வீடியோ டவுண்லோடர் உபயோகிப்பாளர்களின் கவனத்திற்கு

நண்பர்களே அனைவருக்கும் வணக்கம்  பல அலுவல்களிடையே இந்த பதிவை எழுதிக் கொண்டிருக்கிறேன்.  நிறைய வேலைகள் வந்து குவிவதால் பதிவு எழுத தனியாக நேரம் கிடைப்பதில்லை.  ஏன் என்றால் ஒரு மென்பொருளோ அல்லது இணையத்தளத்தினை அறிமுகப்படுத்தும் பொழுது அதன் பயன்கள் மட்டுமல்லாது அதனுடைய தீமைகளைதான் அதிகம் சோதிக்க வேண்டும் ஏதும் வைரஸ் அல்லது ஸ்பைவேர் உள்ளதா என்று சோதித்து அதன் பிறகு அதன் பயன்கள் பற்றி எழுத முடியும்.

ஒரு சிறு மென்பொருள் பற்றி எழுத குறைந்தது 3 மணி நேரமாவது வேண்டும்.  அப்பொழுதுதான் அதை பற்றி பாமரனும் புரியும்படி தெளிவாக எழுத முடியும்.  அதனால்தான் கடும் அலுவல் வேலைகளுக்கிடையில் இந்த பதிவு எழுதுகிறேன்.  இந்த பதிவில் நிறைய பேர் ஏன் கூகிள் ரீடரில் நீங்கள் குடுப்பதில்லை என்று கேட்கிறார்கள்.  நான் முழு பதிவும் கூகிள் ரீடரில் கொடுத்தால் என் வலைத்தளத்திற்கு வரும் எண்ணிக்கையும் அவர்களின் மனதில் இந்த பதிவு பற்றி என்ன நினைக்கிறார்கள்.

அவர்களுக்கு இந்த பதிவு உபயோகமாக இருக்கிறதா என்று நான் தெரிந்து கொள்ள முடியாது.  அதனால்தான் கூகிள் ரீடரில் முழு பதிவினையும் வெளியிட இயலவில்லை.  என் நிலையினை புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.  இனி பதிவிற்கு செல்வோம். 


நாம் அனைவரும் வானிலை தெரிந்து கொள்ள கூகிள் அல்லது யாகூ உதவியை நாடுவோம் அல்லது நம் கணினியில் நிறுவும் வானிலை அறிவிக்கும் மென்பொருள் மூலமாக அறிந்து கொள்வோம்.   அந்த மென்பொருள்  வெறும் வானிலை அறிவிப்பு மட்டுமே காட்ட முடியும்.  Win Thunder இந்த மென்பொருள் மூலம். வானிலை அறிவிப்பு மட்டுமல்லாமல் உங்கள் அப்ளிகேசன்களுக்கு ஒரு ஷார்ட்கட்டாகவும்  உபயோகிக்கலாம். இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி


விண்டோஸ் 7ல் டாஸ்க்பாரில் நாம் உபயோகப்படுத்தும் மென்பொருட்களின் ஐகான்கள் மட்டுமே இருக்கும்.  அந்த மென்பொருட்களின் பெயர்கள் இல்லாமல் வெறும் ஐகான் மட்டுமே இருப்பதால் என்ன மென்பொருள் என்று தெரிந்து கொள்ள இயலாது.  அதற்கு இந்த மென்பொருளை உபயோகித்து எப்பொழுது வேண்டுமானல் முழு ஐகானுடன் டெக்ஸ்ட் தெரியுமாறு செய்ய முடியும் வேண்டாம் என்றால் மறைக்கவும் முடியும்.  இந்த மென்பொருளை நிறுவ Install செய்ய கூட தேவையில்லை.  நேரடியாக உபயோகிக்கலாம். தரவிறக்க சுட்டி

மென்பொருள் நிறுவிய பிறகு எப்படி இருக்கும் என்று காட்டும் படங்கள் கீழே

நம்முடைய வீடியோ டிவிடியிலிருந்து எந்த ஒரு வீடியோவிற்கும் கன்வெர்ட் Video Converter செய்ய மிகவும் உபயோகமாக இருக்கும் ஒரு மென்பொருள் இப்பொழுது சட்டரீதியாக இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த மென்பொருள் மூலம் எந்த ஒரு வீடியோ டிவிடியையும் உங்களுக்கு தேவையான பார்மெட்டில் மாற்ற உதவுகிறது. 

டிவிடியில் இருந்து AVI கோப்பாக மாற்றும் போது டிவிடியில் சப்டைட்டில் இருந்தால் சேர்த்து கன்வெர்ட் செய்து தரக்கூடியது இந்த மென்பொருள் 

இந்த மென்பொருளினி பெயர்  WinX DVD Ripper Platinum KungFu Edition

இந்த மென்பொருளினை சட்டரீதியான லைசென்ஸ் பெற மேலுள்ள சுட்டி கிளிக் செய்யுங்கள்.  கிளிக் செய்தவுடன் ஒரு பக்கத்திற்கு கூட்டி செல்லும் அங்கு அந்த மென்பொருளை தரவிறக்க மற்றும் லைசென்ஸ் இருக்கும்.

இந்த மென்பொருள் 2012 மே 31 தரவிறக்க முடியும்.  அத்துடன் மே 31க்குள் இந்த மென்பொருளை ஆக்டிவேசன் செய்து கொள்ள வேண்டும் இல்லாவிடில் இந்த மென்பொருள் வேலை செய்யாது.ஒரு எச்சரிக்கை  -  Ant Video Downloader என்ற பயர்பாக்ஸ் நீட்சி உபயோகப்படுத்துபவர்களின் தகவல்கள் அதை உருவாக்கியவருக்கு அனுப்படுவதாக செய்தி வந்துள்ளது.  முடிந்தவரை அந்த நீட்சி உபயோகிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.  

ஒரு அறிவிப்பு 

இந்த வலைத்தளம் மூலம் எனக்கு எதுவும் எந்த ஆதாயமும் கிடைக்காமல் இருந்து வருகிறது. ஆனாலும் தொடர்ந்து பல பதிவுகளை  கஷ்டப்பட்டு தான் இந்த பதிவுகளை எழுதுகிறேன்.  அதனால் நான் எழுதும் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் உபயோகமானவை என்றே நம்புகிறேன்.  இவ்வாறிருக்கையில் வரும் நண்பர்கள் என் வலைத்தளத்தில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்து பார்ப்பதன் மூலம் என்னால் மாதம் ஒரு சிறு தொகையை ஈட்ட முடியும் என்று நம்புகிறேன்.  ஆகையால் பதிவுகளை படிக்கும் நண்பர்கள் விளம்பரங்களை கிளிக் செய்து வருவாயை ஈட்ட உதவி செய்ய வேண்டுகிறேன். உதவுங்கள் இன்னும் தரமான ஆக்கங்களை உருவாக்க உதவுங்கள்.  அத்துடன் இந்த பதிவுகள் தரமுள்ளதாக இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் இதனை பற்றி தெரியபடுத்துங்கள்.  அனைத்து திரட்டிகளிலும் நீங்கள் போடும் ஒட்டுகளினால் இன்னும் உலகம் முழுக்க தமிழர்கள் அனைவருக்கும் போய்ச் சேர ஒரு உங்கள் ஒட்டு ஒரு  வாய்ப்பாக அமையும்


நன்றி மீண்டும் வருகிறேன்

3 ஊக்கப்படுத்தியவர்கள்:

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

Recent Post

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

என்னைப் பற்றி

My photo

System Administrator  Part time Blogger

இதுவரை பதிவு செய்தவை