புதிய வால்பேப்பர்கள் மற்றும் பதிவர்கள் அறிமுகம்

நண்பர்களே இன்றும் சில பதிவர்கள் அறிமுகம் கொடுக்க போகிறேன் ((சூரியனுக்கே டார்ச் அடிக்க போகிறேன் யாரும் கலாய்க்க கூடாது சரியா??))

திரு.  லதானந்த் அவர்கள் தன் பெயருடன் தன் திருமதி பெயரையும் இணைத்து பெண்ணிற்கு பெருமை தரும் மிகப் பிரபலமான பதிவர் இவரை பற்றி அறியதாவர்கள் பதிவுக்கு புதியவர்கள் மற்றும் வெகு சிலரே.  இவர் எழுதிய நாய் வளர்க்கலாம் வாங்க மற்றும் ரேஞ்சர் மாமா பற்றிய பதிவுகள்.  மிகவும் பிடித்த பதிவர் இவர் இதுவரை இவரை பார்த்ததில்லை இவர் பேசும் கோவை தமிழ் மிக்க அழகு. 


மூடுபனி  இவர் எழுதிய பதிவுகளுக்கு நான் வெகுநாள் ரசிகன் இருந்தாலும் இவரை சந்தித்ததில்லை  இவரை இன்டிப்ளாக்கர் மீட்டிங்கில்தான் சந்தித்தேன்.  மிக பெரிய பெண்ணாக இருப்பார் என்று எதிர்பார்த்த எனக்கு இவர் சிறு பெண் என்று தெரிய வந்த போது மிகவும் வியப்பு ஏற்பட்டது.  இவ்வளவு சிறுவயதில் இவ்வளவு தெளிவாக எழுதுகிறாரே என்று.  மிக அழகானவை அவர் எழுத்துக்கள் அவரை போன்றே.  இவரை பற்றி படிக்க இங்கே செல்லுங்கள் மூடுபனி  இவங்க தொடர்ந்து அடிக்கடி பதிவு எழுதனும்னு கடவுளை பிரார்த்திக்கிறேன்.


மிகப் பிரபல பதிவர் தாமிரா அவர்கள் எழுதிய பதிவுகள் அனைத்தும் பிடிக்கும் இவர் மூலம் என் பதிவிற்கு வந்தவர்கள் அதிகம் நான் எழுத ஆரம்பித்ததிலிருந்தே தன்னுடைய வலைப்பக்கத்தில் எனக்கென்று தனி இடம் அளித்தவர்.  இவரை நினைக்காத நாளில்லை.   இவர்  தங்கமணி பற்றி எழுதும் பதிவுகள் மிகவும் அருமையாக இருக்கும்.  இவர் எழுதிய சூடான இன்றைய பதிவு இவர் புலம்பல்கள் என்ற பெயர் வைத்திருக்கிறார் தன் வலைப்பதிவிற்கு

இன்று இது போதும் அடுத்து நம் டெஸ்க்டாப்பில் அழகான வால்பேப்பர்கள் நிறைய வைத்திருப்போம்.  அது போல இந்த வால்பேப்பர் பயன் படுத்தி பாருங்கள்.  ஒரு அலுவலகத்தில் எப்படி வைத்திருப்போமோ அது போல வைத்துக் கொள்ளலாம்.  படத்தின் மீது ரைட் கிளிக் செய்து சேவ் செய்து கொள்ளுங்கள்.  பின்னர் வால்பேப்பராக மாற்றிக் கொள்ளுங்கள்

etxm47.jpg


.
slh4dj.jpg

rvm634.png



--
வடிவேலன் ஆர்.
வலைப்பதிவு http://www.gouthaminfotech.com


» Read More...

இலவச பிடிஎப் 2 டெக்ஸ்ட் மாற்று மென்பொருள் & டிப்ஸ்கள்

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 350க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி

நண்பர்களே நமக்கு தேவையான வலை உலாவிகளை தரவிறக்க நேரடியாக அந்த தளத்திற்கு சென்று அங்கு டவுண்லோடு பிரிவிக்கு சென்ற பிறகே தரவிறக்க முடியும்.

» Read More...

ஐகேர் கோப்புகளை மீட்டெடுக்கும் மென்பொருள் இலவசம்

நண்பர்களே உங்கள் கணினியில் உள்ள கோப்புகள் அழிந்து போனாலோ உங்கள் கணினி பார்மெட் செய்த பின் கோப்புகளை திரும்ப மீட்டெடுக்க வேண்டியிருந்தாலோ வைரஸ் வந்து கணினி கிராஷ் ஆனாலோ உங்கள் கோப்புகளை மீட்டெடுக்க ஒரு டேட்டா ரெகவரி மென்பொருள் வேண்டும்.  கூகிளில் தேடினால் இணையத்தளங்களில் எப்பொழுதும் முயற்சி பதிப்பு மட்டுமே கிடைக்கும்.  முழு பதிப்பு வேண்டுமானால் குறைந்த பட்சம் 50 $ டாலர் வைக்க வேண்டும்.  ஐ கேர் நிறுவனம் இப்பொழுது இலவசமாக டேட்டா ரெகவரி மென்பொருள் இலவசமாக அளிக்கிறது.  இந்த மென்பொருளை பெற இங்கே செல்லவும். 

35d3fno.jpg

மென்பொருள் தரவிறக்க சுட்டி



இந்த தளத்தில் கீழே மென்பொருளுக்கான பதிவு எண் கொடுத்திருப்பார்கள் உங்களுக்கான எண் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். 


» Read More...

ப்ளூ ரே ரிப்பர் சட்டரீதியான மென்பொருள் இலவசம்

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 350க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி

நண்பர்களே நாம் ஒரு காலத்தில் படங்கள் விசிஆர் கேசட்டில் பார்த்துக் கொண்டிருந்தோம்.  பிறகு சிடி வந்தவுடன் அது வழக்கொழிந்து போனது.  அது போல டிவிடி வந்து சிடி வழக்கொழிந்து போனது.  இப்பொழுது ப்ளூ ரே என்ற டிவிடி வந்துள்ளது.  இது டிவிடியின் மேம்பட்ட பதிப்பு.  இதன் அளவு சாதாரண டிவிடியில் 4.5 ஜிபி அளவு கொள்ளளவு கொண்டது.  இந்த ப்ளூ ரே டிவிடி 25 ஜிபியிலிருந்து 50 ஜிபி இது ஒரு பக்க லேயர் மட்டுமே.  இதுவே இரண்டு பக்க லேயர் என்றால் 50 ஜிபியிலிருந்து 100 ஜிபி வரை தகவல்களை பதியலாம்.  இதில் HD எனப்பது  உயர்தர வீடியோக்களை வெளியிடுகிறார்கள் வெளிநாட்டில்.  இது போன்ற ப்ளூ ரே டிவிடியிலிருந்து வீடியோக்களை டிவிடி ரிப் செய்ய ஒலியை மட்டும் பிரித்தெடுது எம்பி3 ஆக சேமிக்க என்று பல வேலைகள் செய்யலாம் இந்த மென்பொருள் மூலம் அதுவும் இலவசம்


இது செய்யும் சில குறிப்பிட்ட வேலைகள்
  1. ப்ளூ ரே டிவிடியிலிருந்து  (M2TS format) to High-Definition formats  H.264/MPEG-4 AVC, HD WMV மிகவும் பிரபலமான  MP4, MKV, FLV, WMV, 3GP, இது போன்ற எண்ணற்ற பார்மெட்டுகள்;
  2. ப்ளூ ரே வீடியோவிலிருந்து ஒலியை மட்டும் பிரித்து MP3, WMA, AAC, OGG, FLAC சேமிக்கலாம்
  3. புதிய ப்ளூ ரேய் வீடியோவில் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் சேர்க்கலாம்.
  4. உங்களுக்கு பிடித்தை காட்சியை மட்டும் வெட்டி எடுத்து சேமிக்கலாம்.

இந்த மென்பொருளின் மதிப்பு டாலர் 45.95 விலையுள்ள இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமாக தருகிறார்கள் சில நாட்களுக்கு மட்டும்  முடிந்தவரை வேகமாக தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

ப்ளூ ரே குறித்த விக்கி தகவல்களுக்கு சுட்டி

இணையத்தள சுட்டி சுட்டி

மென்பொருள் தரவிறக்க சுட்டி

வெறும் 1 கேபி அளவுள்ள ஒரு மென்பொருள் உங்கள் கணினியில் ஒளிந்துள்ள ஒரே அளவுள்ள இரட்டைக் கோப்புகளை கண்டுபிடிக்க உதவுகிறது.  இந்த மென்பொருள் வேலை செய்ய உங்கள் கணினியில் ஜாவா நிறுவி இருக்க வேண்டும்.  இது விண்டோஸ் லினக்ஸ் மற்றும் மேக் கணினியில் வேலை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

மென்பொருள் தரவிறக்க சுட்டி




அத்துடன் படித்தவர்கள் மற்றவர்களுக்கு சொல்லுங்கள்.  பிடித்தவர்கள் மேலுள்ள விளம்பரங்களையும் பின்னூட்டங்களையும் வாரி வழங்குங்கள்.  நன்றி


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எனது விருப்ப இணையதளங்கள் & மென்பொருட்கள்

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 350க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி

நண்பர்களே இன்று நான் படிக்கும் விரும்பி படிக்கும் தளங்கள் சிலவற்றை கொடுக்க போகிறேன்.  இதன் மூலம் சில நல்ல விஷயங்கள் நகைச்சுவைகள் அனைத்தும் என் உடன் வரும் நண்பர்கள் வாசகர்கள் படிக்கட்டுமே என்ற எண்ணத்தில் தொகுத்து வழங்க போகிறேன்.  முடிந்தவரை மாதம் ஒரு முறை இது போல் கொடுக்க முயற்சிக்கிறேன்.

தமிழ் மருத்துவம்

நமக்கு தெரிந்தும் தெரியாத ரகசிய கேள்விகளுக்கு  விடை  இங்கே கிடைக்கிறது முயற்சித்து பாருங்கள்.
வலைப்பூ மயான அமைதி என்று இருக்கிறது.  கண்டிப்பாக அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தளம்
தமிழில் மிகவும் அருமையான மருத்துவ தளம்.


க'விதை'07

இவர் மிக அழகாக ஒரு தொடர்கதையை எழுதி வருகிறார்.  மிக அருமையான நடை உண்மை வாழ்க்கையில் நடப்பது போல எழுதி வருகிறார்.  நீங்களும் படித்து பாருங்கள் தலைப்பு உனக்கு 22 எனக்கு 32  அத்துடன் நிறைய ஜோசியம் குறித்து எழுதி வருகிறார்.  படித்து பாருங்கள்

கோகுலத்தில் சூரியன்

இந்த வலைப்பூவை வெங்கட் என்பவர் எழுதி வருகிறார்.  மிகவும் அருமையான நகைச்சுவையான வலைப்பதிவாளர்.  இவர் எழுதிய வலைப்பதிவுகளாஇ ஒரே நாளில் அமர்ந்து படித்து விட்டேன் என்றால் பாருங்கள்.  அந்த அளவுக்கு நகைச்சுவை கடியுடன் எழுதியுள்ளார்.  உதாரணத்திற்கு அவர் எழுதிய கல்யாண பத்திரிகை பதிவு


பாட்டி சொல்லும் கதைகள்

நாம் நம்முடைய பாட்டி கதைகள் கேட்டிருப்போம் நகரத்து வாழ்க்கையில் இருக்கும் பலர் பல குழந்தைகளுக்கு பாட்டியின் கதைகள் கிடைப்பதில்லை.  அந்த குறையை போக்க இந்த பாட்டியின் கதைகள் உதவும்.  படித்து நீங்களும் குழந்தையாகுங்கள். உங்கள் குழந்தைகளுக்கும் கூறி மகிழ்ச்சி அடையுங்கள்.



நம்ம விஷயத்துக்கு வருவோம்.  உங்களிடம் ஒரு போல்டரில் ஆயிரம் கோப்புகள் உள்ளது என வைத்துக் கொள்வோம்.  அதை பத்து பத்தாக ஒரு போல்டரில் போட வேண்டும் என்றால் என்ன செய்வீர்கள்  ஒவ்வொரு போல்டர் கிரியேட் செய்து அதனுள்ளே போட வேண்டும்.  இவ்வாறு செய்வதன் மூலம் நிறைய நேரம்தான் விரயமாகும்.   இவ்வாறு போட இந்த சிறு மென்பொருள் உதவும்.  இது ஒரு இலவச மென்பொருள்.  மென்பொருள் சுட்டி



அத்துடன் படித்தவர்கள் மற்றவர்களுக்கு சொல்லுங்கள்.  பிடித்தவர்கள் விளம்பரங்களையும் பின்னூட்டங்களையும் வாரி வழங்குங்கள்.  நன்றி


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

விண்டோஸ் சிடி கீ அந்த சிடிக்குள்ளே இருக்கிறது

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 300க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி

நண்பர்களே இப்பொழுதெல்லாம் அனைத்தும் கணினி மயம் வீட்டிலிருந்தபடியே வங்கி பரிவர்த்தனை, மின்சார கட்டணம், தண்ணீர் கட்டணம் இது போன்று அனைத்து கணினி வழியாக மேற்கொள்ளும் பொழுது சில நேரங்களில் நம் கணினி வழியாக பணம் பரிவர்த்தனை செய்து இருப்போம் பிறகு சிறிது நாட்களுக்கு பிறகு நம் பணம் நம் வங்கியிலிருந்து எடுக்கப்பட்டிருக்கும்.  இவ்வாறு நடப்பது எதனால் சில நேரங்களில் நமது ஆன்டி வைரஸ் மென்பொருள் சரிவர இயங்கமால் தடைப்பட்டிருக்கும் காலங்களில் ஏதாவது ஒரு இணையத்தளம் வழியாக நம் கணினிக்கு கீலாகர் மென்பொருள் நிறுவப்பட்டிருக்கும்.  இதன் வேலை என்ன தெரியுமா.  நம் கணினியில் நாம் தட்டச்சு செய்யும் அனைத்தையும் ஒரு காப்பி எடுத்து அனுப்பிக் கொண்டிருக்கும்  இதை நிறுவிய நபருக்கு இதனால்தான் நாம் வங்கி பரிவர்த்தனை செய்தவுடன் நம் வங்கி கணக்கின் முழு தகவல்களையும் சேமித்து அதன் மூலம் அவர்கள் நம் கணக்கிலிருந்து பணம் எடுத்து விடுவார்கள்.  இது போல நடக்காமல் இருக்க ஆன்டி கீ லாகர் மென்பொருள் உபயோகிக்கலாம்.  இதற்கான சட்டரீதியான இலவச மென்பொருள் Zemana நிறுவனத்தினர் தருகிறார்கள்.  இந்த சட்டரீதியான இலவச சலுகை எத்தனை நாள் நீடிக்கும் என்று தெரியவில்லை இன்னும் இரண்டு நாட்கள்தான் இருக்கும் என்று தெரிகிறது. முடிந்தவரை தரவிற்க்கிக் கொள்ளுங்கள்.

மென்பொருளை நேரடியாக தரவிறக்க சுட்டி

மென்பொருளை பற்றி மேலும் தெரிந்துகொள்ள இணைய தள சுட்டி

ஒலி ஐகான் மாற்ற

உங்கள் கணினியில் ஒலியை குறைக்கும் ஐகான் விண்டோஸில் இணைந்து வரும் ஒரே மாதிரி பார்த்து போரடித்து போயிருக்கும் .
இணையத்தள சுட்டி

இந்த வலைத்தளத்தில்  நமக்கு தேவையான ஐகானை தேர்ந்தெடுத்து அந்த மென்பொருளை தரவிறக்கி நிறுவினால் போதும். உங்கள் ஒலியை குறைக்கும் ஐகான் விண்டோஸில் மாறியிருக்கும்.


விண்டோஸ் சிடி கீ சிடிக்குள்ளே இருக்கிறது

உங்களிடம் விண்டோஸ் எக்ஸ்பி சிடி ஒரிஜினல் இருக்கிறது அதனுடைய ப்ரோடக்ட்  ( சிடி)  கீ தொலைந்துவிட்டதா கவலை வேண்டாம்.  அதை மீட்டெடுக்க எளிய வழி உள்ளது.   அந்த விண்டோஸ் சிடியை வேறொரு சிஸ்டத்தின் சிடி ட்ரைவில் போடுங்கள்.  பிறகு மை கம்ப்யூட்டர் சென்று அங்கு அந்த சிடியை எக்ஸ்ப்ளோரர் வழியாக திறக்கவும்.  பிறகு அதற்குள் i386  போல்டரினுள் சென்று  Unattend.txt என்ற கோப்பினை திறக்கவும் பிறகு அந்த கோப்பின் கீழே கடைசியாக செல்லுங்கள் அங்கு அந்த சிடிக்கான கீ இருக்கும் குறித்துக் கொண்டு உபயோகப்படுத்துங்கள்.  ( இந்த குறிப்பு ஏற்கனவே எழுதி ட்ராப்டில் இருந்தது இன்று காலை தினமலரில் பார்த்தவுடன் ஞாபகம் வந்து இன்றைய பதிவுடன் சேர்த்துவிட்டேன்.)

அத்துடன் படித்தவர்கள் மற்றவர்களுக்கு சொல்லுங்கள்.  பிடித்தவர்கள் விளம்பரங்களையும் பின்னூட்டங்களையும் வாரி வழங்குங்கள்.  நன்றி


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

திறக்காத கதவை திறக்க மற்றும் இலவச விளையாட்டு

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 350க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி

நண்பர்களே இன்று  விளையாட்டு மென்பொருள் தருகிறேன்.  சட்டரீதியான இலவசமான மென்பொருள் என்பது இதன் சிறப்பு.  இதன் சலுகை எத்தனை நாள் நீடிக்கும் என்பது தெரியாது.  அதனால் கூடுமானவரை உடனே தரவிறக்கிக் கொள்ளுங்கள். 


Ferrari Virtual Race -  பெர்ராரி விர்ச்சுவல் ரேஸ்

விளையாட்டு மென்பொருள் தரவிறக்க சுட்டி

உங்கள் கணிணியில் உள்ள வலை உலாவிகளில் தேவையில்லாமல் நிறைய டூல்பார்கள் நிறுவப்பட்டிருக்கும் உதாரணத்திற்கு யாகூ கூகிள் போன்ற டூல்பார்கள்.  இதனால் நமக்கு பயன் இருந்தாலும் சில குறைகளும் உள்ளது.   மானிட்டர் திரை மிகவும் சிறியதாக இருக்கும் இதனால் நம் படிக்கும் வலைத்தளங்கள் குறைவான அளவிலே தெரியும்.  இது போன்ற டூல்பார்களை நீக்க வேண்டுமென்றால் அந்த வலை உலாவி திற்ந்துதான் நீக்க வேண்டும்.  அவ்வாறு வலை உலாவியை திறக்கமாலே டூல்பாரை நீக்க இந்த மென்பொருள் உபயோகப்படும்.  இந்த மென்பொருளின் அளவு வெறு 507 கேபி மட்டுமே.  மென்பொருள் தரவிறக்க சுட்டி 



சில நேரங்களில் உங்கள் சிடி/டிவிடி ட்ரைவை திறக்க முயற்சி செய்தால் திறக்காமல் அடம் பிடிக்கும் அப்பொழுது என்ன செய்வது.  சில நேரங்களில் Eject பட்டன் பழுதடைந்து இருக்கலாம். அதனால் உங்கள் கணிணி My Computer திறந்து அதில் சிடி/டிவிடி ட்ரைவ் மீது வலது கிளிக் செய்து Eject செய்யுங்கள்.  அப்படியும் வரவில்லையெனில்  உங்களிடம் ஜெம்கிளிப் உள்ளதா அதை கீழுள்ள படம் போல் நேராக நீட்டிக் கொள்ளுங்கள்  உங்கள் சிடி/டிவிடி ட்ரைவில் திறக்கும் பகுதி அருகிள் ஒரு துளை இருக்கும் அதில் உள்ளே விட்டு சிறிது அழுத்தம் கொடுத்து அழுத்தினால் திறந்து விடும்.  மறுபடியும் உபயோகப்படுத்திய பிறகு அதில் ஏதாவது ஒரு உபயோகமில்லாத சிடி போட்டு வைத்தால் அடுத்த முறை சுலபமாக திறந்து விடலாம்.


ரீப்ரொபைலர் - Reprofiler

உங்கள் கணினியில் சில நேரம் இரவு வெகுநேரம் வரை கஷ்டப்பட்டு உழைத்து பதிவு அடித்து காலையில் வெளியிடலாம் என்று உங்கள் My Documents போல்டரில் சேமித்து வைத்திருப்பீர்கள்.  காலையில் வந்து கணினியை ஆன் செய்தால் எப்பொழுதும் போல உள்ளே போகும் ஆனால் டெஸ்க்டாப் மற்றும் மை டாகுமென்ட்ஸ் அனைத்தும் காணாமால் போயிருந்தால் என்ன செய்வீர்கள். அடடா எல்லாம் போச்சே என்ன வைரஸ் வந்ததோ என்று தான் நினைப்பீர்கள்.  நான் என்ன செய்தேன் தெரியுமா முதலில் என்னுடைய கணினியின் சி ட்ரைவை திறந்தேன்.  பிறகு அங்கு Documents and Settings திறந்து பார்த்தால் என்னுடைய பெயரிலேயே இரண்டு போல்டர்கள் திறந்து பார்த்தால் தற்போது உள்ளே நுழைந்து இருக்கும் போல்டர் ஒன்று இன்னொன்று நம்முடைய காணமால் போன உண்மையான போல்டர் ஒன்று.  அந்த போல்டரை எப்படி மீட்டெடுத்து நம் கணினி நம்முடைய லாகினுக்கு கொண்டு வர இந்த மென்பொருள் சுட்டி




நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

இலவச சட்ட ரீதியான மென்பொருட்கள் மூன்று உங்களுக்காக

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 300க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி

நண்பர்களே கணிணி வாங்குகின்ற அத்தனை பேரும் உண்மையான மென்பொருளை காசு கொடுத்து வாங்குவதில்லை எல்லாமே உடைக்கப்பட்ட மென்பொருள் அதாவது Cracked Softwares மட்டுமே உபயோகபடுத்துகின்றனர்.  அது அந்த நிறுவனத்திற்கு எவ்வித இழப்புகளை ஏற்படுத்தும் ஆனால் அவர்களாகவே சில நேரங்களில் இதை தடுப்பதற்காக ஒரு நாள் அலல்து ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் என்று வருடத்தில் ஒரு முறையாவது அந்த மென்பொருளை முழு உபயோகத்துடன் கூடிய மென்பொருட்களை இலவசமாக அளிக்கின்றனர்.   அந்த நேரம் தெரிந்தால் எத்தனை பேர் அதை தரவிறக்கி உபயோகபடுத்துவார்கள் அதன் மூலம் அந்த மென்பொருள் அவர்களுக்கு திருப்தி அளித்தால் ஏதாவது மென்கொடை அளிக்க மாட்டார்களா என்று ஒரு எதிர்பார்ப்புதான்.  

அது போலதான் எந்த மென்பொருள் புதியதாக தெரிந்தாலும் படித்தாலும் அது நம் தமிழ் மக்களுக்கு பயன்படட்டுமே என்று முடிந்தவரை உபயோகப்படுத்தி அவர்களுக்கு பதிவுகள் மூலமாக தெரிவித்து வருகின்றேன்.  ஆனால் இது வரை ஒரு வரும் கொடை அளித்ததில்லை என்பது வேறு விஷயம் ஆனால் குறைந்த பட்சம் ஒரு பின்னூட்டம் என்ற ஊக்கத்தையாவது அளிக்கலாம்.  ஆனால் அது கூட அளிக்க தயங்குவது ஏன்?  என்று புரியவில்லை.  இனியாவது படிக்கின்ற நண்பர்கள் கொஞ்சம் விளம்பரங்களை அழுத்தியும் பின்னூட்டங்களை வாரி வழங்கியும் என்னை உற்சாகப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்படுகிறது.

சரி விடுங்கள் எனக்கு ஒவ்வொரு பதிவின்போதும் புலம்புவது வாடிக்கையாக்கி விட்டார்கள்.  நாம் பதிவிற்கு போவோம்.  இன்றும் Professional பதிப்புகள் இலவசமாக வழங்குகிறார்கள் ஒ & ஒ நிறுவனத்தினர் அவர்களுக்காக நாம் ஒரு ஓ போடுவோம்.  அவர்கள் வழங்கும் மென்பொருட்கள் கீழே

O&O Defrag Professional 11

உங்கள் வன் தட்டுக்களை சீராக பராமரிக்க இந்த மென்பொருள் மாதம் ஒரு முறை டிபிராக் செய்தால் நன்றாக் வேலை செய்யும்.  உங்கள் வன் தட்டில் Bad Sector உருவாகமால் தடுக்க முடியும்.

இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி

மென்பொருளுக்கான இலவச உரிமம் பெற இங்கே சுட்டி


இங்கு சென்று உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண். நீங்கள் வசிக்கும் நாடு  கொடுத்தால் போதும் அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள்ளாக உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு மென்பொருளின் உரிமம் எண் உங்களுக்கு வழங்கப்பட்டு விடும். 

O&O CleverCache 6 Pro

இந்த மென்பொருள் நம்ம CCleaner மாதிரிதான் அதை விட இன்னும் கொஞ்சம் மேம்படுத்தப்பட்டது. இதுவும் மிகவும் உபயோகமான மென்பொருள்  உங்கள் கணிணியி டெம்ப் பைல்கள், டைரக்டரிகள், குக்கீஸ், போன்றவை அனைத்தும் நீக்க இது உபயோகப்படும். 

மென்பொருள் தரவிறக்க சுட்டி

(Get the License Link ) உரிமம் பெற இணைய சுட்டி


O&O Safe Erase 2 Pro
இந்த மென்பொருள் உங்கள் கோப்புகளை யார் கைக்கும் கிடைக்காமல் டெலிட் செய்ய உபயோகப்படும்

மென்பொருள் தரவிறக்க சுட்டி

(Get the License Link ) உரிமம் பெற இணைய சுட்டி


விண்டோஸின் உள்புகு திரையை எளிதில் மாற்ற

உங்கள் விண்டோஸ் உள்புகு திரையை மாற்ற இந்த மென்பொருள் மிகவும் பயன்படும். 

மென்பொருள் தரவிறக்க சுட்டி


பத்து எம்பி அளவுள்ள ஒரு ஆபரேட்டிங் சிஸ்டம் வேண்டுமா உங்களுக்கு இங்கே செல்லுங்க சுட்டி

இது ஒரு லினக்ஸ் அடிப்படையாக இயங்குதளம் 

டைனிகோர் லினக்ஸ்



நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

ஒரு வருடத்திற்கான ஆன்டி வைரஸ் இலவசம் & டிப்ஸ்கள்

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 300க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி

நண்பர்களே சாதரணமாக நீங்கள் டெலிட் செய்யும் கோப்புகள் நேரடியாக உங்கள் டெஸ்க்டாப்பில் உள்ள ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லும் அந்த மாதிரி செல்ல வேண்டாம் என்றால் நீங்கள் சில மாற்றங்கள் செய்தால் போதும் நேரடியாக ரீசைக்கிள் பின்னுக்கு செல்லாமல் நீக்கப்படும்.  
4rwcpx.png
முதலில் உங்கள் டெஸ்க்டாப்பில் உள்ள Recycle Bin ல் வலது கிளிக் தேர்வு அதில் பிராப்பர்டிஸ் தேர்வு செய்யுங்கள்.  அங்கு "Do not move files to the Recycle Bin. Remove files immediately when deleted”  என்று ஒரு வாசகத்திற்கு முன் ஒரு பெட்டி அதை கிளிக் செய்து விட்டு கீழே Apply OK என்று தேர்வு செய்து வெளியேறுங்கள்.  இதன் மூலம் நீங்கள் இனி டெலிட் செய்யும் கோப்புகள் ரீசைக்கிள் பின்னில் சேமிக்கப்படாது.



ஒரு வருடத்திற்கான ட்ரென்ட் மைக்ரோ ஆன்டி வைரஸ் தொகுப்பை இலவசமாக சட்டரீதியாக தரவிறக்க இங்கே செல்லுங்கள் சுட்டி
sxm4gn.jpg
மேலுள்ள படத்தில் கூறியுள்ள படி எந்த இயங்குதளம் மென்பொருள் வேண்டுமோ தரவிறக்கி பயன்படுத்தலாம்.   இதற்காக எந்த ஒரு ரெஜிஸ்ட்ரேசன் மற்றும் பணம் எதுவும் கிடையாது.




விளம்பரச் சுட்டி




நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை