நண்பர்களே அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2011
இன்று நாம் பார்க்க போகும் மென்பொருள் யூனிப்ளு சிஸ்டம் ட்விக்கர் UniBlue System Tweaker 2011. இந்த மென்பொருள் செய்யும் வேலைகள் ஏராளம் என்றாலும் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.
இந்த மென்பொருள் மூலம் உங்களுடைய மவுஸினால் வலது கிளிக் செய்வீர்கள் அல்லவா அதில் எளிமையாக மாற்றங்கள் செய்ய முடியும்.
இதன் வழியாக விண்டோஸில் இயங்கும் பயர்வால் விண்டோஸ் அப்டேட்களை நிறுத்தவும் செயல்படுத்தவும் முடியும்.
விண்டோஸ் முதலில் இயங்கும் பொழுது அதாவது Startup போது இயங்கும் மென்பொருட்களை நிறுத்த முடியும்.
இது போன்று நிறைய உண்டு இந்த மென்பொருளில் .
இந்த மென்பொருள் யூனிப்ளு நிறுவனத்தினரால் புது வருட கொண்டாட்டமாக ஜனவரி 15, 2011 வரை இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒரு படிவத்தை நிரப்பினால் போதுமானது.
முதலில் இந்த தளத்திற்கு செல்லுங்கள் சுட்டி
பிறகு இந்த பக்கத்திற்கு செல்லும்.
இந்த பக்கத்தில் உங்கள் பெயர், ஊர் மற்றும் மின்னஞ்சல் முகவரி தந்து Complete Registration என்ற பட்டனை தட்டுங்கள்
ஒரு சில விநாடிகளில் உங்களுக்கான மென்பொருள் தரவிறக்க சுட்டி மற்றும் மென்பொருளுக்கான உரிமம் எண் Serial Key காட்டப்படும். அதன் மூலம் மென்பொருளை தரவிறக்கம் செய்து அந்த உரிமம் எண்ணை உபயோகப்படுத்தி முழு மென்பொருளின் பயனை அடையலாம். அத்துடன் உங்களுக்கு இந்த மின்னஞ்சல் முகவரி ststores@mag.unibluenews.com வழியாக மின்னஞ்சல் வரும். அதில் மென்பொருளின் உரிமம் எண் மற்றும் மென்பொருள் தரவிறக்க சுட்டி அனைத்தும் இருக்கும்.
இந்த மென்பொருளை பெற சுட்டி
இந்த மென்பொருள் சலுகை ஜனவரி 15, 2011 வரை மட்டுமே முந்துங்கள்
எனக்கு பிடித்த ஆன்டிவைரஸ் மென்பொருள்
காஸ்பர்ஸ்கை
இந்த ஆன்டி வைரஸ் மென்பொருளை என் வீடு மற்றும் அலுவலகத்திலும் உபயோகிக்கிறேன். அதுமட்டுமல்லாமல் அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய வாடிக்கையாளர்களுக்கும் பரிந்துரைக்கும் மென்பொருள். இந்த மென்பொருள் மிக குறைவான விலையில் கிடைக்கிறது ஆன்டி வைரஸ் விலை 450/- ம் இண்டெர்நெட் செக்யூரிட்டி விலை 650/- க்கும் கிடைக்கிறது. இந்த மென்பொருளை மூன்று கணினிகளில் உபயோகிக்கும்படியும் கிடைக்கிறது. விலை 950 /- ஒருவர் 650 செலவழிப்பதற்கு பதில் அதில் பாதி விலை 350 /- செலவழித்தால் போதும்.
நண்பர்கள் உறவினர்கள் மூன்று பேர் சேர்ந்து வாங்கினால் காசு மிச்சமாகும். சென்னையில் அனைத்து செல்போன் கடைகள் மற்றும் அண்ணா சாலை ரிச்சி தெருவிலும் கிடைக்கிறது. எத்தனையோ ஆயிரம் செலவு செய்து கணினி வாங்கி அதன் வழியாக இணையத்தை அணுகினால் அதன் வழியாக கொக்கி போட்டு உள்ளே நுழையும் ஹேக்கர்கள் குழந்தைகளை ஆபாச தளங்கள் மற்றும் வக்கிரம் நிறைந்த தளங்கள், கொலை கொள்ளை போன்ற விளையாட்டு தளங்களில் இருந்து கணினியையும் உங்கள் வருங்கால சந்ததியையும் காப்பாற்ற வேண்டும் என்றால் முதலில் ஆன்டி வைரஸை நிறுவுங்கள்.
கேபிள் சங்கர் புத்தக வெளியீடு
நமது மூத்த பதிவரும் திரைப்பட இயக்குநரும் நண்பருமான கேபிள் சங்கரின் மீண்டும் ஒரு காதல் கதை புத்தகம் வெளியீடு இன்று மாலை ஆறு மணியளவில் நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்துவோம்
நமது நண்பர் வால்பையன் நிறைய உதவிகள் செய்தவர் அலுவலகத்தில் பதிவை போட்டு விட்டு வீட்டிற்கு வந்து திரட்டிகளில் இணைத்து கொண்டிருந்தேன். பிறகு ஒரு முறை அவரிடம் உதவி என்று கேட்டு சென்றேன். அவர் உடனே சரி என்று கூறி விட்டார் அன்றைய பதிவு மட்டுமல்ல கடந்த வருடம் வரை என் பதிவை இணைப்பவர் நண்பர் வால்பையன். அவர்கள் கடந்த வருடத்தின் இறுதியில் ஒரு உணவகத்தை திறந்துள்ளார் அவர் வசிக்கும் ஊரிலேயே உணவகத்தை திறந்திருக்கிறார். உணவுக்கான ருசிக்கும் கவனிப்புக்கும் நான் கியாரண்டி நண்பர்களே கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் நண்பர்கள அனைவரும் ஒரு நடை போய் ருசித்து வாருங்கள். திரும்ப திரும்ப நீங்களே செல்ல ஆரம்பித்து விடுவீர்கள். உணவகத்தின் பெயர் பூர்வாஸ் ஃபைன் டைன் பன்னாட்டு உணவு வகைகள் மற்றும் இந்தியாவின் சைவம் மற்றும் அசைவம் அனைத்தும் கிடைக்கும்.
உணவகத்தின் முகவரி
பூர்வாஸ் ஃபைன் டைன்,
#2, வெங்கிடசாமி சாலை கிழக்கு,
ஆர். எஸ். புரம்,
(சிந்தாமணி பெட்ரோல் பங்க் அருகில்)
கோயம்புத்தூர் - 641 002.
தொலைபேசி : 0422 - 4376437
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...