நண்பர்களே இன்று விளையாட்டு மென்பொருள் தருகிறேன். சட்டரீதியான இலவசமான மென்பொருள் என்பது இதன் சிறப்பு. இதன் சலுகை எத்தனை நாள் நீடிக்கும் என்பது தெரியாது. அதனால் கூடுமானவரை உடனே தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
Ferrari Virtual Race - பெர்ராரி விர்ச்சுவல் ரேஸ்
விளையாட்டு மென்பொருள் தரவிறக்க சுட்டி
உங்கள் கணிணியில் உள்ள வலை உலாவிகளில் தேவையில்லாமல் நிறைய டூல்பார்கள் நிறுவப்பட்டிருக்கும் உதாரணத்திற்கு யாகூ கூகிள் போன்ற டூல்பார்கள். இதனால் நமக்கு பயன் இருந்தாலும் சில குறைகளும் உள்ளது. மானிட்டர் திரை மிகவும் சிறியதாக இருக்கும் இதனால் நம் படிக்கும் வலைத்தளங்கள் குறைவான அளவிலே தெரியும். இது போன்ற டூல்பார்களை நீக்க வேண்டுமென்றால் அந்த வலை உலாவி திற்ந்துதான் நீக்க வேண்டும். அவ்வாறு வலை உலாவியை திறக்கமாலே டூல்பாரை நீக்க இந்த மென்பொருள் உபயோகப்படும். இந்த மென்பொருளின் அளவு வெறு 507 கேபி மட்டுமே. மென்பொருள் தரவிறக்க சுட்டி
சில நேரங்களில் உங்கள் சிடி/டிவிடி ட்ரைவை திறக்க முயற்சி செய்தால் திறக்காமல் அடம் பிடிக்கும் அப்பொழுது என்ன செய்வது. சில நேரங்களில் Eject பட்டன் பழுதடைந்து இருக்கலாம். அதனால் உங்கள் கணிணி My Computer திறந்து அதில் சிடி/டிவிடி ட்ரைவ் மீது வலது கிளிக் செய்து Eject செய்யுங்கள். அப்படியும் வரவில்லையெனில் உங்களிடம் ஜெம்கிளிப் உள்ளதா அதை கீழுள்ள படம் போல் நேராக நீட்டிக் கொள்ளுங்கள் உங்கள் சிடி/டிவிடி ட்ரைவில் திறக்கும் பகுதி அருகிள் ஒரு துளை இருக்கும் அதில் உள்ளே விட்டு சிறிது அழுத்தம் கொடுத்து அழுத்தினால் திறந்து விடும். மறுபடியும் உபயோகப்படுத்திய பிறகு அதில் ஏதாவது ஒரு உபயோகமில்லாத சிடி போட்டு வைத்தால் அடுத்த முறை சுலபமாக திறந்து விடலாம்.
ரீப்ரொபைலர் - Reprofiler
உங்கள் கணினியில் சில நேரம் இரவு வெகுநேரம் வரை கஷ்டப்பட்டு உழைத்து பதிவு அடித்து காலையில் வெளியிடலாம் என்று உங்கள் My Documents போல்டரில் சேமித்து வைத்திருப்பீர்கள். காலையில் வந்து கணினியை ஆன் செய்தால் எப்பொழுதும் போல உள்ளே போகும் ஆனால் டெஸ்க்டாப் மற்றும் மை டாகுமென்ட்ஸ் அனைத்தும் காணாமால் போயிருந்தால் என்ன செய்வீர்கள். அடடா எல்லாம் போச்சே என்ன வைரஸ் வந்ததோ என்று தான் நினைப்பீர்கள். நான் என்ன செய்தேன் தெரியுமா முதலில் என்னுடைய கணினியின் சி ட்ரைவை திறந்தேன். பிறகு அங்கு Documents and Settings திறந்து பார்த்தால் என்னுடைய பெயரிலேயே இரண்டு போல்டர்கள் திறந்து பார்த்தால் தற்போது உள்ளே நுழைந்து இருக்கும் போல்டர் ஒன்று இன்னொன்று நம்முடைய காணமால் போன உண்மையான போல்டர் ஒன்று. அந்த போல்டரை எப்படி மீட்டெடுத்து நம் கணினி நம்முடைய லாகினுக்கு கொண்டு வர இந்த மென்பொருள் சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
5 ஊக்கப்படுத்தியவர்கள்:
இன்று நிறைய தகவல்கள்..... நன்றி வடிவேலன்.
அருமையான தகவல்கள் நண்பரே.
சூப்பர் பாடம்!
பகிர்ந்தமைக்கு நன்றி... மேலும் பல நல்ல தகவல்களை தர வாழ்துக்கள் ....
Games சம்மந்தப்பட்ட எந்த மென்பொருளையும் மடிக்கணிணியில் பதிந்தாலும் மொத்தமாக வேகம் குறைந்து விடுகிறதே? காரணம் என்ன?
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்