சட்டரீதியான டிவிடி வீடியோ சாப்ட் எட்டு மென்பொருள் வேலைகள் ஒரே மென்பொருளில் செய்ய

நண்பர்களே இன்று ஒரு வலைப்பதிவர் அறிமுகம் மற்றும் மென்பொருள் வால்பேப்பர்கள் கொடுத்துள்ளேன் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.  முழு பதிவையும் படியுங்கள் ஏன் என்றால் இது கொஞ்சம் பெரிய பதிவாக இருக்கிறது என்று நினைக்கிறேன். 

வீடியோ, ஆடியோ மற்றும் இமெஜ் கோப்புகளை கன்வெர்ட் செய்யும் மென்பொருட்கள் நிறைய அறிமுகப்படுத்தியிருக்கிறேன். ஆனால் இது ஒரு அருமையான மென்பொருள் என்பது என் கருத்து. ஏன் என்றால் எதிர்காலம் என்பது உள்ள வரையில் புதிய புதிய டெக்னாலஜிக்கள் வந்து கொண்டேதான் இருக்கும். அதற்கு இந்த மென்பொருள் ஒரு அத்தாட்சி. அதனால் படங்களை இணைத்து அதன் மேல் அது செய்யும் வேலையை கொடுத்திருக்கிறேன் புரிந்து கொள்வீர்கள் என்றே நினைக்கிறேன்.

இதில் புதுமையான சில விசயங்களை மட்டும் தமிழில் கொடுக்கிறேன்.

உங்களிடம் உள்ள இரண்டு புகைப்படங்களை இணைத்து (3டி) 3D புகைப்படம் உருவாக்க முடியும்.

யூட்யூப் கோப்புகளை தரவிற்க்க, தரவிறக்கிய எம்பி3யாக மாற்ற, டிவிடியாக மாற்ற, யூட்யூப் கோப்புகளை நேரடியாக அப்லோடும் செய்ய முடியும்.

3D Video Format (3டி வகை வீடியோ) கோப்புகளும் உருவாக்க முடியும்.

இந்த மென்பொருள் எட்டு வகையான வேலைகளை செய்யக் கூடியது.

இது ஒரு இலவச மென்பொருள் என்பது கூடுதல் சிறப்பு. இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளின் முகப்பு பக்கம்

 

யூட்யூப் கன்வெர்ட் செய்யக்கூடிய முகப்பு பக்கம்.
எம்பி3 மற்றும் ஆடியோ வகை கோப்புகளை கையாளும் முகப்பு பக்கம்

 வீடியோ கோப்புகளை டிவிடியில் எரிக்கும் முகப்பு பக்கம் 

 டிவிடி மற்றும் வீடியோக்களை தேவையான திசையில் மாற்றி அமைக்கும் முகப்பு பக்கம்.


புகைப்படங்களை தேவையான அளவுக்கு மாற்றவும் வேறு வகை கோப்பாகவும் மாற்றும் முகப்பு பக்கம்.3டி கோப்புகளை உருவாக்கும் முகப்பு பக்கம்
வலைப்பதிவர் அறிமுகம்

நிறைய பேர் நிறைய கேள்விகள் கேட்கிறார்கள் அது போன்ற கணினி கேள்விகளுக்கு என்னால் வேலை பளுவால் விடை அளிக்க முடியவில்லை உங்கள் கேள்விகளை ஊரோடி என்ற வலைப்பூவிலும் கேட்கலாம்.  நண்பர் பகீரதன் என்பவரால் நடத்தப்பட்டு வருகிறது.   உங்கள் கேள்விகளுக்கு எளிய தமிழில் பதில் தரப்படுகிறது.  இணையம், பிளாகர், வேர்ட்பிரஸ், ஜூம்லா போன்ற எது குறித்தும் கேள்விகள் கேட்கலாம். கீழுள்ள ஊரோடியை கேளுங்கள் என்ற பட்டனை கிளிக் செய்தால் அவருடைய தளத்திற்கு செல்லலாம்.விதவிதமான High Definition Drinks Wallpaper தரவிறக்க இந்த சுட்டியை பயன்படுத்துங்கள் சுட்டி 

போன பதிவில் வாக்கெடுப்பு நடத்தியிருந்தேன் தினமும் ஆயிரக்கனக்கான நண்பர்கள் வந்து செல்லும் தளத்தில் இதுவரை வெறும் 30 பேர் மட்டுமே தங்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றனர்.  இன்னும் ஒரு வாரம் வைத்திருக்க போகிறேன்.  அதுவரை தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.  சுட்டி

ஒரு அறிவிப்பு 

இந்த வலைத்தளம் மூலம் எனக்கு எதுவும் எந்த ஆதாயமும் கிடைக்காமல் இருந்து வருகிறது. ஆனாலும் தொடர்ந்து பல பதிவுகளை  கஷ்டப்பட்டு தான் இந்த பதிவுகளை எழுதுகிறேன்.  அதனால் நான் எழுதும் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் உபயோகமானவை என்றே நம்புகிறேன்.  இவ்வாறிருக்கையில் வரும் நண்பர்கள் என் வலைத்தளத்தில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்து பார்ப்பதன் மூலம் என்னால் மாதம் ஒரு சிறு தொகையை ஈட்ட முடியும் என்று நம்புகிறேன்.  ஆகையால் பதிவுகளை படிக்கும் நண்பர்கள் விளம்பரங்களை கிளிக் செய்து வருவாயை ஈட்ட உதவி செய்ய வேண்டுகிறேன். உதவுங்கள் இன்னும் தரமான ஆக்கங்களை உருவாக்க உதவுங்கள்.  அத்துடன் இந்த பதிவுகள் தரமுள்ளதாக இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் இதனை பற்றி தெரியபடுத்துங்கள்.  அனைத்து திரட்டிகளிலும் நீங்கள் போடும் ஒட்டுகளினால் இன்னும் உலகம் முழுக்க தமிழர்கள் அனைவருக்கும் போய்ச் சேர ஒரு வாய்ப்பாக அமையும்.  வெவ்வேறு நாடுகள்,  மாநிலங்கள் மற்றும் ஊர்களில் இருந்து வரும் ஒவ்வொருவர்ம் ஒரு முறை கிளிக் செய்தால் கூட போதுமானதாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.  பார்ப்போம் நண்பர்களின் உதவி எப்படி இருக்கிறது  யாரிடமும் பணம் கேட்கவில்லை  உழைத்து எழுதுகிறேன் சிறு உதவி செய்யுங்கள் என்றே கேட்கிறேன்.

நன்றி மீண்டும் ஒரு நல்ல பதிவுடன் சந்திப்போம்.

11 ஊக்கப்படுத்தியவர்கள்:

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

Recent Post

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

என்னைப் பற்றி

My photo

System Administrator  Part time Blogger

இதுவரை பதிவு செய்தவை