உங்கள் கோப்புகளை முழுமையாக நீக்க மற்றும் வலை முகவரி சுருக்கிகள் மூன்று உங்களுக்காக

நண்பர்களே நாம் நம்முடைய முக்கியமான தகவல்கள் அடங்கிய கோப்புகள் அல்லது தேவையில்லாத கோப்புகளில் Del கீ கொண்டு நீக்குவோம்.  அல்லது Shift+Del கீ கொண்டு நீக்குவோம்.  வெறும் Del கீ கொண்டு நீக்கினால் Recycle Bin பகுதிக்கு சென்று விடும் அங்கிருந்து நாம் மீட்டுக் கொள்ளலாம்.  அதே Shift+Del கொண்டு நீக்கினால் Restoration என்ற மென்பொருள் கொண்டு மீட்டெடுக்கலாம்.   இது போன்ற மென்பொருட்களை கொண்டு மீட்டெடுத்தால் யார் வேண்டுமானாலும் நம் கோப்புகளை திருட்டுதனமாக மீட்டெடுத்து உபயோகிக்கலாம்.  அப்படி செய்யாமல் இருக்க வேண்டுமென்றால் Eraser என்ற மென்பொருளை கொண்டு நீக்கினால் அந்த கோப்புகள் யார் கைக்கும் கிடைக்காத வண்ணம் வன்தட்டிலிருந்து மிகவும் பாதுகாப்பாக நீக்கிவிடலாம். 

இந்த மென்பொருள்  அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையில் உபயோகிக்கப்பட்டு மிகவும் பாதுகாப்பான மென்பொருள் என்று சான்றளிக்கப்பட்டுள்ளது.

இந்த மென்பொருள் ஒரு ஒபன் சோர்ஸ் மென்பொருளும் கூட

இந்த மென்பொருள் விண்டோஸ், லினக்ஸ், மற்றும் மேக் கணினிகளில் பயன்படுத்தும் வண்ணம் தனி தனி மென்பொருளாக கிடைக்கிறது.

இந்த மென்பொருளை கடந்தா வாரம் மட்டும் 30000க்கும் மேற்பட்டவர்கள் தரவிறக்கி உபயோகித்து நன்றாக உள்ளது என்று கூறியிருக்கிறார்கள்.

இந்த மென்பொருள் வெளிவந்த வருடம் 2006

Eraser 6.0.8.2273 இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி


 விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் விஸ்டாவில் அனைவருக்கும் ஒரு பிரச்சனை வரும் அந்த பிரச்சனை என்னவென்றால் விண்டோஸ் எக்ஸ்பியில் உள்ளது போல Start மெனு இல்லாததே பிரச்சனை.  இதை தீர்ப்பதற்கு ஒரு மென்பொருள் உள்ளது அதுதான் Start Menu XP இந்த மென்பொருளை நிறுவி உங்களுக்கு ஸ்டார்ட் பாருக்கு ஏற்றவாறு குரூப்கள் உருவாக்கிக் கொள்ளலாம்.  இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி
பெரிய பெரிய வலை முகவரிகளை சிறியதாக மாற்ற நாம் bit.ly, goo.gl, is.gd,mcaf.ee போன்ற வலைத்தளங்களுக்கு சென்று பெரிய வலை முகவரிகளை சிறிய முகவரியாக மாற்றி மின்னஞ்சல் செய்வோம். 
அது போல செய்ய ஒவ்வொரு தளத்திற்கும் செல்லாமல் நம் வலை உலாவியிலிருந்து செய்ய சிறு மென்பொருட்கள் உள்ளது.  அதை நிறுவினால் போதும்.

பயர்பாக்ஸ் Firefox உலாவியில் நிறுவ நீட்சி சுட்டி இது கூகிள், மெக்காபி, மற்றும் பிட் லி போன்ற வலைத்தளங்கள் செல்லாமல் வலை முகவரிகளை சுருக்கலாம்.
 
பிட் லி வலை முகவரி சுருக்கி மென்பொருள் 
பயர்பாக்ஸ் Firefox  வலை உலாவியில் நிறுவ நீட்சி சுட்டி

கூகிள் குரோம் வலை உலாவியில் பிட்லி வலை முகவரி சுருக்கி நீட்சி சுட்டி 
இந்த நீட்சிகள் இரண்டும் பிட்லி வலைத்தளத்தை மட்டுமே  கொண்டு செயல்படுகிறது.
கூகிள் வலை முகவரி சுருக்கி நீட்சி குரோம் வலை உலாவியில் மட்டுமே செயல்படும். கூகிள் குரோமிற்கான நீட்சி சுட்டி

ஒரு அறிவிப்பு 

இந்த வலைத்தளம் மூலம் எனக்கு எதுவும் எந்த ஆதாயமும் கிடைக்காமல் இருந்து வருகிறது. ஆனாலும் தொடர்ந்து பல பதிவுகளை  கஷ்டப்பட்டு தான் இந்த பதிவுகளை எழுதுகிறேன்.  அதனால் நான் எழுதும் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் உபயோகமானவை என்றே நம்புகிறேன்.  இவ்வாறிருக்கையில் வரும் நண்பர்கள் என் வலைத்தளத்தில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்து பார்ப்பதன் மூலம் என்னால் மாதம் ஒரு சிறு தொகையை ஈட்ட முடியும் என்று நம்புகிறேன்.  ஆகையால் பதிவுகளை படிக்கும் நண்பர்கள் விளம்பரங்களை கிளிக் செய்து வருவாயை ஈட்ட உதவி செய்ய வேண்டுகிறேன். உதவுங்கள் இன்னும் தரமான ஆக்கங்களை உருவாக்க உதவுங்கள்.  அத்துடன் இந்த பதிவுகள் தரமுள்ளதாக இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் இதனை பற்றி தெரியபடுத்துங்கள்.  அனைத்து திரட்டிகளிலும் நீங்கள் போடும் ஒட்டுகளினால் இன்னும் உலகம் முழுக்க தமிழர்கள் அனைவருக்கும் போய்ச் சேர ஒரு உங்கள் ஒட்டு ஒரு  வாய்ப்பாக அமையும்.



நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

உங்களின் கணினி எந்திரத்தின் வேகத்தை கூட்ட வேண்டுமா சூப்பர் மென்பொருள்

நண்பர்களே உங்களிடம் உள்ள டிவிடி வீடியோ கோப்புகளை உயர்தர (HD) வீடியோ கோப்பாகவும், வீடியோ கோப்பிலிருந்து ஆடியோவை மட்டும் தனியாக பிரித்தெடுக்க, டிவிடியிலிருந்து எந்த ஒரு வீடியோ கோப்பாகவும் மாற்ற இந்த மென்பொருள் உபயோகப்படுத்தலாம். 

இந்த மென்பொருளின் பெயர் ஐடூல்சாப்ட் வீடியோ ரிப்பர் இந்த மென்பொருள் அக்டோபர் 10ஆம் தேதிவரை இலவசமாக தரவிறக்க தரப்படுகிறது.  இதை தரவிறக்க இங்கே செல்லவும் சுட்டி  தளத்திற்கு செல்ல விரும்பாதவர்கள் கீழே இருந்தே தரவிறக்கிக் கொள்ளலாம்.

 
Register Name: giveaway@itoolsoft.com                   
Register Code: r4--KT--RF--gu--Ch--sV--aR--EV--1o--9f





Register Name: giveaway@itoolsoft.com                   
Register Code: 2a--Ml--jH--Qi--zz--fg--NT--bQ--u2--NT
இந்த தரவிறக்க சலுகை அக்டோபர் 10ஆம் தேதி வரை மட்டுமே நண்பர்களே



கூகிள் இணைய முகவரி சுருக்கி



கூகிளின் புதிய வசதி மிகப்பெரிய இணைய முகவரிகளை சுருக்கும் வசதி உங்களிடம் கூகிள் கணக்கு இருந்தால் உங்கள் சுருக்கப்பட்ட முகவரி எத்தனை முறை கிளிக் செய்யப்பட்டு இருக்கிறது என்பதையும் காணலாம். 



சுருக்கப்பட்டி சுட்டி  -  http://goo.gl/82fM நம் புதிய தளத்தின் புதிய பதிவு சுட்டியை உதாரணத்திற்கு சுருக்கி தந்திருக்கிறேன்.


நீங்கள் புதியதாக பிராண்டட் நிறுவனத்தின் கணினி வாங்குகிறீர்க்ள் உதாரணத்திற்கு HP கணினி வாங்கினால் அதில் அவர்கள் நிறுவனத்திற்கான ப்ரொமசனல் ப்ரோக்ராம்கள், தேவையில்லாத சர்வீஸ்கள், தேவையில்லாத டூல்பார்கள், ட்ரையல் ஆபர்கள் போன்றவற்றிகான மென்பொருள் நிறுவி தருவார்கள்.  இதனால் புதிய கணினியில் நிறைய இடத்தையும் வேகத்தினையும் குறைக்கும்.

 

இதற்கு ஒரு மென்பொருள் இருக்கிறது.  இந்த மென்பொருள் மூலம் உங்கள் கணினியை இந்த புதிய கணினியில் தேவையில்லாத நிறுவி உள்ள மென்பொருட்களை நீக்க முடியும். இதன் மூலம் உங்கள் கணினியின் தொடக்க வேகமும் அப்ளிகேசன்களை இயக்கும் வேகமும் மிக வேகமாக இயக்க முடியும்.   இதன் பெயர் ஸ்லிம் கம்ப்யூட்டர் Slim Computer இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

அனைத்து வீடியோ இணையதளங்களிலும் இருந்து வீடியோக்களை தரவிறக்க

நண்பர்களே McAfee நிறுவனத்தில் இருந்து ஒரு வலைத்தளம் வந்திருக்கிறது.  இது வரை மிகப்பெரிய இணையத்தள லின்குகளை மற்றவர்களுக்கு அனுப்புகையில் பின்வரும் http://tinyurl.com/ http://tweetburner.com/ http://bit.ly/ http://snipurl.com/ http://budurl.com/ http://tr.im/ தளங்களில் ஏதாவது ஒரு தளம் வழியாக மிகப்பெரிய இணைய லின்குகளை சிறு லின்குகளாக மாற்றி அனுப்புவோம்.  இந்த தளங்களின் வரிசையில் புதிய McAfee நிறுவனம் ஆன்டிவைரஸ் எதிர்ப்பு மென்பொருளில் பழம் தின்னு கொட்டை போட்டவர்கள் அவர்களிடம் இருந்து வந்த இந்த தளம் மிகவும் பாதுகாப்பானது. இது இப்பொழுது Beta வரிசையில் வெளிவந்துள்ளது விரைவில் பீட்டாவிலிருந்து வெளிவருகிறது.  இணையதள முகவரி
Hulu, Veoh, Boxee, Joost, YouTube, Yahoo Video, CBS, MTV போன்ற தளங்களிலிருந்து வீடியோவை தரவிறக்க ஒரு அற்புதமான மென்பொருள் மிக சுலபமான மென்பொருள் StreamTransport.  நீங்கள் இந்த மென்பொருள் நிறுவினால் நீங்கள் காப்பி செய்யும் லிங்குகளை தானாகவே கண்டு கொள்ளும்.  இதன் வழியாக தரவிறக்கும் போது FLV, MP4 போன்ற கோப்பாக சேமிக்கவும் முடியும்.  தரவிறக்கம் முடிந்தவுடன் தானாக விண்டோஸ் ஷட்டவுண் செய்யும் வசதியும் உள்ளது.  இந்த மென்பொருள் முற்றிலும் இலவசம். இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி


சிசிகிளினர் வரிசையில் இன்னும் ஒரு மென்பொருள் ஸ்லிம்கீளினர் இது இப்பொழுது பீட்டாவாக பொதுமக்களுக்காக இலவசமாக தரப்பட்டு வருகிறது.  இந்த மென்பொருள் மூலம் சிசிகீளினர் செய்யும் வேலைகள் மட்டுமன்றி கோப்புகளை பலதுண்டுகளாக பிரித்து நீக்கும் வசதியுண்டு.  இந்த மென்பொருளை முயற்சித்து பார்க்க சுட்டி

நேஷனல் ஜியோகிராபிக்ஸ் தொலைக்காட்சியை விரும்பாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.  அந்த தொலைக்காட்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வால்பேப்பர்களாக வெளியிட்டுள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.  அந்த வால்பேப்பர்களை தரவிறக்க இதோ ஒரு மென்பொருள் அவர்களிடமிருந்தே வருகிறது.  இது பழைய வால்பேப்பர்க்ளையும் புதியதாக வரும் வால்பேப்பர்களையும் காட்டுகிறது.  உங்களுக்கு பிடித்ததை தரவிறக்கிக் கொள்ளலாம்.  50000க்கும் மேற்பட்ட வால்பேப்பர்கள் உள்ளது.  மொத்தமாக தரவிறக்கும் வசதி உள்ளது.  உங்களுக்கு தேவையான அளவுகளிலும் தேடி எடுத்துக் கொள்ளலாம். HD எனப்படும் உயர்தர வால்பேப்பர்களும் இதில் அடங்கும்.  இந்த மென்பொருளை இயக்க வேண்டாம் நேரடியாக இயக்கலாம்.  இது ஒரு போர்ட்டபிள் மென்பொருள்.  இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி

 


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை