பல் துலக்கும் பேஸ்ட் அனைவருக்கும் இலவசமாக



நண்பர்களே சில நாட்களுக்கு முன் இந்தியர்கள் அனைவருக்கும் இலவசமாக வீட்டு உபயோக பொருட்கள் என்று ஒரு பதிவிட்டிருந்தேன் அது நிறைய நண்பர்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்திருக்கும்.

அது போல இதோ ஒரு புதிய இலவசமாக பல் துலக்கும் பேஸ்ட் இலவசமாக உங்களுக்காக வழங்குகிறார்கள்.  கோல்கேட் சென்ஸிடிவ் ப்ரோ ரீலிஃப் Colgate Sensitive Pro-Relief  80கிராம் பேக் இலவசமாக வழங்குகிறார்கள்.
கோல்கேட் பேஸ்ட்
நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி,  வீட்டு முகவரி போன்றவை மட்டுமே அவ்வளவுதான் உங்கள் வீடு தேடி வரும் உங்களுக்கான Colgate Sensitive Pro Relief 80கிராம் பேக்.  இந்த டூத் பேஸ்ட் குறித்த வீடியோ கீழே


வீடியோ தெரியவில்லை என்றால் இங்கு கிளிக் செய்யவும் சுட்டி

இது இரண்டாவது முறையாக அனைவருக்கும் இலவசமாக வழங்கபடுகிறது.  இதற்கு முன் ஒரு லட்சம் பேருக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. 

இலவசமாக பேஸ்ட் பெற சுட்டி

இந்த வலைமனை தொடர்ந்து எழுதுவதும் எழுதவைப்பதும் உங்களின் தொடர்ந்து ஆதரவினால் மட்டுமே. உங்கள் ஆதரவும் பின்னூட்டங்கள்  தொடர்ந்து எங்களுக்கு வேண்டும். 


விரைவில் ஒரு புதிய பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்.





நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எம்பி3 வேகமாக தரவிறக்க பயர்பாக்ஸ் 7.0 புதிய பதிப்பு

நண்பர்களே தொடர்ந்து அலுவலக நிமித்தமாக வெளியூரில் வேலை இருந்ததால் இந்த மாதத்தில் இது மூன்றாவது பதிவாக இந்த பதிவினை எழுதிக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்த பதிவு எழுத ஆசை இருந்தாலும் நேரம் இல்லாதது பெரும் கஷ்டமாக இருக்கிறது. 

சரி இன்றைய பதிவிற்கு செல்வோம்.

பயர்பாக்ஸ் உலாவியின் புதிய மேம்படுத்தப்பட்ட பதிப்பு இன்னும் இரண்டு நாளைக்குள் வெளிவரும் என்று நினைக்கிறேன்.  இப்பொழுது உள்ள பதிப்பு 6.0.2 ஆகும்.  மேம்படுத்தப்பட்ட பதிப்பு 7.0 ஆக வெளிவருகிறது. 

இதில் மெமரி மிகவும் குறைவாக எடுத்துக் கொண்டு வேலை செய்யும் விதத்தில் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. 20 முதல் 30 சதவீதம் வரை குறைக்கட்டிருப்பதாக கூறுகிறார்கள்.

அதிகபட்சம் 50 சதவீதம் இணையப்பக்கங்கள் லோடு ஆகும் வேகத்தை அதிகப்படுத்தியிருக்கின்றனர்.

நிறைய பாதுகாப்புகள் மேம்படுத்தப்படிருக்கின்றன.

புக்மார்க்குகள் உடனடியாக பயர்பாக்ஸ் உலாவியின் மூலமாக Sync செய்யும் வசதியும் மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

விண்டோஸ் பயனாளர்களுக்கான Firefox 7.0 Stable Version Download English - US  Tamil Version Download

லின்க்ஸ் பயனாளர்களுக்கான Firefox 7.0 Stable Version Download English - US   Tamil Version Download

மேக் பயனாளர்களுக்கான Firefox 7.0 Stable Version Download English - US  Tamil Version Download



கூகிளின் புதிய வசதிகள் வந்துகொண்டிருக்கும் வேளையில் தனது 13ஆம் ஆண்டின் பிறந்தநாளினை கொண்டாடுகிறது கூகிள்.
 
 இந்நேரத்தில் பழைய ஆட்சென்ஸ் முகப்பினை விரைவில் மூடப்போவதாகவும் அதற்காக புதிய ஆட்சென்ஸ் முகப்பிற்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

Many More Happy Returns of the Day Google

Happy 13th Birthday Google

இதுகுறித்து கூகிள் வெளியிட்டுள்ள செய்தி சுட்டி


உங்களுடைய டெஸ்க்டாப்பில் உங்களால் ஒரு வால்பேப்பர் மட்டுமே வைக்க முடியும்.  அந்த வால்பேப்பரின்  மேலே இன்னும் ஒரு வால்பேப்பர் வைக்க முடியுமா? என்று கேட்டால் நீங்கள் இல்லையென்று சொல்வீர்கள்.  
 
இணைய உலகில் எதுவும் சாத்தியமே என்பது போல இந்த மென்பொருளினை நீங்கள் தரவிறக்கிக் கொண்டால் ஒரு வால் பேப்பரின் மேல் இன்னும் ஒரு வால்பேப்பர் வைக்கலாம்.  அந்த வால்பேப்பரில் உங்களுடைய முக்கியமான நிகழ்வுகள், மீட்டிங்குகள் குறித்து பதிந்து வைக்க சுலபமாக இருக்குமே.  தரவிறக்க சுட்டி

செய்தி துளிகள்

கேரளாவில் முதலமைச்சரின் அறையில் நடக்கும் அனைத்து கலந்துரையாடல்கள் அனைத்தும் அனைவரும் பார்க்கும் படியாக இருக்க வேண்டும் என்று தன் அறையில் கேமரா வைத்திருக்கிறார்.  இந்த கேமரா உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அவருடைய அறையில் என்ன நடக்கிறது அனைவரும் தெரிந்து கொள்ளதானாம்.

அத்துடன் முதலமைச்சரின் அறை மட்டுமல்லாம அவருடைய அலுவலகத்தில் நடக்கும் அனைத்தும் தெரிந்து கொள்ளவும் ஒரு கேமரா வைக்கப்பட்டிருக்கிறது.  இந்த வசதி இருபத்தி நான்கு மணி நேரமும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடங்கி வைக்கப்பட்டது ஜுலை ஒன்றாம் தேதி அன்று.

நான் ஒரு முறை பார்க்கும் பொழுது முதலமைச்சர் வெளியூர் சென்றிருக்கிறார் என்று வந்தது அடுத்த நாள் பார்த்த பொழுது அவர் அலுவலகத்தில் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தார்.  இந்த பதிவு எழுதும் பொழுது அவர் அறையில் முதலமைச்சர் இல்லை.  நீங்கள் கேரள முதலமைச்சர் அலுவலகத்தை நேரடியாக பார்க்க சுட்டி

இணையத்தில் இருந்து mp3 பாடல்கள் தரவிறக்க   ஒரு புதிய மென்பொருள் music2pc மிக அருமையாக இருக்கிறது இந்த மென்பொருள்.  வேகமாக தேடவும் வேகமாக தரவிறக்கவும் இந்த மென்பொருள் மிகவும் உபயோகமாக இருக்கும்.  இந்த மென்பொருள் உங்கள் கணினியில் நிறுவியும் உபயோகிக்கலாம். இல்லை போர்டபிள் மென்பொருளாகவும் உபயோகிக்கலாம்.

மேலதிக தகவல்கள் தெரிந்து கொள்ள இணையத்தள சுட்டி

music2pc மென்பொருள் தரவிறக்க சுட்டி

music2pc போர்டபிள் மென்பொருள் தரவிறக்க சுட்டி


தொடர்ந்து நீங்கள் கொடுத்து வரும் ஆதரவால் என்னை பின் தொடரும் நண்பர்களின் எண்ணிக்கை 800ஐ தொட இருக்கிறது.   இதை சாதிக்க உங்களால் மட்டுமே என்னால் சாதிக்க முடிந்தது அனைவருக்கும் என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன்.  விளம்பரங்களை பாருங்கள் படியுங்கள் பிடித்திருந்தால் கிளிக் செய்து செல்லுங்களேன்.


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

அனைத்துவித தளங்களில் இருந்தும் வேகமாக வீடியோக்கள் தரவிறக்க

நண்பர்களே நாம் நிறைய வீடியோ மற்றும் ஆடியோ கோப்புகள் மற்றும் புத்தகங்களை தரவிறக்கம் செய்வோம்.

 எந்த மாதிரி தளத்தில் செய்வோம் என்றால் Bittorent, Rapidshare, Megaupload, MediaFire, Hotfile, Netload.in, FIlesonic, Easy-share, Megashare, மற்றும் Fileserve போன்ற தளங்களில் இருந்து தரவிறக்கம் செய்வோம்.  இதில் உள்ள அனைத்திலும் ஒரு பிரச்சனை நேரம் மற்றும் தரவிறக்கும் வேகம் தான்.  ஒரு தளங்களில் ஒரு கோப்பினை தரவிறக்கம் செய்ய முயற்சி செய்தால் முதலில் தரவிறக்க 60 விநாடிகள் வரை காத்திருக்க வேண்டும்.  அதன் பிறகு தரவிறக்கம் செய்ய வேண்டும்.  அது மட்டுமல்லாமல் தரவிறக்க வேகம் மிகவும் குறைவாகவும் இருக்கும். 

இதை தீர்க்க ஒரு இலவச தளம் உள்ளது.  அதன் பெயர் fetch.io  இது ஒரு Cloud Computing முறையில் இயங்ககூடிய தளம்.

இந்த வலைத்தளம் மூலம் Bittorent, Rapidshare, Megaupload, MediaFire, Hotfile, Netload.in, FIlesonic, Easy-share, Megashare, மற்றும் Fileserve போன்ற தளங்களில் நேரக் காத்திருப்பு இல்லாமல் தரவிறக்க முடியும்.


இதில் ஒரே நேரத்தில் பலதரப்பட்ட தளங்களிலுருந்து தரவிறக்கம் செய்ய முடியும்.

தரவிறக்கப்படும் வீடியோ கோப்புகள் நேரடியாக MP4 ஆக மாற்றி தரும்.



இந்த வலைத்தளத்தில் மூலம் நான் பத்து எம்பி உள்ள வீடியோ கோப்புகள் ஓரு மூன்று விநாடிகளுக்குள் தரவிறக்கித்தந்தது.

இணையத்தள சுட்டி



நண்பர்களே  இதுவரை நம்முடைய வலைத்தளத்தின் பெயரை தன்னுடைய வலைத்தளத்தின் டாப் டென்னில் இடம்பெறச் செய்த நண்பரும் பதிவருமான திரு. பிரபு என்கிற சாய்தாசன் அவர்களுக்கு எனது நன்றி

இனி நமது வலைத்தளத்தின் சுட்டிகள் அவருடைய டாப் டென்னில் வெளிவராது.

ஏன் வெளிவராது என்று கேட்பவர்களுக்கான பதில் இதற்கு முன் இட்ட பதிவான  பிடிஎப் பாஸ்வேர்ட் கண்டுபிடிக்க மற்றும் வைபை வாட்சர் உங்களுக்காக என்ற பதிவினை நீக்கினால் மட்டுமே நம் பதிவுகள் வெளிவரும் என்று கூறிவிட்டார்.   எனக்காக நிறைய உதவிகள் செய்தவர் அதுமட்டுமல்லாமல் நிறைய அறிவுரைகள் கூறியவர் இருந்தாலும் இதற்கான பதிலை நான் வாசகர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.  இந்த பதிவினை நீக்கலாமா வேண்டாம் என்று நீங்களே கூறுங்கள்.  எனக்கு குழப்பமான மனநிலையில் இருக்கிறேன்.  வாசகர்களுடைய உதவியினை எதிர்பார்க்கிறேன். 

வாசகர்களின் விருப்பத்திற்கிணங்க அந்த குறிப்பிட்ட பதிவில் சில பிடிஎப் பாஸ்வேர்ட் கண்டுபிடிக்கும் முறையை நீக்கி விட்டேன்.  தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டுகிறேன்.
 

நன்றி  மீண்டும் வருகிறேன்

» Read More...

பிடிஎப் பாஸ்வேர்ட் கண்டுபிடிக்க மற்றும் வைபை வாட்சர் உங்களுக்காக

நண்பர்களே தொடர்ந்து அலுவல் பணி காரணமாக வெளி இடங்களுக்கு பயணங்கள் தொடர்ந்து இருப்பதால் தொடர்ச்சியாக பதிவுகள் எழுத முடியவில்லை மன்னிக்கவும்.  இதோ ஒரு புத்தம் புதிய பதிவு உங்களுக்காகவே வாருங்கள் பதிவுக்கு செல்வோம்.

நம் வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க  பிடிஎப் பாஸ்வேர்ட் படிக்கும் முறை குறித்த பதிவுகள் நீக்கப்பட்டுள்ளது. மன்னிக்கவும் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டுகிறேன்.


வயர்லெஸ் நெட்வொர்க் வாட்சர்

இப்பொழுதெல்லாம் கணினி இல்லாத வீடு கிடையாது.  அது போல இணைய இணைப்பு இல்லாத வீடும் கிடையாது.   அவ்வாறு இணைய இணைப்பு வாங்குபவர்கள் வயர்லெஸ் எனப்படும் வை-பையுடன் இணைந்து இருக்கும். இவ்வாறு கனெக்ஷன் வைத்திருப்பவர்கள் சரியான கான்பிகரேஷன் இல்லாமல் சுலபமாக கனெக்ட் செய்ய வேண்டும் என்பதற்காக வை பை பாஸ்வேர்ட் கொடுக்காமல் கான்பிகரேசன் செய்வார்கள் சிலர்.  அவ்வாறு செய்வதனால் என்ன ஆகும் திறந்த வீட்டில்  ஏதோ நுழைவது போல கிடைத்தது வழி என்று அனைவரும் நுழைந்து  உங்கள் கணக்கில் பிரவுஸ் செய்து உங்களுக்கு பில் எகிற வைப்பார்கள். 

சரி உங்கள் வயர்லெஸ்ஸில் யார் இணைந்திருக்கிறார்கள் என்று கண்டறிய இந்த சிறிய மென்பொருள் மட்டும் போதும்.

இந்த சிறிய மென்பொருள்  217 கேபி மட்டுமே

இந்த சிறிய மென்பொருள் மூலம் உங்கள் வைபையில் இணைந்திருப்பவரது ஐபி முகவரி, கணினியின் பெயர், கணினி எண் (Mac Address),  எந்த வகையான நெட்வொர்க் அடாப்டர்  என்றும் தெரிந்து கொள்ள முடியும்

மென்பொருள் தரவிறக்க முகவரி

கூகிளில் நாளுக்கு நாள் முன்னேற்றங்களை புகுத்திக் கொண்டிருக்கின்றனர் இனி உங்கள் ஜிப் மற்றும் ரேர் கோப்புகளை நேரடியாக உங்கள் கூகிள் டாக்ஸில் பார்க்க முடியும்.  ஜிப்பினுள் உள்ள கோப்புகளில் தேவையான கோப்பினை மட்டும் தரவிறக்க முடியும். கூகிளுக்கு நன்றி சொல்வோம்.  Thanks to Google & Google Team 

 எஸ் எம் மல்டிமீடியா ப்ளேயர்

இணையத்தில் எத்தனையோ மீடியா ப்ளேயர்கள் உள்ளன.  அதில் சில மிகவும் சக்கை போடுகிறது.  அது விஎல்சி, விண்டோஸ் மீடியா ப்ளேயர், கோம் ப்ளேயர்,  அந்த் வரிசையில் ஒரு புதிய மீடியா ப்ளேயர்.

அதன் பெயர் எஸ் எம் ப்ளேயர்.

இந்த மென்பொருள் மிகவும் வேகமாக வீடியோ படங்களை திறந்து படிக்க கூடியது.

உங்களால் சப்டைட்டில் சேர்த்து படம் பார்க்க முடியும்.

படத்திற்கும் ஆடியோவிற்கும் சம்பந்தம் இல்லாமல் தாமதமாக ஆடியோ வரும் அதனை நமக்கு தேவையானவை போல் மாற்ற முடியும்.

எஸ் எம் மீடியா ப்ளேயரில் இருந்து கொண்டு நேரடியாக http://www.opensubtitles.org/ வலைத்தளத்தில் தேடி சப்டைட்டிலை சேர்க்க முடியும்.  இது போன்று நிறைய வசதிகள். 

இது ஒரு திறந்த நிலை மென்பொருள் Open Source என்பதால் இன்னும் அதிகமாக மேம்படுத்தப்படும் என கட்டாயம் நம்பலாம்.

எஸ் எம் ப்ளேயர் தரவிறக்க சுட்டி  (மன்னிக்கவும் சுட்டி இணைக்க மறந்து தாமதமாக இணைத்தேன்) 

இந்த மீடியா ப்ளேயரையும் முயற்சித்து பாருங்கள் உங்களுக்கு கட்டாயம் பிடிக்கும். 

பதிவினை படிக்கிற நண்பர்கள் தொடர்ந்து நண்பர்களிடமும் உறவினர்களிடமும் நம் தளத்தினை எடுத்து கூறி விளம்பரப்படுத்தவும் முடிந்தால் விளம்பரங்களையும் கொஞ்சம் கிளி பாருங்கள்.  சிலரிடம் நம் வாசகர்களுக்காக இலவச மென்பொருள் குறித்து பேசி வருகிறேன்.  விரைவில் அது குறித்த பதிவும் வெளிவரும்.


நன்றி மீண்டும் வருகிறேன்.

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை