ப்பது அரிதான ஒன்றாக இருக்கும் நேரத்தில் இதுவரை வெளிவந்த மொபைல் போன்களில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்த மொபைல் போன்கள் குறித்த வரலாற்று தகவலகள் இந்த புகைப்படத்தில் உள்ளது.  இதில் 1973ல் வெளிவந்த மொபைலில் இருந்து தற்பொழுது வெளியான எல்ஜியின் 3டி ஸ்மார்ட் போன் வரை பட்டியலிடப்பட்டுள்ளது.     1999ல் வெளி வந்த 3210 மொபைல் எனக்கு பிடித்த மாடலாகும். 


இப்பொழுதுதான் பயர்பாக்ஸின் உலாவி புதுப்பிக்கப்பட்டு Firefox 8.0 வெளிவந்தது.  அதற்குள் அடுத்த பதிப்பு வெளியிட தயாராகி வருகிறது பயர்பாக்ஸ் நிறுவனம்.  அடுத்த Firefox 9.0 பீட்டா வெர்சனை உபயோகித்து பார்க்க சுட்டி  இது ஒரு பீட்டா வெர்சன் என்பதினை மனதில் கொண்டு தரவிறக்கம் செய்து உபயோகப்படுத்தவும்.

நவம்பர் பதினைந்து என் வாழ்வில் மறக்கவே முடியாத நாள்  நான் மிகவும் எதிர்பார்த்த விசயம் நடந்தேறிய நாள் அன்று என்ன நாள் என்று நினைக்கீறீர்கள் போன வருடம் நவம்பர் 15 2010 அன்று எனக்கு பெண் குழந்தை வடிவில் தேவதை அவதரித்த நாள் ஆம் என் பெண்ணின் முதல் வருட பிறந்தநாள் நண்பர்களின் ஆசிர்வாதமும் வாழ்த்துக்களும் என் பெண்ணை இந்த உலகில் தைரியத்துடன் மகிழ்ச்சியுடனும் வாழ வைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.  அண்ணனும் தங்கையும் எவ்வளவு மகிழ்வாக இருக்கும் புகைப்படம் இவர்களுக்காகவே என் அனைத்து கஷ்டங்களையும் தாங்கும் பக்குவம் வந்துவிட்டது.
 



படங்களை பெரிதாக பார்க்க கிளிக் செய்து பார்க்கவும்.

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை