நண்பர்களே தீபாவளி எல்லாம் நன்றாக கொண்டாடியிருப்பீர்கள் என்று
நினைக்கிறேன். அக்டோபர் 31 அன்று அமெரிக்காவின் மிகவும் பிரபலமான விழாவான
ஹாலோவின் என்ற விழா கொண்டாடுகிறார்கள். இதற்காக நிறைய நிறுவனங்கள்
மென்பொருட்களை சில குறிப்பிட்ட தேதிகள் வரை இலவசமாக கொடுத்து
வருகிறார்கள். இந்த முறை மூன்று மென்பொருட்கள் கிடைத்துள்ளது. WinX HD Video Converter இது எந்த ஒரு வீடியோ கோப்பினையும் வேறு ஒரு
வீடியோ கோப்பாக மாற்ற கூடியது. Halloween Special Offer தரவிறக்க சுட்டி இந்த மென்பொருள் இலவசமாக இன்னும் நான்கு நாட்களுக்கு மட்டுமே!!!
WonderFox DVD Ripperஇந்த மென்பொருள் உங்களுடைய டிவிடி கோப்பினை பின்வரும்
கோப்புகளாக மாற்ற உதவுகிறது. AVI, MP4, VOB, MKV, MPEG, MOV, FLV, WMV,
3G இதுமட்டுமல்லாமல் டிவிடியிலிருந்து AVI கோப்பாக மாற்ற வெறும் 50 முதல்
100 நிமிடங்களில் முடித்து கொடுக்கிறது. வேகம் விவேகம் சூப்பர் பாஸ்ட்
அதுக்கு இதுதான் பெயர்.
uRex Video Converter Platinum இதுவும்
ஒரு வீடியோ கன்வெர்ட்டர்தான். மிகவும் நன்றாக இருக்கும் ஒரு
மென்பொருள். இந்த மென்பொருள் நவம்பர் 10 க்குள் தரவிறக்கி ஆக்டிவேட்
செய்தால் மட்டுமே முழு உபயோக்ப்படுத்த முடியும்.
கணினியில் எந்த ஒரு வீடியோவையும் பார்க்க நிறைய நண்பர்கள்
உபயோக்ப்படுத்துவது விஎல்சி மீடியா ப்ளேயர் ஆகும். இந்த மென்பொருளை ஏன்
உபயோகப்படுத்துகிறார்கள் என்றால் உபயோகப்படுத்துவதில் எளிது நிறைய பயன்கள்
மற்றும் அதன் தரம். அதே போல விஎல்சி மீடியா ப்ளேயர் ஒரு போட்டியாளர்
களத்தில் குதித்திருக்கிறார்கள்.
இவர்கள் வெளியிட்டிருக்கும் மென்பொருள் பெயர் நூவ் ( noow) இந்த
மென்பொருள் விஎல்சி விட நிறைய வேலைகள் செய்கிறது. எந்த ஒரு வீடியோ
கோப்புகளையும் சுலபமாக கையாள்கிறது. உயர்தர கோப்புகளை நல்ல தரத்துடன்
காண்பிக்கிறது.
எந்த ஒரு வீடியோ தளத்திலிருந்து வீடியோக்களை தரவிறக்க இந்த மென்பொருள் மூலம் செய்ய முடிகிறது.
டொரண்ட் கோப்புகளையும் இந்த மென்பொருள் கையாளுகிறது.
உங்கள் கணினியில் உள்ள வீடியோ கோப்புகளை தேடவும் இந்த மென்பொருளால முடியும்.
இந்த மென்பொருளை காஸ்பர்ஸகை ஆன்டி வைரஸ் நிறுவனம் சோதித்து நம்பகமான
மென்பொருள் என்று சான்றளித்துள்ளது. இதனால் பயம் இல்லாமல் கணினியில்
நிறுவலாம்.
காஸ்பர்ஸ்கை ஆன்டிவைரஸ் மென்பொருள் நிறுவனம் Noow மென்பொருளை சோதித்து சான்றளித்தது குறித்த சுட்டி
நண்பர்களே நாம் எப்பொழுதும் வேர்ட் எக்ஸல் போன்றவற்றிற்கு நாடுவது
மைக்ரோசாப்டைதான். ஏன் என்றால் அது மிகவும் சுலபமாக இருக்கும்
கையாள்வதற்கு என்பதாலேயே அதை உபயோகிக்கிறோம். இத்தனைக்கும் அந்த
மென்பொருள் இலவசமில்லை பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும் ஆனால் இந்தியாவில்
மைக்ரோசாப்ட் ஆபிஸ் திருட்டு காப்பி எடுத்துதான் உபயோகிக்கிறார்கள்.
இதற்கு பதில் இலவசமாக கிடைக்கும் ஒபன் ஆபிஸ் போன்ற மென்பொருட்களை
பயன்படுத்தலாம். இப்பொழுது ஒரு ஆபிஸ் வெளி வந்திருக்கிறது. அதன் பெயர்
கிங்க்சாப்ட் KingSoft Office Suite 2012 இது ஒரு இலவச மென்பொருள்.
இந்த மென்பொருள் மூலம் வேர்ட், எக்ஸல், பவர்பாயிண்ட், போன்றவைகளை உருவாக்க முடியும்.
அது மட்டுமல்லாமல் மைக்ரோசாப்ட் வேர்ட் எக்ஸல் பவர்பாயிண்ட் போன்ற கோப்புகளையும் எடிட் செய்ய முடியும்.
நேரடியாக பிடிஎப் கோப்பாகவும் சேமிக்க முடியும்.
மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010 கோப்புகளையும் எடிட் செய்ய முடியும்.
மென்பொருளுக்குள் டேப் வசதி உண்டு என்பதால் சுலபமாக அடுத்த கோப்பிற்கு சுலபமாக தாவலாம்.
இந்த மென்பொருளை உபயோகிக்க வெறும் 256எம்பி ராம் இருந்தால் போதும் பென்டியம் 3 சிஸ்டம் போதுமானது.
நண்பர்களே நாம் நிறைய வீடியோ மற்றும் ஆடியோ கோப்புகள் மற்றும் புத்தகங்களை தரவிறக்கம் செய்வோம்.
எந்த மாதிரி தளத்தில் செய்வோம் என்றால் Bittorent, Rapidshare,
Megaupload, MediaFire, Hotfile, Netload.in, FIlesonic, Easy-share,
Megashare, மற்றும் Fileserve போன்ற தளங்களில் இருந்து தரவிறக்கம்
செய்வோம். இதில் உள்ள அனைத்திலும் ஒரு பிரச்சனை நேரம் மற்றும் தரவிறக்கும் வேகம்
தான். ஒரு தளங்களில் ஒரு கோப்பினை தரவிறக்கம் செய்ய முயற்சி செய்தால்
முதலில் தரவிறக்க 60 விநாடிகள் வரை காத்திருக்க வேண்டும். அதன் பிறகு
தரவிறக்கம் செய்ய வேண்டும். அது மட்டுமல்லாமல் தரவிறக்க வேகம் மிகவும்
குறைவாகவும் இருக்கும்.
இதை தீர்க்க ஒரு இலவச தளம் உள்ளது. அதன் பெயர் fetch.io இது ஒரு Cloud Computing முறையில் இயங்ககூடிய தளம்.
இந்த வலைத்தளம் மூலம் Bittorent, Rapidshare, Megaupload, MediaFire,
Hotfile, Netload.in, FIlesonic, Easy-share, Megashare, மற்றும்
Fileserve போன்ற தளங்களில் நேரக் காத்திருப்பு இல்லாமல் தரவிறக்க முடியும்.
இதில் ஒரே நேரத்தில் பலதரப்பட்ட தளங்களிலுருந்து தரவிறக்கம் செய்ய முடியும்.
தரவிறக்கப்படும் வீடியோ கோப்புகள் நேரடியாக MP4 ஆக மாற்றி தரும்.
இந்த வலைத்தளத்தில் மூலம் நான் பத்து எம்பி உள்ள வீடியோ கோப்புகள் ஓரு மூன்று விநாடிகளுக்குள் தரவிறக்கித்தந்தது.
நண்பர்களே இதுவரை நம்முடைய வலைத்தளத்தின் பெயரை தன்னுடைய வலைத்தளத்தின்
டாப் டென்னில் இடம்பெறச் செய்த நண்பரும் பதிவருமான திரு. பிரபு என்கிற
சாய்தாசன் அவர்களுக்கு எனது நன்றி
இனி நமது வலைத்தளத்தின் சுட்டிகள் அவருடைய டாப் டென்னில் வெளிவராது.
ஏன் வெளிவராது என்று கேட்பவர்களுக்கான பதில் இதற்கு முன் இட்ட பதிவான பிடிஎப் பாஸ்வேர்ட் கண்டுபிடிக்க மற்றும் வைபை வாட்சர் உங்களுக்காக
என்ற பதிவினை நீக்கினால் மட்டுமே நம் பதிவுகள் வெளிவரும் என்று
கூறிவிட்டார். எனக்காக நிறைய உதவிகள் செய்தவர் அதுமட்டுமல்லாமல் நிறைய
அறிவுரைகள் கூறியவர் இருந்தாலும் இதற்கான பதிலை நான் வாசகர்களிடம் இருந்து
எதிர்பார்க்கிறேன். இந்த பதிவினை நீக்கலாமா வேண்டாம் என்று நீங்களே
கூறுங்கள். எனக்கு குழப்பமான மனநிலையில் இருக்கிறேன். வாசகர்களுடைய
உதவியினை எதிர்பார்க்கிறேன்.
வாசகர்களின் விருப்பத்திற்கிணங்க அந்த குறிப்பிட்ட பதிவில் சில பிடிஎப் பாஸ்வேர்ட் கண்டுபிடிக்கும் முறையை நீக்கி விட்டேன். தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டுகிறேன்.
நண்பர்களே உங்களுடைய குறிப்புகளை எழுதி வைத்துக்கொள்ளவும். எழுதி வைத்த
குறிப்புகளை தேவைப்படும் பொழுது படிக்கவும். உங்களுடைய பர்சனல்
விவகாரங்களை ஆன் டைரியில் எழுதி வைக்கவும். ஒரு மென்பொருள் உள்ளது. இதன்
பெயர் ஞாபகம் என்பதை நினைவு படுத்தும் வகையில் Nyabag என்ற பெயரில்
வெளியிடப்பட்டிருக்கிறது. இது ஒரு டெஸ்க்டாப் அப்ளிகேசன் கிடையாது. இதனால்
மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவ தேவையில்லை. இது ஒரு வெப் அப்ளிகேசன்
ஆகும்.
இதன் டைரி பகுதியில் அன்றைய பொழுது குறித்து எழுதும் பொழுது எந்த
மாதிரி மன நிலையில் இருந்தீர்கள் என்று Smilies தேர்வு செய்ய முடியும்.
உதாரணத்திற்கு காதல் மூடில் இருந்தீர்கள் என்றால் Smiliey இரண்டு கண்களும் இதயமாகவும் மாறி உங்களை காதல் மூடிற்கு மாற்றி விடும்.
இதே நீங்கள் கோபமாக இருந்தீர்கள் என்றால் வேறு மாதிரியும் காட்டும் Smiliesகள் உள்ளன.
இதன் மூலம் அன்றைய பொழுது எவ்வாறு இருந்திருக்கும் என்று உங்கள் டைரியினை படிக்காமலேயே உங்கள் Smiliey மூலம் தெரிந்து கொள்வீர்கள்.
இவர்களுடைய டைரி பகுதியில் பதினான்கு வகையான Smilieகள் உள்ளன.
இவர்களுடைய
இந்த அப்ளிகேசனில் டாஸ்க் என்ற பகுதியில் உங்களுடைய அடுத்து செய்ய வேண்டிய
வேலைகள் மற்றும் கலந்துரையாடல்கள் மற்றும் உங்களுடைய நினைவூட்டல்களை
பதிந்து வைத்தால் உங்கள் மொபைல் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு நினைவூட்டல்
செய்யும்.
இந்த இணையத்தளத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரி இருந்தால் போதுமானது உடனே சேர்ந்து கொள்ளலாம்.
இந்த மென்பொருள் பீட்டா அளவில் இருப்பதால் இன்னும் நிறைய வசதிகள் செய்து தருவார்கள் என நம்பலாம். அத்துடன் இந்த மென்பொருள் vheeds.com நிறுவனத்தில் முதல் இலவச உலகளாவிய மென்பொருள் ஆகும்.
இதை உருவாக்கியவர்கள் நமது ஈரோட்டில் உள்ல வாழையக்கார தெருவில் உள்ள
VHEEDS TECHNOLOGY SOLUTIONS நிறுவனத்தினர் என்னும் பொழுது மிகவும்
மகிழ்ச்சியாக உள்ளது.
இவர்களின் இந்த இணையதள அப்ளிகேசன் வெற்றி
பெற வாழ்த்துவோம். இத நமக்கு அறிமுகப்படுத்தி நம் வாசகர்களுக்கும்
அறிமுகப்படுத்துங்கள் என்று கூறிய வசந்த் அவர்களுக்கும் நன்றி கூற
கடமைப்பட்டுள்ளோம்.
தமிழன் உருவாக்கிய மென்பொருள் உலகம் முழுவதும் பரவ என்னாலான சிறு முயற்சிதான் இது. இதை உபயோகப்படுத்துவதன் மூலம் நம் தமிழரின்
பெருமை பரவட்டும்.
இவர்களை பற்றிய சிறு குறிப்புகள் குறித்து அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலை இங்கு கொடுத்திருக்கிறேன்
“Vheeds Technology solutions” என்ற ‘technology startup’யினை செப்டம்பர் 2010’ல் மூன்று நண்பர்கள் சேர்ந்து ஈரோட்டில் ஆரம்பித்தோம். நாங்கள் 2007’ல் எங்களது பொறியியல் கல்வியினை ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் முடித்து ஹைதராபாத்தில் உள்ள MNC’ல் பணியமர்த்தபட்டோம். பின்பு ஜூலை 2010’ல் எங்களது பணியை Resign செய்துவிட்டு சொந்த நகரத்தில் எங்களது நிறுவனத்தை ஆரம்பித்தோம்.
தொழில்நுட்பம்
மற்றும் அதன் சார்ந்த வளர்ச்சிகள் அனைத்தும் வளர்ந்த நாடுகள் மற்றும்
இந்தியாவில் உள்ள பெரிய வர்த்தக நகரங்களுக்கு மட்டும் உரித்தானது என்ற
நிலையினை மாற்றி சிறிய நகரங்களும் அதை சேர்ந்த தொழில்களுக்கும் சென்றடைய
வேண்டும் என்ற எங்களது எண்ணத்தை நோக்கி உழைத்து கொண்டிருக்கிறோம். அதற்கு
ஏற்றார் போல் ஈரோட்டில் உள்ள சிறுத்தொழில் மற்றும் அதன் சார்ந்த
நிறுவனங்கள் அனைத்துக்கும் அவர்களின் தொழில் முறைக்கு ஏற்ப மென்பொருள்
செய்து அவர்களை நவீனத்துவம் ஆக்குகிறோம். மேலும் தமிழகத்தில் இருந்து
உலகளாவிய அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் மென்பொருள்களை
வடிவமைத்து கொண்டிருக்கிறோம். அதன் வகையில் வந்த முதல் மென்பொருள்தான் NYABAG.COM.
இந்த பதிவு அனைவரையும் சென்றடைய உங்கள் ஓட்டுக்களை அனைத்து திரட்டிகளிலும் போடுங்கள் பேஸ்புக் மற்றும் ட்விட்டரிலும் கூறுங்கள் இதன் மூலம் தமிழரின் பெருமை உலகம் எங்கும் பரவட்டும்.
நண்பர்களே நம் கணினியில் உள்ள தேவையற்ற கோப்புகளை நீக்க நிறைய முறைகளை பின்பற்றுவோம். அதில் ஒன்று சிசி கீளினர் உபயோகப்படுத்துவது. இன்னொரு முறை நாமளே நீக்குவது தேவையில்லாத டெம்பரவரி கோப்புகள், இண்டெர்நெட் குக்கீகள் போன்றவற்றை நாமளே நீக்குவது. நாமளே நீக்குவது என்பது மிகவும் சிரமமான விஷயம் என்பதால்தான் சிசிகீளினர் போன்ற மென்பொருட்கள் வந்து நம் கணினியின் பளுச்சுமையை குறைத்துள்ளது.
சிசி கிளீனர் போன்ற ஒரு மென்பொருள்தான் ப்ளீச் பிட் Bleach Bit
இந்த மென்பொருள் ஒரு திறந்த நிலை மென்பொருள் என்பதால் இன்னும் நிறைய பேர் இதை மேம்படுத்துவார்கள் என்று கட்டாயம் நம்பலாம்.
இந்த மென்பொருள் 90க்கும் மேற்பட்ட அப்ளிகேசன்களை ஆதரிக்கிறது.
இந்த மென்பொருள் போர்ட்டபிள் மற்றும் கணினியில் நிறுவக்கூடிய வகையில் கிடைக்கிறது.
இந்த மென்பொருள் விண்டோஸ் அனைத்து வெர்சன்கள் மற்றும் லினக்ஸ் ஆதரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
கணினியில் தொடர்ச்சியாக வேலை செய்யும் நண்பர்கள் சிறிது நேரம் கூட ஓய்வு இல்லாமல் வேலை செய்வார்கள். இது போல் தொடர்ச்சியாக வேலை செய்பவர்களுக்கு சிறிது நேரம் ஒய்வு எடுக்க ஞாபகமூட்டும் ஒரு சிறு மென்பொருள் இது. இந்த மென்பொருளை நிறுவி விட்டு இவ்வளவு நேரத்திற்கு நினைவூட்டுமாறு நேரத்தினை செட் செய்து கொண்டால் போதுமானது. எந்த கலர் வேண்டுமோ அந்த கலர் செட் செய்து கொண்டால் நீங்கள் செட் செய்த நேரத்திற்கு நேரத்துடன் நீங்கள் செட் செய்த வண்ணமும் உங்கள் கணினி மாறி உங்களை ஓய்வு எடுக்க சொல்லி நினைவூட்டும். இந்த மென்பொருளின் பெயர் ஃபேட் டாப் Fade Top
யூட்யூப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த யூட்யூப் தளத்தில் கோடிக்கணக்கான வீடியோக்கள் உள்ளன. அந்த வீடியோக்களில் சில கல்வி சம்பந்தமான வீடியோக்களும் உள்ளது. ஒவ்வொரு வீடியோக்களும் பார்ட் 1 பார்ட் 2 என்று வரிசைப்படுத்தி ஒரு 20 பார்ட் வரை யூட்யூபில் வெளியிட்டுருப்பார்கள். அது போன்ற ஒன்றுக்கும் மேற்பட்ட தொடர்ச்சியான வீடியோக்களை தரவிறக்க இந்த பயர்பாக்ஸ் ஆடு ஆன் மிகவும் பேருதவியாக இருக்கும். இது போன்ற எந்த ஒரு வீடியோக்களையும் தரவிறக்க ஆடு ஆன் உபயோகமாக இருக்கும்.
Firefox ByTubeD Add-On Installer
Panda Antivirus Pro 2012
ஆன்டி வைரஸ் வரிசையில் பான்டா ஆன்டிவைரஸுக்கு தனி இடம் உண்டு எப்பொழுதுமே. பான்டா ஆன்டிவைரஸ் நிறுவனம் இப்பொழுது ஆறு மாதத்திற்கான பான்ட ஆன்டிவைரஸ் ப்ரோ 2012னை இலவசமாக
வழங்குகிறது. இந்த மென்பொருளை தரவிறக்க உங்களிடம் பேஸ்புக் கணக்கு இருந்தால் போதும். Facebook.com/PandaUSA இந்த லிங்கை கிளிக் செய்து செல்லுங்கள் கீழுள்ளது போல் ஒரு படம் வரும்
நீங்கள் Like Button கிளிக் செய்த பிறகு இது போல வரும்.
அவ்வளவுதான் உடனே தரவிறக்க வேண்டியதுதான்.
இது எதற்காக தெரியுமா இன்னும் நிறைய கஸ்டமர்களை தன் வசம் இழுக்க வேண்டி இது போன்று இலவசம் தருகிறார்கள் அதுவும் பேஸ்புக் கணக்கு வழியாக.
உங்களிடம் பேஸ்புக் கணக்கு இல்லை என்பவர்கள் இங்கே இருந்து நேரடியாக பான்ட ஆன்டிவைரஸ் ப்ரோ 2012னை இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம். Panda Antivirus PRO 2012 Download Link
அனைவருக்கும் நன்றி இது என்னுடைய 420வது பதிவு இது உங்களால்தான் என்னால் சாதிக்க முடிந்தது இன்னும் நிறைய எழுத உங்கள் கமெண்ட்ச் மற்றும் விளம்பர கிளிக்குகளும் மட்டுமே ஊக்கப்படுத்தும்.
நண்பர்களே நாம் நம்முடைய முக்கியமான தகவல்கள் அடங்கிய கோப்புகள் அல்லது தேவையில்லாத கோப்புகளில் Del கீ கொண்டு நீக்குவோம். அல்லது Shift+Del கீ கொண்டு நீக்குவோம். வெறும் Del கீ கொண்டு நீக்கினால் Recycle Bin பகுதிக்கு சென்று விடும் அங்கிருந்து நாம் மீட்டுக் கொள்ளலாம். அதே Shift+Del கொண்டு நீக்கினால் Restoration என்ற மென்பொருள் கொண்டு மீட்டெடுக்கலாம். இது போன்ற மென்பொருட்களை கொண்டு மீட்டெடுத்தால் யார் வேண்டுமானாலும் நம் கோப்புகளை திருட்டுதனமாக மீட்டெடுத்து உபயோகிக்கலாம். அப்படி செய்யாமல் இருக்க வேண்டுமென்றால் Eraser என்ற மென்பொருளை கொண்டு நீக்கினால் அந்த கோப்புகள் யார் கைக்கும் கிடைக்காத வண்ணம் வன்தட்டிலிருந்து மிகவும் பாதுகாப்பாக நீக்கிவிடலாம்.
இந்த மென்பொருள் அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையில் உபயோகிக்கப்பட்டு மிகவும் பாதுகாப்பான மென்பொருள் என்று சான்றளிக்கப்பட்டுள்ளது.
இந்த மென்பொருள் ஒரு ஒபன் சோர்ஸ் மென்பொருளும் கூட
இந்த மென்பொருள் விண்டோஸ், லினக்ஸ், மற்றும் மேக் கணினிகளில் பயன்படுத்தும் வண்ணம் தனி தனி மென்பொருளாக கிடைக்கிறது.
இந்த மென்பொருளை கடந்தா வாரம் மட்டும் 30000க்கும் மேற்பட்டவர்கள் தரவிறக்கி உபயோகித்து நன்றாக உள்ளது என்று கூறியிருக்கிறார்கள்.
விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் விஸ்டாவில் அனைவருக்கும் ஒரு பிரச்சனை வரும் அந்த பிரச்சனை என்னவென்றால் விண்டோஸ் எக்ஸ்பியில் உள்ளது போல Start மெனு இல்லாததே பிரச்சனை. இதை தீர்ப்பதற்கு ஒரு மென்பொருள் உள்ளது அதுதான் Start Menu XP இந்த மென்பொருளை நிறுவி உங்களுக்கு ஸ்டார்ட் பாருக்கு ஏற்றவாறு குரூப்கள் உருவாக்கிக் கொள்ளலாம். இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி
பெரிய பெரிய வலை முகவரிகளை சிறியதாக மாற்ற நாம் bit.ly, goo.gl, is.gd,mcaf.ee போன்ற வலைத்தளங்களுக்கு சென்று பெரிய வலை முகவரிகளை சிறிய முகவரியாக மாற்றி மின்னஞ்சல் செய்வோம்.
அது போல செய்ய ஒவ்வொரு தளத்திற்கும் செல்லாமல் நம் வலை உலாவியிலிருந்து செய்ய சிறு மென்பொருட்கள் உள்ளது. அதை நிறுவினால் போதும்.
பயர்பாக்ஸ் Firefox உலாவியில் நிறுவ நீட்சி சுட்டி இது கூகிள், மெக்காபி, மற்றும் பிட் லி போன்ற வலைத்தளங்கள் செல்லாமல் வலை முகவரிகளை சுருக்கலாம்.
பிட் லி வலை முகவரி சுருக்கி மென்பொருள்
பயர்பாக்ஸ் Firefox வலை உலாவியில் நிறுவ நீட்சி சுட்டி
கூகிள் குரோம் வலை உலாவியில் பிட்லி வலை முகவரி சுருக்கி நீட்சி சுட்டி
இந்த நீட்சிகள் இரண்டும் பிட்லி வலைத்தளத்தை மட்டுமே கொண்டு செயல்படுகிறது.
கூகிள் வலை முகவரி சுருக்கி நீட்சி குரோம் வலை உலாவியில் மட்டுமே செயல்படும். கூகிள் குரோமிற்கான நீட்சி சுட்டி
ஒரு அறிவிப்பு
இந்த வலைத்தளம் மூலம் எனக்கு எதுவும் எந்த ஆதாயமும் கிடைக்காமல் இருந்து வருகிறது. ஆனாலும் தொடர்ந்து பல பதிவுகளை கஷ்டப்பட்டு தான் இந்த பதிவுகளை எழுதுகிறேன். அதனால் நான் எழுதும் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் உபயோகமானவை என்றே நம்புகிறேன். இவ்வாறிருக்கையில் வரும் நண்பர்கள் என் வலைத்தளத்தில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்து பார்ப்பதன் மூலம் என்னால் மாதம் ஒரு சிறு தொகையை ஈட்ட முடியும் என்று நம்புகிறேன். ஆகையால் பதிவுகளை படிக்கும் நண்பர்கள் விளம்பரங்களை கிளிக் செய்து வருவாயை ஈட்ட உதவி செய்ய வேண்டுகிறேன். உதவுங்கள் இன்னும் தரமான ஆக்கங்களை உருவாக்க உதவுங்கள். அத்துடன் இந்த பதிவுகள் தரமுள்ளதாக இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் இதனை பற்றி தெரியபடுத்துங்கள். அனைத்து திரட்டிகளிலும் நீங்கள் போடும் ஒட்டுகளினால் இன்னும் உலகம் முழுக்க தமிழர்கள் அனைவருக்கும் போய்ச் சேர ஒரு உங்கள் ஒட்டு ஒரு வாய்ப்பாக அமையும்.
நண்பர்களே Mozilla Firefox 4.0 வெளிவந்து சக்கை போடு போடுகிறது. நீங்களும் உங்கள் கணினியில் பயர்பாக்ஸ் உலாவியை மேம்படுத்திக் கொள்ளுங்கள். பயர்பாக்ஸ் உலாவி 4.0 தரவிறக்க சுட்டி ஆசியாவில் அதிகமாக ஜப்பான் முதலிடத்திலும் ஜப்பானுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிகமாக பயர்பாக்ஸ் உலாவி 4.0 தரவிறக்கப்பட்டுள்ளது. மாலத்தீவுகளில்தான் குறைவாக தரவிறக்கப்பட்டுள்ளது.
பயர்பாக்ஸ் வெளிவந்த 48 மணி நேரங்களில் தரவிறக்கப்பட்ட அளவு மட்டுமே 193.4 மில்லியனாம். இது போல நிறைய விஷயங்களை வெளியிட்டுருக்கிறார்கள். கீழே உள்ள படத்தில் பாருங்கள்.
பயர்பாக்ஸ் உலாவி 4.0 இதுவரை எந்தெந்த நாடுகள், நகரங்களில் எத்தனை முறை தரவிறக்கப்பட்டுள்ளன என்பதை தெரிந்து கொள்ள சுட்டி
AutoCad மாற்று மென்பொருள்
நிறைய நண்பர்கள் ஆட்டோகேட் என்ற மென்பொருளை பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். இது வரைகலைக்கான மென்பொருள் அதாவது கட்டிடம் மற்றும் இன்ட்ரியர் டெகரெட்டர்கள் போன்றவர்கள் நிறைய உபயோகப்படுத்துவார்கள். இந்த மென்பொருளில் 2D மற்றும் 3D ஆக கட்டிடங்களை உருவாக்க முடியும்.
இந்த மென்பொருள் விலை அதிகமான மென்பொருளும் ஆகும். இதன் விலை குறைந்தது இந்திய ரூபாயில் 20,000 க்கும் மேலாகும்.
இது போன்ற ஒரு மென்பொருளை Drafsight என்ற நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. ஆட்டோகேடில் செய்யக்கூடிய அனைத்து வேலைகளும் செய்ய முடியும்.
இந்த மென்பொருள் செய்யும் வேலைகள் இங்கு தட்டச்சு செய்யமுடியாத அளவுக்கு பெரியதாக இருப்பதால் இங்கே சென்று நேரடியாக தெரிந்து கொள்ளவும். சுட்டி இந்த மென்பொருள் முழுக்க முழுக்க ஆட்டோகேட் உபயோகிப்பாளர்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
AngriBird புகழ்பெற்ற ஆங்கிரிபேட் விளையாட்டு உங்களுக்காக சுட்டி
இந்த புகழ்பெற்ற Angribird விளையாட்டு இப்பொழுது படமாக்கப்பட்டு வருகிறது விரைவில் வெள்ளித்திரையில் காணலாம். இதன் காணொளி கீழே
நீங்கள் முக்கியமான வேர்ட் கோப்பில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது கணினி ரீஸ்டர்ட் அல்லது அணைந்து போனாலோ அல்லது வேறு வகையில் பழுதுபட்ட எம் எஸ் வேர்ட் மற்றும் எக்ஸல் கோப்புகள் மற்றும் ஒபன் ஆபிஸ் கோப்புகள் இருந்தால் இந்த மென்பொருள் மூலம் சுலபமாக மீட்டு எடுக்க முடியும். இந்த மென்பொருளை நிறுவ மைக்ரோசாப்ட்ட் டாட் நெட் நிறுவி இருக்க வேண்டும். மென்பொருள் தரவிறக்க சுட்டி
ஒரு அறிவிப்பு
இந்த வலைத்தளம் மூலம் எனக்கு எதுவும் எந்த ஆதாயமும் கிடைக்காமல் இருந்து வருகிறது. ஆனாலும் தொடர்ந்து பல பதிவுகளை கஷ்டப்பட்டு தான் இந்த பதிவுகளை எழுதுகிறேன். அதனால் நான் எழுதும் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் உபயோகமானவை என்றே நம்புகிறேன். இவ்வாறிருக்கையில் வரும் நண்பர்கள் என் வலைத்தளத்தில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்து பார்ப்பதன் மூலம் என்னால் மாதம் ஒரு சிறு தொகையை ஈட்ட முடியும் என்று நம்புகிறேன். ஆகையால் பதிவுகளை படிக்கும் நண்பர்கள் விளம்பரங்களை கிளிக் செய்து வருவாயை ஈட்ட உதவி செய்ய வேண்டுகிறேன். உதவுங்கள் இன்னும் தரமான ஆக்கங்களை உருவாக்க உதவுங்கள். அத்துடன் இந்த பதிவுகள் தரமுள்ளதாக இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் இதனை பற்றி தெரியபடுத்துங்கள். அனைத்து திரட்டிகளிலும் நீங்கள் போடும் ஒட்டுகளினால் இன்னும் உலகம் முழுக்க தமிழர்கள் அனைவருக்கும் போய்ச் சேர ஒரு உங்கள் ஒட்டு ஒரு வாய்ப்பாக அமையும்.
நண்பர்களே நாம் ஒவ்வொரு படங்களையும் டொரண்ட் என்னும் மென்பொருளை உபயோகப்படுத்தி தரவிறக்கி படம் பார்ப்பவர்கள்தான் அதிகம். அவ்வாறு தரவிறக்கும் போது உங்கள் படங்கள் தரவிறக்கிக் கொண்டிருக்கும் பொழுதே தரவேற்றமும் செய்யும். அதாவது நீங்கள் ஒரு படத்தை Download செய்யும் போதே அந்த படம் Uploadம் செய்யப்படும். இது போல் நடக்காமல் இருக்க ஒரு மென்பொருள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதன் பெயர் BitThief பிட்தீப். இந்த மென்பொருள் மூலம் நீங்கள் எந்த ஒரு டொரண்ட் கோப்பையும் Upload செய்யாமல் Download மட்டும் செய்யலாம். இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி
இந்த மென்பொருள் விண்டோஸ், லினக்ஸ் மற்றும் மேக் கணினிகளில் இயக்க என்று தனித்தனி மென்பொருட்கள் வெளியிடப்பட்டுள்ளது.
நிறைய பேர் சிறு வயதில் சா பூ த்ரி என்ற விளையாட்டு ( விளையாட்டின் பெயர் சரிதானே தப்பாக இருந்தால் திருத்தவும்) அது போன்று வெளிநாட்டில் Rock Paper Scissiors என்ற விளையாட்டு மிகவும் பிரசித்தமானது. இந்த விளையாட்டு இப்பொழுது கணினியுடன் ஆடுவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டை விளையாட சுட்டி
இந்த விளையாட்டு குறித்த மேலதிக தகவல்கள் குறித்த விக்கிபீடியா பக்கம் சுட்டி
விண்டோஸ் எக்ஸ்பியில் மற்றும் விண்டோஸ் 7க்கான கேட்ஜெட் பேக் தரவிறக்க சுட்டி பல கடின வேலைகளுக்கிடையில் இந்த சிறு பதிவு மன்னிக்கவும் நண்பர்களே வேலை அதிகம்
ஒரு அறிவிப்பு
இந்த வலைத்தளம் மூலம் எனக்கு எதுவும் எந்த ஆதாயமும் கிடைக்காமல் இருந்து வருகிறது. ஆனாலும் தொடர்ந்து பல பதிவுகளை கஷ்டப்பட்டு தான் இந்த பதிவுகளை எழுதுகிறேன். அதனால் நான் எழுதும் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் உபயோகமானவை என்றே நம்புகிறேன். இவ்வாறிருக்கையில் வரும் நண்பர்கள் என் வலைத்தளத்தில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்து பார்ப்பதன் மூலம் என்னால் மாதம் ஒரு சிறு தொகையை ஈட்ட முடியும் என்று நம்புகிறேன். ஆகையால் பதிவுகளை படிக்கும் நண்பர்கள் விளம்பரங்களை கிளிக் செய்து வருவாயை ஈட்ட உதவி செய்ய வேண்டுகிறேன். உதவுங்கள் இன்னும் தரமான ஆக்கங்களை உருவாக்க உதவுங்கள். அத்துடன் இந்த பதிவுகள் தரமுள்ளதாக இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் இதனை பற்றி தெரியபடுத்துங்கள். அனைத்து திரட்டிகளிலும் நீங்கள் போடும் ஒட்டுகளினால் இன்னும் உலகம் முழுக்க தமிழர்கள் அனைவருக்கும் போய்ச் சேர ஒரு உங்கள் ஒட்டு ஒரு வாய்ப்பாக அமையும்.
நண்பர்களே இந்தியாவில் இணைய பயனாளிகள் 1998 ல் இருந்ததற்கும் இப்பொழுது இருப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. அதை நம் கண்முன் கொண்டு நிறுத்துகிறது இந்த புகைப்படம்.
நாம் இப்பொழுது கணினியில் வைரஸ் வந்தால் ஆன்டி வைரஸ் மூலம் நீக்குகிறோம். அந்த வகையில் இது வரை எத்தனையோ வைரஸ்களும் ஆன்டி வைரஸ்களும் வந்தாலும் முதன் முதலில் விண்டோஸை தாக்கிய வைரஸ் மற்றும் காப்பாற்றிய ஆன்டிவைரஸ் பற்றி எத்தனை பேருக்கு தெரியும். தெரிந்து கொள்வோமே! நாமும்!
முதன் முதலில் கணினியை தாக்கிய வைரஸின் பெயர் ப்ரெய்ன் வைரஸ் Brain Virus இந்த வைரஸ் தாக்கிய ஆண்டு 1986. இந்த வைரஸ் பழைய மாடலான 360k ப்ளாப்பி மூலம் பரவியது. இதை உருவாக்கியது பாகிஸ்தான் என்றும் இன்றுவரையில் நம்பபடுகிறது. இந்த வைரஸ் குறித்த Wikipedia பக்கம் சுட்டி
இந்த வைரஸ் 1987ல் Bernd Fix என்ற ஆன்டி வைரஸால் தடுக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் குறித்த விக்கி சுட்டி
கூகிள் நிறுவனம் இப்பொழுது நிறைய வசதிகள் செய்து வருகிறது அதன் வரிசையில் கூகிள் டாக்ஸ் தளத்தில் நீங்கள் இனி பின்வரும் இந்த வகை கோப்புகளையும் திறந்து பார்க்க முடியும்.
Microsoft Excel (.XLS and .XLSX)
Microsoft PowerPoint 2007 / 2010 (.PPTX)
Apple Pages (.PAGES)
Adobe Illustrator (.AI)
Adobe Photoshop (.PSD)
Autodesk AutoCad (.DXF)
Scalable Vector Graphics (.SVG)
PostScript (.EPS, .PS)
TrueType (.TTF)
XML Paper Specification (.XPS)
ஒரு அறிவிப்பு
இந்த வலைத்தளம் மூலம் எனக்கு எதுவும் எந்த ஆதாயமும் கிடைக்காமல் இருந்து வருகிறது. ஆனாலும் தொடர்ந்து பல பதிவுகளை கஷ்டப்பட்டு தான் இந்த பதிவுகளை எழுதுகிறேன். அதனால் நான் எழுதும் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் உபயோகமானவை என்றே நம்புகிறேன். இவ்வாறிருக்கையில் வரும் நண்பர்கள் என் வலைத்தளத்தில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்து பார்ப்பதன் மூலம் என்னால் மாதம் ஒரு சிறு தொகையை ஈட்ட முடியும் என்று நம்புகிறேன். ஆகையால் பதிவுகளை படிக்கும் நண்பர்கள் விளம்பரங்களை கிளிக் செய்து வருவாயை ஈட்ட உதவி செய்ய வேண்டுகிறேன். உதவுங்கள் இன்னும் தரமான ஆக்கங்களை உருவாக்க உதவுங்கள். அத்துடன் இந்த பதிவுகள் தரமுள்ளதாக இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் இதனை பற்றி தெரியபடுத்துங்கள். அனைத்து திரட்டிகளிலும் நீங்கள் போடும் ஒட்டுகளினால் இன்னும் உலகம் முழுக்க தமிழர்கள் அனைவருக்கும் போய்ச் சேர ஒரு உங்கள் ஒட்டு ஒரு வாய்ப்பாக அமையும்.
நண்பர்களே பாடல்கள் கேட்க எத்தனை ப்ளேயர்கள் இருந்தாலும் புதிய ப்ளேயர்களை முயன்று பார்ப்பதில் தவறு ஒன்றுமில்லையே. நான் எப்பொழுதும் கணினியில் பாட்டு கேட்பதாகாக இருந்தால் Winamp Media Player படம் பார்ப்பதாக இருந்தால் VLC Media Player உபயோகிப்பவன். அதனால் புதியதாக வந்திருக்கும் Spider Player பாட்டு கேட்பதற்காக முயன்று பார்த்தேன் நன்றாகதான் இருந்தது. இதில் நிறைய வசதிகள் உள்ளது
இந்த மென்பொருளின் வசதிகள் தெரிந்து கொள்ள சுட்டி
Professional Version வருகிறது அதற்கு மென்பொருளை தரவிறக்கி ரெஜிஸ்டர் செய்யும் பொழுது இந்த கோடு கொடுத்தால் போதும். 27U3Z909I95-KK147A893S4K6Y1M0F-780363812 அவ்வளவுதான் முடிந்தது.
இந்த மென்பொருளின் பெயர் Spider ஆகும்.
Unlimited View in Mega Video
நிறைய நண்பர்கள் நேரடியாக படங்களை தரவிறக்கி பார்க்காமல் இணையம் வழியே படம் பார்ப்பவர்கள் உண்டு. அது மாதிரி பார்ப்பவர்களுக்கு Mega Video என்ற தளம் தெரியாமல் இருக்காது.
இந்த தளத்தில் இலவசமாக 75 நிமிடங்கள் மட்டுமே படங்கள் பார்க்க இயலும் சில படங்கள் 1 மணி நேரத்திற்கும் மேல் இருக்கும். இந்த நேரத்தில் நம்மால் கிளைமேக்ஸ் சீன்கள் மட்டுமே பார்க்க இயலாமல் போகலாம். இதற்கு ஒரு வழி இருக்கிறது. இந்த தளத்திற்கு சென்று உங்கள் Mega Video லிங்கை காப்பி செய்து இங்கே கொடுத்தால் போதும் உங்கள் படம் முழுவதுமாக இந்த தளத்தின் ஊடாக தெரியும். இணைய தளம். சுட்டி இதற்கான குரோம் ஆடு ஆனும் உண்டு சுட்டி
ஐ ஓ பிட் நிறுவனத்தின் கேம் பூஸ்டர் IOBit Game Booster இலவசமாக பெற இங்கே செல்லுங்கள். சுட்டி இந்த மென்பொருள் மூலம் உங்களிடம் உள்ள விளையாட்டுகளை மிக வேகமாக விளையாடலாம். ஆங்காங்கே Struck ஆகி நிற்காது.
ஒரு அறிவிப்பு
இந்த வலைத்தளம் மூலம் எனக்கு எதுவும் எந்த ஆதாயமும் கிடைக்காமல் இருந்து வருகிறது. ஆனாலும் தொடர்ந்து பல பதிவுகளை கஷ்டப்பட்டு தான் இந்த பதிவுகளை எழுதுகிறேன். அதனால் நான் எழுதும் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் உபயோகமானவை என்றே நம்புகிறேன். இவ்வாறிருக்கையில் வரும் நண்பர்கள் என் வலைத்தளத்தில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்து பார்ப்பதன் மூலம் என்னால் மாதம் ஒரு சிறு தொகையை ஈட்ட முடியும் என்று நம்புகிறேன். ஆகையால் பதிவுகளை படிக்கும் நண்பர்கள் விளம்பரங்களை கிளிக் செய்து வருவாயை ஈட்ட உதவி செய்ய வேண்டுகிறேன். உதவுங்கள் இன்னும் தரமான ஆக்கங்களை உருவாக்க உதவுங்கள். அத்துடன் இந்த பதிவுகள் தரமுள்ளதாக இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் இதனை பற்றி தெரியபடுத்துங்கள். அனைத்து திரட்டிகளிலும் நீங்கள் போடும் ஒட்டுகளினால் இன்னும் உலகம் முழுக்க தமிழர்கள் அனைவருக்கும் போய்ச் சேர ஒரு உங்கள் ஒட்டு ஒரு வாய்ப்பாக அமையும்.
நண்பர்களே இப்பொழுதெல்லாம் கணினி இல்லாத வீடு என்ற மயமாகி வருகிறது. அதுவும் கணினி வாங்கினால் துணை பொருட்களாக ஹெட் போன் மைக் Head Phone & Mic மற்றும் வெப்கேம் Web Cam இல்லாமல் வாங்குவதில்லை. இது இரண்டும் எதற்கு வாங்குகிறோம். ஹெட் போன் & மைக் வழியாக வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களுடனோ அல்லது மகன் / மகளுடனோ பேசுவதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது. அத்துடன் அவர்கள் முகத்தை பார்த்துக் கொண்டு பேசுவதே தனி சந்தோசமே. இப்பொழுதெல்லாம் இதன் மூலம் சமையலே கற்றுக் கொள்கிறார்கள் வெளிநாட்டில் உள்ள மருமகள்கள். சரி நாம் பதிவிற்கு செல்லுவோமே.
நாம் இல்லாத நேரங்களில் நம் கணினியை வேலை செய்பவர்களை போட்டோ எடுத்து வைக்க முடிந்தால் எப்படி இருக்கும். அதைதான் செய்கிறது இந்த மென்பொருள்.
இந்த மென்பொருள் கொண்டு தானாகவே தொடர்ச்சியாக புகைப்படம் Photos எடுக்க முடியும்.
அல்லது உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட இடைவேளை விட்டு புகைப்படம் எடுக்க வேண்டுமானாலும் எடுக்க முடியும்.
அதற்கு உங்கள் கணினியில் Webcam ட்ரைவர்கள் மற்றும் நிறுவி இருக்க வேண்டும்.
எப்பொழுதும் Webcam உங்கள் கணினியில் இணைத்து இருக்க வேண்டும்.
இப்பொழுது கொஞ்சம் புரிந்திருக்கும் இந்த மென்பொருள் Spy Webcam மென்பொருள் ஆகும்.
இந்த மென்பொருளால் போட்டோக்கள் மட்டுமே எடுக்க முடியும்.
மிகவும் சிறிய மென்பொருள் வெறும் 436KB அளவுள்ளது இந்த மென்பொருள்.
மிகவும் குறைவாகவே நினைவகத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும்.
65க்கும் மேற்பட்ட காதலர் தினம் வால்பேப்பர்கள் தரவிறக்க சுட்டி Incredible 65+ Valentines Day Wallpapers Pack Download Link
பத்திரிகையாளர்களுடன் உலக புகழ்பெற்ற நடிகைகள் புகைப்படங்கள் தரவிறக்க சுட்டி
ஒரு அறிவிப்பு
இந்த வலைத்தளம் மூலம் எனக்கு எதுவும் எந்த ஆதாயமும் கிடைக்காமல் இருந்து வருகிறது. ஆனாலும் தொடர்ந்து பல பதிவுகளை கஷ்டப்பட்டு தான் இந்த பதிவுகளை எழுதுகிறேன். அதனால் நான் எழுதும் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் உபயோகமானவை என்றே நம்புகிறேன். இவ்வாறிருக்கையில் வரும் நண்பர்கள் என் வலைத்தளத்தில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்து பார்ப்பதன் மூலம் என்னால் மாதம் ஒரு சிறு தொகையை ஈட்ட முடியும் என்று நம்புகிறேன். ஆகையால் பதிவுகளை படிக்கும் நண்பர்கள் விளம்பரங்களை கிளிக் செய்து வருவாயை ஈட்ட உதவி செய்ய வேண்டுகிறேன். உதவுங்கள் இன்னும் தரமான ஆக்கங்களை உருவாக்க உதவுங்கள். அத்துடன் இந்த பதிவுகள் தரமுள்ளதாக இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் இதனை பற்றி தெரியபடுத்துங்கள். அனைத்து திரட்டிகளிலும் நீங்கள் போடும் ஒட்டுகளினால் இன்னும் உலகம் முழுக்க தமிழர்கள் அனைவருக்கும் போய்ச் சேர ஒரு வாய்ப்பாக அமையும். வெவ்வேறு நாடுகள், மாநிலங்கள் மற்றும் ஊர்களில் இருந்து வரும் ஒவ்வொருவரும் ஒரு முறை கிளிக் செய்தால் கூட போதுமானதாக இருக்கும் என்றே நினைக்கிறேன். பார்ப்போம் நண்பர்களின் உதவி எப்படி இருக்கிறது யாரிடமும் பணம் கேட்கவில்லை உழைத்து எழுதுகிறேன் சிறு உதவி செய்யுங்கள் என்றே கேட்கிறேன்.
நண்பர்களே நிறைய பேர் பலவிதமான வண்ணப்படங்களை தங்கள் மானிட்டர் திரையை அலங்கரித்திருப்பார்கள். பெரியவர்கள் தாத்தா பாட்டிகள் தங்களுடைய பேரன் பேத்தி புகைப்படங்களை கொண்டு அலங்கரித்திருப்பார்கள் அல்லது கடவுள் படங்களை வைத்து மானிட்டர் திரையை அலங்கரித்திருப்பார்கள்.
அதே திருமணமானவர்கள் தங்கள் கணவர் / மனைவி / குழந்தைகள் / குடும்பமத்தின் புகைப்படத்தினை வைத்து மானிட்டர் திரையை அலங்கரித்திருப்பார்கள். திருமணம் ஆகாத பிரம்மச்சாரிகள் Bachelors என்ன படங்களை வைத்து அலங்கரித்திருப்பார்கள். எனக்கு தெரிந்து தாய் தந்தை புகைப்படம் வைத்திருப்பவர்கள் மிகவும் குறைவு. இவர்களுடைய திரையை அதிகம் அலங்கரிப்பது Celebrities என்னும் உலக புகழ்பெற்ற கவர்ச்சி நடிகைகளின் புகைப்படங்களை வைத்தே அலங்கரித்திருப்பார்கள். ( தாய் தந்தை முக்கியம் தோழர்களே )
இவர்களுக்கான மென்பொருள்தான் ஸ்கின்ஸ் பி. இந்த மென்பொருளின் வேலை என்ன தெரியுமா Skins.be என்ற தளத்தில் உள்ள கவர்ச்சி படங்களை தற்காலிகமாக தரவிறக்கி உங்கள் மானிட்டர் திரையை அலங்கரிப்பதே இதன் சிறப்பம்சம்.
சரி இந்த மென்பொருளை நிறுவி விட்டீர்கள் திடீரென்று உங்கள் திரையை அலங்கரித்திருக்கும் கவர்ச்சி நடிகையை பிடித்திருக்கிறது. அந்த படத்தை ஒரு கோப்பாக சேமிக்க வேண்டும் என்றால் என்ன செய்வது. இது ஒரு தற்காலிகமாக சேமிக்கும் மென்பொருள் என்று கூறியிருக்கிறேன் அல்லவா. அதனால் இந்த மென்பொருளை நிறுவிய பிறகு உங்களுடைய விண்டோஸில் My Pictures/Skins.be Downloader என்ற போல்டரிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்.
இந்த மென்பொருளில் எத்தனை நிமிடங்களுக்கு ஒரு முறை வால்பேப்பர்கள் மாற வேண்டும் என்றும் செட் செய்து கொள்ளலாம்.
இந்த தளத்தில்27,000 வால்பேப்பர்கள் மற்றும் 870க்கும் மேற்பட்ட நடிகைகள் மாடலிங் கவரிச்சி புகைப்படங்கள் உள்ளது.
இது ஒரு திறந்த நிலை மென்பொருள் என்பதும் ஒரு சிறப்பம்சம்.
கவர்ச்சி நடிகைகள் எப்படி சாப்பிடுவார்கள் என்று பார்க்க விருப்பமா??? சுட்டி
கூகிள் குரோமில் இணையத்தில் உலாவரும்போது கூகிள் வீடியோ விளம்பரங்கள் வரும் அதை நிறுத்த மற்றும் இமேஜ்கள் இல்லாமல் திறக்க இணையத்தில் வரும் பாப் அப் விண்டோக்களை நிறுத்த கூகிள் குரோம்க்கான நீட்சி சுட்டி
இந்த மென்பொருள் கவர்ச்சி வால்பேப்பர்கள் தரவிறக்கும் மென்பொருள் மட்டுமே. இதுவும் ஒரு மென்பொருள் வகை என்பதால் கொடுத்திருக்கிறேன். ஆண்களுக்கு அதிகம் பயன்படும் என்ற காரணத்தால் கொடுத்திருக்க்கிறேன். இந்த Skins.be மென்பொருள் பதிவு உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் பின்னூட்டத்தில் கூறலாம். நீக்கி விடலாம்.
ஒரு அறிவிப்பு
இந்த வலைத்தளம் மூலம் எனக்கு எதுவும் எந்த ஆதாயமும் கிடைக்காமல் இருந்து வருகிறது. ஆனாலும் தொடர்ந்து பல பதிவுகளை கஷ்டப்பட்டு தான் இந்த பதிவுகளை எழுதுகிறேன். அதனால் நான் எழுதும் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் உபயோகமானவை என்றே நம்புகிறேன். இவ்வாறிருக்கையில் வரும் நண்பர்கள் என் வலைத்தளத்தில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்து பார்ப்பதன் மூலம் என்னால் மாதம் ஒரு சிறு தொகையை ஈட்ட முடியும் என்று நம்புகிறேன். ஆகையால் பதிவுகளை படிக்கும் நண்பர்கள் விளம்பரங்களை கிளிக் செய்து வருவாயை ஈட்ட உதவி செய்ய வேண்டுகிறேன். உதவுங்கள் இன்னும் தரமான ஆக்கங்களை உருவாக்க உதவுங்கள். அத்துடன் இந்த பதிவுகள் தரமுள்ளதாக இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் இதனை பற்றி தெரியபடுத்துங்கள். அனைத்து திரட்டிகளிலும் நீங்கள் போடும் ஒட்டுகளினால் இன்னும் உலகம் முழுக்க தமிழர்கள் அனைவருக்கும் போய்ச் சேர ஒரு வாய்ப்பாக அமையும். வெவ்வேறு நாடுகள், மாநிலங்கள் மற்றும் ஊர்களில் இருந்து வரும் ஒவ்வொருவரும் ஒரு முறை கிளிக் செய்தால் கூட போதுமானதாக இருக்கும் என்றே நினைக்கிறேன். பார்ப்போம் நண்பர்களின் உதவி எப்படி இருக்கிறது யாரிடமும் பணம் கேட்கவில்லை உழைத்து எழுதுகிறேன் சிறு உதவி செய்யுங்கள் என்றே கேட்கிறேன்.
நண்பர்களே இன்று ஒரு வலைப்பதிவர் அறிமுகம் மற்றும் மென்பொருள் வால்பேப்பர்கள் கொடுத்துள்ளேன் பயன்படுத்திக் கொள்ளுங்கள். முழு பதிவையும் படியுங்கள் ஏன் என்றால் இது கொஞ்சம் பெரிய பதிவாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.
வீடியோ, ஆடியோ மற்றும் இமெஜ் கோப்புகளை கன்வெர்ட் செய்யும் மென்பொருட்கள் நிறைய அறிமுகப்படுத்தியிருக்கிறேன். ஆனால் இது ஒரு அருமையான மென்பொருள் என்பது என் கருத்து. ஏன் என்றால் எதிர்காலம் என்பது உள்ள வரையில் புதிய புதிய டெக்னாலஜிக்கள் வந்து கொண்டேதான் இருக்கும். அதற்கு இந்த மென்பொருள் ஒரு அத்தாட்சி. அதனால் படங்களை இணைத்து அதன் மேல் அது செய்யும் வேலையை கொடுத்திருக்கிறேன் புரிந்து கொள்வீர்கள் என்றே நினைக்கிறேன்.
இதில் புதுமையான சில விசயங்களை மட்டும் தமிழில் கொடுக்கிறேன்.
உங்களிடம் உள்ள இரண்டு புகைப்படங்களை இணைத்து (3டி) 3D புகைப்படம் உருவாக்க முடியும்.
யூட்யூப் கோப்புகளை தரவிற்க்க, தரவிறக்கிய எம்பி3யாக மாற்ற, டிவிடியாக மாற்ற, யூட்யூப் கோப்புகளை நேரடியாக அப்லோடும் செய்ய முடியும்.
3D Video Format (3டி வகை வீடியோ) கோப்புகளும் உருவாக்க முடியும்.
இந்த மென்பொருள் எட்டு வகையான வேலைகளை செய்யக் கூடியது.
இது ஒரு இலவச மென்பொருள் என்பது கூடுதல் சிறப்பு. இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி
மென்பொருளின் முகப்பு பக்கம்
யூட்யூப் கன்வெர்ட் செய்யக்கூடிய முகப்பு பக்கம்.
எம்பி3 மற்றும் ஆடியோ வகை கோப்புகளை கையாளும் முகப்பு பக்கம்
வீடியோ கோப்புகளை டிவிடியில் எரிக்கும் முகப்பு பக்கம்
டிவிடி மற்றும் வீடியோக்களை தேவையான திசையில் மாற்றி அமைக்கும் முகப்பு பக்கம்.
புகைப்படங்களை தேவையான அளவுக்கு மாற்றவும் வேறு வகை கோப்பாகவும் மாற்றும் முகப்பு பக்கம்.
3டி கோப்புகளை உருவாக்கும் முகப்பு பக்கம்
வலைப்பதிவர் அறிமுகம்
நிறைய பேர் நிறைய கேள்விகள் கேட்கிறார்கள் அது போன்ற கணினி கேள்விகளுக்கு என்னால் வேலை பளுவால் விடை அளிக்க முடியவில்லை உங்கள் கேள்விகளை ஊரோடி என்ற வலைப்பூவிலும் கேட்கலாம். நண்பர் பகீரதன் என்பவரால் நடத்தப்பட்டு வருகிறது. உங்கள் கேள்விகளுக்கு எளிய தமிழில் பதில் தரப்படுகிறது. இணையம், பிளாகர், வேர்ட்பிரஸ், ஜூம்லா போன்ற எது குறித்தும் கேள்விகள் கேட்கலாம். கீழுள்ள ஊரோடியை கேளுங்கள் என்ற பட்டனை கிளிக் செய்தால் அவருடைய தளத்திற்கு செல்லலாம்.
விதவிதமான High Definition Drinks Wallpaper தரவிறக்க இந்த சுட்டியை பயன்படுத்துங்கள் சுட்டி
போன பதிவில் வாக்கெடுப்பு நடத்தியிருந்தேன் தினமும் ஆயிரக்கனக்கான நண்பர்கள் வந்து செல்லும் தளத்தில் இதுவரை வெறும் 30 பேர் மட்டுமே தங்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றனர். இன்னும் ஒரு வாரம் வைத்திருக்க போகிறேன். அதுவரை தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். சுட்டி
ஒரு அறிவிப்பு
இந்த வலைத்தளம் மூலம் எனக்கு எதுவும் எந்த ஆதாயமும் கிடைக்காமல் இருந்து வருகிறது. ஆனாலும் தொடர்ந்து பல பதிவுகளை கஷ்டப்பட்டு தான் இந்த பதிவுகளை எழுதுகிறேன். அதனால் நான் எழுதும் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் உபயோகமானவை என்றே நம்புகிறேன். இவ்வாறிருக்கையில் வரும் நண்பர்கள் என் வலைத்தளத்தில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்து பார்ப்பதன் மூலம் என்னால் மாதம் ஒரு சிறு தொகையை ஈட்ட முடியும் என்று நம்புகிறேன். ஆகையால் பதிவுகளை படிக்கும் நண்பர்கள் விளம்பரங்களை கிளிக் செய்து வருவாயை ஈட்ட உதவி செய்ய வேண்டுகிறேன். உதவுங்கள் இன்னும் தரமான ஆக்கங்களை உருவாக்க உதவுங்கள். அத்துடன் இந்த பதிவுகள் தரமுள்ளதாக இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் இதனை பற்றி தெரியபடுத்துங்கள். அனைத்து திரட்டிகளிலும் நீங்கள் போடும் ஒட்டுகளினால் இன்னும் உலகம் முழுக்க தமிழர்கள் அனைவருக்கும் போய்ச் சேர ஒரு வாய்ப்பாக அமையும். வெவ்வேறு நாடுகள், மாநிலங்கள் மற்றும் ஊர்களில் இருந்து வரும் ஒவ்வொருவர்ம் ஒரு முறை கிளிக் செய்தால் கூட போதுமானதாக இருக்கும் என்றே நினைக்கிறேன். பார்ப்போம் நண்பர்களின் உதவி எப்படி இருக்கிறது யாரிடமும் பணம் கேட்கவில்லை உழைத்து எழுதுகிறேன் சிறு உதவி செய்யுங்கள் என்றே கேட்கிறேன்.