பிடிஎப் பாஸ்வேர்ட் கண்டுபிடிக்க மற்றும் வைபை வாட்சர் உங்களுக்காக

நண்பர்களே தொடர்ந்து அலுவல் பணி காரணமாக வெளி இடங்களுக்கு பயணங்கள் தொடர்ந்து இருப்பதால் தொடர்ச்சியாக பதிவுகள் எழுத முடியவில்லை மன்னிக்கவும்.  இதோ ஒரு புத்தம் புதிய பதிவு உங்களுக்காகவே வாருங்கள் பதிவுக்கு செல்வோம்.

நம் வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க  பிடிஎப் பாஸ்வேர்ட் படிக்கும் முறை குறித்த பதிவுகள் நீக்கப்பட்டுள்ளது. மன்னிக்கவும் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டுகிறேன்.


வயர்லெஸ் நெட்வொர்க் வாட்சர்

இப்பொழுதெல்லாம் கணினி இல்லாத வீடு கிடையாது.  அது போல இணைய இணைப்பு இல்லாத வீடும் கிடையாது.   அவ்வாறு இணைய இணைப்பு வாங்குபவர்கள் வயர்லெஸ் எனப்படும் வை-பையுடன் இணைந்து இருக்கும். இவ்வாறு கனெக்ஷன் வைத்திருப்பவர்கள் சரியான கான்பிகரேஷன் இல்லாமல் சுலபமாக கனெக்ட் செய்ய வேண்டும் என்பதற்காக வை பை பாஸ்வேர்ட் கொடுக்காமல் கான்பிகரேசன் செய்வார்கள் சிலர்.  அவ்வாறு செய்வதனால் என்ன ஆகும் திறந்த வீட்டில்  ஏதோ நுழைவது போல கிடைத்தது வழி என்று அனைவரும் நுழைந்து  உங்கள் கணக்கில் பிரவுஸ் செய்து உங்களுக்கு பில் எகிற வைப்பார்கள். 

சரி உங்கள் வயர்லெஸ்ஸில் யார் இணைந்திருக்கிறார்கள் என்று கண்டறிய இந்த சிறிய மென்பொருள் மட்டும் போதும்.

இந்த சிறிய மென்பொருள்  217 கேபி மட்டுமே

இந்த சிறிய மென்பொருள் மூலம் உங்கள் வைபையில் இணைந்திருப்பவரது ஐபி முகவரி, கணினியின் பெயர், கணினி எண் (Mac Address),  எந்த வகையான நெட்வொர்க் அடாப்டர்  என்றும் தெரிந்து கொள்ள முடியும்

மென்பொருள் தரவிறக்க முகவரி

கூகிளில் நாளுக்கு நாள் முன்னேற்றங்களை புகுத்திக் கொண்டிருக்கின்றனர் இனி உங்கள் ஜிப் மற்றும் ரேர் கோப்புகளை நேரடியாக உங்கள் கூகிள் டாக்ஸில் பார்க்க முடியும்.  ஜிப்பினுள் உள்ள கோப்புகளில் தேவையான கோப்பினை மட்டும் தரவிறக்க முடியும். கூகிளுக்கு நன்றி சொல்வோம்.  Thanks to Google & Google Team 

 எஸ் எம் மல்டிமீடியா ப்ளேயர்

இணையத்தில் எத்தனையோ மீடியா ப்ளேயர்கள் உள்ளன.  அதில் சில மிகவும் சக்கை போடுகிறது.  அது விஎல்சி, விண்டோஸ் மீடியா ப்ளேயர், கோம் ப்ளேயர்,  அந்த் வரிசையில் ஒரு புதிய மீடியா ப்ளேயர்.

அதன் பெயர் எஸ் எம் ப்ளேயர்.

இந்த மென்பொருள் மிகவும் வேகமாக வீடியோ படங்களை திறந்து படிக்க கூடியது.

உங்களால் சப்டைட்டில் சேர்த்து படம் பார்க்க முடியும்.

படத்திற்கும் ஆடியோவிற்கும் சம்பந்தம் இல்லாமல் தாமதமாக ஆடியோ வரும் அதனை நமக்கு தேவையானவை போல் மாற்ற முடியும்.

எஸ் எம் மீடியா ப்ளேயரில் இருந்து கொண்டு நேரடியாக http://www.opensubtitles.org/ வலைத்தளத்தில் தேடி சப்டைட்டிலை சேர்க்க முடியும்.  இது போன்று நிறைய வசதிகள். 

இது ஒரு திறந்த நிலை மென்பொருள் Open Source என்பதால் இன்னும் அதிகமாக மேம்படுத்தப்படும் என கட்டாயம் நம்பலாம்.

எஸ் எம் ப்ளேயர் தரவிறக்க சுட்டி  (மன்னிக்கவும் சுட்டி இணைக்க மறந்து தாமதமாக இணைத்தேன்) 

இந்த மீடியா ப்ளேயரையும் முயற்சித்து பாருங்கள் உங்களுக்கு கட்டாயம் பிடிக்கும். 

பதிவினை படிக்கிற நண்பர்கள் தொடர்ந்து நண்பர்களிடமும் உறவினர்களிடமும் நம் தளத்தினை எடுத்து கூறி விளம்பரப்படுத்தவும் முடிந்தால் விளம்பரங்களையும் கொஞ்சம் கிளி பாருங்கள்.  சிலரிடம் நம் வாசகர்களுக்காக இலவச மென்பொருள் குறித்து பேசி வருகிறேன்.  விரைவில் அது குறித்த பதிவும் வெளிவரும்.


நன்றி மீண்டும் வருகிறேன்.

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை