புதிய தமிழ் ஆங்கில படங்களை தரவிறக்க எளிய வழி

நண்பர்களே புத்தம் புதிய தமிழ் படங்கள் மற்றும் ஆங்கில படங்களை நல்ல தரமான பிரிண்டில் தரவிறக்கம் செய்து பார்க்க இந்த இரண்டு தளங்களை அறிமுகபடுத்துகிறேன்.

www.tamilyogi.fm/home

இந்த தளத்தில் தமிழில் மற்றும் தமிழ் மொழிமாற்றம் செய்யப்பட்ட ஆங்கில படங்கள் கிடைக்கும். அதுவும் 360P மற்றும் HD, 1080P அளவிலும்  கிடைக்கும். நேரடியாக பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்தும் பார்க்கலாம்நான் இதுவரை Firefox வழியாக மட்டுமே தரவிறக்கம் செய்திருக்கிறேன்.  அது எப்படி என்று சொல்கிறேன்.

Firefox பிரவுசரை இன்ஸ்டால் செய்த பிறகு Flash Video downloader என்ற Add-on நிறுவிக் கொள்ளவும்.

பிறகு நான் மேற்கூறிய தளத்திற்கு சென்று எந்த திரைப்படம் வேண்டுமோ கிளிக் செய்து ப்ளே செய்யுங்கள் அப்பொழுது மேலே பிரவுசர் டூல் பாரில் நீல நிற அம்பு கீழ் நோக்கி இருக்கும் அதை கிளிக் செய்தால் உங்களுக்கு படத்தின் முழு தரவிறக்க பெயர் கிடைக்கும் அதை கிளிக் செய்து எங்கு வேண்டுமோ சேமித்துக் கொள்ளுங்கள்.  ஆனால் தரவிறக்கம் முடியும் வரை Firefox பிரவுசரை மூட கூடாது.

இதே போல இன்னொரு தளமும் உண்டு  அது www.movierulz.ag  இந்த தளத்தில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி, கன்ன்டம், மற்ற மொழி மாற்ற திரைப்படங்களும் கிடைக்கும்.  இத்தளத்திலும் மேற்கூறிய வழிய்ல் படங்களை தரவிறக்கலாம்.

நேரமில்லாத காரணத்தில் படங்களை பதிவேற்ற முடியவில்லை.  பிடித்திருந்தால் உங்களை கமெண்டுகளை கூறவும். அனைத்து நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும்.


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

கிறிஸ்துமஸ் தின ஆண்ட்ராய்டு மென்பொருட்கள் மற்றும் புதிய தகவல்கள்


 நண்பர்களே Firefox 9.0.1 Version வெளியிடப்பட்டது.  இதில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது.  Firefox 8.0 விட மிகவும் வேகமாக இருக்கிறது.  30 சதவீதம் வேகம் முன்னேறி இருக்கிறது.  ஜாவா மற்றும் HTML 5 மிகவும் வேகமாக இயங்குமாறு மாற்றி அமைக்ப்பட்டிருக்கிறது.


Firefox 9.0.1 for Windows  Download Link

Firefox 9.0.1 for Android Download Link



ஏற்கனவே ஒரு பதிவில் Kingsoft மைக்ரோசாப்ட்டுக்கு மாற்று என்று அறிமுகம் கொடுத்திருக்கிறேன்.  அதுகுறித்த சுட்டி  அத்துடன் இந்த Kingsoft நிறுவனம் இப்பொழுது ஆன்ட்ராய்டு Android இயங்குதளத்திற்கென Kingsoft Office வெளியிட்டு இருக்கிறார்கள்.  இதில் என்ன விசேஷம் என்றால் இந்த மென்பொருளையும் இலவசமாகவே வழங்குகிறார்கள்.

இந்த மென்பொருளை தரவிறக்க இங்கே செல்லுங்கள் சுட்டி

 இது போல தினம் ஒரு  ஆண்ட்ராய்டு மென்பொருட்களை தமிழில் அறிமுகப்படுத்தி வருகிறார்கள் 365 நாட்களும் தினம் ஒரு ஆண்ட்ராய்டு மென்பொருள் என்று அறிமுகப்படுத்தி வருகின்றனர்.  இவர்கள் தளத்திற்கான சுட்டி  இவர்களுக்கு என் வாழ்த்துக்கள்


கடந்த பதிவில் கூகிள் ட்ரிக் ஒன்று என்று அதோடு நிறுத்தி விட்டேன்.   அது என்ன வென்று தெரிந்து கொள்ளுங்களேன்.

உங்களுடைய பிரவுசரில் www.google.com திறந்து கொண்டு தேடுதல் பெட்டியில் let it snow என்று டைப் செய்து எண்டர் தட்டினால் உங்களின் தேடுதல் முடிவுகளுடன் பனி பொழிவும் கூடவே உங்கள் பிரவுசரில் நடைபெறும்.  முயற்சித்து பாருங்களேன்.

இன்னொரு ட்ரிக் 

உங்களுடைய பிரவுசரில் www.google.com திறந்து கொண்டு

(sqrt(cos(x))*cos(200*x)+sqrt(abs(x))-0.7)*(4-x*x)^0.1, sqrt(9-x^2),-sqrt(9-x^2) from -4.5 to 4.5

மேலுள்ள வாக்கியத்தை காப்பி செய்து பேஸ்ட் செய்து எண்டர் தட்டி பாருங்களேன்.


உங்கள் கணினியில் நீங்கள் இல்லாத பொழுது யாராவது எந்த கோப்பினையாவது நீக்கினார்களா என்று கண்டறிய ஒரு மென்பொருள் உள்ளது.

அந்த மென்பொருளின் பெயர்  Deletion Extension Monitor என்பதாகும்.  இதன் வேலை உங்கள் கணினியில் எந்த நேரம் எந்த கோப்புகள் நீக்க்ப்பட்டது என்று குறித்து வைத்து மட்டும் கொள்ளும்.  இதனால் உங்கள் கணினியில் எந்த நேரத்தில் கோப்புகள் நீக்கப்பட்டது என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.

இந்த Deletion Extension Monitor மென்பொருளை தரவிறக்க சுட்டி

இந்த மென்பொருள் போர்ட்டபிள் மென்பொருளாகவும் கிடைக்கிறது.

இந்த மென்பொருள் நிறுவியிருப்பது கூட தெரியாமல் (Stealth Mode) ட்ரே ஐகானாக கூட இருக்காது என்பதால் மிகவும் உபயோகமாக இருக்கும்.

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்.  அனைவருக்கும் அனைத்தும் கிடைத்திட இறைவனை பிரார்த்திக்கிறேன்.




படிக்கிற நண்பர்கள் பதிவுகள் படித்திருந்தால் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கூறுங்கள்.  அத்துட பின்னூட்டமிட்டால் இன்னும் ஊக்கம் கிடைக்கும்.  அத்துடன் விம்பரங்களை அழுத்தவும். 

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

தேவதை பிறந்தநாள் மற்றும் பல மென்பொருட்கள்

நண்பர்களே யுஎஸ்பி ட்ரைவ் மற்றும் யுஎஸ்பி சம்பந்தப்பட்ட பொருட்களை நிறுத்துவதற்கு இந்த மென்பொருள் மிகவும் உபயோகமாக இருக்கும்.  இது ஒரு திறந்த நிலை மென்பொருள் என்பது இன்னும் சிறப்பு வாய்ந்தது.  அத்துடன் இது விண்டோஸ் அனைத்திலும் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது..  இதை இன்னும் மேம்படுத்த நினைப்பவர்கள் இவர்கள் தளத்தில் இருந்து Source Code எடுத்து மாற்றங்கள் செய்தும் கொள்ளலாம்.  இந்த மென்பொருள் வெறும் 1 எம்பிக்குள் அடங்கிவிடும்.  அத்துடன் இது ஒரு போர்ட்டபிள் மென்பொருளாகும்.  இந்த மென்பொருளின் பெயர் USB Disk Ejector இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி

இன்று மொபைல் போன்கள் இல்லாதவர்களை பார்ப்பது அரிதான ஒன்றாக இருக்கும் நேரத்தில் இதுவரை வெளிவந்த மொபைல் போன்களில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்த மொபைல் போன்கள் குறித்த வரலாற்று தகவலகள் இந்த புகைப்படத்தில் உள்ளது.  இதில் 1973ல் வெளிவந்த மொபைலில் இருந்து தற்பொழுது வெளியான எல்ஜியின் 3டி ஸ்மார்ட் போன் வரை பட்டியலிடப்பட்டுள்ளது.     1999ல் வெளி வந்த 3210 மொபைல் எனக்கு பிடித்த மாடலாகும். 


இப்பொழுதுதான் பயர்பாக்ஸின் உலாவி புதுப்பிக்கப்பட்டு Firefox 8.0 வெளிவந்தது.  அதற்குள் அடுத்த பதிப்பு வெளியிட தயாராகி வருகிறது பயர்பாக்ஸ் நிறுவனம்.  அடுத்த Firefox 9.0 பீட்டா வெர்சனை உபயோகித்து பார்க்க சுட்டி  இது ஒரு பீட்டா வெர்சன் என்பதினை மனதில் கொண்டு தரவிறக்கம் செய்து உபயோகப்படுத்தவும்.

நவம்பர் பதினைந்து என் வாழ்வில் மறக்கவே முடியாத நாள்  நான் மிகவும் எதிர்பார்த்த விசயம் நடந்தேறிய நாள் அன்று என்ன நாள் என்று நினைக்கீறீர்கள் போன வருடம் நவம்பர் 15 2010 அன்று எனக்கு பெண் குழந்தை வடிவில் தேவதை அவதரித்த நாள் ஆம் என் பெண்ணின் முதல் வருட பிறந்தநாள் நண்பர்களின் ஆசிர்வாதமும் வாழ்த்துக்களும் என் பெண்ணை இந்த உலகில் தைரியத்துடன் மகிழ்ச்சியுடனும் வாழ வைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.  அண்ணனும் தங்கையும் எவ்வளவு மகிழ்வாக இருக்கும் புகைப்படம் இவர்களுக்காகவே என் அனைத்து கஷ்டங்களையும் தாங்கும் பக்குவம் வந்துவிட்டது.
 



படங்களை பெரிதாக பார்க்க கிளிக் செய்து பார்க்கவும்.

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எம்பி3 வேகமாக தரவிறக்க பயர்பாக்ஸ் 7.0 புதிய பதிப்பு

நண்பர்களே தொடர்ந்து அலுவலக நிமித்தமாக வெளியூரில் வேலை இருந்ததால் இந்த மாதத்தில் இது மூன்றாவது பதிவாக இந்த பதிவினை எழுதிக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்த பதிவு எழுத ஆசை இருந்தாலும் நேரம் இல்லாதது பெரும் கஷ்டமாக இருக்கிறது. 

சரி இன்றைய பதிவிற்கு செல்வோம்.

பயர்பாக்ஸ் உலாவியின் புதிய மேம்படுத்தப்பட்ட பதிப்பு இன்னும் இரண்டு நாளைக்குள் வெளிவரும் என்று நினைக்கிறேன்.  இப்பொழுது உள்ள பதிப்பு 6.0.2 ஆகும்.  மேம்படுத்தப்பட்ட பதிப்பு 7.0 ஆக வெளிவருகிறது. 

இதில் மெமரி மிகவும் குறைவாக எடுத்துக் கொண்டு வேலை செய்யும் விதத்தில் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. 20 முதல் 30 சதவீதம் வரை குறைக்கட்டிருப்பதாக கூறுகிறார்கள்.

அதிகபட்சம் 50 சதவீதம் இணையப்பக்கங்கள் லோடு ஆகும் வேகத்தை அதிகப்படுத்தியிருக்கின்றனர்.

நிறைய பாதுகாப்புகள் மேம்படுத்தப்படிருக்கின்றன.

புக்மார்க்குகள் உடனடியாக பயர்பாக்ஸ் உலாவியின் மூலமாக Sync செய்யும் வசதியும் மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

விண்டோஸ் பயனாளர்களுக்கான Firefox 7.0 Stable Version Download English - US  Tamil Version Download

லின்க்ஸ் பயனாளர்களுக்கான Firefox 7.0 Stable Version Download English - US   Tamil Version Download

மேக் பயனாளர்களுக்கான Firefox 7.0 Stable Version Download English - US  Tamil Version Download



கூகிளின் புதிய வசதிகள் வந்துகொண்டிருக்கும் வேளையில் தனது 13ஆம் ஆண்டின் பிறந்தநாளினை கொண்டாடுகிறது கூகிள்.
 
 இந்நேரத்தில் பழைய ஆட்சென்ஸ் முகப்பினை விரைவில் மூடப்போவதாகவும் அதற்காக புதிய ஆட்சென்ஸ் முகப்பிற்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

Many More Happy Returns of the Day Google

Happy 13th Birthday Google

இதுகுறித்து கூகிள் வெளியிட்டுள்ள செய்தி சுட்டி


உங்களுடைய டெஸ்க்டாப்பில் உங்களால் ஒரு வால்பேப்பர் மட்டுமே வைக்க முடியும்.  அந்த வால்பேப்பரின்  மேலே இன்னும் ஒரு வால்பேப்பர் வைக்க முடியுமா? என்று கேட்டால் நீங்கள் இல்லையென்று சொல்வீர்கள்.  
 
இணைய உலகில் எதுவும் சாத்தியமே என்பது போல இந்த மென்பொருளினை நீங்கள் தரவிறக்கிக் கொண்டால் ஒரு வால் பேப்பரின் மேல் இன்னும் ஒரு வால்பேப்பர் வைக்கலாம்.  அந்த வால்பேப்பரில் உங்களுடைய முக்கியமான நிகழ்வுகள், மீட்டிங்குகள் குறித்து பதிந்து வைக்க சுலபமாக இருக்குமே.  தரவிறக்க சுட்டி

செய்தி துளிகள்

கேரளாவில் முதலமைச்சரின் அறையில் நடக்கும் அனைத்து கலந்துரையாடல்கள் அனைத்தும் அனைவரும் பார்க்கும் படியாக இருக்க வேண்டும் என்று தன் அறையில் கேமரா வைத்திருக்கிறார்.  இந்த கேமரா உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அவருடைய அறையில் என்ன நடக்கிறது அனைவரும் தெரிந்து கொள்ளதானாம்.

அத்துடன் முதலமைச்சரின் அறை மட்டுமல்லாம அவருடைய அலுவலகத்தில் நடக்கும் அனைத்தும் தெரிந்து கொள்ளவும் ஒரு கேமரா வைக்கப்பட்டிருக்கிறது.  இந்த வசதி இருபத்தி நான்கு மணி நேரமும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடங்கி வைக்கப்பட்டது ஜுலை ஒன்றாம் தேதி அன்று.

நான் ஒரு முறை பார்க்கும் பொழுது முதலமைச்சர் வெளியூர் சென்றிருக்கிறார் என்று வந்தது அடுத்த நாள் பார்த்த பொழுது அவர் அலுவலகத்தில் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தார்.  இந்த பதிவு எழுதும் பொழுது அவர் அறையில் முதலமைச்சர் இல்லை.  நீங்கள் கேரள முதலமைச்சர் அலுவலகத்தை நேரடியாக பார்க்க சுட்டி

இணையத்தில் இருந்து mp3 பாடல்கள் தரவிறக்க   ஒரு புதிய மென்பொருள் music2pc மிக அருமையாக இருக்கிறது இந்த மென்பொருள்.  வேகமாக தேடவும் வேகமாக தரவிறக்கவும் இந்த மென்பொருள் மிகவும் உபயோகமாக இருக்கும்.  இந்த மென்பொருள் உங்கள் கணினியில் நிறுவியும் உபயோகிக்கலாம். இல்லை போர்டபிள் மென்பொருளாகவும் உபயோகிக்கலாம்.

மேலதிக தகவல்கள் தெரிந்து கொள்ள இணையத்தள சுட்டி

music2pc மென்பொருள் தரவிறக்க சுட்டி

music2pc போர்டபிள் மென்பொருள் தரவிறக்க சுட்டி


தொடர்ந்து நீங்கள் கொடுத்து வரும் ஆதரவால் என்னை பின் தொடரும் நண்பர்களின் எண்ணிக்கை 800ஐ தொட இருக்கிறது.   இதை சாதிக்க உங்களால் மட்டுமே என்னால் சாதிக்க முடிந்தது அனைவருக்கும் என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன்.  விளம்பரங்களை பாருங்கள் படியுங்கள் பிடித்திருந்தால் கிளிக் செய்து செல்லுங்களேன்.


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

உங்கள் கோப்புகளை முழுமையாக நீக்க மற்றும் வலை முகவரி சுருக்கிகள் மூன்று உங்களுக்காக

நண்பர்களே நாம் நம்முடைய முக்கியமான தகவல்கள் அடங்கிய கோப்புகள் அல்லது தேவையில்லாத கோப்புகளில் Del கீ கொண்டு நீக்குவோம்.  அல்லது Shift+Del கீ கொண்டு நீக்குவோம்.  வெறும் Del கீ கொண்டு நீக்கினால் Recycle Bin பகுதிக்கு சென்று விடும் அங்கிருந்து நாம் மீட்டுக் கொள்ளலாம்.  அதே Shift+Del கொண்டு நீக்கினால் Restoration என்ற மென்பொருள் கொண்டு மீட்டெடுக்கலாம்.   இது போன்ற மென்பொருட்களை கொண்டு மீட்டெடுத்தால் யார் வேண்டுமானாலும் நம் கோப்புகளை திருட்டுதனமாக மீட்டெடுத்து உபயோகிக்கலாம்.  அப்படி செய்யாமல் இருக்க வேண்டுமென்றால் Eraser என்ற மென்பொருளை கொண்டு நீக்கினால் அந்த கோப்புகள் யார் கைக்கும் கிடைக்காத வண்ணம் வன்தட்டிலிருந்து மிகவும் பாதுகாப்பாக நீக்கிவிடலாம். 

இந்த மென்பொருள்  அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையில் உபயோகிக்கப்பட்டு மிகவும் பாதுகாப்பான மென்பொருள் என்று சான்றளிக்கப்பட்டுள்ளது.

இந்த மென்பொருள் ஒரு ஒபன் சோர்ஸ் மென்பொருளும் கூட

இந்த மென்பொருள் விண்டோஸ், லினக்ஸ், மற்றும் மேக் கணினிகளில் பயன்படுத்தும் வண்ணம் தனி தனி மென்பொருளாக கிடைக்கிறது.

இந்த மென்பொருளை கடந்தா வாரம் மட்டும் 30000க்கும் மேற்பட்டவர்கள் தரவிறக்கி உபயோகித்து நன்றாக உள்ளது என்று கூறியிருக்கிறார்கள்.

இந்த மென்பொருள் வெளிவந்த வருடம் 2006

Eraser 6.0.8.2273 இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி


 விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் விஸ்டாவில் அனைவருக்கும் ஒரு பிரச்சனை வரும் அந்த பிரச்சனை என்னவென்றால் விண்டோஸ் எக்ஸ்பியில் உள்ளது போல Start மெனு இல்லாததே பிரச்சனை.  இதை தீர்ப்பதற்கு ஒரு மென்பொருள் உள்ளது அதுதான் Start Menu XP இந்த மென்பொருளை நிறுவி உங்களுக்கு ஸ்டார்ட் பாருக்கு ஏற்றவாறு குரூப்கள் உருவாக்கிக் கொள்ளலாம்.  இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி
பெரிய பெரிய வலை முகவரிகளை சிறியதாக மாற்ற நாம் bit.ly, goo.gl, is.gd,mcaf.ee போன்ற வலைத்தளங்களுக்கு சென்று பெரிய வலை முகவரிகளை சிறிய முகவரியாக மாற்றி மின்னஞ்சல் செய்வோம். 
அது போல செய்ய ஒவ்வொரு தளத்திற்கும் செல்லாமல் நம் வலை உலாவியிலிருந்து செய்ய சிறு மென்பொருட்கள் உள்ளது.  அதை நிறுவினால் போதும்.

பயர்பாக்ஸ் Firefox உலாவியில் நிறுவ நீட்சி சுட்டி இது கூகிள், மெக்காபி, மற்றும் பிட் லி போன்ற வலைத்தளங்கள் செல்லாமல் வலை முகவரிகளை சுருக்கலாம்.
 
பிட் லி வலை முகவரி சுருக்கி மென்பொருள் 
பயர்பாக்ஸ் Firefox  வலை உலாவியில் நிறுவ நீட்சி சுட்டி

கூகிள் குரோம் வலை உலாவியில் பிட்லி வலை முகவரி சுருக்கி நீட்சி சுட்டி 
இந்த நீட்சிகள் இரண்டும் பிட்லி வலைத்தளத்தை மட்டுமே  கொண்டு செயல்படுகிறது.
கூகிள் வலை முகவரி சுருக்கி நீட்சி குரோம் வலை உலாவியில் மட்டுமே செயல்படும். கூகிள் குரோமிற்கான நீட்சி சுட்டி

ஒரு அறிவிப்பு 

இந்த வலைத்தளம் மூலம் எனக்கு எதுவும் எந்த ஆதாயமும் கிடைக்காமல் இருந்து வருகிறது. ஆனாலும் தொடர்ந்து பல பதிவுகளை  கஷ்டப்பட்டு தான் இந்த பதிவுகளை எழுதுகிறேன்.  அதனால் நான் எழுதும் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் உபயோகமானவை என்றே நம்புகிறேன்.  இவ்வாறிருக்கையில் வரும் நண்பர்கள் என் வலைத்தளத்தில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்து பார்ப்பதன் மூலம் என்னால் மாதம் ஒரு சிறு தொகையை ஈட்ட முடியும் என்று நம்புகிறேன்.  ஆகையால் பதிவுகளை படிக்கும் நண்பர்கள் விளம்பரங்களை கிளிக் செய்து வருவாயை ஈட்ட உதவி செய்ய வேண்டுகிறேன். உதவுங்கள் இன்னும் தரமான ஆக்கங்களை உருவாக்க உதவுங்கள்.  அத்துடன் இந்த பதிவுகள் தரமுள்ளதாக இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் இதனை பற்றி தெரியபடுத்துங்கள்.  அனைத்து திரட்டிகளிலும் நீங்கள் போடும் ஒட்டுகளினால் இன்னும் உலகம் முழுக்க தமிழர்கள் அனைவருக்கும் போய்ச் சேர ஒரு உங்கள் ஒட்டு ஒரு  வாய்ப்பாக அமையும்.



நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

வீடியோ டவுண்லோடர் உபயோகிப்பாளர்களின் கவனத்திற்கு

நண்பர்களே அனைவருக்கும் வணக்கம்  பல அலுவல்களிடையே இந்த பதிவை எழுதிக் கொண்டிருக்கிறேன்.  நிறைய வேலைகள் வந்து குவிவதால் பதிவு எழுத தனியாக நேரம் கிடைப்பதில்லை.  ஏன் என்றால் ஒரு மென்பொருளோ அல்லது இணையத்தளத்தினை அறிமுகப்படுத்தும் பொழுது அதன் பயன்கள் மட்டுமல்லாது அதனுடைய தீமைகளைதான் அதிகம் சோதிக்க வேண்டும் ஏதும் வைரஸ் அல்லது ஸ்பைவேர் உள்ளதா என்று சோதித்து அதன் பிறகு அதன் பயன்கள் பற்றி எழுத முடியும்.

ஒரு சிறு மென்பொருள் பற்றி எழுத குறைந்தது 3 மணி நேரமாவது வேண்டும்.  அப்பொழுதுதான் அதை பற்றி பாமரனும் புரியும்படி தெளிவாக எழுத முடியும்.  அதனால்தான் கடும் அலுவல் வேலைகளுக்கிடையில் இந்த பதிவு எழுதுகிறேன்.  இந்த பதிவில் நிறைய பேர் ஏன் கூகிள் ரீடரில் நீங்கள் குடுப்பதில்லை என்று கேட்கிறார்கள்.  நான் முழு பதிவும் கூகிள் ரீடரில் கொடுத்தால் என் வலைத்தளத்திற்கு வரும் எண்ணிக்கையும் அவர்களின் மனதில் இந்த பதிவு பற்றி என்ன நினைக்கிறார்கள்.

அவர்களுக்கு இந்த பதிவு உபயோகமாக இருக்கிறதா என்று நான் தெரிந்து கொள்ள முடியாது.  அதனால்தான் கூகிள் ரீடரில் முழு பதிவினையும் வெளியிட இயலவில்லை.  என் நிலையினை புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.  இனி பதிவிற்கு செல்வோம். 


நாம் அனைவரும் வானிலை தெரிந்து கொள்ள கூகிள் அல்லது யாகூ உதவியை நாடுவோம் அல்லது நம் கணினியில் நிறுவும் வானிலை அறிவிக்கும் மென்பொருள் மூலமாக அறிந்து கொள்வோம்.   அந்த மென்பொருள்  வெறும் வானிலை அறிவிப்பு மட்டுமே காட்ட முடியும்.  Win Thunder இந்த மென்பொருள் மூலம். வானிலை அறிவிப்பு மட்டுமல்லாமல் உங்கள் அப்ளிகேசன்களுக்கு ஒரு ஷார்ட்கட்டாகவும்  உபயோகிக்கலாம். இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி


விண்டோஸ் 7ல் டாஸ்க்பாரில் நாம் உபயோகப்படுத்தும் மென்பொருட்களின் ஐகான்கள் மட்டுமே இருக்கும்.  அந்த மென்பொருட்களின் பெயர்கள் இல்லாமல் வெறும் ஐகான் மட்டுமே இருப்பதால் என்ன மென்பொருள் என்று தெரிந்து கொள்ள இயலாது.  அதற்கு இந்த மென்பொருளை உபயோகித்து எப்பொழுது வேண்டுமானல் முழு ஐகானுடன் டெக்ஸ்ட் தெரியுமாறு செய்ய முடியும் வேண்டாம் என்றால் மறைக்கவும் முடியும்.  இந்த மென்பொருளை நிறுவ Install செய்ய கூட தேவையில்லை.  நேரடியாக உபயோகிக்கலாம். தரவிறக்க சுட்டி

மென்பொருள் நிறுவிய பிறகு எப்படி இருக்கும் என்று காட்டும் படங்கள் கீழே





நம்முடைய வீடியோ டிவிடியிலிருந்து எந்த ஒரு வீடியோவிற்கும் கன்வெர்ட் Video Converter செய்ய மிகவும் உபயோகமாக இருக்கும் ஒரு மென்பொருள் இப்பொழுது சட்டரீதியாக இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த மென்பொருள் மூலம் எந்த ஒரு வீடியோ டிவிடியையும் உங்களுக்கு தேவையான பார்மெட்டில் மாற்ற உதவுகிறது. 

டிவிடியில் இருந்து AVI கோப்பாக மாற்றும் போது டிவிடியில் சப்டைட்டில் இருந்தால் சேர்த்து கன்வெர்ட் செய்து தரக்கூடியது இந்த மென்பொருள் 

இந்த மென்பொருளினி பெயர்  WinX DVD Ripper Platinum KungFu Edition

இந்த மென்பொருளினை சட்டரீதியான லைசென்ஸ் பெற மேலுள்ள சுட்டி கிளிக் செய்யுங்கள்.  கிளிக் செய்தவுடன் ஒரு பக்கத்திற்கு கூட்டி செல்லும் அங்கு அந்த மென்பொருளை தரவிறக்க மற்றும் லைசென்ஸ் இருக்கும்.

இந்த மென்பொருள் 2012 மே 31 தரவிறக்க முடியும்.  அத்துடன் மே 31க்குள் இந்த மென்பொருளை ஆக்டிவேசன் செய்து கொள்ள வேண்டும் இல்லாவிடில் இந்த மென்பொருள் வேலை செய்யாது.



ஒரு எச்சரிக்கை  -  Ant Video Downloader என்ற பயர்பாக்ஸ் நீட்சி உபயோகப்படுத்துபவர்களின் தகவல்கள் அதை உருவாக்கியவருக்கு அனுப்படுவதாக செய்தி வந்துள்ளது.  முடிந்தவரை அந்த நீட்சி உபயோகிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.  

ஒரு அறிவிப்பு 

இந்த வலைத்தளம் மூலம் எனக்கு எதுவும் எந்த ஆதாயமும் கிடைக்காமல் இருந்து வருகிறது. ஆனாலும் தொடர்ந்து பல பதிவுகளை  கஷ்டப்பட்டு தான் இந்த பதிவுகளை எழுதுகிறேன்.  அதனால் நான் எழுதும் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் உபயோகமானவை என்றே நம்புகிறேன்.  இவ்வாறிருக்கையில் வரும் நண்பர்கள் என் வலைத்தளத்தில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்து பார்ப்பதன் மூலம் என்னால் மாதம் ஒரு சிறு தொகையை ஈட்ட முடியும் என்று நம்புகிறேன்.  ஆகையால் பதிவுகளை படிக்கும் நண்பர்கள் விளம்பரங்களை கிளிக் செய்து வருவாயை ஈட்ட உதவி செய்ய வேண்டுகிறேன். உதவுங்கள் இன்னும் தரமான ஆக்கங்களை உருவாக்க உதவுங்கள்.  அத்துடன் இந்த பதிவுகள் தரமுள்ளதாக இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் இதனை பற்றி தெரியபடுத்துங்கள்.  அனைத்து திரட்டிகளிலும் நீங்கள் போடும் ஒட்டுகளினால் இன்னும் உலகம் முழுக்க தமிழர்கள் அனைவருக்கும் போய்ச் சேர ஒரு உங்கள் ஒட்டு ஒரு  வாய்ப்பாக அமையும்


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

சட்டரீதியான Video Converter Factory உங்களுக்காக இரண்டு நாட்கள் மட்டும்

நண்பர்களே நாம் உபயோகப்படுத்தும் கணினிகளில் எத்தனை எத்தனை வீடியோ கன்வெர்டர் இருந்தாலும் ஒரு புதிய வீடியோ கன்வெர்டர் வரும் போது அதை முயற்சிப்பதில் தவறேதும் இல்லை என்பது என் கருத்து.  நிறைய கன்வெர்டர்கள் வெறும் வீடியோ கோப்புகளை இந்த கோப்பிலிருந்து வேறு வகை கோப்பிற்கு மாற்ற கூடிய கன்வெர்டராக மட்டுமே அந்த வேலைய் செய்கிறது.  இந்த மென்பொருளில் வீடியோ கன்வெர்டர் மட்டுமல்ல சில எடிட்டிங் வேலைகளும் செய்கிறது என்பது சிறந்த விஷயம்.  அதுவும் இது போன்ற எடிட்டிங் மற்றும் கன்வெர்ட் செய்யக்கூடிய மென்பொருட்கள் விலையும் அதிகம் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

இந்த மென்பொருள் ஆதரிக்கும் வீடியோ கோப்புகள்

AVI, MP4, DAT, MPG, MPEG, H.264, NSV, VOB, MOV, FLV, MKV, TS/TP/TRP(AVHD H.264, VC-1, MPEG-2 HD), DV, WMV, ASF,3GP, 3G2


இந்த மென்பொருள் ஆதரிக்கும் ஆடியோ கோப்புகள்

WAV, APE, FLAC, M4A, WMA, AAC, AC3, MKA, OGG, AIFF, RA, RAM, MP3, MP2, MPA

இந்த மென்பொருள் ஆதரிக்கும் வகைகள்

iPod, iPod nano, iPod Nano 5G, iPod classic, iPod shuffle, iPod touch, iPod touch 3G, iPhone, iPhone 3G, Apple TV
Zune, Zune HD, Window Mobile device: Pocket PC, Dell Axim X51, HP iPaq hw6500 series, PSP, PS3, Xbox, Xbox 360.
BlackBerry, Common Mobile Phone, General MP4 players: Archos, Creative Zen, iRiver, Walkman இன்னும் நிறைய


இந்த மென்பொருள் இன்னும் இரண்டு நாட்களுக்கு இலவசமாக அனைவருக்கு வழங்கப்படுகிறது.  இதற்கு நீங்கள் எதுவும் செய்ய தேவையில்லை என்பதுதான் விசயம்.   நிறைய மென்பொருட்கள் இலவசமாக கொடுத்தால் உங்கள் பெயர் முகவரி மின்னஞ்சல் முகவரி போன்றவற்றை கேட்பார்கள். இது போன்ற எந்த கேள்வியும் இதற்கு இல்லை என்பது சிறப்பு.

இந்த முகவரிக்கு செல்லுங்கள் சுட்டி

இங்கு மென்பொருளை தரவிறக்க தேவையான சுட்டி இருக்கும்.  அதற்கு மேலேகீழ் கண்டபடி இருக்கும் அதை உங்கள் மென்பொருள் நிறுவிய பிறகு ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.

Reg Name
: Video Converter Factory Pro
Reg code: F7C155FFABA74094FF5E573ECEE6CC4CE7ECFCF2


இந்த மென்பொருள் சட்டப்படி இருந்தாலும் இவர்கள் இதற்கு எந்த ஒரு உதவியும் அளிப்பதில்லை Technical support கிடையாது.  அத்துடன் புதிய பதிப்பு வந்தால் மேம்படுத்த இயலாது.  புதிய பதிப்பை காசு கொடுத்துதான் வாங்க வேண்டும்.  இந்த மென்பொருள் பிடித்திருந்தால் புதிய பதிப்பு வரும் பொழுது காசு கொடுத்து வாங்கிக் கொள்ளலாமே நண்பர்களே சரிதானே.

இந்த மென்பொருள் விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, மற்றும் விண்டோஸ் 7 மட்டுமே ஆதரிக்கும்.



இந்த மென்பொருள் தரவிறக்கும் வாய்ப்பு சட்டரீதியாக இரண்டு நாளைக்கு மட்டுமே உடனே முந்துங்கள்.


நெருப்பு நரி உலாவி தெரியும் உங்களுக்கு அதன் வால்பேப்பர்கள் வேண்டுமா உங்களுக்கு இங்கே சென்று தரவிறக்கி கொள்ளுங்கள் சுட்டி

இந்த வால்பேப்பர்கள் 1280×1024, 1600×1200, 1280×960, 1024×768 இந்த வகை ரெசொல்யூசனில் உள்ளது.  மொத்தம் 40 வகையான வால்பேப்பர்கள் இருக்கிறது.  இந்த கோப்பின் அளவு 14MB


ஒரு அறிவிப்பு 

இந்த வலைத்தளம் மூலம் எனக்கு எதுவும் எந்த ஆதாயமும் கிடைக்காமல் இருந்து வருகிறது. ஆனாலும் தொடர்ந்து பல பதிவுகளை  கஷ்டப்பட்டு தான் இந்த பதிவுகளை எழுதுகிறேன்.  அதனால் நான் எழுதும் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் உபயோகமானவை என்றே நம்புகிறேன்.  இவ்வாறிருக்கையில் வரும் நண்பர்கள் என் வலைத்தளத்தில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்து பார்ப்பதன் மூலம் என்னால் மாதம் ஒரு சிறு தொகையை ஈட்ட முடியும் என்று நம்புகிறேன்.  ஆகையால் பதிவுகளை படிக்கும் நண்பர்கள் விளம்பரங்களை கிளிக் செய்து வருவாயை ஈட்ட உதவி செய்ய வேண்டுகிறேன். உதவுங்கள் இன்னும் தரமான ஆக்கங்களை உருவாக்க உதவுங்கள்.  அத்துடன் இந்த பதிவுகள் தரமுள்ளதாக இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் இதனை பற்றி தெரியபடுத்துங்கள்.  அனைத்து திரட்டிகளிலும் நீங்கள் போடும் ஒட்டுகளினால் இன்னும் உலகம் முழுக்க தமிழர்கள் அனைவருக்கும் போய்ச் சேர ஒரு உங்கள் ஒட்டு ஒரு  வாய்ப்பாக அமையும்

 நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

Autocad க்கு மாற்று மென்பொருள் மற்றும் புதிய விளையட்டுகளும் பயனுள்ளமென்பொருட்கள்

நண்பர்களே Mozilla Firefox 4.0 வெளிவந்து சக்கை போடு போடுகிறது.  நீங்களும் உங்கள் கணினியில் பயர்பாக்ஸ் உலாவியை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.  பயர்பாக்ஸ் உலாவி 4.0 தரவிறக்க சுட்டி  ஆசியாவில் அதிகமாக ஜப்பான் முதலிடத்திலும் ஜப்பானுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிகமாக பயர்பாக்ஸ் உலாவி 4.0 தரவிறக்கப்பட்டுள்ளது.  மாலத்தீவுகளில்தான் குறைவாக தரவிறக்கப்பட்டுள்ளது.

பயர்பாக்ஸ் வெளிவந்த 48 மணி நேரங்களில் தரவிறக்கப்பட்ட அளவு மட்டுமே 193.4 மில்லியனாம்.  இது போல நிறைய விஷயங்களை வெளியிட்டுருக்கிறார்கள். கீழே உள்ள படத்தில் பாருங்கள்.


பயர்பாக்ஸ் உலாவி 4.0 இதுவரை எந்தெந்த நாடுகள், நகரங்களில் எத்தனை முறை தரவிறக்கப்பட்டுள்ளன என்பதை தெரிந்து கொள்ள சுட்டி

AutoCad மாற்று மென்பொருள் 

நிறைய நண்பர்கள் ஆட்டோகேட் என்ற மென்பொருளை பற்றி கேள்விபட்டிருப்பீர்கள்.    இது வரைகலைக்கான மென்பொருள் அதாவது கட்டிடம் மற்றும் இன்ட்ரியர் டெகரெட்டர்கள் போன்றவர்கள் நிறைய உபயோகப்படுத்துவார்கள்.  இந்த மென்பொருளில் 2D மற்றும் 3D ஆக கட்டிடங்களை உருவாக்க முடியும். 
இந்த மென்பொருள் விலை அதிகமான மென்பொருளும் ஆகும். இதன் விலை குறைந்தது இந்திய ரூபாயில் 20,000 க்கும் மேலாகும். 

இது போன்ற ஒரு மென்பொருளை Drafsight என்ற நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.  ஆட்டோகேடில் செய்யக்கூடிய அனைத்து வேலைகளும் செய்ய முடியும். 

இந்த மென்பொருள் செய்யும் வேலைகள் இங்கு தட்டச்சு செய்யமுடியாத அளவுக்கு பெரியதாக இருப்பதால் இங்கே சென்று நேரடியாக தெரிந்து கொள்ளவும்.  சுட்டி  இந்த மென்பொருள் முழுக்க முழுக்க ஆட்டோகேட் உபயோகிப்பாளர்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

AngriBird புகழ்பெற்ற ஆங்கிரிபேட் விளையாட்டு உங்களுக்காக சுட்டி

இந்த புகழ்பெற்ற Angribird விளையாட்டு இப்பொழுது படமாக்கப்பட்டு வருகிறது விரைவில் வெள்ளித்திரையில் காணலாம்.  இதன் காணொளி கீழே




நீங்கள் முக்கியமான வேர்ட் கோப்பில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது கணினி ரீஸ்டர்ட் அல்லது அணைந்து போனாலோ அல்லது வேறு வகையில் பழுதுபட்ட எம் எஸ் வேர்ட் மற்றும் எக்ஸல் கோப்புகள் மற்றும் ஒபன் ஆபிஸ் கோப்புகள் இருந்தால் இந்த மென்பொருள் மூலம் சுலபமாக மீட்டு எடுக்க முடியும்.  இந்த மென்பொருளை நிறுவ மைக்ரோசாப்ட்ட் டாட் நெட் நிறுவி இருக்க வேண்டும்.  மென்பொருள் தரவிறக்க சுட்டி


ஒரு அறிவிப்பு 

இந்த வலைத்தளம் மூலம் எனக்கு எதுவும் எந்த ஆதாயமும் கிடைக்காமல் இருந்து வருகிறது. ஆனாலும் தொடர்ந்து பல பதிவுகளை  கஷ்டப்பட்டு தான் இந்த பதிவுகளை எழுதுகிறேன்.  அதனால் நான் எழுதும் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் உபயோகமானவை என்றே நம்புகிறேன்.  இவ்வாறிருக்கையில் வரும் நண்பர்கள் என் வலைத்தளத்தில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்து பார்ப்பதன் மூலம் என்னால் மாதம் ஒரு சிறு தொகையை ஈட்ட முடியும் என்று நம்புகிறேன்.  ஆகையால் பதிவுகளை படிக்கும் நண்பர்கள் விளம்பரங்களை கிளிக் செய்து வருவாயை ஈட்ட உதவி செய்ய வேண்டுகிறேன். உதவுங்கள் இன்னும் தரமான ஆக்கங்களை உருவாக்க உதவுங்கள்.  அத்துடன் இந்த பதிவுகள் தரமுள்ளதாக இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் இதனை பற்றி தெரியபடுத்துங்கள்.  அனைத்து திரட்டிகளிலும் நீங்கள் போடும் ஒட்டுகளினால் இன்னும் உலகம் முழுக்க தமிழர்கள் அனைவருக்கும் போய்ச் சேர ஒரு உங்கள் ஒட்டு ஒரு  வாய்ப்பாக அமையும்.
 
நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை