பைட்ஸ் கால்குலேட்டர்கள் மற்றும் பிடிஎப் படிக்க மாற்று வழி

நண்பர்களே இது வரை கூகிள் மேப் வழியாக ஒவ்வொரு நாட்டில் உள்ள நகரங்களையும் அதனுள் இருக்கும் ஊர்களையும் தெரிந்து கொண்ட நாம் இனி அந்த அந்த நகரங்களில் என்ன வானிலை நிலவுகிறது என்றும் தெரிந்து கொள்ளலாம்.

இந்த கூகிள் மேப்பில் அது மட்டுமல்லாமல் வானிலையினை சென்டிகிரேடாகவும் மற்றும் பாரன்கீட் என்னும் அளவையாகவும் தெரிந்து கொள்ள முடியும். 

இப்பொழுது மழை பெய்தால் கூடவே காற்றும் அடிக்கும்.  அந்த காற்றடிக்கும் வேகத்தினையும் கணக்கிட்டு கூறுகிறது கூகிள்.  அதன் வேகம் மைல் வேகத்தில் எவ்வளவு வேகம் என்றும் கிலோ மீட்டர் வேகத்தில் எவ்வளவு வேகம் என்றும் தெரிந்து கொள்ள முடியும். 

இது மட்டுமல்லாமல் அந்த நகரத்தில் வெப்கேம் இருந்தால் அதன் மூலம் வானிலை எப்படி இருக்கிறது என்றும் நேரடியாக தெரிந்து கொள்ள முடியும்.

கூகிள் மேப் செல்ல சுட்டி

நம் கணினியில்  ஹார்ட் டிஸ்க் எவ்வளவு என்று கேட்டல் உடனே 500ஜிபி அல்லது 1 டிபி என்று கூறுவார்கள்.  அந்த 1 டிபி என்பது எத்தனை எம்பி என்று யாரையாவது கேட்டால் திணறுவார்கள்.  இந்த எம்பி ஜிபி டிபி போன்ற கணக்குகளை கால்குலேட் செய்ய ஒரு திறந்த நிலை மூலப்பொருள் (Open Source Applications) உள்ளது.  அதை தரவிறக்க சுட்டி

இதையே ஆன்லைனில் தெரிந்து கொள்ள இந்த சுட்டி

இனி உங்கள் நண்பர் கேட்டால் இதில் போட்டு உடனே சொல்லி விடுவீர்கள் அல்லவா?


பிடிஎப் ரீடர் நிறுவாமல் கூகிள் குரோம் வழியாகவே பிடிஎப் ரீடரில் படிக்கலாம்.  ஆம் உங்கள் கணினியில் Google Chrome புதிய பதிப்பு நிறுவப்பட்டிருந்தால் போதும்.  உங்களுடைய பிடிஎப் கோப்பின் மேல் வலது கிளிக் செய்யுங்கள்.

அதில் Properties தேர்வு செய்யுங்கள்.

Opens With என்ற இடத்தில் Change என்ற பட்டனை கிளிக் செய்து அதில் உங்கள் Google Chrome.exe என்பதனை தேர்வு செய்யுங்கள்.
 
முடிந்தது இனி உங்கள் பிடிஎப் கோப்புகளை பிடிஎப் ரீடர் மென்பொருள் இல்லாமலேயே படிக்கலாம்.


ஒரு அடுத்த மாதம் விநாயகர்சதுர்த்தி வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள் இன்னும் எத்தனை நாள் என்றால் மனதினுள் கணக்கு போட்டு சொல்வீர்கள்.  அதற்கு பதில் இந்த மென்பொருளை உபயோகியுங்கள்.  இந்த தேதியிலிருந்து இந்த தேதிக்கு எத்தனை நாட்கள் என்றால் உடனே இத்தனை மாதம் இத்தனை வாரம் இத்தனை நாட்கள் இருக்கிறது என்று கூறிவிடும்.

இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி

என்னுடைய பிறந்தநாளுக்கு எத்தனை நாட்கள் இருக்கிறது என்பதனை தெரிந்து கொள்ள மேலுள்ள படத்தினை பாருங்கள்.

  நன்றி மீண்டும் வருகிறேன்.

» Read More...

தமிழனின் புதிய வெப் அப்ளிகேசன் உங்களுக்காக முதல் பார்வை

நண்பர்களே  உங்களுடைய குறிப்புகளை எழுதி வைத்துக்கொள்ளவும்.   எழுதி வைத்த குறிப்புகளை தேவைப்படும் பொழுது படிக்கவும்.  உங்களுடைய பர்சனல் விவகாரங்களை ஆன் டைரியில் எழுதி வைக்கவும். ஒரு மென்பொருள் உள்ளது.  இதன் பெயர் ஞாபகம் என்பதை நினைவு படுத்தும் வகையில் Nyabag என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது.  இது ஒரு டெஸ்க்டாப் அப்ளிகேசன் கிடையாது.   இதனால் மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவ தேவையில்லை.  இது ஒரு வெப் அப்ளிகேசன் ஆகும். 

இதன் டைரி பகுதியில் அன்றைய பொழுது குறித்து எழுதும் பொழுது எந்த மாதிரி மன நிலையில் இருந்தீர்கள் என்று Smilies தேர்வு செய்ய முடியும்.

உதாரணத்திற்கு காதல் மூடில் இருந்தீர்கள் என்றால் Smiliey இரண்டு கண்களும் இதயமாகவும் மாறி உங்களை காதல் மூடிற்கு மாற்றி விடும்.

இதே நீங்கள் கோபமாக இருந்தீர்கள் என்றால் வேறு மாதிரியும் காட்டும் Smiliesகள் உள்ளன.

இதன் மூலம் அன்றைய பொழுது எவ்வாறு இருந்திருக்கும் என்று உங்கள் டைரியினை படிக்காமலேயே உங்கள் Smiliey மூலம் தெரிந்து கொள்வீர்கள்.





இவர்களுடைய டைரி பகுதியில் பதினான்கு வகையான Smilieகள் உள்ளன.

இவர்களுடைய  இந்த அப்ளிகேசனில் டாஸ்க் என்ற பகுதியில் உங்களுடைய அடுத்து செய்ய வேண்டிய வேலைகள் மற்றும் கலந்துரையாடல்கள் மற்றும் உங்களுடைய நினைவூட்டல்களை பதிந்து வைத்தால் உங்கள் மொபைல் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு நினைவூட்டல் செய்யும்.

இந்த இணையத்தளத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரி இருந்தால் போதுமானது உடனே சேர்ந்து கொள்ளலாம்.

இந்த மென்பொருள் பீட்டா அளவில் இருப்பதால் இன்னும் நிறைய வசதிகள் செய்து தருவார்கள் என நம்பலாம்.  அத்துடன் இந்த மென்பொருள் vheeds.com நிறுவனத்தில் முதல் இலவச உலகளாவிய மென்பொருள் ஆகும்.

இதை உருவாக்கியவர்கள் நமது ஈரோட்டில் உள்ல வாழையக்கார தெருவில் உள்ள VHEEDS TECHNOLOGY SOLUTIONS நிறுவனத்தினர் என்னும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 

இவர்களின் இந்த இணையதள அப்ளிகேசன் வெற்றி பெற வாழ்த்துவோம்.  இத நமக்கு அறிமுகப்படுத்தி நம் வாசகர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் என்று கூறிய வசந்த் அவர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.

தமிழன் உருவாக்கிய மென்பொருள் உலகம் முழுவதும் பரவ என்னாலான சிறு முயற்சிதான் இது. இதை உபயோகப்படுத்துவதன் மூலம் நம் தமிழரின்
பெருமை பரவட்டும்.

இணையத்தள சுட்டி

இவர்களை பற்றிய சிறு குறிப்புகள் குறித்து அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலை இங்கு கொடுத்திருக்கிறேன்


“Vheeds Technology solutions” என்ற ‘technology startup’யினை செப்டம்பர் 2010’ல் மூன்று நண்பர்கள் சேர்ந்து ஈரோட்டில் ஆரம்பித்தோம். நாங்கள் 2007’ல் எங்களது பொறியியல் கல்வியினை ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் முடித்து ஹைதராபாத்தில் உள்ள MNC’ல் பணியமர்த்தபட்டோம். பின்பு ஜூலை 2010’ல் எங்களது பணியை Resign செய்துவிட்டு சொந்த நகரத்தில் எங்களது நிறுவனத்தை ஆரம்பித்தோம். 


தொழில்நுட்பம் மற்றும் அதன் சார்ந்த வளர்ச்சிகள் அனைத்தும் வளர்ந்த நாடுகள் மற்றும் இந்தியாவில் உள்ள பெரிய வர்த்தக நகரங்களுக்கு மட்டும் உரித்தானது என்ற நிலையினை மாற்றி சிறிய நகரங்களும் அதை சேர்ந்த தொழில்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற எங்களது எண்ணத்தை நோக்கி உழைத்து கொண்டிருக்கிறோம். அதற்கு ஏற்றார் போல் ஈரோட்டில் உள்ள சிறுத்தொழில் மற்றும் அதன் சார்ந்த நிறுவனங்கள் அனைத்துக்கும் அவர்களின் தொழில் முறைக்கு ஏற்ப மென்பொருள் செய்து அவர்களை நவீனத்துவம் ஆக்குகிறோம். மேலும் தமிழகத்தில் இருந்து உலகளாவிய அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் மென்பொருள்களை வடிவமைத்து கொண்டிருக்கிறோம். அதன் வகையில் வந்த முதல் மென்பொருள்தான் NYABAG.COM.
நாங்கள் இதுவரை செய்த மென்பொருள் மற்றும் வடிவமைப்புகளை இந்த உரலியில் பார்க்கவும். http://vheeds.com/portfolio.html.
எங்களது முகபுத்தக முகவரி:



இந்த பதிவு அனைவரையும் சென்றடைய உங்கள் ஓட்டுக்களை அனைத்து திரட்டிகளிலும் போடுங்கள் பேஸ்புக் மற்றும் ட்விட்டரிலும் கூறுங்கள் இதன் மூலம் தமிழரின் பெருமை உலகம் எங்கும் பரவட்டும். 

 நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை