நண்பர்களே உங்களிடம் இருக்கும் யூஎஸ்பி பென் ட்ரைவை பாதுகாக்க சில வழிகள் இங்கே கூறுகிறேன். முடிந்தவரை இந்த வழிகளை உபயோகித்து பென் ட்ரைவினை அதிக நாட்கள் உபயோகியுங்கள்.
இப்பொழுதெல்லாம் யூஎஸ்பி பென் ட்ரைவ் இல்லாதவர்களை பார்ப்பது மிகவும் அரிது. கணினி எப்படி எல்லோருக்கும் தெரிந்திருக்கிறதோ அது போல் பென் ட்ரைவினையும் தெரியும் ஏன் என்றால் இப்பொழுது வரும் ம்யூசிக் சிஸ்டங்கள் எல்லாம் யூஎஸ்பி பென் ட்ரைவ் ஆதரிக்கும் வகையில் வெளிவருகிறது. அது போலவே எல்சிடி, எல்இடி டிவிக்களும் டிவிடி ப்ளேயர்களும் பென் ட்ரைவினை ஆதரிக்கும் வகையில் வெளிவருகிறது. அதனால் எல்லோருக்கும் பென் ட்ரைவினை பாதுகாக்கும் வழிகள் தெரிந்து கொள்ள ஆசை வருகிறது. பென் ட்ரைவ் மட்டுமலாலம் யூஎஸ்பி பொருட்களை பாதுக்காக்க வழிகள் சில கீழே கொடுத்துளேன்.
Disabled Autorun ஆட்டோ ரன் நிறுத்தம்
பென் ட்ரைவினை கணினியில் செருகியவுடன் ஆட்டோ ரன் ஆகும். இதனால் இதில் உள்ள கோப்புகள் எந்த மென்பொருள் மூலம் திறக்க வேண்டும் என்று விண்டோஸ் காட்டும். இதன் மூலம் வைரஸ்களும் எளிதாக தொற்றும் பென் ட்ரைவினில். இதை முதலில் தடுக்க வேண்டும். இதற்கு AutoRun Disable செய்ய வேண்டும்.
இதற்கு மைக்ரோசாப்டிலேயே தனியாக பேட்ச் மென்பொருள் கிடைக்கிறது. இதை நிறுவினால் உங்கள் கணினியில் சிடி, டிவிடி, பென் ட்ரைவ் எது போட்டாலும் தானாக ப்ளே செய்யாது. அதாவது Auto Play Run தானாக நடக்காது.
Microsoft Auto Run Disabled Patch Download Link
Scan Your Pen Drive - பென்ட்ரைவினை சோதித்தல்
ஒவ்வொரு முறை உங்கள் பென் ட்ரைவினை கணினியில் செருகும் பொழுது உங்கள் கணினியில் உள்ள ஆன்டிவைரஸால் கட்டாயம் சோதிக்க வேண்டும். இதன் மூலம் கணினியிலும் வைரஸ் வராமல் தடுக்க முடியும். அத்துடன் பென் ட்ரைவினில் வைரஸ் இருந்தாலும் தடுக்க முடியும்.
அதற்கு உங்கள் கணினியில் நல்ல ஆன்டிவைரஸ் கட்டாயம் நிறுவி இருக்க வேண்டும். ஆன்டிவைரஸ் நிறுவுவதோடு நின்று விடாமல் உங்கள் ஆன்டி வைரஸ் தினமும் அப்டேட் ஆகிறதா என்றும் சோதித்துக் கொள்ளுங்கள். பென் ட்ரைவினை செருகியவுடன் உங்கள் கணினியில் Go To > My Computer > சென்று அங்கு உங்களுடைய பென் ட்ரைவினை Right Click செய்து Scan செய்யவும்.
Avira Free Antivirus Download Link
Safely Remove Your Pen Drive பென் ட்ரைவினை பாதுகாப்பாக நிறுத்துதல்
இது முக்கியமான ஒன்று நிறைய நண்பர்கள் எப்பொழுதும் இந்த தவறினை செய்கிறார்கள். அது என்னவென்றால் பென் ட்ரைவில் இருக்கும் கோப்புகளை நேரடியாக பென் ட்ரைவ் வழியாக திறப்பது. சரி திறப்பது கூட பரவாயில்லை அந்த கோப்பினை பென் ட்ரைவில் வைத்து கொண்டே வேலை செய்வது. இதனால் என்னாகிறது பென் ட்ரைவ் தொடர்ந்து வேலை செய்ய வேண்டி வரும். இதனால் சீக்கிரம் பென் ட்ரைவ் பழுதாகிறது. இதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் பென் ட்ரைவில் எந்த கோப்பினை எடிட் செய்ய விரும்புகிறீர்களோ அதை கணினியில் சேமித்து விட்டு பிறகு கணினியில் இருந்து எடிட் செய்யுங்கள். அதுவே மிகவும் சிறந்தது.
அடுத்து யூஎஸ்பியை நிறுத்தாமல் அப்படியே பென் ட்ரைவினை பிடுங்குவது. எல்லோருமே யூஎஸ்பி பொருட்களான பென்ட்ரைவ், டிவிடி ட்ரைவ் பாக்கெட் ஹார்ட் டிஸ்க்குகள் போன்றவற்றை விண்டோஸில் இணைந்திருக்கும் மென்பொருட்கள் வழியாக நிறுத்திய பிறகே எடுக்க வேண்டும்.
அப்படி இல்லாவிடில் சிறு மென்பொருட்கள் இருக்கிறது. யூஎஸ்பியை நிறுத்துவதற்கென்றே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் நமக்கு தேவையான யூஎஸ்பி பென்ட்ரைவ் அல்லது வேறு எந்த யூஎஸ்பி வன் பொருட்களையும் இந்த மென்பொருட்கள் மூலம் நிறுத்திய பிறகு எடுக்கலாம்.
USB Removal or Ejector Tool Download Link
General Tips - சில பொதுவான வழிமுறைகள்
அடுத்து நம் உபயோகிக்கும் பென்ட்ரைவினை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்வதற்காக வைத்திருக்கிறோம் என்பதற்காக அதை எப்பொழுதும் கழுத்திலேயே மாட்டி வைத்திருப்பது அல்லது மிகவும் சூடான பகுதிகளில் வைப்பது போன்றவைகளை கட்டாயம் தவிருங்கள் அத்துடன் வீட்டினுள் கணினி ஸ்பீக்கர் அல்லது ஹோம் தியேட்டர்கள் மீது பென் ட்ரைவினை வைப்பதையும் தவிர்த்து விடுங்கள். ஏன் என்றால் இதில் எல்லாமே காந்தசக்தி இருப்பதால் சுலபத்தில் உங்கள் டேட்டாக்கள் யூஎஸ்பி பென்ட்ரைவில் இருந்து காணாமல் போய் விடும். சில நேரங்களில் யூஎஸ்பி பென் ட்ரைவ் தண்ணீரில் விழுந்து விட்டால் உடனே எடுத்து துடைத்து விட்டு கணினியில் உபயோகப்படுத்தாதீர்கள். தண்ணீரில் விழுந்த பென் ட்ரைவினை 48 மணி நேரங்கள் கழித்தே உபயோகிக்கவும்.
அந்த இடைவெளியில் உங்கள் பென் ட்ரைவினை சமையல் செய்து வைத்த பாத்திரத்தில் மிதமான சூடு இருக்கும் பட்சத்தில் அதன் மேல் வைத்தால் ஓரளவு தண்ணீர் இழுக்கும் அது போல உங்கள் அரிசி வைத்திருக்கும் பாத்திரத்தில் போட்டு வைத்தால் உங்கள் பென் ட்ரைவில் இருக்கும் நீர் சுலபமாக வெளியேற்றப்படும். ஏன் என்றால் அரிசி நீரினை அதிகளவு உறிஞ்சும் தன்மை உடையது.
இந்த பதிவின் மூலம் அனைவரும் தங்கள் பென்ட்ரைவ் மட்டுமல்லாமல் யூஎஸ்பி பொருட்களையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் உற்சாகமிக்க பின்னூட்டங்கள் என்னை இன்னும் புதிய பதிவுகள் எழுத ஊக்கப்படுத்தும்.
யுஎஸ்பி பென் ட்ரைவினை பாதுகாக்க எளிய வழிகள் நான்கு
Subscribe to:
Post Comments (Atom)
எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்
-
நண்பர்களே டெலிகிராம் ஆப் வழியாக நிறைய நாவல்கள் மற்றும் திரை விமர்சனங்கள் இருக்கின்றன. அது போல் நானும் நாவல்கள் மற்றும் புத்தகங்களுக...
-
நண்பர்களே உங்களிடம் உள்ள பிடிஎப் கோப்புகளை வேர்ட் கோப்பிற்கு மாற்ற மிகவும் சுலபமான மென்பொருள் PDF TO Word Converter இந்த மென்பொருள் சட்ட...
-
நண்பர்களே இதுவரை எழுதிய பதிவுகள் அனைத்தையும் காண ஒரு சுட்டி உருவாக்கி வலது பக்கம் கொடுத்து வைத்துள்ளேன் புதியதாக நம் வலைத்தளத்திற்கு வரும் ...
-
நண்பர்களே தொடர்ந்து அலுவல் பணி காரணமாக வெளி இடங்களுக்கு பயணங்கள் தொடர்ந்து இருப்பதால் தொடர்ச்சியாக பதிவுகள் எழுத முடியவில்லை மன்னிக்கவும்....
-
நண்பர்களே அனைவருக்கும் உதவகூடிய 101 தொழில்நுட்ப தளங்களை இங்கே அறிமுகப்படுத்துகிறேன். அனைவருக்கும் இந்த தளங்கள் உபயோகமாக இருக்கும் என்பது த...
-
உங்களுக்கு ஆண்டிவைரஸ் இன்ஸ்டால் செய்யத்தெரியும் இன்ஸ்டால் செய்த சில நாட்களுக்கு பிறகு ஆண்டிவைரஸ் சரியில்லை என்று நினைக்கிறீர்கள் ஆனால் அன் இ...
-
நண்பர்களே இதுவரை வெளிவந்த தேடுபொறிகளை விட மிக அதிக வசதிகளுடன் புதிய தேடுபொறி ஒன்றை மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட தீர்மானித்துள்ளது. அதுதான் ...
-
ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 480க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வ...
-
நண்பர்களே கணிணி வந்தபிறகு புத்தகங்கள் படிப்பது வெகுவாக குறைந்திருப்பதாக ஒரு ஆய்வில் கூறப்படுகிறது. ஆனால் கணிணியில் மின் புத்தகங்கள் படிப்...
-
நண்பர்களே உங்களுக்கு கணனியில் நிறைய மாற்றங்களை கொண்டு வர இந்த சுட்டி உதவும் கடைசியில் உள்ளது. அதற்கான நீளமான குறிப்புகள் #DataVault, Irc...
11 ஊக்கப்படுத்தியவர்கள்:
உபயோகமான பதிவு
தெளிவாக இருக்கிறது...
எல்லோருக்கும் பயன் படக்கூடிய நல்ல பதிவு.
வாழ்க வளமுடன்.
நல்ல பதிவு.THANKS
நல்ல பயனுள்ள தகவலை வழங்கியுள்ளீகள்..!
நல்ல பகிர்வுசார்.
வாழ்த்துக்கள்.
Dear sir
Any software available for internet locking?
Because My daughter is often using internet.
Muralidharan
useful topic sir. plz sir next time you post how to get home based online jobs or contact 9841796891 or appu.abu@gmail.com
nice post. thanks
Nice post.
page not found....
404 error
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்