425வது பதிவு இலவச மென்பொருட்கள் உங்களுக்காக

நண்பர்களே நம் கணினி திரையினை படம்பிடிக்க எத்தனையோ டூலகள் இருந்தாலும் இலவசமாக அதுவும் ஒபன் சோர்ஸ் டூல் போல வராது என்பது என் கருத்து.  ஏன் என்றால் ஒபன் சோர்ஸ் அல்லாத மென்பொருட்கள் அனைத்தும் ஒரு முறை இலவசம் தந்தாலும் அதன் பிறகு புதியதாக அப்டேட் செய்தால் கட்டாயம் அந்த புதிய மென்பொருளினை காசு கொடுத்துதான் வாங்க வேண்டும்.  அதே ஒபன் சோர்ஸ் என்றால் கட்டாயம் மேம்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.  இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம் என்பதே அதன் தனிச்சிறப்பு.




இந்த ஸ்கீரின்ஷாட் எடுக்கும் மென்பொருள் அளவு மிகச்சிறியது வெறும் 600கேபி அளவுடையது இந்த மென்பொருள்

இந்த மென்பொருளின் பெயர் Greenshot எனபதாகும்.  இந்த மென்பொருள் உபயோகித்து பாருங்கள் உங்களுக்கே தெரியும் இதன் மகத்துவம்.

இந்தமென்பொருளை தரவிறக்க சுட்டி


விண்டோஸ் 7 கணினியில் மட்டும் உபயோகப்படுத்தப்படும் 100 வகையான விண்டோஸ் 7 தீம்கள் உங்களுக்காகசுட்டி இந்த மென்பொருள் வெறும் 2.97எம்பி மட்டுமே

எந்த ஒரு வீடியோ டிவிடியில் இருந்தும் AVI, DivX, Mpeg கோப்புகளாக மாற்றும் ஒரு ஒபன் சோர்ஸ் மென்பொருள் உங்களுக்காக இந்த மென்பொருள் மிக அருமை என்று இதை உபயோகித்தவர்கள் கூறுகின்றனர்.  நான் இனிமேல்தான் உபயோகிக்க போகிறேன்.  இந்த மென்பொருள்
டிவிடியில் இருந்து Xvid/Divx, MPEG-4, H.264/AVC, QuickTime, Flash Video, Ogg, WebM, AC.3, MP3, MP4/AAC  போன்ற கோப்புகளாக மாற்ற முடியும்.

மென்பொருள் தரவிறக்க சுட்டி

பல வேலைகளுக்கு நடுவில் அனைவருக்கும் உதவும் மிக உன்னதமான மென்பொருட்கள் அறிமுகப்படுத்துகிறேன்.  அதை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டியது உங்கள் கடமை.  உங்களுடைய பின்னூட்டங்களும் என்னை ஊக்கப்படுத்தும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.  இந்த பதிவு என்னுடைய 425வது பதிவாகும்.


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

உங்கள் கோப்புகளை முழுமையாக நீக்க மற்றும் வலை முகவரி சுருக்கிகள் மூன்று உங்களுக்காக

நண்பர்களே நாம் நம்முடைய முக்கியமான தகவல்கள் அடங்கிய கோப்புகள் அல்லது தேவையில்லாத கோப்புகளில் Del கீ கொண்டு நீக்குவோம்.  அல்லது Shift+Del கீ கொண்டு நீக்குவோம்.  வெறும் Del கீ கொண்டு நீக்கினால் Recycle Bin பகுதிக்கு சென்று விடும் அங்கிருந்து நாம் மீட்டுக் கொள்ளலாம்.  அதே Shift+Del கொண்டு நீக்கினால் Restoration என்ற மென்பொருள் கொண்டு மீட்டெடுக்கலாம்.   இது போன்ற மென்பொருட்களை கொண்டு மீட்டெடுத்தால் யார் வேண்டுமானாலும் நம் கோப்புகளை திருட்டுதனமாக மீட்டெடுத்து உபயோகிக்கலாம்.  அப்படி செய்யாமல் இருக்க வேண்டுமென்றால் Eraser என்ற மென்பொருளை கொண்டு நீக்கினால் அந்த கோப்புகள் யார் கைக்கும் கிடைக்காத வண்ணம் வன்தட்டிலிருந்து மிகவும் பாதுகாப்பாக நீக்கிவிடலாம். 

இந்த மென்பொருள்  அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையில் உபயோகிக்கப்பட்டு மிகவும் பாதுகாப்பான மென்பொருள் என்று சான்றளிக்கப்பட்டுள்ளது.

இந்த மென்பொருள் ஒரு ஒபன் சோர்ஸ் மென்பொருளும் கூட

இந்த மென்பொருள் விண்டோஸ், லினக்ஸ், மற்றும் மேக் கணினிகளில் பயன்படுத்தும் வண்ணம் தனி தனி மென்பொருளாக கிடைக்கிறது.

இந்த மென்பொருளை கடந்தா வாரம் மட்டும் 30000க்கும் மேற்பட்டவர்கள் தரவிறக்கி உபயோகித்து நன்றாக உள்ளது என்று கூறியிருக்கிறார்கள்.

இந்த மென்பொருள் வெளிவந்த வருடம் 2006

Eraser 6.0.8.2273 இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி


 விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் விஸ்டாவில் அனைவருக்கும் ஒரு பிரச்சனை வரும் அந்த பிரச்சனை என்னவென்றால் விண்டோஸ் எக்ஸ்பியில் உள்ளது போல Start மெனு இல்லாததே பிரச்சனை.  இதை தீர்ப்பதற்கு ஒரு மென்பொருள் உள்ளது அதுதான் Start Menu XP இந்த மென்பொருளை நிறுவி உங்களுக்கு ஸ்டார்ட் பாருக்கு ஏற்றவாறு குரூப்கள் உருவாக்கிக் கொள்ளலாம்.  இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி
பெரிய பெரிய வலை முகவரிகளை சிறியதாக மாற்ற நாம் bit.ly, goo.gl, is.gd,mcaf.ee போன்ற வலைத்தளங்களுக்கு சென்று பெரிய வலை முகவரிகளை சிறிய முகவரியாக மாற்றி மின்னஞ்சல் செய்வோம். 
அது போல செய்ய ஒவ்வொரு தளத்திற்கும் செல்லாமல் நம் வலை உலாவியிலிருந்து செய்ய சிறு மென்பொருட்கள் உள்ளது.  அதை நிறுவினால் போதும்.

பயர்பாக்ஸ் Firefox உலாவியில் நிறுவ நீட்சி சுட்டி இது கூகிள், மெக்காபி, மற்றும் பிட் லி போன்ற வலைத்தளங்கள் செல்லாமல் வலை முகவரிகளை சுருக்கலாம்.
 
பிட் லி வலை முகவரி சுருக்கி மென்பொருள் 
பயர்பாக்ஸ் Firefox  வலை உலாவியில் நிறுவ நீட்சி சுட்டி

கூகிள் குரோம் வலை உலாவியில் பிட்லி வலை முகவரி சுருக்கி நீட்சி சுட்டி 
இந்த நீட்சிகள் இரண்டும் பிட்லி வலைத்தளத்தை மட்டுமே  கொண்டு செயல்படுகிறது.
கூகிள் வலை முகவரி சுருக்கி நீட்சி குரோம் வலை உலாவியில் மட்டுமே செயல்படும். கூகிள் குரோமிற்கான நீட்சி சுட்டி

ஒரு அறிவிப்பு 

இந்த வலைத்தளம் மூலம் எனக்கு எதுவும் எந்த ஆதாயமும் கிடைக்காமல் இருந்து வருகிறது. ஆனாலும் தொடர்ந்து பல பதிவுகளை  கஷ்டப்பட்டு தான் இந்த பதிவுகளை எழுதுகிறேன்.  அதனால் நான் எழுதும் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் உபயோகமானவை என்றே நம்புகிறேன்.  இவ்வாறிருக்கையில் வரும் நண்பர்கள் என் வலைத்தளத்தில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்து பார்ப்பதன் மூலம் என்னால் மாதம் ஒரு சிறு தொகையை ஈட்ட முடியும் என்று நம்புகிறேன்.  ஆகையால் பதிவுகளை படிக்கும் நண்பர்கள் விளம்பரங்களை கிளிக் செய்து வருவாயை ஈட்ட உதவி செய்ய வேண்டுகிறேன். உதவுங்கள் இன்னும் தரமான ஆக்கங்களை உருவாக்க உதவுங்கள்.  அத்துடன் இந்த பதிவுகள் தரமுள்ளதாக இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் இதனை பற்றி தெரியபடுத்துங்கள்.  அனைத்து திரட்டிகளிலும் நீங்கள் போடும் ஒட்டுகளினால் இன்னும் உலகம் முழுக்க தமிழர்கள் அனைவருக்கும் போய்ச் சேர ஒரு உங்கள் ஒட்டு ஒரு  வாய்ப்பாக அமையும்.



நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

சட்டரீதியான ஒரு வருடத்திற்கான இண்டெர்நெட் செக்யூரிட்டியுடன் 24x7 டெக்னிக்கல் சப்போர்ட்ட்டுன் இலவசம்

நண்பர்களே உங்கள் கணினிக்கு ஒரு வருடத்திற்கான இண்டெர்நெட் செக்யூரிட்டி வேண்டுமா அதுவும் டெக்னிக்கல் சப்போர்ட்டுடன் 24x7 Technical support.  Firewall, Antivirus, Malware போன்றவற்றை நீக்க வேண்டுமா.  அத்துடன் $500க்கான இலவச காப்பீடு வேண்டுமா. விண்டோஸ் எக்ஸ்பி விண்டோஸ் 7 போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தையும்  ஆதரிக்கும் இண்டெர்நெட் செக்யூரிட்டி மென்பொருள் வேண்டுமா?ஆம் என்றால் இந்தாருங்கள். 



கொமோடோ இண்டெர்நெட் செக்யூரிட்டி 2011 Comodo Internet Security Pro 2011 இப்பொழுது ஒரு வருடத்திற்கான இண்டெர்நெட் செக்யூரிட்டி 2011 மென்பொருளை இலவசமாக வழங்குகின்றனர். 

இந்த மென்பொருளில் உள்ள சிறப்பம்சங்கள் கீழே ( உடனே அனைவருக்கும் அறிய வேண்டுமென்பதால் தமிழுக்கு மொழிபெயர்க்கவில்லை மன்னிக்கவும் தோழர்களே)
Firewall
Comodo's Firewall consistently ranks among the highest in industry tests.
Defense+ Technology
Proactive protection to automatically isolate threats from suspicious files so they can't cause harm actually preventing infections not just detecting them. Cloud based whitelisting of trusted publisher easily identifies a safe file and vendor.
Auto Sandbox Technology™
To reduce interruption to the user, unknown files can only run in a secure virtual environment where they can't damage Windows, its registry, or important user data.
Minimal Interruptions
Comodo Internet Security Pro 2011 relieves you of the responsibility of deciding whether to block or allow untrusted files – it makes the decisions for you. Game Mode suppresses operations that could interfere with a user’s gaming experience such as alerts, virus database updates or scheduled scans.
Spyware Scanning
Spyware Scanner detects and cleans malware infections in PC registry and disks.
Cloud based Antivirus
Cloud based antivirus scanning detects malicious file even if a user does not have up-to-date virus definitions.
Unlimited GeekBuddy Support
Expert support offering 24/7 live chat service to assist with everything from setup to virus removal and Windows issues at no additional charge.
இந்த மென்பொருளை இயக்க 128எம்பி ராம் இருந்தால் போதும்

இந்த மென்பொருள் குறித்த வீடியோ கீழே

http://downloads.comodo.com/comodovision/G1/g1_iss.flv.

இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருள் எத்தனை நாளைக்கு இலவசம் என்று தெரியாது. உடனே தரவிறக்கி கொள்ளுங்கள் நண்பர்களே



ஒரு அறிவிப்பு 

இந்த வலைத்தளம் மூலம் எனக்கு எதுவும் எந்த ஆதாயமும் கிடைக்காமல் இருந்து வருகிறது. ஆனாலும் தொடர்ந்து பல பதிவுகளை  கஷ்டப்பட்டு தான் இந்த பதிவுகளை எழுதுகிறேன்.  அதனால் நான் எழுதும் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் உபயோகமானவை என்றே நம்புகிறேன்.  இவ்வாறிருக்கையில் வரும் நண்பர்கள் என் வலைத்தளத்தில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்து பார்ப்பதன் மூலம் என்னால் மாதம் ஒரு சிறு தொகையை ஈட்ட முடியும் என்று நம்புகிறேன்.  ஆகையால் பதிவுகளை படிக்கும் நண்பர்கள் விளம்பரங்களை கிளிக் செய்து வருவாயை ஈட்ட உதவி செய்ய வேண்டுகிறேன். உதவுங்கள் இன்னும் தரமான ஆக்கங்களை உருவாக்க உதவுங்கள்.  அத்துடன் இந்த பதிவுகள் தரமுள்ளதாக இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் இதனை பற்றி தெரியபடுத்துங்கள்.  அனைத்து திரட்டிகளிலும் நீங்கள் போடும் ஒட்டுகளினால் இன்னும் உலகம் முழுக்க தமிழர்கள் அனைவருக்கும் போய்ச் சேர ஒரு உங்கள் ஒட்டு ஒரு  வாய்ப்பாக அமையும்



நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

முதல் வைரஸ் மற்றும் ஆன்டிவைரஸ் பற்றி தெரியுமா உங்களுக்கு???

நண்பர்களே இந்தியாவில் இணைய பயனாளிகள் 1998 ல் இருந்ததற்கும் இப்பொழுது இருப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.  அதை நம் கண்முன் கொண்டு நிறுத்துகிறது இந்த புகைப்படம்.

 
நாம் இப்பொழுது கணினியில் வைரஸ் வந்தால் ஆன்டி வைரஸ் மூலம் நீக்குகிறோம். அந்த வகையில் இது வரை எத்தனையோ வைரஸ்களும் ஆன்டி வைரஸ்களும் வந்தாலும் முதன் முதலில் விண்டோஸை தாக்கிய வைரஸ் மற்றும் காப்பாற்றிய ஆன்டிவைரஸ் பற்றி எத்தனை பேருக்கு தெரியும். தெரிந்து கொள்வோமே! நாமும்!


முதன் முதலில் கணினியை தாக்கிய வைரஸின் பெயர் ப்ரெய்ன் வைரஸ் Brain Virus இந்த வைரஸ் தாக்கிய ஆண்டு 1986.  இந்த வைரஸ் பழைய மாடலான 360k ப்ளாப்பி மூலம் பரவியது.  இதை உருவாக்கியது பாகிஸ்தான் என்றும் இன்றுவரையில் நம்பபடுகிறது.  இந்த வைரஸ் குறித்த Wikipedia பக்கம் சுட்டி


இந்த வைரஸ் 1987ல் Bernd Fix என்ற ஆன்டி வைரஸால் தடுக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் குறித்த விக்கி சுட்டி

கூகிள் நிறுவனம் இப்பொழுது நிறைய வசதிகள் செய்து வருகிறது அதன் வரிசையில் கூகிள் டாக்ஸ் தளத்தில் நீங்கள் இனி பின்வரும் இந்த வகை கோப்புகளையும் திறந்து பார்க்க முடியும்.

Microsoft Excel (.XLS and .XLSX)
Microsoft PowerPoint 2007 / 2010 (.PPTX)
Apple Pages (.PAGES)
Adobe Illustrator (.AI)
Adobe Photoshop (.PSD)
Autodesk AutoCad (.DXF)
Scalable Vector Graphics (.SVG)
PostScript (.EPS, .PS)
TrueType (.TTF)
XML Paper Specification (.XPS)

ஒரு அறிவிப்பு 

இந்த வலைத்தளம் மூலம் எனக்கு எதுவும் எந்த ஆதாயமும் கிடைக்காமல் இருந்து வருகிறது. ஆனாலும் தொடர்ந்து பல பதிவுகளை  கஷ்டப்பட்டு தான் இந்த பதிவுகளை எழுதுகிறேன்.  அதனால் நான் எழுதும் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் உபயோகமானவை என்றே நம்புகிறேன்.  இவ்வாறிருக்கையில் வரும் நண்பர்கள் என் வலைத்தளத்தில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்து பார்ப்பதன் மூலம் என்னால் மாதம் ஒரு சிறு தொகையை ஈட்ட முடியும் என்று நம்புகிறேன்.  ஆகையால் பதிவுகளை படிக்கும் நண்பர்கள் விளம்பரங்களை கிளிக் செய்து வருவாயை ஈட்ட உதவி செய்ய வேண்டுகிறேன். உதவுங்கள் இன்னும் தரமான ஆக்கங்களை உருவாக்க உதவுங்கள்.  அத்துடன் இந்த பதிவுகள் தரமுள்ளதாக இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் இதனை பற்றி தெரியபடுத்துங்கள்.  அனைத்து திரட்டிகளிலும் நீங்கள் போடும் ஒட்டுகளினால் இன்னும் உலகம் முழுக்க தமிழர்கள் அனைவருக்கும் போய்ச் சேர ஒரு உங்கள் ஒட்டு ஒரு  வாய்ப்பாக அமையும்.


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

1 ஆண்டிற்கான சட்டரீதியான காஸ்பர்ஸ்கை இண்டெர்நெட் செக்யூரிட்டி

நண்பர்களே மிக அதிகமான வேலை இருந்ததால் தொடர்ந்து எழுத இயலவில்லை அதற்கு பதில்தான் நம் நண்பர்கள் 50க்கும் மேற்பட்டோர் தொழில்நுட்ப பதிவுகளை எழுதி வருகின்றனரே அதனால் நான் சொல்ல நினைக்கும் விஷயங்களை கூட அவர்கள் சொல்கிறார்கள் நல்ல விஷயம் நான் எழுத ஆரம்பிக்கும் போது மொத்தம் ஐந்து தொழில்நுட்ப வலைத்தளங்கள் கூட இல்லை என் குரு பிகேபி அவர்கள்களை பார்த்து எழுத ஆரம்பித்தனர் பிறகு நான் ஆரம்பித்தேன் என்னை பார்த்து சிலர் ஆரம்பித்தனர் அவர்களை பார்த்து இப்பொழுது பலர் எழுத ஆரம்பித்து விட்டனர் தமிழ் தொழில்நுட்ப வலைப்பூக்கள் விரைவில் நூறை எட்டும் அனைத்து பதிவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இதில் நண்பர் ஷிர்டி சாய்தாசன் வேறு மாதம் ஒரு முறை தொழில்நுட்ப பதிவர்களின்  தரவரிசை பட்டியலிடுவதால் நல்ல ஆரோக்கியமான போட்டி  உருவாகியுள்ளது.   தோழர்களே போட்டியிடுங்கள் தவறில்லை பொறாமைபடாதீர்கள்.   ஒருவரின் வலைத்தளம் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு வர அவர்கள் தரும் இழப்புகள் அதிகம்.  அதை என் தொலைக்காட்சி பேட்டியின் போதே சொல்லியிருக்கிறேன்.  ஏன் என்றால் இப்பொழுது கூட ஒரு மென்பொருளை சோதிக்க போய் என் நிறைய கோப்புகளை இழந்துள்ளேன்.  ஷிர்டி சாய்தாசன் அவருடைய வலைப்பதிவில் தரவரிசைப் படுத்துவதால் எத்தனை புதியதாக  கணினி கற்பவர்களுக்கும் கற்றுக் கொடுப்பவர்களுக்கும் மிகுந்த உதவியாக இருப்பதை நானே கண்கூடாக அறிந்திருக்கிறேன்.   ஆகையால் யாரையும்  அநாவசியாமாக குறை கூற வேண்டாம்.  இனி இன்றைய பதிவிற்குள் நுழைவோம்.



கணினி உலகில் இணையம் இல்லாத கணினி  உபயோகிப்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.  அவர்கள் பாதுகாப்பாக இணையத்தில் உலா வரவேண்டுமானால் அவர்களின் கணினியில் ஏதாவது ஒரு ஆன்டி வைரஸ் அல்லது ஆன்டிவைரஸுடன் இணைந்த இண்டெர்நெட் செக்யூரிட்டி மென்பொருட்கள் தேவை.  இதில் இப்பொழுது மிகவும் பிரபலமாக பேசப்படுவது அத்துடம் மிகவும் நன்றாக செயல்படுகிறது என்ற பெயரை தட்டி செல்கிறது காஸ்பர்ஸ்கை இண்டெர்நெட் செக்யூரிட்டி.  இது இலவசமாக 30 நாட்கள் மட்டுமே செயல்படும் வகையில் சோதனை பதிப்புகள் இணையத்தில் தருகிறார்கள்.  உங்களுக்கு காஸ்பர்ஸ்கை இண்டெர்நெட் செக்யூரிட்டி வேண்டுமென்றால் சென்னையில் உள்ள பல கணினி விற்பனையாளர்கள் உள்ளனர்.   அவர்கள் மூலமாக பணம் கொடுத்து ஒரிஜினல் காஸ்பர்ஸ்கை ஆன்டி வைரஸ் மற்றும் இண்டெர்நெட் செக்யூரிட்டி கிடைக்கும்

இதன்  விலை ஒரு கணினிக்கு  ஒருவருடத்திற்கான ஆன்டிவைரஸ் மட்டும் வெறும் முன்னூறு மட்டும் செலவாகிறது. இதே மூன்று கணினிக்கு ஒரு வருடத்திற்கு 600 - 800  மட்டுமே செலவாகிறது.  அதே காஸ்பர்ஸ்கை இண்டெர்நெட் செக்யூரிட்டி ஒரு கணினிக்கு ஒரு வருடத்திற்கு 500 - 600  மட்டுமே செலவாகிறது அதே மூன்று கணினிக்கு ஒரு வருடத்திற்கு 750 - 900 வரை செலவாகிறது.  இப்படி சுலபமாக குறைந்த விலையில் கிடைக்கையில் ஏன்தான் தேவையில்லாமல் உடைக்கப்ட்ட மென்பொருட்களை நாடுகிறார்களோ தெரியவில்லை.  கணினி உபயோகிப்பாளர்களுக்குதான் தெரியாது இது தவறு என்று.  கணினி நிறுவி தரும் நிறுவனங்களின் சர்வீஸ் என்ஜினியர்கள் மற்றும் தனியாக வேலை பார்க்கும் சர்வீஸ் என்ஜினியர்கள் அனைவருமே ஒரு காரணகர்த்தாவாக இருக்கின்றனர்.  முப்பதாயிரம் செலவு செய்து கணினி வாங்குபவர்கள் அதற்கு என்று உபயோகிக்கும் எந்த மென்பொருளையும் இலவசமாக கிடைக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அப்படி நினைப்பவர்கள் லினக்ஸுக்கு செல்லலாமே மிகவும் சுலபமாக நீங்கள் விரும்பும் அனைத்தும் கிடைக்கும்.  சரி விடுங்கள் திருந்த நினைப்பவர்கள் திருந்தட்டும்.

சரி இப்படி சுலபமாக காசே இல்லாமல் ஆன்டிவைரஸ் கணினி மற்ற மென்பொருட்கள் இலவசமாக அந்த நிறுவனமோ அல்லது அந்த நிறுவனத்தின் முகவர்களோ சில மணி நேரம் மற்றும் சில நாட்கள் மட்டும் இலவசமாக சட்ட ரீதியாக ஒரு வருடத்திற்கான லைசென்ஸுடன் தரும் பொழுதாவது அதை நீங்கள் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். 


கீழுள்ள மென்பொருளில் சில பிரச்சனைகள் இருப்பதால் இதை நிறுவவோ தரவிறக்கவோ வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   ஏற்பட்ட தவறுக்கு அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.  தவறை சுட்டிக் காட்டிய பொன்மலர், மற்றும் அன்பரசன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

இப்பொழுது இந்த காஸ்பர்ஸ்கை இண்டெர்நெட் செக்யூரிட்டி மென்பொருள் சீன முகவர்கள் இலவசமாக தரவிற்க்க தருகிறார்கள்  ஒரு வருடத்திற்கான Kaspersky Internet Security 2011 சட்டரீதியாக தருகிறார்கள்.  இதை பெற சில விஷயங்கள் செய்தால் போதும்.




முதலில் இந்த வலைத்தளத்திற்கு செல்லுங்கள்.  சுட்டி



இங்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியை இரண்டு முறை கொடுங்கள்.  பிறகு கீழுள்ள பட்டனை கிளிக் செய்யுங்கள்.



அடுத்த பக்கத்தில் ஒரு  ஐந்து எண்கள் தோன்றும் அதை வலது பக்க பெட்டியில் டைப் செய்யுங்கள். பிறகு கீழுள்ள பட்டனை கிளிக் செய்தால் அடுத்த பக்கத்தில் உங்களுக்கான Kaspersky Internet Security 2011 கீ கிடைக்கும்.





 காஸ்பர்ஸ்கை இண்டெர்நெட் செக்யூரிட்டி சோதனை பதிப்பு தரவிறக்க சுட்டி




இந்த சலுகை  இன்னும் 25 நாளைக்கு மட்டுமே அதாவது டிசம்பர் - 3 - 2010 வரை மட்டுமே.  முடிந்தவரை விரைவில் தரவிறக்கம் செய்து உங்களுக்கான ஒரு வருடத்திற்கான  சட்டரீதியான இலவச காஸ்பர்ஸ்கை இண்டெர்நெட் செக்யூரிட்ட்டியை இலவசமாக பெற்றுக் கொள்ளுங்கள்.

ஓட்டு போட்டு இந்த பதிவை அனைவரிடமும் கொண்டு செல்ல உதவிடுங்கள்


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை