நண்பர்களே இன்டிப்ளாக்கரின் 2வது கலந்துரையாடல் சென்னையில் Hyatt Residency
Hotel ல் கோலகலமாக நடந்து முடிந்தது. அங்கு என் கேமரா மொபைல் மூலம்
எடுத்த சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.
தமிழ்பதிவர்கள் ஜாக்கிசேகர், அடலேறு, கேபிள்ஷங்கர், அதிஷா, யுவகிருஷ்ணா, வலைமனை சுகுமார் சுவாமிநாதன் போன்ற பல பதிவுலக ஜாம்பாவான்கள் மத்தியில் நானும் கலந்து கொண்டேன் என்பதில் பெருமையாக இருக்கிறது.
நல்ல மாலை உணவும் கலந்து கொண்ட பதிவர்கள் அனைவருக்கும் ஒரு இலவச டி ஷர்ட்
வழங்கிய இன்டிப்ளாக்கர்கும் TATA Grande நிறுவனத்தினர் அவர்களுக்கும்
நன்றி. இந்த விழாவில் சென்னை பதிவர்கள் மட்டுமல்லாமல் பெங்களூர்,
ராஜஸ்தான், டெல்லி போன்ற வட நாட்டு பதிவர்களும் கலந்து கொண்டது
இன்டிப்ளாக்கரின் ஒற்றுமையை காட்டுகிறது.
புதிய தமிழ் பதிவர்கள் www.indiblogger.in சென்று தங்களை ரெஜிஸ்டர் செய்து கொண்டால் அடுத்த முறை கலந்துரையாடல் ஏற்பாடு செய்யும் பொழுது இன்னும் அதிகமான தமிழ் பதிவர்களை இன்டிப்ளாக்கர் கலந்துரையாடலில் காண முடியும்.
படங்கள் அனைத்தும் என்னுடைய மொபைல் Nokia 5130 Xpress Music மூலம் எடுக்கப்பட்டது.
நன்றி மீண்டும் வருகிறேன்.
» Read More...