நண்பர்களே யுஎஸ்பி ட்ரைவ் மற்றும் யுஎஸ்பி சம்பந்தப்பட்ட பொருட்களை
நிறுத்துவதற்கு இந்த மென்பொருள் மிகவும் உபயோகமாக இருக்கும். இது ஒரு
திறந்த நிலை மென்பொருள் என்பது இன்னும் சிறப்பு வாய்ந்தது. அத்துடன் இது
விண்டோஸ் அனைத்திலும் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.. இதை
இன்னும் மேம்படுத்த நினைப்பவர்கள் இவர்கள் தளத்தில் இருந்து Source Code
எடுத்து மாற்றங்கள் செய்தும் கொள்ளலாம். இந்த மென்பொருள் வெறும் 1
எம்பிக்குள் அடங்கிவிடும். அத்துடன் இது ஒரு போர்ட்டபிள் மென்பொருளாகும்.
இந்த மென்பொருளின் பெயர் USB Disk Ejector இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி
இன்று மொபைல் போன்கள் இல்லாதவர்களை பார்ப்பது அரிதான ஒன்றாக இருக்கும்
நேரத்தில் இதுவரை வெளிவந்த மொபைல் போன்களில் தவிர்க்க முடியாத இடத்தை
பிடித்த மொபைல் போன்கள் குறித்த வரலாற்று தகவலகள் இந்த புகைப்படத்தில்
உள்ளது. இதில் 1973ல் வெளிவந்த மொபைலில் இருந்து தற்பொழுது வெளியான
எல்ஜியின் 3டி ஸ்மார்ட் போன் வரை பட்டியலிடப்பட்டுள்ளது. 1999ல் வெளி
வந்த 3210 மொபைல் எனக்கு பிடித்த மாடலாகும்.
இப்பொழுதுதான் பயர்பாக்ஸின் உலாவி புதுப்பிக்கப்பட்டு Firefox 8.0
வெளிவந்தது. அதற்குள் அடுத்த பதிப்பு வெளியிட தயாராகி வருகிறது பயர்பாக்ஸ்
நிறுவனம். அடுத்த Firefox 9.0 பீட்டா வெர்சனை உபயோகித்து பார்க்க சுட்டி இது ஒரு பீட்டா வெர்சன் என்பதினை மனதில் கொண்டு தரவிறக்கம் செய்து உபயோகப்படுத்தவும்.
நவம்பர் பதினைந்து என் வாழ்வில் மறக்கவே முடியாத நாள் நான் மிகவும்
எதிர்பார்த்த விசயம் நடந்தேறிய நாள் அன்று என்ன நாள் என்று நினைக்கீறீர்கள்
போன வருடம் நவம்பர் 15 2010 அன்று எனக்கு பெண் குழந்தை வடிவில் தேவதை
அவதரித்த நாள் ஆம் என் பெண்ணின் முதல் வருட பிறந்தநாள் நண்பர்களின்
ஆசிர்வாதமும் வாழ்த்துக்களும் என் பெண்ணை இந்த உலகில் தைரியத்துடன்
மகிழ்ச்சியுடனும் வாழ வைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். அண்ணனும் தங்கையும் எவ்வளவு மகிழ்வாக இருக்கும் புகைப்படம் இவர்களுக்காகவே என் அனைத்து கஷ்டங்களையும் தாங்கும் பக்குவம் வந்துவிட்டது.


படங்களை பெரிதாக பார்க்க கிளிக் செய்து பார்க்கவும்.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...