லிபேர் ஆபிஸ் மென்பொருள் திறந்த நிலை மென்பொருள் குறித்த கட்டுரை

நண்பர்களே நம் அனைவரும் விண்டோஸில் வேர்டு, எக்ஸல், பவர் பாய்ண்ட் போன்ற கோப்புகளை திறக்க மற்றும் எடிட் செய்ய வேண்டும் என்றால் நம்மிடம் மைக்ரோசாப்ட் ஆபிஸ் வேண்டும்.   மைக்ரோசாப்ட் ஆபிஸ் எல்லாருமே உபயோகிக்கிறார்கள்.  ஆனால் காசு கொடுத்து வாங்கி அல்ல இணையத்தில் இருந்து திருடியும், இன்னொருவர் வாங்கிய உரிமையை இவர்களும் உபயோகபடுத்திக் கொள்கிறார்கள்.  இவ்வாறு இணையத்தில் இருந்து ட்ரையல் வெர்சன் மற்றும் திருட்டு மென்பொருளை நிறுவுவதால் வைரஸ் மற்றும் நச்சு மென்பொருட்கள் வர வாய்ப்பு உண்டு.  இது மாதிரி திருட்டு மென்பொருளை உபயோகிப்பதை விட திறநத நிலை மென்பொருட்கள் மிக அருமையாக வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது. 


அதன் வரிசையில் இன்று நாம் பார்க்க போகும் மென்பொருள்  லிபர் ஆபிஸ் இந்த மென்பொருள் ஒரு திறந்த நிலை கட்டற்ற மென்பொருள்.  இந்த மென்பொருள் இதுவரை பீட்டா என்னும் சோதனை பதிப்பாகவே இருந்து வந்தது.  இப்பொழுது இந்த மென்பொருளின்  சோதனை பதிப்பு முடிந்து Stable என்னும் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இந்த Stable பதிப்பு வெர்சன் Libre Office 3.3.0 என வெளியிடப்பட்டுள்ளது.  இந்த மென்பொருளில் வேர்ட் ப்ரோஸசர், ஸ்ப்ரெட்சீட்,  ப்ரசண்டேசன் மேனேஜர், சார்ட், டைக்ராம் வரையவும் முடியும். ODBC என்னும் டேட்டாபேஸ்களை இணைக்கவும் முடியும் என்பது சிறப்பம்சம்

இந்த மென்பொருள் போர்ட்டபிள் மென்பொருளாகவும் கிடைப்பது என்பது இன்னும் ஒரு சிறப்பம்சம்.  சுட்டி

இந்த மென்பொருள் வழியாக பிடிஎப் கோப்புகளையும் திறக்க முடியும். திறக்க மட்டுமல்ல பிடிஎப் கோப்புகளில் எதை மாற்ற விரும்புகிறீர்களோ அதை எடிட் செய்து மாற்ற முடியும்  என்பது இதன் சிறப்பு.


இந்த மென்பொருளின் ஸ்ப்ரெட் ஷீட்டில் ஒரு மில்லியன் (Row) வரிசை வரை உண்டு.  ஆனால் மைக்ரோசாப்ட் எக்ஸலில் 65000 மட்டுமே உண்டு.


லோட்டஸ் வேர்ட் போன்ற கோப்புகளையும் இந்த மென்பொருளில் சுலபமாக கையாளலாம்.

இந்த மென்பொருள் ஒரு திறந்த நிலை கோப்பு என்பதால் நீங்கள் ஒரு முறை தரவிறக்கம் செய்து எத்தனை கணினிகளில் வேண்டுமானலும் பயன்படுத்தலாம்.  அதே போல் எத்தனை காப்பி வேண்டுமானலும் எடுத்து உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கும் பயன்படுத்த தரலாம்.  நீங்கள் ஒரு மென்பொருள் வல்லுநராக இருந்தால் உங்கள் தேவைக்கு ஏற்ற மாதிரி நிறைய மாற்றங்கள் செய்து கொள்ளலாம். யாரும் உங்களை கேள்வி கேட்க மாட்டார்கள்.

இந்த மென்பொருள் முப்பது வகை மொழிகளில் கிடைக்கிறது.  இதில் நம் தாய்மொழி தமிழும் அடக்கம் என்பதில் நாம் பெருமைப்படலாம். 

இந்த மென்பொருளை நேரடியாக தரவிறக்காலாம்.   அல்லது டொரண்ட் வழியாகவும்  தரவிறக்கலாம்.  அதற்கான வசதி அந்த வலைத்தளத்திலேயே உண்டு.

லிபேர் ஆபிஸ் மென்பொருள் தரவிறக்க சுட்டி

லிபேர் ஆபிஸ் போர்ட்டபிள் தரவிறக்க சுட்டி

டொரண்டாக தரவிறக்க தரவிறக்கம் அருகிள் ஒரு கட்டம் இருக்கும் Downloading using Bittorrent என்று அதை டிக் செய்தால் போதும்.

இந்த மென்பொருள் நிறுவ உங்களிடம் விண்டோஸ் 2000 (சர்வீஸ் பேக் 4), எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 இருந்தால் போதும்.

பென்டியம் 3 அல்லது அதற்கு மேல் இருந்தால் போதுமானது.  அத்துடன் குறைந்த பட்சம் 256 எம்பி நினைவகம் போதும் 512 எம்பி இருந்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக செயல்படும். ( இப்பொழுதுதான் குறைந்தது 1 ஜிபி நினைவகம் இல்லாத கணினி இல்லையே )



இஅசூஸ் பார்டிசன் மென்பொருள் போலவே இன்னொரு மென்பொருள் Aomei Partition Assistant Professional Edition  இந்த மென்பொருள் இன்று வரை (28-01-2011)இலவசமாக வழங்கப்படுகிறது.  தேவையானவர்கள் தரவிறக்கிக் கொள்ளவும்.  சுட்டி
 

நண்பர் வேலன் அவர்கள்  500 பதிவை எட்டியிருக்கிறார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.  என்னுடைய அடுத்த பதிவு 400 வது பதிவு நேரம் இல்லாததால் குறைவாகவே எழுதுகிறேன்.   உங்கள் ஆதரவு மட்டுமே என்னை மேன்மேலும் உயர்த்துகிறது.



ஒரு அறிவிப்பு 

இந்த வலைத்தளம் மூலம் எனக்கு எதுவும் எந்த ஆதாயமும் கிடைக்காமல் இருந்த நேரத்தில் தமிழ் கம்ப்யூட்டர் நிறுவனம் மட்டுமே எனக்கு சிறு உதவி செய்து வருகிறது.  என் படைப்புகளை வெளியிட்டு அதன் மூலம் வரும் சிறு தொகையை எனக்கு அளித்து வருகின்றனர்.    நானும் கஷ்டப்பட்டு தான் இந்த பதிவுகளை எழுதுகிறேன்.  அதனால் நான் எழுதும் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் உபயோகமானவை என்றே நம்புகிறேன்.  இவ்வாறிருக்கையில் வரும் நண்பர்கள் என் வலைத்தளத்தில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்து பார்ப்பதன் மூலம் என்னால் மாதம் ஒரு சிறு தொகையை ஈட்ட முடியும் என்று நம்புகிறேன்.  ஆகையால் பதிவுகளை படிக்கும் நண்பர்கள் விளம்பரங்களை கிளிக் செய்து வருவாயை ஈட்ட உதவி செய்ய வேண்டுகிறேன். உதவுங்கள் இன்னும் தரமான ஆக்கங்களை உருவாக்க உதவுங்கள்.  அத்துடன் இந்த பதிவுகள் தரமுள்ளதாக இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் இதனை பற்றி தெரியபடுத்துங்கள்.  அனைத்து திரட்டிகளிலும் நீங்கள் போடும் ஒட்டுகளினால் இன்னும் உலகம் முழுக்க தமிழர்கள் அனைவருக்கும் போய்ச் சேர வாய்ப்பு கிடைக்கும்.

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

சட்டரீதியான MKV வீடியோ கோப்பிலிருந்து எந்த ஒரு வீடியோ கோப்பிற்கும் மாற்றும் மென்பொருள் இலவசம்

நண்பகர்ளே சென்ற பதிவில் ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.  இனி இது போல் தவறு ஏதும் ஏற்படாமல் எழுத முயற்சிக்கிறேன்.  அனைத்து தோழர்களுக்கும் பதிவர்களுக்கும் என்னை பாலோ செய்யும் நண்பர்களுக்கும் என் சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.


 இனி இன்றைய பதிவிற்கு செல்வோம்.

எம்கேவி வீடியோ கோப்பிலிருந்து எந்த ஒரு வீடியோ கோப்பிற்கும் மாற்ற ஐஸ்கைசாப்ட் நிறுவனத்தினரின் மென்பொருள் மிகவும் உபயோகமாக உள்ளது.  இந்த நிறுவனத்தினர் இப்பொழுது இதை இலவசமாக தருகின்றனர். 

இந்த மென்பொருளின் மூலமாக சுலபமாக MKV To

ASF - Advanced Streaming Format(*.asf), MOV - QuickTime(*.mov), M4V - MPEG-4 Video(*.m4v), MP4 AVC(*.mp4), MPEG-4 Video Movie(*.mp4), WMV - Windows Media Video(*.wmv), MKV(Matroska) Video (*.mkv), Audio Video Interleaved Format(*.avi), DV-Digital Video Format(*.dv), DVD-Video Format - NTSC(*.vob), DVD-Video Format - PAL(*.vob), DVD-Video Format - SECAM(*.vob), MPEG-1 Movie - NTSC(*.mpg), MPEG-1 Movie - PAL(*.mpg), MPEG-1 Movie - SECAM(*.mpg), MPEG-2 Movie - NTSC(*.mpg), MPEG-2 Movie - PAL(*.mpg), MPEG-2 Movie - SECAM(*.mpg), MPEG-4 Movie(*.mp4), HD MPEG2-TS Video(*.ts), HD H.264-TS Video(*.ts), HD MPEG2-TRP Video(*.trp), HD H.264-TRP Video(*.trp), HD AVI Video(*.avi), HD MPEG-4 Video(*.mp4), HD MPEG-2 Video(*.mpg), HD WMV Video(*.wmv), HD H.264 Video(*.mov), iPod touch H.264 Video(*.mp4), iPod touch MPEG-4 Video(*.mp4), iPod nano H.264 Video(*.mp4), iPod nano MPEG-4 Video(*.mp4), iPod classic H.264 Video(*.mp4), iPod classic MPEG-4 Video(*.mp4), iPod Video H.264(*.mp4), iPod Video MPEG-4(*.mp4), iPhone 3GS Video MPEG-4(*.mp4), iPhone 3GS Video H.264(*.mp4), iPhone 3G MPEG-4 Video(*.mp4), iPhone 3G H.264 Video(*.mp4), iPhone Video MPEG-4(*.mp4), iPhone H.264 Video(*.mp4), iPad Video MPEG-4(*.mp4), iPad Video H.264(*.mp4), iPad HD Video(*.mp4), Nexus One MPEG-4(*.mp4), Motorola Droid(*.mp4), Motorola CLIQ(*.mp4), HTC DROID ERIS(*.mp4), HTC Hero(*.mp4), HTC T-Mobile G1(*.mp4), HTC G2 Magic(*.mp4), HTC Tattoo(*.mp4),

HTC T-MOBILE mytouch 3G(*.mp4), SamSung i7500(*.mp4), Android MPEG-4(*.mp4), Apple TV H.264 Video(*.mp4), Apple TV MPEG-4 Video(*.mp4), Flash Video Format(*.flv), FLV MPEG-4 Movie(*.f4v), SWF Format(*.swf), Creative Zen VPLUS AVI Video(*.avi), Creative Zen Player AVI Video(*.avi), Creative Zen Player WMV Video(*.wmv), Creative Zen Player MPEG-1 Video (*.mpg), Creative Zen Player MPEG-2 Video (*.mpg), Creative Zen Player MPEG-4 Video (*.mp4), walkman Video(*.mp4), Zune Video - Windows Media Video(*.wmv), Zune 2(640*480) WMV Video(*.wmv), Zune 2 (640*480) MPEG-4 Video(*.mp4), Zune HD MP4 Video (*.mp4), Zune HD WMV Video (*.wmv), Mobile Phone Video - 3GP(*.3gp), Mobile Phone Video - 3GPP(*.3g2), 3rd Generation Partnership Project - 3GP(*.3gp), 3rd Generation Partnership Project 2 - 3GPP(*.3g2), Sony Ericsson MPEG4 series(*.mp4), Samsung 3GP series(*.3gp), Samsung MPEG4 series(*.mp4), Motorola MPEG4 series(*.mp4), Palm Pre Video WMV(*.wmv), Palm Pre Video MPEG-4(*.mp4), Palm Pre Video H.263(*.3gp), LG MPEG4 series(*.mp4), Nokia MP4 series(*.mp4), Nokia 3GP series(*.3gp), Nokia FLV series(*.flv), Nokia WMV series(*.wmv), BlackBerry Tour series(*.mp4), BlackBerry Storm series(*.mp4), BlackBerry Storm series(*.wmv), BlackBerry Bold series(*.mp4), BlackBerry Bold series(*.wmv), BlackBerry Curve 8900(*.mp4), BlackBerry Curve 8500 series(*.mp4), BlackBerry Curve 8300(*.avi), BlackBerry Curve 8310(*.avi), BlackBerry Pearl Flip series(*.avi), BlackBerry Pearl series(*.avi), BlackBerry 8800 series(*.avi), BlackBerry AVI series(*.avi), BlackBerry 3GP series(*.3gp), BlackBerry MP4 series(*.mp4), BlackBerry WMV series(*.wmv), Archos 5/7 AVI Video(*.avi), Archos 5/7 WMV Video(*.wmv), Archos 605/704/705 AVI Video(*.avi), Archos 605/704/705 WMV Video(*.wmv), Archos 504/604 AVI Video(*.avi), Archos 504/604 WMV Video(*.wmv), Archos 404/405 AVI Video(*.avi), Archos 404/405 WMV Video(*.wmv), Archos AV500/AV700 AVI Video(*.avi), Archos AV500/AV700 WMV Video(*.wmv), Archos 105 WMV Video(*.wmv), Archos Player Video(*.avi), Sansa e200 serise(*.mov), Sansa View(*.avi), Sansa View(*.mp4), Sansa View(*.wmv), Sansa Fuze(*.mp4), MP3 - MPEG Layer-3 Audio(*.mp3), M4A - MPEG-4 Audio(*.m4a), AC3 - Dolby Digital AC-3(*.ac3), AAC - Advanced Audio Coding(*.aac), WMA - Windows Media audio(*.wma), WAV - Waveform Audio(*.wav), GG - Ogg Vorbis Audio(*.ogg), APE - Monkey's Audio(*.ape), MKA(Matroska) Audio(*.mka), SUN AU Format(*.au), AIFF-Audio Interchange File Format(*.aiff), FLAC-Free Lossless Audio Codec(*.flac), M4B - MPEG-4 Audio(*.m4b), HP iPAQ Video(*.wmv), iRiver Video(*.wmv), Dell Player Video(*.wmv), General Pocket PC Video(*.wmv)...

இத்தனை கோப்புகளாக மாற்ற முடியும்.

இந்த மென்பொருளின் $25  இந்திய மதிப்பில் ஆயிரத்திற்கும் மேல்

அத்துடன் MKV கோப்பில் சப்டைட்டில் சேர்க்க மற்றும் எடிட் செய்யவும் முடியும்.

MKV ல் இருந்து MKA ஆடியோ கோப்பினை மட்டும் பிரித்து எடுக்கவும் முடியும்.

அத்துடன் மிகவும் வேகமாக கன்வெர்சன் செய்கிறது.

சுலபமாக புரிந்து கொள்ளும் வண்ணம் உள்ளது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி

மென்பொருளின் வலைத்தள சுட்டி



நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

கூகிளின் புதிய தொலைக்காட்சியை எவ்வாறு காணுவது??? எளிய வழி

நண்பர்களே கூகிளின் புதிய வடிவமாக கூகிள் தொலைக்காட்சி வெளி வர போகிறது. இந்த தொலைக்காட்சி காண நமக்கு செட் டாப் பாக்ஸ் தேவை நாம் சாதரணமாக உபயோகப்படுத்தும் செட்டாப் பாக்ஸ் உபயோகப்படாது.   இதில் என்ன புதிய விஷயம் என்கீறீர்களா அதுதான் அனைத்து தொலைக்காட்சிகளிலும் வருகிறதே எனலாம்.  இதன் சிறப்புகளை பட்டியலிடுகிறேன் கேளுங்கள்.
கூகிள் தொலைக்காட்சி குறித்த மேலதிக தகவல்களுக்கு சுட்டி

கூகிள் தொலைக்காட்சி காண செட்டாப் பாக்ஸ் வாங்க அணுக வேண்டிய சுட்டி

இது ஒரு உயர்தர தொலைகாட்சி (HDTV)

இந்த செட்டாப் பாக்ஸ் மூலமாக அதிவேக இணைய இணைப்பு பெற முடியும்.  Wifi வை பை இணைப்பு மூலமாக இணைய இணைப்பு பெற முடியும்.

நெட்வொர்க் வயர் மூலம் என்றால் 10/100 நெட்வொர்க் கார்டு உள்ளது.

வயர்லெஸ் மூலம் என்றால் 802.11a/b/g/n Wireless

இரண்டு யூஎஸ்பி போர்ட் உள்ளது.

இதனுடன் ஒரு கீ போர்ட் மற்றும் டச் பேட் இணைந்து வருவதால் செட்டாப் பாக்ஸ் வழியாக நாம் தொலைக்காட்சியின் ஊடே  நேரடியாக இணைய இணைப்பும் அணுக முடியும்.

ஒரு வருட லிமிடெட் வாரண்டியுடன் வருகிறது.

விலை 299$  இந்திய ரூபாயில்  கிட்டத்தட்ட ரூபாய் 14500 வரை வருகிறது.

ஆனால் இந்த செட் டாப் பாக்ஸ் தயாரித்தவர்கள் லாஜிடெக் நிறுவனத்தினர் கூகிள் தொலைக்காட்சிக்காக.



சிஸ்டம் மேட்ரிக்ஸ்

ஓரே மென்பொருளில் உங்கள் சிஸ்டம் இன்போ மற்றும் உங்கள் சிஸ்டம் யூசேஜ் வன் தட்டின் கொள்ளலவு,  நீங்கள் அப்லோடு மற்றும் தரவிறக்கும் அளவு, மற்றும் நேரம் போன்றவற்றை தெரிந்து கொள்ள இந்த மென்பொருள் உதவும்.  இந்த மென்பொருளை நிறுவிய பிறகு டெஸ்க்டாபில் அமர்ந்து கொள்ளும்.  உங்கள் கணினியில் எந்நேரமும்  நடக்கும் விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். இதுமட்டுமல்ல இதில் இருக்கும் விஷயங்கள் பலப்பல எழுதுவதற்குள் எனக்கு தாவூ தீர்ந்து விடும் என்பதால் நேரடியாக ஆங்கிலத்தில்.  அத்துடன் சில விஷயங்கள் ஆங்கிலத்தில் எழுதினால் படிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.

Date, Time, CPU Usage, User Name, IP Address, Machine Name, Windows Uptime, Physical Memory Total ,    Physical Memory Used, Physical Memory Free, Virtual Memory Total, Virtual Memory Used, Virtual Memory Free, TCP Bytes In / OUT, Total TCP In / Out, Average TCP In / Out, Total Unread Email, Total Email Size     , Rotating Email Stats, Recycle Bin Files, Recycle Bin Size, Drive Volume Label, Drive Total Space, Drive Free Space, Drive Used Space, Generic Text, Mouse position, Active Window, System Mute status, System Volume, Microphone Volume,     Wave Volume, MIDI Volume, CD Volume,     Line Volume, Pixel color, Media State, Media Artist, Media Track, Media Track No., Media Track length, Media Track position, Media Track remain, Media Bitrate, Media Samplerate, Media Channels, OS Name, OS Build, OS Version Info, GMT-based Times, Timezone Desc., CAPS Lock, Num Lock, Scroll Lock, Number of CPUs, Network Connected, Weather Description, Outside Temperature, Dew Point, Relative Humidity, Heat Index, Barometric Pressure Pressure Trend, Wind Speed, Wind Direction, Wind Chill, Visibility, Registry Value, Power Source, Battery Status, Battery Used, Battery Free, Battery Time Used, Battery Time Left, Battery Time Total CPU #1 MHz, CPU Description, Wireless Strength, Wireless SSID

மென்பொருள் தரவிறக்க சுட்டி


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

உங்களின் கணினி எந்திரத்தின் வேகத்தை கூட்ட வேண்டுமா சூப்பர் மென்பொருள்

நண்பர்களே உங்களிடம் உள்ள டிவிடி வீடியோ கோப்புகளை உயர்தர (HD) வீடியோ கோப்பாகவும், வீடியோ கோப்பிலிருந்து ஆடியோவை மட்டும் தனியாக பிரித்தெடுக்க, டிவிடியிலிருந்து எந்த ஒரு வீடியோ கோப்பாகவும் மாற்ற இந்த மென்பொருள் உபயோகப்படுத்தலாம். 

இந்த மென்பொருளின் பெயர் ஐடூல்சாப்ட் வீடியோ ரிப்பர் இந்த மென்பொருள் அக்டோபர் 10ஆம் தேதிவரை இலவசமாக தரவிறக்க தரப்படுகிறது.  இதை தரவிறக்க இங்கே செல்லவும் சுட்டி  தளத்திற்கு செல்ல விரும்பாதவர்கள் கீழே இருந்தே தரவிறக்கிக் கொள்ளலாம்.

 
Register Name: giveaway@itoolsoft.com                   
Register Code: r4--KT--RF--gu--Ch--sV--aR--EV--1o--9f





Register Name: giveaway@itoolsoft.com                   
Register Code: 2a--Ml--jH--Qi--zz--fg--NT--bQ--u2--NT
இந்த தரவிறக்க சலுகை அக்டோபர் 10ஆம் தேதி வரை மட்டுமே நண்பர்களே



கூகிள் இணைய முகவரி சுருக்கி



கூகிளின் புதிய வசதி மிகப்பெரிய இணைய முகவரிகளை சுருக்கும் வசதி உங்களிடம் கூகிள் கணக்கு இருந்தால் உங்கள் சுருக்கப்பட்ட முகவரி எத்தனை முறை கிளிக் செய்யப்பட்டு இருக்கிறது என்பதையும் காணலாம். 



சுருக்கப்பட்டி சுட்டி  -  http://goo.gl/82fM நம் புதிய தளத்தின் புதிய பதிவு சுட்டியை உதாரணத்திற்கு சுருக்கி தந்திருக்கிறேன்.


நீங்கள் புதியதாக பிராண்டட் நிறுவனத்தின் கணினி வாங்குகிறீர்க்ள் உதாரணத்திற்கு HP கணினி வாங்கினால் அதில் அவர்கள் நிறுவனத்திற்கான ப்ரொமசனல் ப்ரோக்ராம்கள், தேவையில்லாத சர்வீஸ்கள், தேவையில்லாத டூல்பார்கள், ட்ரையல் ஆபர்கள் போன்றவற்றிகான மென்பொருள் நிறுவி தருவார்கள்.  இதனால் புதிய கணினியில் நிறைய இடத்தையும் வேகத்தினையும் குறைக்கும்.

 

இதற்கு ஒரு மென்பொருள் இருக்கிறது.  இந்த மென்பொருள் மூலம் உங்கள் கணினியை இந்த புதிய கணினியில் தேவையில்லாத நிறுவி உள்ள மென்பொருட்களை நீக்க முடியும். இதன் மூலம் உங்கள் கணினியின் தொடக்க வேகமும் அப்ளிகேசன்களை இயக்கும் வேகமும் மிக வேகமாக இயக்க முடியும்.   இதன் பெயர் ஸ்லிம் கம்ப்யூட்டர் Slim Computer இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

அலுவலகத்தில் இருந்து வீட்டுக் கணினியை தொடர்பு கொள்ள எளிய வழி

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 496க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி 

நண்பர்களே உங்கள் வீட்டு கணினியில் உள்ள கோப்புகளை அலுவலக கணினியில் இருந்து கொண்டு பார்ப்பது எப்படி இதற்கு டீம் வீவர் வழியாக பார்க்கலாம் என்று கூறுவீர்கள்.  சரிதான் ஆனால் டீம் வீவர் திறந்து வைத்து அதில் வரும் ஐடி மற்றும் கடவுச் சொல் கொடுத்தால்தான் எதிர்ப்பக்கம் உள்ள கணினியை பார்க்க முடியும்.  ஆனால் இந்த மென்பொருள் மூலமாக எதிர்ப்பக்கம் உள்ள கணினி ஆன் செய்திருந்தால் மட்டும் போதும் இதை எப்படி செய்வது என்று சொல்கிறேன்.

இதற்கு தேவை ஒரு ஜிமெயில் ஐடி மற்றும் ஜிப்ரிட்ஜ் மென்பொருள்

முதலில் ஜிபிரிட்ஜ் மென்பொருளை இங்கு இருந்து தரவிறக்கி கொள்ளுங்கள்.  சுட்டி


பின்னர் இந்த மென்பொருளை உங்கள் வீட்டில் உள்ள கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள்.

நிறுவிய பிறகு உங்கள் கணினியில் உங்களுடைய ஜிமெயில் ஐடி மற்றும் கடவுச்சொல் கேட்கும்.  கொடுங்கள் பிறகு AutoStart மற்றும் Remember me என்பதனை தேர்வு செய்து கொள்ளுங்கள் வேண்டும் என்றால்.

AutoStart தேர்வு செய்தால் விண்டோஸ் ஆன் செய்த பிறகு தானாகவே ஜிபிரிட்ஜ் அப்ளிகேசன் திறக்கும்.

Remember me என்பதை தேர்வு செய்தால் உங்கள் ஜிமெயில் ஐடி மற்றும் கடவுச்சொல் நினைவில் வைத்திருக்கும்.

இந்த இரண்டையும் தேர்வு செய்வது நல்லதே.

பிறகு உங்கள் கணினியில் இது போல டாஸ்க்மேனஜரில் அமர்ந்து கொள்ளும்.

இது போல இரண்டு பக்கமும் செய்து கொள்ளுங்கள்.



அடுத்து நீங்கள் எந்த கணினியை நீங்கள் பார்க்க விரும்புகிறீர்களோ அந்த கணினியில் டாஸ்க்மேனஜரில் அமர்ந்துள்ள  ஜிப்ரிட்ஜில் வலது கிளிக் செய்து அதில் Show GBridge என்பதனை தேர்வு செய்யுங்கள்.

பிறகு DesktopShare என்பதனை கிளிக் செய்தால் அதில் வரும் Configure GBridge DesktopShare (VNC) என்பதனை கிளிக் செய்யுங்கள்


அங்கு முதலில் Allow என்பதனை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

அடுத்து இரண்டாவது பெட்டியில் Allow after Verify DesktopShare password (use built-in VNC server)  என்ற பட்டனை தேர்வு செய்தால் கீழே ஒரு கடவுச்சொல் பெட்டி திறக்கும் அங்கு நீங்கள் ஒரு புது கடவுச்சொல் கொடுத்துக்கொள்ளுங்கள். ( உ.ம் - 12345@12345) பிறகு ஒகே பட்டனை அழுத்தி வெளி வாருங்கள்.

 அடுத்து உங்கள் எதிர்ப்பக்கம் உள்ள கணினியில் ஜிப்ரிட்ஜ் திறந்து அதில் உங்கள் வீட்டுக் கணினியில் கொடுத்த ஜிமெயில் ஐடி மற்றும் கடவுச்சொல் கொடுத்தால் உங்கள் வீட்டுக் கணினியை உங்கள் ஜிபிரிட்ஜில் உள்ள MyComputers பகுதியில் தெரியும்.


அந்த கணினியை வலது கிளிக் செய்து  Access Gbrige builtin VNC என்பதனை தேர்வு செய்யுங்கள் இப்பொழுது கடவுச்சொல் கேட்கும் நீங்கள் அந்த கணினியில் கொடுத்த ஒரு கடவுச்சொல் கொடுத்தீர்கள் அல்லவா ( உ.ம் - 12345@12345)  அதை இங்கே கொடுங்கள் முடிந்தது.


இது போல செய்ய ஜிபிரிட்ஜ் மென்பொருள், ஜிமெயில் ஐடி, இரண்டு பக்கமும் இணையம் இருந்தால் போதும்

இந்த மென்பொருள் மூலம் ஜிமெயில் நண்பர்களுக்கு அழைப்பு அனுப்பி கூகிள்சாட் செய்ய முடியும்.

இரண்டு கணினிகளுக்கு இடையே Sync செய்ய முடியும்.


ஜிபிரிட்ஜ் மென்பொருள் தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருள் மூலமாக நிறைய பயன்கள் உண்டு நீங்களும் முயற்சித்து பாருங்களேன்.

ஜிபிரிட்ஜ் குறித்த விக்கிபீடியாவின் விரிவான பதிவு சுட்டி




நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை