உங்கள் கோப்புகளை சோதிக்க 19 வகையான ஆன்டி வைரஸ்

நண்பர்களே டிவிடியிலிருந்து ISO கோப்பாக மாற்றவும் ISO கோப்பிலிருந்து டிவிடிக்கு எழுதவும் ஒரு இலவச மென்பொருள்.  இந்த மென்பொருள் CD, DVD5, DVD9, BD25 and BD50 இந்த வகைகளில் எழுத முடியும்.   
என்கிரிப்ட் செய்யப்பட்ட டிவிடிக்களையும் இந்த மென்பொருள் மூலம் நிறைய டிவிடி நகல்கள் உருவாக்க முடியும்.  இந்த மென்பொருள் அனைத்து விண்டோஸ் வெர்சன்களிலும் வேலை செய்யும். 


மென்பொருளின் பெயர் BDlot DVD ISO Master

இந்த மென்பொருள் அளவு 2.5எம்பி மட்டுமே

இந்த மென்பொருள் குறித்து மேலும் அறிந்து கொள்ள சுட்டி

மென்பொருளை தரவிறக்க சுட்டி

உங்களிடம் உள்ள ஒரு கோப்பை நீங்கள் நிறுவியிருக்கும் வைரஸ் உள்ளதா என்று சோதிப்பீர்கள்.  அந்த சோதனை முடிவில் வைரஸ் இல்லை என்று வந்த பிறகு உங்கள் நண்பருக்கு பென் ட்ரைவ் அல்லது மின்னஞ்சல் மூலம் கோப்பினை அனுப்புகிறீர்கள்.  அதை அவர் தரவிறக்கும் பொழுது அவருடைய ஆன்டி வைரஸ் வைரஸ் இருக்குது என்று தெரிவித்தால் எப்படி இருக்கும்.  நாம் வைரஸ் சோதனை செய்த பிறகு  அவருடைய கணினியில் மட்டும் நமது கோப்பில் வைரஸ் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா??


ஒரு நிமிடம் பொறுங்கள் அனைத்து ஆன்டிவைரஸ்களும் எல்லா வைரஸ்களுக்கு எதிராக போராடுவதில்லை சில வைரஸ்களை தவறவிடுகின்றனர்.  அதனால் அவர்களை நொந்து கொள்வதில் பிரயோஜனம் இல்லை.  இதற்கு வழி இல்லையா என்றால் வழி இருக்கிறது.  மல்டிபிள் வைரஸ் ஸ்கேனர் கொண்டு சோதிப்பது.  இது மாதிரி மல்டிபிள் ஆன்டிவைரஸ் ஸ்கேனர் மென்பொருள் இல்லை என்று நினைப்பீர்கள் உண்மைதான்.  நிறுவும் வகையிலான பொருள் இல்லை ஆனால் ஆன்லைன் மென்பொருள் உண்டு.  ஆம்  இந்த வலைத்தளம் பெயர் மெட்டஸ்கேன் META SCAN
இந்த வலைத்தளம் 19 வகையான ஆன்டி வைரஸ்களை கொண்டு சோதித்து அறிகிறது.

AVG
Eset
F-Prot
Avira
McAfee
Quick Heal
Avast
Bit Defender
Bullgard
Calmwin
Emisoft
Kingsoft
Norman
Sophos
Norton
Virusbuster
Fortinet
F-Secure
GFI

மேலுள்ள அனைத்து வைரஸ் என்ஜின்கள் கொண்டும் சோதித்து அறியப்படுகிறது

இந்த வலைத்தளத்தில் 40 எம்பி வரை உள்ள கோப்புகளை சோதித்து அறியலாம்.

வலைத்தள முகவரி சுட்டி


அனைவருக்கும் ரம்ஜான் மற்றும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.


நன்றி மீண்டும் வருகிறேன்.

» Read More...

400வது பதிவு மற்றும் SARDU உருவாக்குவது எப்படி?

நண்பர்களே இன்று பலவகையான Rescue Disk களை இணைத்து ஒரு USB Disk வழியாக Boot செய்வது எப்படி என்று பார்க்க போகிறோம்.  இது போல் செய்வதால் என்ன பலன் என்றால் சுலபமாக எந்த கணினியிலும் Rescue Disk வழியாக Boot செய்யலாம்.   பலவகையான Anti Virus மற்றும் Utitlity களை எந்த கணினியில் Bootable ஆக கையாள முடியும்.   இந்த வகைய Rescue USB Disk களை கொண்டு எந்த ஒரு கணினியிலும் உள்ள பிரச்சனைகளை தீர்க்க மிகவும் உதவியாக இருக்கும். இது கணினி சர்வீஸ் என்ஜினியர்களுக்கு மிகவும் பேருதவியாக இருக்கும்.


இது போன்ற USB டிஸ்க் தயாரிக்க குறைந்த பட்சம் 2 ஜிபி பென் ட்ரைவ் இருத்தல் நலம்.


முதலில் பென்ட்ரைவை பார்மெட் செய்து கொள்ளுங்கள்.

பென்ட்ரைவை பார்மெட் செய்யும் போது  FAT 32 ஆக பார்மெட் செய்து கொள்ளுங்கள்.

பிறகு இந்த சுட்டியில் இருந்து SARDU ( Shardana Antivirus Rescue Disk Utility) தரவிறக்கிக் கொள்ளுங்கள்.    SARDU தரவிறக்க சுட்டி

தரவிறக்கிய பிறகு அது ஒரு Zip கோப்பாக இருக்கும்.  அந்த கோப்பை Extract செய்து கொள்ளுங்கள்.

Extract செய்த போல்டரில் இருந்து SARDU மென்பொருளை திறக்கவும். 

அதில் உங்களுக்கு தேவையான அத்துடன் உங்கள் பென் ட்ரைவ் கொள்ளளவுக்குள் தேவையான ஆன்டி வைரஸ் மற்றும் யூட்டிலிட்டிகளை தரவிறக்கிக் கொள்ளுங்கள். 

தரவிறக்கம் முடிந்தவுடன் ஒருமுறை மென்பொருளை மூடிவிட்டு திரும்பவும் திறக்கவும். 
 


( நீங்கள் தரவிறக்கிய கோப்புகள் எந்த ட்ரைவில் நீங்கள் SARDU மென்பொருளை இயக்கினீர்களோ அந்த போல்டரில் ஒரு ISO என்ற போல்டர் உருவாகி அதற்குள் அனைத்து ஆன்டிவைரஸ் ரெஸ்க்யூ கோப்புகள் மற்றும் மென்பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். தேவையென்றால் அந்த கோப்புகளை தனி தனி சிடிக்களில் தனி தனி  ரெஸ்க்யூ சிடிக்களாகவும் எரிக்கலாம்.)

மென்பொருளை திறந்த பிறகு Make USB என்று வலது புறத்தில் உள்ள பட்டனை அழுத்தவும்.

அவ்வளவுதான் முடிந்தவுடன் உங்கள் ரெஸ்க்யூ யூஎஸ்பி ட்ரைவை எங்கு வேண்டுமானாலும் பூட்டபிளாக உபயோகபடுத்தலாம்.

இதற்கு தேவையானவை உங்கள் கணினியில் USB பென் ட்ரைவ் குறைந்தது 2 ஜிபி, இணைய சேவை,  மற்றும் SARDU மென்பொருள்.



இதுவரை பதிவு படித்தவர்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு


நண்பர்களே இது என்னுடைய 400வது பதிவு இதுவரை என்னை ஊக்கமளித்து மேலே கொண்டுவந்த அனைத்து நண்பர்களுக்கும் பதிவர்களுக்கும் இன்ட்லி, தமிழ்10, திரட்டி, தமிழ்மணம் போன்ற திரட்டி நண்பர்களுக்கும்.  எந்த ஒரு நன்றியையும் கூறமால் என் பதிவுகளை தாங்களாகவே Republish அல்லது காப்பி  பேஸ்ட் செய்த சக திருட்டு நண்பர்களுக்கும்.  ஒன்றுமே வருமானம் இல்லாத நிலையில் தமிழ் கம்ப்யூட்டர் என் வலைப்பூவில் வந்த பதிவுகளை தங்கள் புத்தகத்தில் வெளியிட்டு அதன் மூலம் சிறு வருமானம் தந்த தமிழ் கம்ப்யூட்டர் நிறுவனத்திற்கும் அதன் நிறுவனருக்கும்.  என்னால் திரட்டிகளில் இணைக்க முடியாத பொழுது என் பதிவுகளை திரட்டிகளில் இணைத்த கேபிள்ஷங்கர் மற்றும் வால்பையன் அவர்களுக்கும் எனது கோடான கோடி நன்றிகள். 


இத்தனை பதிவுகளுக்கு பிறகு சில நூறு ரூபாய்கள் செலவு செய்து கூகிள் நிறுவனத்தின் கூகிள் ஆட்ஸ் வாங்கியிருக்கிறேன்.  இதன்  மூலமாவது சிறு வருமானம் வர வழி வகுத்துக் கொடுங்கள்.  இந்தியா மட்டுமல்லாமல் வெளி நாடுகளில் வசிக்கும் நண்பர்கள் தங்கள் பதிவுகளை படிக்கும் பொழுது தாங்கள் ஒரு கிளிக் செய்தால் மிகவும் உதவியாக இருக்கும்.  செய்வீர்கள் என்று நினைக்கிறேன்.   என்றும் உங்கள் ஆதரவையும் பங்களிப்பையும் நாடி நிற்கும்  உங்களில் ஒரு நண்பன்.



நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

சட்டரீதியான மென்பொருளுடன் படிப்பதற்கு புத்தகம் மற்றும் பசிக்கு உணவு

நண்பர்களே அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2011

இன்று நாம் பார்க்க போகும் மென்பொருள் யூனிப்ளு சிஸ்டம் ட்விக்கர் UniBlue System Tweaker 2011.   இந்த மென்பொருள் செய்யும் வேலைகள் ஏராளம் என்றாலும் சிலவற்றை மட்டும் பார்ப்போம். 

இந்த மென்பொருள் மூலம் உங்களுடைய மவுஸினால் வலது கிளிக் செய்வீர்கள் அல்லவா அதில்  எளிமையாக மாற்றங்கள் செய்ய முடியும். 

இதன் வழியாக விண்டோஸில் இயங்கும் பயர்வால் விண்டோஸ் அப்டேட்களை நிறுத்தவும் செயல்படுத்தவும் முடியும்.

விண்டோஸ் முதலில் இயங்கும் பொழுது அதாவது Startup போது இயங்கும் மென்பொருட்களை நிறுத்த முடியும்.

இது போன்று நிறைய உண்டு இந்த மென்பொருளில் .

இந்த மென்பொருள் யூனிப்ளு நிறுவனத்தினரால் புது வருட கொண்டாட்டமாக ஜனவரி 15, 2011 வரை இலவசமாக வழங்கப்படுகிறது.  இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒரு படிவத்தை நிரப்பினால் போதுமானது.


முதலில் இந்த தளத்திற்கு செல்லுங்கள் சுட்டி

பிறகு இந்த பக்கத்திற்கு செல்லும்.

இந்த பக்கத்தில் உங்கள் பெயர், ஊர் மற்றும் மின்னஞ்சல் முகவரி தந்து Complete Registration என்ற பட்டனை தட்டுங்கள்

ஒரு சில விநாடிகளில் உங்களுக்கான மென்பொருள் தரவிறக்க சுட்டி மற்றும் மென்பொருளுக்கான உரிமம் எண் Serial Key காட்டப்படும்.   அதன் மூலம் மென்பொருளை தரவிறக்கம் செய்து அந்த உரிமம் எண்ணை உபயோகப்படுத்தி முழு மென்பொருளின் பயனை அடையலாம்.  அத்துடன் உங்களுக்கு  இந்த மின்னஞ்சல் முகவரி ststores@mag.unibluenews.com வழியாக மின்னஞ்சல் வரும்.  அதில் மென்பொருளின் உரிமம் எண் மற்றும் மென்பொருள் தரவிறக்க சுட்டி அனைத்தும் இருக்கும். 

இந்த மென்பொருளை பெற சுட்டி

இந்த மென்பொருள் சலுகை  ஜனவரி 15, 2011 வரை மட்டுமே முந்துங்கள்



எனக்கு பிடித்த ஆன்டிவைரஸ் மென்பொருள்


காஸ்பர்ஸ்கை

இந்த ஆன்டி வைரஸ் மென்பொருளை என் வீடு மற்றும் அலுவலகத்திலும் உபயோகிக்கிறேன்.  அதுமட்டுமல்லாமல் அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய வாடிக்கையாளர்களுக்கும் பரிந்துரைக்கும் மென்பொருள்.  இந்த மென்பொருள் மிக குறைவான விலையில் கிடைக்கிறது ஆன்டி வைரஸ் விலை 450/- ம் இண்டெர்நெட் செக்யூரிட்டி விலை 650/- க்கும் கிடைக்கிறது.  இந்த மென்பொருளை மூன்று கணினிகளில் உபயோகிக்கும்படியும் கிடைக்கிறது.  விலை 950 /- ஒருவர் 650 செலவழிப்பதற்கு பதில் அதில் பாதி விலை 350 /- செலவழித்தால் போதும்.



நண்பர்கள் உறவினர்கள் மூன்று பேர் சேர்ந்து வாங்கினால் காசு மிச்சமாகும்.  சென்னையில் அனைத்து  செல்போன் கடைகள் மற்றும் அண்ணா சாலை ரிச்சி தெருவிலும் கிடைக்கிறது.  எத்தனையோ ஆயிரம் செலவு செய்து கணினி வாங்கி அதன் வழியாக இணையத்தை அணுகினால் அதன் வழியாக கொக்கி போட்டு உள்ளே நுழையும் ஹேக்கர்கள் குழந்தைகளை ஆபாச தளங்கள் மற்றும் வக்கிரம் நிறைந்த தளங்கள், கொலை கொள்ளை போன்ற விளையாட்டு தளங்களில் இருந்து கணினியையும் உங்கள் வருங்கால சந்ததியையும் காப்பாற்ற வேண்டும் என்றால் முதலில் ஆன்டி வைரஸை நிறுவுங்கள்.

கேபிள் சங்கர் புத்தக வெளியீடு

நமது மூத்த பதிவரும் திரைப்பட இயக்குநரும் நண்பருமான கேபிள் சங்கரின் மீண்டும் ஒரு காதல் கதை புத்தகம் வெளியீடு இன்று மாலை ஆறு மணியளவில் நடைபெறுகிறது.  அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்துவோம்



நமது நண்பர் வால்பையன் நிறைய உதவிகள் செய்தவர் அலுவலகத்தில் பதிவை போட்டு விட்டு வீட்டிற்கு வந்து திரட்டிகளில் இணைத்து கொண்டிருந்தேன்.  பிறகு ஒரு முறை அவரிடம் உதவி என்று கேட்டு சென்றேன்.  அவர் உடனே சரி என்று கூறி விட்டார் அன்றைய பதிவு மட்டுமல்ல கடந்த வருடம் வரை என் பதிவை இணைப்பவர் நண்பர் வால்பையன்.  அவர்கள் கடந்த வருடத்தின் இறுதியில் ஒரு உணவகத்தை திறந்துள்ளார்  அவர் வசிக்கும் ஊரிலேயே உணவகத்தை திறந்திருக்கிறார்.  உணவுக்கான ருசிக்கும் கவனிப்புக்கும் நான் கியாரண்டி நண்பர்களே கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் நண்பர்கள அனைவரும் ஒரு நடை போய் ருசித்து வாருங்கள்.   திரும்ப திரும்ப நீங்களே செல்ல ஆரம்பித்து விடுவீர்கள்.  உணவகத்தின் பெயர் பூர்வாஸ் ஃபைன் டைன் பன்னாட்டு உணவு வகைகள் மற்றும் இந்தியாவின் சைவம் மற்றும் அசைவம் அனைத்தும் கிடைக்கும். 


உணவகத்தின் முகவரி

பூர்வாஸ் ஃபைன் டைன்,
#2, வெங்கிடசாமி சாலை கிழக்கு,
ஆர். எஸ். புரம்,
(சிந்தாமணி பெட்ரோல் பங்க் அருகில்)
கோயம்புத்தூர் - 641 002.

தொலைபேசி : 0422 - 4376437




நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

ஏவிஜி இண்டெர்நெட் செக்யூரிட்டி ஆன்டி வைரஸ் ஒரு வருடத்திற்கு இலவசம் அனைவருக்கும்

நண்பர்களே மிகவும் பிரபல ஆன்டி வைரஸ் நிறுவனம் ஏவிஜி தன் ஏவிஜி ஆன்டி வைரஸ் மென்பொருளை இலவசமாக ஒரு வருடத்திற்கு தருகிறது.  இந்த மென்பொருள் மிகவும் பிரபலமானது.  ஏவிஜி இண்டெர்நெட் செக்யூரிட்டி 2011. இந்த மென்பொருளை தரவிறக்க நீங்கள் செய்ய வேண்டியது.  உங்கள் மின்னஞ்சல் முகவரி  மற்றும் எவ்வாறு உங்களுக்கு இந்த செய்தி தெரிய வந்தது.  என்று குறிப்பிட்டால் போதும் உங்கள் மின்னஞ்சல் முகவரி 2 அல்ல்து 3 நாட்களுக்குள் ஒரு வருடத்திற்கான இலவச கீ வந்து விடும்.  நீங்கள் இந்த பாரத்தை முடித்தவுடன் மென்பொருளுக்கான தரவிறக்க லின்க் வந்து விடும்.



ஒரு வருடத்திற்கான ஏவிஜி இண்டெர்நெட் செக்யூரிட்டி 2011 பெற பதிவு செய்ய வேண்டிய இணையதள முகவரி சுட்டி


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை