1 ஆண்டிற்கான சட்டரீதியான காஸ்பர்ஸ்கை இண்டெர்நெட் செக்யூரிட்டி

நண்பர்களே மிக அதிகமான வேலை இருந்ததால் தொடர்ந்து எழுத இயலவில்லை அதற்கு பதில்தான் நம் நண்பர்கள் 50க்கும் மேற்பட்டோர் தொழில்நுட்ப பதிவுகளை எழுதி வருகின்றனரே அதனால் நான் சொல்ல நினைக்கும் விஷயங்களை கூட அவர்கள் சொல்கிறார்கள் நல்ல விஷயம் நான் எழுத ஆரம்பிக்கும் போது மொத்தம் ஐந்து தொழில்நுட்ப வலைத்தளங்கள் கூட இல்லை என் குரு பிகேபி அவர்கள்களை பார்த்து எழுத ஆரம்பித்தனர் பிறகு நான் ஆரம்பித்தேன் என்னை பார்த்து சிலர் ஆரம்பித்தனர் அவர்களை பார்த்து இப்பொழுது பலர் எழுத ஆரம்பித்து விட்டனர் தமிழ் தொழில்நுட்ப வலைப்பூக்கள் விரைவில் நூறை எட்டும் அனைத்து பதிவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இதில் நண்பர் ஷிர்டி சாய்தாசன் வேறு மாதம் ஒரு முறை தொழில்நுட்ப பதிவர்களின்  தரவரிசை பட்டியலிடுவதால் நல்ல ஆரோக்கியமான போட்டி  உருவாகியுள்ளது.   தோழர்களே போட்டியிடுங்கள் தவறில்லை பொறாமைபடாதீர்கள்.   ஒருவரின் வலைத்தளம் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு வர அவர்கள் தரும் இழப்புகள் அதிகம்.  அதை என் தொலைக்காட்சி பேட்டியின் போதே சொல்லியிருக்கிறேன்.  ஏன் என்றால் இப்பொழுது கூட ஒரு மென்பொருளை சோதிக்க போய் என் நிறைய கோப்புகளை இழந்துள்ளேன்.  ஷிர்டி சாய்தாசன் அவருடைய வலைப்பதிவில் தரவரிசைப் படுத்துவதால் எத்தனை புதியதாக  கணினி கற்பவர்களுக்கும் கற்றுக் கொடுப்பவர்களுக்கும் மிகுந்த உதவியாக இருப்பதை நானே கண்கூடாக அறிந்திருக்கிறேன்.   ஆகையால் யாரையும்  அநாவசியாமாக குறை கூற வேண்டாம்.  இனி இன்றைய பதிவிற்குள் நுழைவோம்.



கணினி உலகில் இணையம் இல்லாத கணினி  உபயோகிப்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.  அவர்கள் பாதுகாப்பாக இணையத்தில் உலா வரவேண்டுமானால் அவர்களின் கணினியில் ஏதாவது ஒரு ஆன்டி வைரஸ் அல்லது ஆன்டிவைரஸுடன் இணைந்த இண்டெர்நெட் செக்யூரிட்டி மென்பொருட்கள் தேவை.  இதில் இப்பொழுது மிகவும் பிரபலமாக பேசப்படுவது அத்துடம் மிகவும் நன்றாக செயல்படுகிறது என்ற பெயரை தட்டி செல்கிறது காஸ்பர்ஸ்கை இண்டெர்நெட் செக்யூரிட்டி.  இது இலவசமாக 30 நாட்கள் மட்டுமே செயல்படும் வகையில் சோதனை பதிப்புகள் இணையத்தில் தருகிறார்கள்.  உங்களுக்கு காஸ்பர்ஸ்கை இண்டெர்நெட் செக்யூரிட்டி வேண்டுமென்றால் சென்னையில் உள்ள பல கணினி விற்பனையாளர்கள் உள்ளனர்.   அவர்கள் மூலமாக பணம் கொடுத்து ஒரிஜினல் காஸ்பர்ஸ்கை ஆன்டி வைரஸ் மற்றும் இண்டெர்நெட் செக்யூரிட்டி கிடைக்கும்

இதன்  விலை ஒரு கணினிக்கு  ஒருவருடத்திற்கான ஆன்டிவைரஸ் மட்டும் வெறும் முன்னூறு மட்டும் செலவாகிறது. இதே மூன்று கணினிக்கு ஒரு வருடத்திற்கு 600 - 800  மட்டுமே செலவாகிறது.  அதே காஸ்பர்ஸ்கை இண்டெர்நெட் செக்யூரிட்டி ஒரு கணினிக்கு ஒரு வருடத்திற்கு 500 - 600  மட்டுமே செலவாகிறது அதே மூன்று கணினிக்கு ஒரு வருடத்திற்கு 750 - 900 வரை செலவாகிறது.  இப்படி சுலபமாக குறைந்த விலையில் கிடைக்கையில் ஏன்தான் தேவையில்லாமல் உடைக்கப்ட்ட மென்பொருட்களை நாடுகிறார்களோ தெரியவில்லை.  கணினி உபயோகிப்பாளர்களுக்குதான் தெரியாது இது தவறு என்று.  கணினி நிறுவி தரும் நிறுவனங்களின் சர்வீஸ் என்ஜினியர்கள் மற்றும் தனியாக வேலை பார்க்கும் சர்வீஸ் என்ஜினியர்கள் அனைவருமே ஒரு காரணகர்த்தாவாக இருக்கின்றனர்.  முப்பதாயிரம் செலவு செய்து கணினி வாங்குபவர்கள் அதற்கு என்று உபயோகிக்கும் எந்த மென்பொருளையும் இலவசமாக கிடைக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அப்படி நினைப்பவர்கள் லினக்ஸுக்கு செல்லலாமே மிகவும் சுலபமாக நீங்கள் விரும்பும் அனைத்தும் கிடைக்கும்.  சரி விடுங்கள் திருந்த நினைப்பவர்கள் திருந்தட்டும்.

சரி இப்படி சுலபமாக காசே இல்லாமல் ஆன்டிவைரஸ் கணினி மற்ற மென்பொருட்கள் இலவசமாக அந்த நிறுவனமோ அல்லது அந்த நிறுவனத்தின் முகவர்களோ சில மணி நேரம் மற்றும் சில நாட்கள் மட்டும் இலவசமாக சட்ட ரீதியாக ஒரு வருடத்திற்கான லைசென்ஸுடன் தரும் பொழுதாவது அதை நீங்கள் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். 


கீழுள்ள மென்பொருளில் சில பிரச்சனைகள் இருப்பதால் இதை நிறுவவோ தரவிறக்கவோ வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   ஏற்பட்ட தவறுக்கு அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.  தவறை சுட்டிக் காட்டிய பொன்மலர், மற்றும் அன்பரசன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

இப்பொழுது இந்த காஸ்பர்ஸ்கை இண்டெர்நெட் செக்யூரிட்டி மென்பொருள் சீன முகவர்கள் இலவசமாக தரவிற்க்க தருகிறார்கள்  ஒரு வருடத்திற்கான Kaspersky Internet Security 2011 சட்டரீதியாக தருகிறார்கள்.  இதை பெற சில விஷயங்கள் செய்தால் போதும்.




முதலில் இந்த வலைத்தளத்திற்கு செல்லுங்கள்.  சுட்டி



இங்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியை இரண்டு முறை கொடுங்கள்.  பிறகு கீழுள்ள பட்டனை கிளிக் செய்யுங்கள்.



அடுத்த பக்கத்தில் ஒரு  ஐந்து எண்கள் தோன்றும் அதை வலது பக்க பெட்டியில் டைப் செய்யுங்கள். பிறகு கீழுள்ள பட்டனை கிளிக் செய்தால் அடுத்த பக்கத்தில் உங்களுக்கான Kaspersky Internet Security 2011 கீ கிடைக்கும்.





 காஸ்பர்ஸ்கை இண்டெர்நெட் செக்யூரிட்டி சோதனை பதிப்பு தரவிறக்க சுட்டி




இந்த சலுகை  இன்னும் 25 நாளைக்கு மட்டுமே அதாவது டிசம்பர் - 3 - 2010 வரை மட்டுமே.  முடிந்தவரை விரைவில் தரவிறக்கம் செய்து உங்களுக்கான ஒரு வருடத்திற்கான  சட்டரீதியான இலவச காஸ்பர்ஸ்கை இண்டெர்நெட் செக்யூரிட்ட்டியை இலவசமாக பெற்றுக் கொள்ளுங்கள்.

ஓட்டு போட்டு இந்த பதிவை அனைவரிடமும் கொண்டு செல்ல உதவிடுங்கள்


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

ஏவிஜி இண்டெர்நெட் செக்யூரிட்டி ஆன்டி வைரஸ் ஒரு வருடத்திற்கு இலவசம் அனைவருக்கும்

நண்பர்களே மிகவும் பிரபல ஆன்டி வைரஸ் நிறுவனம் ஏவிஜி தன் ஏவிஜி ஆன்டி வைரஸ் மென்பொருளை இலவசமாக ஒரு வருடத்திற்கு தருகிறது.  இந்த மென்பொருள் மிகவும் பிரபலமானது.  ஏவிஜி இண்டெர்நெட் செக்யூரிட்டி 2011. இந்த மென்பொருளை தரவிறக்க நீங்கள் செய்ய வேண்டியது.  உங்கள் மின்னஞ்சல் முகவரி  மற்றும் எவ்வாறு உங்களுக்கு இந்த செய்தி தெரிய வந்தது.  என்று குறிப்பிட்டால் போதும் உங்கள் மின்னஞ்சல் முகவரி 2 அல்ல்து 3 நாட்களுக்குள் ஒரு வருடத்திற்கான இலவச கீ வந்து விடும்.  நீங்கள் இந்த பாரத்தை முடித்தவுடன் மென்பொருளுக்கான தரவிறக்க லின்க் வந்து விடும்.



ஒரு வருடத்திற்கான ஏவிஜி இண்டெர்நெட் செக்யூரிட்டி 2011 பெற பதிவு செய்ய வேண்டிய இணையதள முகவரி சுட்டி


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை