அலுவலகத்தில் இருந்து வீட்டுக் கணினியை தொடர்பு கொள்ள எளிய வழி

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 496க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி 

நண்பர்களே உங்கள் வீட்டு கணினியில் உள்ள கோப்புகளை அலுவலக கணினியில் இருந்து கொண்டு பார்ப்பது எப்படி இதற்கு டீம் வீவர் வழியாக பார்க்கலாம் என்று கூறுவீர்கள்.  சரிதான் ஆனால் டீம் வீவர் திறந்து வைத்து அதில் வரும் ஐடி மற்றும் கடவுச் சொல் கொடுத்தால்தான் எதிர்ப்பக்கம் உள்ள கணினியை பார்க்க முடியும்.  ஆனால் இந்த மென்பொருள் மூலமாக எதிர்ப்பக்கம் உள்ள கணினி ஆன் செய்திருந்தால் மட்டும் போதும் இதை எப்படி செய்வது என்று சொல்கிறேன்.

இதற்கு தேவை ஒரு ஜிமெயில் ஐடி மற்றும் ஜிப்ரிட்ஜ் மென்பொருள்

முதலில் ஜிபிரிட்ஜ் மென்பொருளை இங்கு இருந்து தரவிறக்கி கொள்ளுங்கள்.  சுட்டி


பின்னர் இந்த மென்பொருளை உங்கள் வீட்டில் உள்ள கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள்.

நிறுவிய பிறகு உங்கள் கணினியில் உங்களுடைய ஜிமெயில் ஐடி மற்றும் கடவுச்சொல் கேட்கும்.  கொடுங்கள் பிறகு AutoStart மற்றும் Remember me என்பதனை தேர்வு செய்து கொள்ளுங்கள் வேண்டும் என்றால்.

AutoStart தேர்வு செய்தால் விண்டோஸ் ஆன் செய்த பிறகு தானாகவே ஜிபிரிட்ஜ் அப்ளிகேசன் திறக்கும்.

Remember me என்பதை தேர்வு செய்தால் உங்கள் ஜிமெயில் ஐடி மற்றும் கடவுச்சொல் நினைவில் வைத்திருக்கும்.

இந்த இரண்டையும் தேர்வு செய்வது நல்லதே.

பிறகு உங்கள் கணினியில் இது போல டாஸ்க்மேனஜரில் அமர்ந்து கொள்ளும்.

இது போல இரண்டு பக்கமும் செய்து கொள்ளுங்கள்.



அடுத்து நீங்கள் எந்த கணினியை நீங்கள் பார்க்க விரும்புகிறீர்களோ அந்த கணினியில் டாஸ்க்மேனஜரில் அமர்ந்துள்ள  ஜிப்ரிட்ஜில் வலது கிளிக் செய்து அதில் Show GBridge என்பதனை தேர்வு செய்யுங்கள்.

பிறகு DesktopShare என்பதனை கிளிக் செய்தால் அதில் வரும் Configure GBridge DesktopShare (VNC) என்பதனை கிளிக் செய்யுங்கள்


அங்கு முதலில் Allow என்பதனை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

அடுத்து இரண்டாவது பெட்டியில் Allow after Verify DesktopShare password (use built-in VNC server)  என்ற பட்டனை தேர்வு செய்தால் கீழே ஒரு கடவுச்சொல் பெட்டி திறக்கும் அங்கு நீங்கள் ஒரு புது கடவுச்சொல் கொடுத்துக்கொள்ளுங்கள். ( உ.ம் - 12345@12345) பிறகு ஒகே பட்டனை அழுத்தி வெளி வாருங்கள்.

 அடுத்து உங்கள் எதிர்ப்பக்கம் உள்ள கணினியில் ஜிப்ரிட்ஜ் திறந்து அதில் உங்கள் வீட்டுக் கணினியில் கொடுத்த ஜிமெயில் ஐடி மற்றும் கடவுச்சொல் கொடுத்தால் உங்கள் வீட்டுக் கணினியை உங்கள் ஜிபிரிட்ஜில் உள்ள MyComputers பகுதியில் தெரியும்.


அந்த கணினியை வலது கிளிக் செய்து  Access Gbrige builtin VNC என்பதனை தேர்வு செய்யுங்கள் இப்பொழுது கடவுச்சொல் கேட்கும் நீங்கள் அந்த கணினியில் கொடுத்த ஒரு கடவுச்சொல் கொடுத்தீர்கள் அல்லவா ( உ.ம் - 12345@12345)  அதை இங்கே கொடுங்கள் முடிந்தது.


இது போல செய்ய ஜிபிரிட்ஜ் மென்பொருள், ஜிமெயில் ஐடி, இரண்டு பக்கமும் இணையம் இருந்தால் போதும்

இந்த மென்பொருள் மூலம் ஜிமெயில் நண்பர்களுக்கு அழைப்பு அனுப்பி கூகிள்சாட் செய்ய முடியும்.

இரண்டு கணினிகளுக்கு இடையே Sync செய்ய முடியும்.


ஜிபிரிட்ஜ் மென்பொருள் தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருள் மூலமாக நிறைய பயன்கள் உண்டு நீங்களும் முயற்சித்து பாருங்களேன்.

ஜிபிரிட்ஜ் குறித்த விக்கிபீடியாவின் விரிவான பதிவு சுட்டி




நன்றி மீண்டும் வருகிறேன்

13 ஊக்கப்படுத்தியவர்கள்:

Rajkumar said...

நன்றி. ஆனால் டீம் வியுவர் விட இந்த மென்பொருள் சிறந்ததா?. இது இலவச மென்பொருளா?

Vadielan R said...

நண்பரே இது முற்றிலும் இலவசம் எவ்வளவு வருடம் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். கவலை வேண்டாம்

Mohamed Faaique said...

நன்றி அய்யா

Ramesh said...

மிக அருமையான பதிவு
நண்பா நன்றி தொடருங்கள். வாழ்த்துக்கள்

Unknown said...

பயனுள்ள தகவல்கள்.
நல்ல பகிர்வு.

Unknown said...

ஆகா.. சூப்பர் விசயம் சொன்னீங்க போங்க.. எனக்கு ரொம்ப யூஸ்புல்லா இருக்கும்.. நன்றி..

எஸ்.கே said...

நல்ல பயனுள்ள தகவல்! நன்றி!

DR said...

தகவலுக்கு ரொம்ப நன்றி ஐயா. இவ்வளவு நாள் நான் டீம் வீவர் தான் பாவிக்கிறேன். இனிமே இதையும் முயற்ச்சி செய்து பார்த்து சொல்கிறேன்.

Unknown said...

Now the same feature available in Team viewer (host).

Royal Bakery said...
This comment has been removed by the author.
Royal Bakery said...

how to typing tamil

அன்புச்செல்வன் said...

www.logmein.com இதிலும் நிறைய சிறப்பம்சங்கள் உள்ளன.

Sankaranarayanan UR said...

very nice brother

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை