» Read More...
பிடிஎப் மாற்றி ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் இலவச Ariel சலவைத்தூள்
F-Droid Vs Google Play
நண்பர்களே இன்றைய உலகில் போனில் அதிக அளவு விற்பனையாவது ஸ்மார்ட் போன்கள்
அதுவும் ஆன்ட்ராய்டு வகை போன்கள் மிக அதிகமாக விறபனையாவதை அனைவரும்
அறிந்ததே. ஆன்ட்ராய்ட் ஒரு இலவச இயங்குதளமாகும். இந்த வகை இயங்குதள
போன்களுக்கு என்று வைத்திருந்த கூகிளின் ஆன்ட்ராய்ட் மார்கெட்டினை கூகிள்
ப்ளே என்று பெயர் மாற்றியது சில நாட்களுக்கு முன்புதான் என்பதையும்
அறிவீர்கள். சரி இந்த வகை ஆன்ட்ராய்ட் இயங்குதள போன்களுக்கு கூகிள் ப்ளே
மட்டும்தான் உள்ளதான் என்று பார்த்தால் கூகிளை போன்ற சில தளங்கள்
இருக்கதான் செய்கின்றன இதில் ஒரு தளத்தின் எப் ட்ராய்டு F-Droid.
இந்த
தளத்தில் என்ன ஒரு சிறப்பு என்று பார்த்தால் இதில் உள்ள அனைத்து
அப்ளிகேசன்களும் இலவசமானவை மட்டுமே. அதுவும் அனைத்தும் Full Version ஆக
கிடைக்கிறது.
அது மட்டுமல்லாமல் F-Droid நிறுவனத்தின் ஆன்ட்ராய்ட் பிரவுஸர் வழியாக
F-Droid இணையத்தளத்தில் ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்களை தேடி உங்கள் மொபைலுக்கு
தரவிறக்க முடியும்.
இந்த தளத்தின் மூலம் வெளியிடப்படும் அப்ளிகேசன்கள் உங்கள் ஆன்ட்ராய்ட்
மொபைலுக்குள் நிறுவி விட்டாலே ஒவ்வொரு முறையும் தானாக அப்டேட் செய்து
கொள்ளும்.
இந்த தளத்திற்கு செல்ல சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
3டி தொழில்நுட்ப மென்பொருட்கள் அனைவருக்கும் சட்டரீதியான இலவசம்
நண்பர்களே அனைவருக்கும் முதலில் வணக்கம் இன்று இந்த பதிவு எழுதிக்
கொண்டிருக்கும் பொழுது இரண்டு விஷயங்கள் சினிமா உலகில் வலம் வந்து
கொண்டிருந்தது ஒன்று வெளியாக போகும் அம்புலி 3டி படம் அடுத்து வேகமான படப்படிப்பினை தொடங்கியிருக்கும் கோச்சடையான் 3டி
இரண்டும் 3டி படங்கள் என்பதே அதன் சிறப்பு. இது போன்ற 3டி படங்கள்
உருவாக்குபவர்களுக்கு என சில பிரத்யேக மென்பொருட்கள் உள்ளன. இது போன்ற
மென்பொருட்களை உருவாக்கும் நிறுவனம் இப்பொழுது சில தொழில்நுட்ப
மென்பொருட்களை இலவசமாக வழங்குகிறது. இதன் மதிப்பு சர்வேதச விலையான 829$
ஆகும். இந்திய மதிப்பு ஒரு டாலருக்கு ஐம்பது ரூபாய என்று வைத்து
கொண்டாலும் 829 x 50 = 41450 விலை மதிப்பு மிக்க மூன்று மென்பொருட்களை
இலவசமாக வழங்குகிறது DAZ Studio நிறுவனம்.
Daz Studio Pro ( விலை $429.95)
உங்களுக்கு பிடித்த உருவங்கள் அவதார்கள் போன்றவைகளை சுலபமாக உருவாக்க முடியும். இந்த மென்பொருள் மூலம் 3டி யில் உருவாக்கிய உருவங்களுக்கு லைட் எபெக்ட்ஸ் மற்றும் உடைகள் போன்ற அனைத்து விதமான வேலைகளும் செய்ய முடியும். நீங்களாகவே ஒரு CG படங்களை உருவாக்க முடியும். இதுகுறித்த மேலும் தகவல்களுக்கு சுட்டி
Bryce 7 Pro (worth $249.95)
இந்த மென்பொருள் மூலம் நீங்கள் உருவாக்கிய உருவங்களை கடல், வானம், மேகம் மற்றும் தரை போன்றவற்றில் உலாவ விட்டு லேன்ஸ்கேப்பில் படங்களை உருவாக்க முடியும்.
இது குறித்த மேலும் அறிய சுட்டி
Hexagon 2.5 (worth $149.95)
இதிலும் நிறைய சொல்ல தக்க தகவல்கள் அதிகம் உள்ளதால் நேரடியாக தளத்திற்கு சென்று அறிந்து கொள்வதே நல்லது. சுட்டி
சரி இந்த மூன்று மென்பொருட்களையும் இலவசமாக தரவிறக்குவது எப்படி?
இந்த சுட்டியை கிளிக் செய்து முதலில் இந்த வலைத்தளத்தில் நுழைந்து கொள்ளுங்கள்.
சுட்டி பிறகு
புதிய பயனாளர் கணக்கினை இங்கே சென்று தொடங்குங்கள் சுட்டி
கீழுள்ள படத்தில் உள்ள பெட்டிகளில் உங்கள் தகவல்களை நிரப்புங்கள்
உங்கள் மின்னஞ்சல் முகவரியின் வழியாக ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள்
பிறகு இந்த சுட்டியினை கிளிக் செய்து கொள்ளுங்கள் சுட்டி கீழுள்ள படத்தில் கண்ட பக்கம் திறக்க படும். அதில் உள்ள மூன்று பொருட்களையும் add to cart கிளிக் செய்யுங்கள்.
பிறகு கீழுள்ள படத்தில் உள்ளபடி ஒரு பாப் அப் தோன்றும் அதில் Checkout என்பதை கிளிக் செய்யவும்.
பிறகு கீழுள்ள பக்கத்தில் இருப்பது போல நீங்கள் ஒரு பைசா கூட செலவு செய்ய தேவையில்லை தோன்றும் பிறகு Place Order என்ற பச்சை நிற பட்டனை அழுத்தினால் போதும்
கீழுள்ள பக்கம் வந்துவிடும். அதில் Downloads are available in your Account Profile என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கான் மென்பொருள் தரவிறக்க லிங்குகள் தோன்றும்.
நீங்கள் சரியான மின்னஞ்சல் முகவரி குறிப்பிட்டிருந்தால் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு மூன்று மென்பொருட்களின் Serail எண்கள் அனுப்பியிருப்பார்கள். இந்த மென்பொருட்கள் விண்டோஸ் மேக் கணினிகளில் வேலை செய்யும்.
இது ஒரு குறுகிய கால சலுகை என்பதால் எப்பொழுது வேண்டுமானலும் மென்பொருள் இலவசமாக தரப்படுவது நிறுத்தலாம். அல்லது நீட்டிக்கபடலாம் விரைவில் தரவிறக்கிக் கொள்ளவும்.
விரைவில் வேறு ஒரு புதிய பதிவுடன் உங்களை சந்திக்கிறேன். நம் பதிவை படிக்கும் நண்பர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் படிக்கும் மாணவர்கள், உறவினர்களிடையே பகிரவும். முடிந்த்வரை அனைத்து திரட்டிகளிலும் ஒட்டு போடுவதால் இந்த பதிவுகள் அனைவரையும் சென்றடைய உதவும். விம்பரங்களையும் கிளிக் செய்து படிக்கவும்.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்
-
நண்பர்களே டெலிகிராம் ஆப் வழியாக நிறைய நாவல்கள் மற்றும் திரை விமர்சனங்கள் இருக்கின்றன. அது போல் நானும் நாவல்கள் மற்றும் புத்தகங்களுக...
-
ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 300க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வ...
-
ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 480க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வ...
-
நண்பர்களே இதுவரை எழுதிய பதிவுகள் அனைத்தையும் காண ஒரு சுட்டி உருவாக்கி வலது பக்கம் கொடுத்து வைத்துள்ளேன் புதியதாக நம் வலைத்தளத்திற்கு வரும் ...
-
Privacy Policy for gouthaminfotech.blogspot.com If you require any more information or have any questions about our privacy policy, please...
-
நண்பர்களே இதுவரை வெளிவந்த தேடுபொறிகளை விட மிக அதிக வசதிகளுடன் புதிய தேடுபொறி ஒன்றை மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட தீர்மானித்துள்ளது. அதுதான் ...
-
நண்பர்களே இதுவரை வெளிவரும் மென்பொருட்கள் வெளியிடும் நிறுவனங்கள் மற்றும் இலவசமாக ப்ரோமோசன் செய்யும் அனைத்துமே நேரடியாக தமிழ் பிளாகிற்கோ தமிழ...
-
நண்பர்களே அடுத்த ஐந்து நாட்களுக்கு ஆன்ட்ராய்ட் பைல் மேனஜேர் வரிசையில் கிகா பைல் மேனஜேர் பிரிமியம் இலவசமாக தருகிறது ப்ளே ஸ்டோர். இந்த ஆ...
-
நண்பர்களே முதலில் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டில் புதிய பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ...
-
நண்பர்களே நான் படித்த ஒரு அருமையான புத்தகத்தை இங்கு பகிர்ந்திருக்கிறேன் விருப்பம் உள்ளவர்கள் தரவிறக்கி கொள்ளலாம். இது சில நாட்களுக்கு மட்...