ஒரு வரலாறும் சில வரிகளும்

நண்பர்களே நாம்  நிறைய அனிமெட்டட் படங்கள் பார்த்திருப்போம் அதில் பெரும்பாலான படங்கள் பிக்ஸார் நிறுவனத்தினுடையுதாக இருக்கும். பிக்ஸார் நிறுவனம் 1986 அன்று தொடங்கப்பட்டது.  ஆப்பிள் நிறுவனத்தை தொடங்கிய முக்கிய பங்குதாரர் ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களால் தொடங்கப்பட்டது.   இந்நிறுவனம் இரண்டாவதாக இயக்கிய குறும்படமே ஆஸ்காரின் சிறந்த அனிமெடட் குறும்படம் என்ற பரிசை தட்டி வந்தது.  அப்படத்தின் பெயர் Luxo Jr. முதல் திரைப்படம் The Adventures of Andre and Wally E.


பின்னர் மே 1991 அன்று மிகப்பெரும் நிறுவனமான வால்ட் டிஸ்னியுடன் கை கோர்த்து திரைப்படங்கள் தயாரிக்கத் துவங்கியது. இவர்கள் சேர்ந்து வெளியிட்ட முதல் திரைப்படம் Toy Story.  இப்படம் குழந்தைகளை மிகவும் கவர்ந்தது. பின்னர் A Bugs Life, Monsters, Inc., Finding Nemo, The Incredibles, Cars, Toy Story 2  போன்ற அனிமெடட் திரைப்படங்களை வழங்கினர்.இவர்களின் தற்போதைய வெளீயிடான WALL E திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இவர்கள் நிறைய அனிமெட்டட் குறும்படம் வெளியிட்டிருக்கிறார்கள். அதனுடைய தொகுப்பினை கீழே கொடுத்துள்ளேன் கண்டு மகிழுங்கள்.


நீங்களும் உங்கள் குழந்தைகளும் மகிழ்ச்சியாக பொழுதை போக்க இந்த குறும்படங்கள் கட்டாயம் உதவும்.


இதில் சில படங்கள் காண்பதற்கு ஆப்பிள் நிறுவனத்தின் குயிக்டைம் நிறுவியிருக்க வேண்டும் இல்லாதவர்கள் இங்கு இருந்து நிறுவிக் கொள்ளுங்கள். சுட்டி


02. Luxo Jr. (1986)

03. Red’s Dream (1987)

04. Tin Toy (1988)

05. Knick Knack (1989)

06. Geri’s Game (1997)

07. For the Birds (2000)

08. Mike’s New Car (2002)

09. Boundin’ (2003)

10. Jack-Jack Attack (2005)

11. One Man Band (2005)

12. Mater and the Ghostlight (2006)

13. Lifted (2006)

இதில் ஒன்பதாவது இடம்பெற்றிருக்கும் படத்திலிருந்து சில காட்சிகள் எடுக்கப்பட்டு நம்ம் ஊர்க்காரர்கள் வரான் வரான் பூச்சாண்டி என்ற பாடலை வெளியிட்டிருந்தார்கள்.  இப்பாடலும் மிகவும் நன்றாக தமிழர்கள் அனைவரையும் சென்றடைந்தது.

இப்பாடல் ஒலிஒளி கீழே


வரான் பூச்சாண்டி பாடல் வரிகள் 

வரான் வரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே
வாரணாசி கேட்டை தாண்டி மெயிலு வண்டியிலே
[வரான் வரான்...]

ரயிலு வண்டியிலே மெயிலு வண்டியிலே
பறந்து வராண்டா பாஞ்சு வராண்டா
காட்டு வழியிலே எதிர் மேட்டு வழியிலே
தீ மூட்ட வராண்டா கொடி நாட்ட வராண்டா
[வரான் வரான்...]

ஏழு கடல தாண்டி.....
ஏழு கடல தாண்டி ஏழு மலைய தாண்டி
வருவான் பூச்சாண்டி......
வருவான் பூச்சாண்டி வலைய விரிப்பாண்டி
மனசெல்லாம் தோண்டி பாடம் படிப்பாண்டி
மனசெ குடுப்பாண்டி சபதம் முடிப்பாண்டி
[வரான் வரான்...]

கொல்லிமலை தாண்டி.....
கொல்லிமலை தாண்டி குடகு மலை தாண்டி
காத்தா வருவாண்டி.....
காத்தா வருவாண்டி கருப்பா வருவாண்டி
வேசம் கலைப்பாண்டி வெரதம் முடிப்பாண்டி
ஆரியக்கூத்தாடி காரியம் முடிப்பாண்டி
[வரான் வரான்...]


இப்பாடலின் இசை: சுனில் வர்மா
இப்படலை பாடியவர்: ஆபாவாணன்நன்றி மீண்டும் வருகிறேன்

1 ஊக்கப்படுத்தியவர்கள்:

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...

வவேலன்,

குழந்தைகள் பார்க்க வேண்டியது மட்டுமல்லாது விரும்பிய பெரியவர்களும் கண்டுகளிக்க நல்ல அனிமேஷன் படங்கள்.

வளர்க உங்கள் பணி

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை