நண்பர்களே தீபாவளிக்கு எல்லாரும் புதிய துணிகள் பட்டாசுகள் வாங்கியாச்சா
குழந்தைகளை பத்திரமாக பட்டாசுகளை வெடிக்க சொல்லுங்க. தீபாவாளியன்று வெடி
வெடிக்கும் பொழுது மேற்கொள்ள வேண்டிய பாதுகப்பு வழிமுறைகள் கீழே
கொடுத்துள்ளேன் அதன்படி பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடுங்கள். இனி
பதிவுகள்
நீங்கள் உங்கள் பழைய நண்பருக்கோ உறவினருக்கோ மின்னஞ்சல் அனுப்புகிறீர்கள்.
அந்த மின்னஞ்சல் அனுப்பிய அடுத்த் நிமிடம் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கே
அனுப்பிய மின்னஞ்சல் முகவரி தவறேன்று திரும்ப வந்து விட்டால் என்ன
செய்வீர்கள். அப்படி வராமல் இருக்க முடிந்தவரை பழைய மின்னஞ்சல்
உபயோகிக்கும் முன் இந்த வலைத்தளம் சென்று இந்த முகவரி வேலை செய்கிறதா என்று
தெரிந்து கொள்ளுங்கள்.
எந்த ஒரு மின்னஞ்சல் முகவரியும் சுலபமாக வேலை செய்கிறதா என்று கண்டறிய
வலைத்தளச் சுட்டி
டாம்ப் ரைடர் என்ற விளையாட்டினையும் அதன்பிறகு வந்த படத்தினையும் யாரும்
மறக்க முடியாது. அந்த விளையாட்டின் உயர்தர வால்பேப்பர்கள் (High
Resolution Wallpapers) உங்களுக்காக சில Tomb Raider Game Wallpapers
நீங்கள் உங்கள் கணினியில் ஒரு போல்டர் உருவாக்கி வைத்திருக்கிருக்கிறீர்கள்
அந்த போல்டரில் ஆயிரக்கணக்கான எம்பி3 பாடல்கள் அல்லது கோப்புகள்
இருக்கிறது இந்த ஆயிரக்கணக்கான கோப்புகளின் பெயர்களை பிரிண்ட் எடுக்க
வேண்டுமானல் நீங்கள் ஒவ்வொரு கோப்பின் பெயரையும் நோட்பேடில் டைப் செய்து
அதை பிரிண்ட் எடுக்க வேண்டும். இதையே நீங்கள் டாஸ் மோடில் சுலபமாக செய்ய
முடியும். எப்படி என்றால்
Start மெனு கிளிக் செய்து அதில் ரன் கட்டளையை தேர்வு செய்யுங்கள்.
அதில் தோன்றும் பெட்டியில் CMD என்று டைப் செய்து என்டர் செய்யுங்கள்.
பிறகு எந்த போல்டர் வேண்டுமோ அந்த போல்டருக்குள் சென்று dir > print.txt
அல்ல்து உங்களுக்கு பிடித்தெ பெயர் கொடுத்து பிரிண்ட் எடுங்கள் முடிந்தது.
ஆனால் இதில் உங்களால் எட்டு எழுத்துக்கள் உள்ள கோப்புகளின் பெயர்கள்
முழுதாக கிடைக்கும் அதற்கு மேல் இருந்தால் 12345678~.exe இப்படிதான்
இருக்கும்.
இதை விண்டோஸில் சுலபமாக இந்த மென்பொருள் மூலம் தெளிவாகவும் பிரிண்ட் எடுக்க முடியும்..
அதற்கு இந்த மென்பொருளை உபயோகியுங்கள்.
சுட்டி
போன வருட தீபாவளிக்கு வெளியூரில் இருந்ததால் பதிவு போட இயலவில்லை. அதற்கு முந்தைய வருடம் தீபாவளிக்கு வெளியிட்ட பதிவு
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். பாதுகாப்பான தீபாவளி கொண்டாட வாழ்த்துக்கள்.
» Read More...
நண்பர்களே உங்களுடைய குறிப்புகளை எழுதி வைத்துக்கொள்ளவும். எழுதி வைத்த
குறிப்புகளை தேவைப்படும் பொழுது படிக்கவும். உங்களுடைய பர்சனல்
விவகாரங்களை ஆன் டைரியில் எழுதி வைக்கவும். ஒரு மென்பொருள் உள்ளது. இதன்
பெயர் ஞாபகம் என்பதை நினைவு படுத்தும் வகையில் Nyabag என்ற பெயரில்
வெளியிடப்பட்டிருக்கிறது. இது ஒரு டெஸ்க்டாப் அப்ளிகேசன் கிடையாது. இதனால்
மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவ தேவையில்லை. இது ஒரு வெப் அப்ளிகேசன்
ஆகும்.
இதன் டைரி பகுதியில் அன்றைய பொழுது குறித்து எழுதும் பொழுது எந்த
மாதிரி மன நிலையில் இருந்தீர்கள் என்று Smilies தேர்வு செய்ய முடியும்.
உதாரணத்திற்கு காதல் மூடில் இருந்தீர்கள் என்றால் Smiliey இரண்டு கண்களும் இதயமாகவும் மாறி உங்களை காதல் மூடிற்கு மாற்றி விடும்.
இதே நீங்கள் கோபமாக இருந்தீர்கள் என்றால் வேறு மாதிரியும் காட்டும் Smiliesகள் உள்ளன.
இதன் மூலம் அன்றைய பொழுது எவ்வாறு இருந்திருக்கும் என்று உங்கள் டைரியினை படிக்காமலேயே உங்கள் Smiliey மூலம் தெரிந்து கொள்வீர்கள்.
இவர்களுடைய டைரி பகுதியில் பதினான்கு வகையான Smilieகள் உள்ளன.
இவர்களுடைய
இந்த அப்ளிகேசனில் டாஸ்க் என்ற பகுதியில் உங்களுடைய அடுத்து செய்ய வேண்டிய
வேலைகள் மற்றும் கலந்துரையாடல்கள் மற்றும் உங்களுடைய நினைவூட்டல்களை
பதிந்து வைத்தால் உங்கள் மொபைல் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு நினைவூட்டல்
செய்யும்.
இந்த இணையத்தளத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரி இருந்தால் போதுமானது உடனே சேர்ந்து கொள்ளலாம்.
இந்த மென்பொருள் பீட்டா அளவில் இருப்பதால் இன்னும் நிறைய வசதிகள் செய்து தருவார்கள் என நம்பலாம். அத்துடன் இந்த மென்பொருள்
vheeds.com நிறுவனத்தில் முதல் இலவச உலகளாவிய மென்பொருள் ஆகும்.
இதை உருவாக்கியவர்கள் நமது ஈரோட்டில் உள்ல வாழையக்கார தெருவில் உள்ள
VHEEDS TECHNOLOGY SOLUTIONS நிறுவனத்தினர் என்னும் பொழுது மிகவும்
மகிழ்ச்சியாக உள்ளது.
இவர்களின் இந்த இணையதள அப்ளிகேசன் வெற்றி
பெற வாழ்த்துவோம். இத நமக்கு அறிமுகப்படுத்தி நம் வாசகர்களுக்கும்
அறிமுகப்படுத்துங்கள் என்று கூறிய வசந்த் அவர்களுக்கும் நன்றி கூற
கடமைப்பட்டுள்ளோம்.
தமிழன் உருவாக்கிய மென்பொருள் உலகம் முழுவதும் பரவ என்னாலான சிறு முயற்சிதான் இது. இதை உபயோகப்படுத்துவதன் மூலம் நம் தமிழரின்
பெருமை பரவட்டும்.
இணையத்தள
சுட்டி
இவர்களை பற்றிய சிறு குறிப்புகள் குறித்து அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலை இங்கு கொடுத்திருக்கிறேன்
“Vheeds Technology solutions” என்ற ‘technology startup’யினை செப்டம்பர் 2010’ல் மூன்று நண்பர்கள் சேர்ந்து ஈரோட்டில் ஆரம்பித்தோம். நாங்கள் 2007’ல் எங்களது பொறியியல் கல்வியினை ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் முடித்து ஹைதராபாத்தில் உள்ள MNC’ல் பணியமர்த்தபட்டோம். பின்பு ஜூலை 2010’ல் எங்களது பணியை Resign செய்துவிட்டு சொந்த நகரத்தில் எங்களது நிறுவனத்தை ஆரம்பித்தோம்.
தொழில்நுட்பம்
மற்றும் அதன் சார்ந்த வளர்ச்சிகள் அனைத்தும் வளர்ந்த நாடுகள் மற்றும்
இந்தியாவில் உள்ள பெரிய வர்த்தக நகரங்களுக்கு மட்டும் உரித்தானது என்ற
நிலையினை மாற்றி சிறிய நகரங்களும் அதை சேர்ந்த தொழில்களுக்கும் சென்றடைய
வேண்டும் என்ற எங்களது எண்ணத்தை நோக்கி உழைத்து கொண்டிருக்கிறோம். அதற்கு
ஏற்றார் போல் ஈரோட்டில் உள்ள சிறுத்தொழில் மற்றும் அதன் சார்ந்த
நிறுவனங்கள் அனைத்துக்கும் அவர்களின் தொழில் முறைக்கு ஏற்ப மென்பொருள்
செய்து அவர்களை நவீனத்துவம் ஆக்குகிறோம். மேலும் தமிழகத்தில் இருந்து
உலகளாவிய அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் மென்பொருள்களை
வடிவமைத்து கொண்டிருக்கிறோம். அதன் வகையில் வந்த முதல் மென்பொருள்தான் NYABAG.COM.
எங்களது முகபுத்தக முகவரி:
இந்த பதிவு அனைவரையும் சென்றடைய உங்கள் ஓட்டுக்களை அனைத்து திரட்டிகளிலும் போடுங்கள் பேஸ்புக் மற்றும் ட்விட்டரிலும் கூறுங்கள் இதன் மூலம் தமிழரின் பெருமை உலகம் எங்கும் பரவட்டும்.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...