நண்பர்களே முல்லைப்
பெரியாறு பிரச்சினையை முழுமையாகப் புரிந்து கொள்ள ஆவணப் படம் ஒன்றைத்
தயாரித்துள்ளது தமிழக அரசின் பொதுப் பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கம்.
முல்லைப்பெரியாறு- பிரச்னையும் தீர்வும் என்ற இந்த ஆவணப்படம் இணைய
தளத்திலும் காணக்
கிடைக்கிறது. படித்தவர்-பாமரர், தமிழர் – மலையாளி என்ற பேதமின்றி,
யோசிக்கத் தெரிந்த அத்தனைப் பேரும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம்
இந்தப் படம் அமைந்துள்ளது.
இதற்கு மேலாகச் சிறப்பாகவும், தெளிவாகவும், எளிய பாமரனும்
புரிந்துகொள்ளும் வகையிலும் இன்னொரு ஆவணப்படம் எடுக்க வேண்டிய அவசியம்
தமிழக அரசுக்கு இல்லை. 42 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக வெளிவந்திருக்கிறது.
கீழே உள்ள படத்தினை பாருங்கள்
The Mullai Periyar DAM Problem
இந்த ஆவணப்படத்தையே அனைத்துத் திரையரங்குகளிலும் திரைப்படத்துக்கு
முன்பாக திரையிடக் கட்டாயப்படுத்தலாம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத்
தனியார் தொலைக்காட்சிகளையும் கட்டாயம் ஒளிபரப்பச் செய்யலாம். செய்தி மக்கள்
தொடர்புத்துறை மூலம் கிராமங்களில் திரையிடலாம்
.
அனைத்து இணையதளங்களும் தங்களின் தலையாய கடமையாக இந்தப் படத்தை வெளியிட வேண்டும். என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...