கணிதம் கற்றுக் கொள்ள மென்பொருள் இலவசமாக மருத்துவ மென்பொருள் இலவசமாக

நண்பர்களே குழந்தைகளுக்கு கணித பாடம் மட்டும் சில குழந்தைகளுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் பிடிபடாது?  இதற்கு காரணம் என்னவென்றால் மன திண்மை இல்லாததே காரணம் உதாரணத்திற்கு  2+1 = என்ன வென்று கண்டுபிடிக்க வேண்டும் என்றால் மூன்றில் இருந்து 6 வயது குழந்தைகள் விரல் விட்டு எண்ணி சொல்வார்கள்.  இதே 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் உடனே 3 என்பார்கள் இது எப்படி மனதிற்குள்ளேயே 2 + 1 என்பதை கூட்டி விடை 3 என்று கூறுவார்கள். 

இது பள்ளிக்கூடங்களிலும் நாம் குழந்தைகளுக்கு சொல்லி தருவதாலும் வருகிறது.  இதையே குழந்தைகளுக்கு விளையாட்டின் மூலம் கணிதம் சொல்லிக் கொடுத்தால் விரைவாக விளையாட்டும் விளையாடுவார்கள் கணிதமும் கற்றுக் கொள்வார்கள்.  இதற்கு இந்த கணித விளையாட்டு மென்பொருள் உதவுகிறது.


இந்த மென்பொருள் ஒரு சுதந்திர கட்டற்ற மென்பொருள் என்பதால் இன்னும் பலரால் மேம்படுத்தப்படும் என்று திண்ணமாக நம்பலாம். இந்த மென்பொருளை நிறுவி குழந்தைகளுக்கு விளையாட்டாக கணிதமும் கணினியும் சொல்லி தாருங்கள். 


இந்த மென்பொருள் விண்டோஸ் 2000க்கு மேற்பட்ட அனைத்து வெர்சன்களும் ஆதரிக்கும்.  அத்துடன்  லினக்ஸ், மேக் இயங்குதளங்களிலும் இயங்கும்.

மென்பொருள் தரவிறக்க சுட்டி

குடும்ப மருத்துவர் நம் வீட்டில்


நம் வீட்டில் பெரியவர்கள் மற்றும் வயதானவர்கள் இருப்பார்கள். நிறைய வீட்டில் வயதானவர்களுக்கு என்று தனி மருத்துவ உணவுகள் மற்றும் மருந்துகள் இருக்கும்.  அது போன்ற மருந்து மருத்துவ உணவு மருத்துவரின் குறிப்புகளை கணினியில் சேமித்து வைக்க  இந்த மென்பொருள் உதவும் அத்துடன் மருத்துவரை குறிப்பிட்ட நாளில் சந்திக்க அப்பாயின்ட்மென்ட் மற்றும் இன்சூரன்ஸ்,  அவசர கால தொலைபேசி எண்கள் போன்றவற்றையும் இதில் குறித்து வைக்க வசதி உண்டு.

இந்த மென்பொருளில் எந்த நோயாயின் குறிப்புகளை ஏற்றுகிறீர்களோ அவர்களின் புகைப்படத்தையும் சேமித்து வைக்கலாம்.  இதன் மூலம் பலதரப்பட்ட நோயாளிகளின் குறிப்புகளை ஏற்றி வைக்கலாம்.  இந்த மென்பொருளின் பெயர் ஹேடாக்.   மென்பொருளை தரவிறக்க சுட்டி

நன்றி மீண்டும் வருகிறேன்

16 ஊக்கப்படுத்தியவர்கள்:

வரதராஜலு .பூ said...

வெரி நைஸ் வடிவேலன்

சைவகொத்துப்பரோட்டா said...

நன்றி வடிவேலன்.

Mohamed Faaique said...

nanRi sir. superb idea..

Aaqil Muzammil said...

சிறியவர்களுக்கு மிகவும் பயனானது நன்றி

சிட்டுக்குருவி said...

அருமையான பதிவு வடிவேலன்

நன்றி

:))

Unknown said...

நல்ல மென்பொருள்தாங்க.. இப்போவெல்லாம் பசங்க விளையாடறதுக்கு வன்முறை கலந்து விளையாட்டுகளைத்தான் அறிமுகப்படுத்தறாங்க..

சிறுவர்களுக்கு இந்த கணித மென்பொருளை பயன்படுத்த பழக்கினா கண்டிப்பா அவங்க யோசிக்கற திறமை அதிகமாகும்தான்..

WebPrabu said...

அருமையான மென்பொருள்களை தெரியபடுத்தி இருக்கிறீர்கள்... :) மிக்க நன்றி!!!

வானவன் யோகி said...

தங்களின் சமூகக் கண்ணோட்டம் பாராட்டுக்குரியது,என நாங்கள் அறிந்ததே.

உடனடியாக தரவிறக்கி விளையாடியும் விட்டனர் எங்கள் குட்டீஸ்கள்....

அவர்களின் மகிழ்ச்சியில் தங்கள் பங்கும் உண்டு....

நன்றியும்...வாழ்த்துக்களும்....

prabhadamu said...

அருமையான பதிவு நன்றி நண்பரே..

தொடருங்கள்..

POIYAMOZHI.V said...

நான் இதை பதிவிறக்க முயலும் போது பயர் பாக்ஸ் பிரவுசர் என்னை தடுக்கிறதே என்ன செய்யவேண்டும்..பிளிஸ் vpoiyamozhi@gmail.com 9442223586

Myfunds said...

My system also restrict me to enter because of untrusted website details. Can you please clarify me to get these download. Thanks
Balan

SIVARAM said...

Unmayil sirappana thalathirku vandha magizhchi.

Thodarattum ungal pani

jaypeen said...

Thanks a lot Vadivelan

பூங்குன்றன் said...

nice information.
see this is called technology, before we need to learn such a things from others, but that is also not so easy..
now we can share our talents like this..

really usefull lot of tips..

keep it up






பூங்குன்றன்

வெள்ளித்திரை விமர்சனம் said...

nice info boss thnk u

hameed said...

This website makes me really crazy
you have lot of usefull thing
Hats off

with regards
M.G.Hameed

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை