நண்பர்களே நில நாட்களுக்கு முன் USB பொருட்களை பாதுகாப்பது குறித்து ஒரு பதிவிட்டிருந்தேன். அந்த பதிவின் சுட்டி
அதில் ஒரு குறிப்பாக USB பொருட்களை நிறுத்தும் பொழுது சரியாக நிறுத்த
ஏதாவது ஒரு நல்ல மென்பொருளை கொண்டு நிறுத்தலாம். அதில் ஒன்று USB Ejector Tool என்ற மென்பொருள். அந்த மென்பொருள் போல Safely Remove நிறுவனம் ஒரு USB Eject செய்ய மென்பொருள் வழங்குகிறது.

இந்த மென்பொருள் மூலம் எந்த ஒரு USB பொருளையும் நிறுத்த முடியும்.
Mouse மூலம் மட்டுமல்லாமல் Keyboard hotkeys மூலம் நிறுத்த முடியும். இதனால் மவுஸ் மூலம் நிறுத்த தேவையில்லை.
நாம் உபயோகிக்கும் கார்டு ரீடர் போன்றவற்றில் Eject செய்தால் மொத்தமாக நிறுத்தி விடும் ஆனால் இந்த மென்பொருள் மூலம் கார்டு ரீடரில் கூட ஒன்றன் பின் ஒன்றாக மெமரி கார்டுகளை நிறுத்த முடியும்.
இந்த நிறுவனத்தின் மென்பொருளின் புதிய பதிப்பு USB Safely Remove 4.7 என்ற பதிப்பாகும். இந்த பதிப்பினை இவர்கள் இலவசமாக தருகின்றனர்.
இந்த மென்பொருளை தரவிறக்க இந்த சுட்டிக்கு செல்லுங்கள் USB நிறுத்த மென்பொருள் இணையப்பக்க சுட்டி
இந்த சுட்டியில் உங்கள் முழு பெயர் அமெரிக்கர்கள் போல தர வேண்டும் உதாரணத்திற்கு என் பெயர் Vadivelan என்றால் Vadi Velan என்று தர வேண்டும்.
பிற்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி தாருங்கள்.
பிறகு இந்த மென்பொருள் குறித்த உங்கள் கருத்தினை வேண்டு என்றால் அடுத்துள்ள Comments பெட்டியில் பதியவும்.
பிறகு I Want License என்ற பட்டனை தட்டினால் போதும் உங்களுக்கான லைசென்ஸ் மற்றும் மென்பொருள் தரவிறக்க சுட்டியுடன் உங்கள் மின்னஞ்சல் முகவரி அடுத்த விநாடியே வந்து விடும்.
இந்த மென்பொருளினை உங்கள் வாழ்நாள் முழுக்க உபயோகப்படுத்தலாம். (Life Time License Using)
முக்கியமாக
இந்த மென்பொருள் அடுத்த இருபத்தி நான்கு மணிநேரம் மட்டுமே இலவசமாக
வழங்கப்படுகிறது. முந்துபவர்களுக்கு லைசென்ஸ் கட்டாயம்
கிடைக்கும்.
Google + என்ற சமூகதளம் பேஸ் புக் சமூகதளத்தினை பின் தள்ளிவிட்டது இதன் அடுத்த ஒரு புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பேஸ்புக் தளத்தில் உள்ளது போன்று Google + சமூகதளத்திலும் விளையாட்டுக்களினை விளையாடலாம் என்பதே அந்த மாற்றம். இது குறித்த Googleன் அறிவிப்பு இந்த சுட்டியில் சுட்டி நன்றி கூகிள்

உங்கள் கணினியில் சில நேரங்களில் வைரஸ் அல்லது மால்வேர் வந்து உங்களுடைய கோப்புகள் சேதமாகலாம். அந்த நேரத்தில் உங்களுக்கு எப்படி இருக்கும். மிகவும் மோசமாக இருகுக்ம். அது போல நேரும் நேரத்தில் உங்களுக்கு இந்த FileRecovery என்ற மென்பொருள் மிகவும் உதவியாக இருக்கும்.
இந்த மென்பொருள் எந்த வகையான கோப்புகளை உங்களுக்கு மீட்டெடுக்க உதவும் என்ற பட்டியலை கீழே காணலாம்.
- சேதமான வேர்ட் கோப்புகள் (.doc, .docx, .docm, .rtf)
- சேதமான எக்ஸல் கோப்புகள் (.xls, .xla, .xlsx)
- சேதமான ஜிப் மற்றும் ரேர் கோப்புகள் (.zip, .rar)
- சேதமான வீடியோ கோப்புகள் (.avi, .mp4, .mov, .flv, .wmv, .asf, .mpg)
- சேதமான புகைப்பட கோப்புகள் JPEG, GIF, TIFF, BMP, PNG or RAW images (.jpg, .jpeg, .gif, .tiff, .bmp, .png)
- சேதமான பிடிஎப் கோப்புகள் (.pdf)
- சேதமான அக்ஸஸ் டேட்டாபேஸ் கோப்புகள் (.mdb, .mde, .accdb, .accde)
- சேதமான பவர் பாய்ண்ட் கோப்புகள் (.ppt, .pps, .pptx)
- சேதமான ஆடியோ கோப்புகள் (.mp3, .wav)

இந்த மென்பொருள் நூறு சதவீதம் இலவசமான மென்பொருள். இதில் எந்த ஒரு தீங்கு நச்சுநிரலும் கிடையாது. அத்துடன் விளம்பரங்களும் கிடையாது. இந்த மென்பொருளை வாழ்நாள் முழுவதும் உபயோகித்துக் கொள்ளலாம்.
இந்த மென்பொருள் விண்டோஸ் 7 வரை உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை ஆதரிக்கிறது.
இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி
இந்த மென்பொருள் குறித்த வலைத்தளம் சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...