புதிய ஜிப் மென்பொருள் மற்றும் EULA குறித்த பதிவு

நண்பர்களே நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு புதிய பதிவுடன் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.  இதோ இன்றைய பதிவிற்கு செல்வோம். 

ஒவ்வொரு மிகபெரிய கோப்பை மின்னஞ்சலில் இணைத்து அனுப்புகையில் முடிந்த்வரை Zip சுருக்கி மூலம் சுருக்கியமைத்தே அனுப்புவோம்.  அதற்கு உதவுவதில் மிகவும் பிரபலமானது சில Winzip, WinRar, 7-zip.  இதன் வரிசையில் புதியதாக சேர்ந்திருப்பது Hao Zip ஆகும்.  இது ஐம்பதிற்கும் மேற்பட்ட ஜிப் கோப்புகளை கையாள்கிறது.  அதில் சில பின்வருவன RAR, ZIPX, ISO, UDF, ISZ, ACE, ALZ, CAB, BZIP2, ARJ, JAR, LZH, RPM, Z, LZMA, NSIS, CHM, DMG, HFS, WIM, DEB, MSI, CPIO, XAR, UUE.


இந்த மென்பொருளுக்குள்ளேயே File Format Converter, மற்றும் Image Viewer,  சேதமடைந்த ஜிப் கோப்பினை சீரமைக்கும் மென்பொருளும்  அடங்கியிருப்பது இதன் சிறப்பு.

இதனுடன் ஆன்டி வைரஸ் ஸ்கேனரும் அடங்கியிருக்கிறது. இதன் மூலம் உங்கள் கோப்புகளை ஆன்டி வைரஸ் மூலம் சோதித்த பிறகே சுருக்கும்.

அத்துடன் இந்த மென்பொருள் சீன தேசத்திலிருந்து வெளிவந்துள்ளது.  இந்த மென்பொருள் சீனாவின் மிகவும் அதிகமாக உபயோகிக்கும் ஒரு Zip Compression மென்பொருளாகும்.


இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டிகடந்த  ஐந்தாம் தேதி மற்றும் ஆறாம் தேதிகளில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே வெள்ளி கிரகம் கடந்தது இதனை தவறவிட்டவர்கள் அடுத்த 105 ஆண்டுகளுக்கு பிறகு மட்டுமே காண முடியுமாம்.  அது குறித்த அனிமேசன் விளக்க குறிப்பு சுட்டி


Please install latest Flash Player to run SunAeon Venus Transit 2012


நீங்கள் ஒவ்வொரு மென்பொருள் நிறுவும் பொழுது EULA ( Endu Users License Agreement ) என்பதை நீங்கள் Accept செய்தால் மட்டுமே அந்த மென்பொருளை நிறுவ முடியும்.  EULA என்பதை யாரும் படிக்க கூட மாட்டார்கள்.  இதில் கூறப்பட்ட கொள்கைகள் என்ன வென்றால் பெரும்பாலும் விளம்பரங்கள் வரும். அத்துடன் மென்பொருளில் வைரஸ் வந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல இது மாதிரி.


இதை எப்படி தெரிந்து கொள்வது.  இதற்கு EULA Analyzer என்ற மென்பொருள் கை கொடுக்கும். இந்த மென்பொருளை நிறுவிய பிறகு நீங்கள் நிறுவும் மென்பொருளின் EULA Agreement இதில் சேமிக்கப்படும் அத்துடன் நீங்கள் எப்போது வேண்டுமானலும் படிக்க முடியும்.  அல்லது அதில் உள்ள Analyzer EULA Agreement னை ஆராய்ந்து எந்த விதமான ரிஸ்க்குகள் உள்ளன என்பதை தெளிவுபடுத்தும்.  இந்த மென்பொருள் தரவிறக்க சுட்டி


கடந்த பதிவில்  என் மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்  மெயிலிலும் பின்னூட்டத்திலும் பேஸ்புக்கிலும் வாழ்த்திய அனைத்து உள்ளங்களும் கோடான கோடி நன்றிகள்.

விரைவில் ஒரு போட்டி ஒன்றினை நடத்த இருக்கிறேன் வெல்பவர்களுக்கு மிக அருமையான மென்பொருள் இலவசமாக தர போகிறேன். என்ன போட்டி என்று அடுத்த பதிவில் வெளியிடுகிறேன்.நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை