நண்பர்களே பொங்கல் விடுமுறையை அனைவரும் கொண்டாடியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். புதிய படங்களை நிறைய பேர் பார்த்து இருப்பீர்கள் அதை விமர்சனமும் எழுதி இருப்பீர்கள். நாமும் நம் பங்குக்கு புதிய மென்பொருட்களை அதுவும் சட்டரீதியான மென்பொருட்களை அறிமுகபடுத்தவும் வந்து விட்டேன். அத்துடன் என் உடல்நலம் தேற பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி.
பிடிஎப் உபயோகிப்பாளர்கள் தினமும் நிறைய மென்பொருட்கள் நிறுவி இருப்பார்கள். பிடிஎப் கோப்பிலிருந்து வேர்டு, இமெஜ், அனிமேஸன் SWF கோப்பாக மாற்ற என்று நிறைய நிறுவி வன்தட்டில் இடம் அதிகமாக ஆக்கிரமித்திருக்கும். இதற்கெல்லாம் ஒரெ மென்பொருளாக இருந்தால் சுலபமாக இருக்காது.
இதற்கான ஒரே தீர்வாக பிடிஎப் ஜில்லா என்று ஒரு மென்பொருள் உள்ளது இது $29.95 விலையுள்ள மென்பொருள் இப்பொழுது இலவசமாக தரப்படுகிறது. மென்பொருளை தரவிறக்க
சுட்டி
இந்த சலுகை எவ்வளவு நாள் நீடிக்கும் என்று உறுதியாக கூற முடியாது உடனே உபயோகித்துக் கொள்ளுங்கள்.
மைக்ரோசாப்ட் மேதமேடிக்ஸ்
கணக்கு என்றாலே நிறைய பேர் காததூரம் ஒடி விடுவார்கள். அது போன்ற கணக்கை கண்டு பயப்படுபவர்கள் மைக்ரோசாப்ட் வழங்கும் மென்பொருள் கொண்டு சுலபமாக கணக்கு போடலாம். இந்த மென்பொருள் முக்கியமாக மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்த மென்பொருள் மூலம் சுலபமாக அனைத்து வகை கணக்குகளையும் போட முடியும். இந்த மென்பொருளின் பெயரே மேதமேடிக்ஸ் தான். இந்த மென்பொருளை தரவிறக்க
சுட்டி
காஸ்பர்ஸ்கை இண்டெர்நெட் செக்யூரிட்டி 2011 - 1 வருடத்திற்கு இலவசம்
காஸ்பர்ஸ்கை இண்டெர்நெட் செக்யூரிட்டி எப்பொழுதும் இந்தியாவில் மட்டும் இலவசமாக தர கூடாது என்று ஏதாவது சபதம் எடுத்துள்ளார்களா என்று தெரியவில்லை. அனைத்து நாடுகளிலும் அவ்வப்பொழுது இலவசமாக தருகிறார்கள்.
இங்கு கூட பொங்கலுக்கும் தீபாவளிக்கும் போனஸ் கொடுப்பது போல இலவசமாக காஸ்பர்ஸ்கை தங்கள் மென்பொருளை தரலாம். இதோ இந்த ஸ்பானிய வலைத்தளத்திலும் ஒரு வருடத்திற்கு இலவசமாக தருகிறார்கள். முடிந்தால் முயற்சி செய்து பார்க்கலாம். மற்ற நாட்டு நண்பர்கள். வலைத்தள
சுட்டி இந்த வலைத்தளத்தினை கூகிள் ட்ரான்ஸ்லேட்டர் மூலம் மாற்றிய பிறகு வந்தது
சுட்டி
ஒரு அறிவிப்பு
இந்த வலைத்தளம் மூலம் எனக்கு எதுவும் எந்த ஆதாயமும் கிடைக்காமல் இருந்த நேரத்தில் தமிழ் கம்ப்யூட்டர் நிறுவனம் மட்டுமே எனக்கு சிறு உதவி செய்து வருகிறது. என் படைப்புகளை வெளியிட்டு அதன் மூலம் வரும் சிறு தொகையை எனக்கு அளித்து வருகின்றனர். நானும் கஷ்டப்பட்டு தான் இந்த பதிவுகளை எழுதுகிறேன். அதனால் நான் எழுதும் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் உபயோகமானவை என்றே நம்புகிறேன். இவ்வாறிருக்கையில் வரும் நண்பர்கள் என் வலைத்தளத்தில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்து பார்ப்பதன் மூலம் என்னால் மாதம் ஒரு சிறு தொகையை ஈட்ட முடியும் என்று நம்புகிறேன். ஆகையால் பதிவுகளை படிக்கும் நண்பர்கள் விளம்பரங்களை கிளிக் செய்து வருவாயை ஈட்ட உதவி செய்ய வேண்டுகிறேன். உதவுங்கள் இன்னும் தரமான ஆக்கங்களை உருவாக்க உதவுங்கள். அத்துடன் இந்த பதிவுகள் தரமுள்ளதாக இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் இதனை பற்றி தெரியபடுத்துங்கள். அனைத்து திரட்டிகளிலும் நீங்கள் போடும் ஒட்டுகளினால் இன்னும் உலகம் முழுக்க தமிழர்கள் அனைவருக்கும் போய்ச் சேர வாய்ப்பு கிடைக்கும்.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே மிக அதிகமான வேலை இருந்ததால் தொடர்ந்து எழுத இயலவில்லை அதற்கு பதில்தான் நம் நண்பர்கள் 50க்கும் மேற்பட்டோர் தொழில்நுட்ப பதிவுகளை எழுதி வருகின்றனரே அதனால் நான் சொல்ல நினைக்கும் விஷயங்களை கூட அவர்கள் சொல்கிறார்கள் நல்ல விஷயம் நான் எழுத ஆரம்பிக்கும் போது மொத்தம் ஐந்து தொழில்நுட்ப வலைத்தளங்கள் கூட இல்லை என் குரு பிகேபி அவர்கள்களை பார்த்து எழுத ஆரம்பித்தனர் பிறகு நான் ஆரம்பித்தேன் என்னை பார்த்து சிலர் ஆரம்பித்தனர் அவர்களை பார்த்து இப்பொழுது பலர் எழுத ஆரம்பித்து விட்டனர் தமிழ் தொழில்நுட்ப வலைப்பூக்கள் விரைவில் நூறை எட்டும் அனைத்து பதிவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இதில் நண்பர் ஷிர்டி சாய்தாசன் வேறு மாதம் ஒரு முறை தொழில்நுட்ப பதிவர்களின் தரவரிசை பட்டியலிடுவதால் நல்ல ஆரோக்கியமான போட்டி உருவாகியுள்ளது. தோழர்களே போட்டியிடுங்கள் தவறில்லை பொறாமைபடாதீர்கள். ஒருவரின் வலைத்தளம் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு வர அவர்கள் தரும் இழப்புகள் அதிகம். அதை என் தொலைக்காட்சி பேட்டியின் போதே சொல்லியிருக்கிறேன். ஏன் என்றால் இப்பொழுது கூட ஒரு மென்பொருளை சோதிக்க போய் என் நிறைய கோப்புகளை இழந்துள்ளேன். ஷிர்டி சாய்தாசன் அவருடைய வலைப்பதிவில் தரவரிசைப் படுத்துவதால் எத்தனை புதியதாக கணினி கற்பவர்களுக்கும் கற்றுக் கொடுப்பவர்களுக்கும் மிகுந்த உதவியாக இருப்பதை நானே கண்கூடாக அறிந்திருக்கிறேன். ஆகையால் யாரையும் அநாவசியாமாக குறை கூற வேண்டாம். இனி இன்றைய பதிவிற்குள் நுழைவோம்.
கணினி உலகில் இணையம் இல்லாத கணினி உபயோகிப்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவர்கள் பாதுகாப்பாக இணையத்தில் உலா வரவேண்டுமானால் அவர்களின் கணினியில் ஏதாவது ஒரு ஆன்டி வைரஸ் அல்லது ஆன்டிவைரஸுடன் இணைந்த இண்டெர்நெட் செக்யூரிட்டி மென்பொருட்கள் தேவை. இதில் இப்பொழுது மிகவும் பிரபலமாக பேசப்படுவது அத்துடம் மிகவும் நன்றாக செயல்படுகிறது என்ற பெயரை தட்டி செல்கிறது காஸ்பர்ஸ்கை இண்டெர்நெட் செக்யூரிட்டி. இது இலவசமாக 30 நாட்கள் மட்டுமே செயல்படும் வகையில் சோதனை பதிப்புகள் இணையத்தில் தருகிறார்கள். உங்களுக்கு காஸ்பர்ஸ்கை இண்டெர்நெட் செக்யூரிட்டி வேண்டுமென்றால் சென்னையில் உள்ள பல கணினி விற்பனையாளர்கள் உள்ளனர். அவர்கள் மூலமாக பணம் கொடுத்து ஒரிஜினல் காஸ்பர்ஸ்கை ஆன்டி வைரஸ் மற்றும் இண்டெர்நெட் செக்யூரிட்டி கிடைக்கும்
இதன் விலை ஒரு கணினிக்கு ஒருவருடத்திற்கான ஆன்டிவைரஸ் மட்டும் வெறும் முன்னூறு மட்டும் செலவாகிறது. இதே மூன்று கணினிக்கு ஒரு வருடத்திற்கு 600 - 800 மட்டுமே செலவாகிறது. அதே காஸ்பர்ஸ்கை இண்டெர்நெட் செக்யூரிட்டி ஒரு கணினிக்கு ஒரு வருடத்திற்கு 500 - 600 மட்டுமே செலவாகிறது அதே மூன்று கணினிக்கு ஒரு வருடத்திற்கு 750 - 900 வரை செலவாகிறது. இப்படி சுலபமாக குறைந்த விலையில் கிடைக்கையில் ஏன்தான் தேவையில்லாமல் உடைக்கப்ட்ட மென்பொருட்களை நாடுகிறார்களோ தெரியவில்லை. கணினி உபயோகிப்பாளர்களுக்குதான் தெரியாது இது தவறு என்று. கணினி நிறுவி தரும் நிறுவனங்களின் சர்வீஸ் என்ஜினியர்கள் மற்றும் தனியாக வேலை பார்க்கும் சர்வீஸ் என்ஜினியர்கள் அனைவருமே ஒரு காரணகர்த்தாவாக இருக்கின்றனர். முப்பதாயிரம் செலவு செய்து கணினி வாங்குபவர்கள் அதற்கு என்று உபயோகிக்கும் எந்த மென்பொருளையும் இலவசமாக கிடைக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அப்படி நினைப்பவர்கள் லினக்ஸுக்கு செல்லலாமே மிகவும் சுலபமாக நீங்கள் விரும்பும் அனைத்தும் கிடைக்கும். சரி விடுங்கள் திருந்த நினைப்பவர்கள் திருந்தட்டும்.
சரி இப்படி சுலபமாக காசே இல்லாமல் ஆன்டிவைரஸ் கணினி மற்ற மென்பொருட்கள் இலவசமாக அந்த நிறுவனமோ அல்லது அந்த நிறுவனத்தின் முகவர்களோ சில மணி நேரம் மற்றும் சில நாட்கள் மட்டும் இலவசமாக சட்ட ரீதியாக ஒரு வருடத்திற்கான லைசென்ஸுடன் தரும் பொழுதாவது அதை நீங்கள் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
கீழுள்ள மென்பொருளில் சில பிரச்சனைகள் இருப்பதால் இதை நிறுவவோ தரவிறக்கவோ வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஏற்பட்ட தவறுக்கு அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். தவறை சுட்டிக் காட்டிய பொன்மலர், மற்றும் அன்பரசன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
இப்பொழுது இந்த காஸ்பர்ஸ்கை இண்டெர்நெட் செக்யூரிட்டி மென்பொருள் சீன முகவர்கள் இலவசமாக தரவிற்க்க தருகிறார்கள் ஒரு வருடத்திற்கான Kaspersky Internet Security 2011 சட்டரீதியாக தருகிறார்கள். இதை பெற சில விஷயங்கள் செய்தால் போதும்.
முதலில் இந்த வலைத்தளத்திற்கு செல்லுங்கள். சுட்டி
இங்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியை இரண்டு முறை கொடுங்கள். பிறகு கீழுள்ள பட்டனை கிளிக் செய்யுங்கள்.
அடுத்த பக்கத்தில் ஒரு ஐந்து எண்கள் தோன்றும் அதை வலது பக்க பெட்டியில் டைப் செய்யுங்கள். பிறகு கீழுள்ள பட்டனை கிளிக் செய்தால் அடுத்த பக்கத்தில் உங்களுக்கான Kaspersky Internet Security 2011 கீ கிடைக்கும்.
காஸ்பர்ஸ்கை இண்டெர்நெட் செக்யூரிட்டி சோதனை பதிப்பு தரவிறக்க சுட்டி
இந்த சலுகை இன்னும் 25 நாளைக்கு மட்டுமே அதாவது டிசம்பர் - 3 - 2010 வரை மட்டுமே. முடிந்தவரை விரைவில் தரவிறக்கம் செய்து உங்களுக்கான ஒரு வருடத்திற்கான சட்டரீதியான இலவச காஸ்பர்ஸ்கை இண்டெர்நெட் செக்யூரிட்ட்டியை இலவசமாக பெற்றுக் கொள்ளுங்கள்.
ஓட்டு போட்டு இந்த பதிவை அனைவரிடமும் கொண்டு செல்ல உதவிடுங்கள்
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...