இனிய செய்தி மற்றும் சட்டரீதியான மென்பொருள் விடுமுறை கோலாகலம்

நண்பர்களே  முதலில் ஒரு இனிய செய்தி நம்மில் பதிவெழுதும் சிலர் மட்டுமே தமிழில் தொழில்நுட்பம் குறித்து எழுதி வருகிறோம்.  அவர்கள் எவ்வாறு எழுதுகிறார்கள்? எழுதுவதால் என்ன பயன்? இதன் மூலம் இவர்களுக்கு கிடைப்பது என்ன? என்பது குறித்து NDTV-HINDU என்று செய்தி நிறுவனம் வருகிற வெள்ளிக்கிழமை இரவு பைட் இட் BYTE IT என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்ப விருக்கிறார்கள். 


இந்த ஒளிபரப்பில் என்னுடைய சிறு பங்களிப்பும் உண்டு நம்மையும் பேட்டி எடுத்து இருக்கிறார்கள்.  ஆகையால் வருகிற வெள்ளிக்கிழமை இரவு 9:30 மணிக்கு உங்கள் தொலைக்காட்சி பெட்டியில் இந்நிகழ்ச்சியை காணத்தவறாதீர்கள்.


ஏர்டெல்லின் ஒரு இலவச ப்ளான்  வெகு சிலருக்கு மட்டுமே அவர்கள் இந்த வகையான செல்பேசி வைத்திருப்பவர்களுக்கு மட்டும் இணையத்தில் உலாவ

 Nokia 5130K       Samsung Star
 Nokia E63          Samsung Star WiFi
 Nokia 6700         Samsung Star 3G
 Nokia N79          Samsung F480
 Nokia 5800         Samsung Jet
 Nokia N97          Samsung Omnia HD
 Nokia E71          Samsung Corby
 Nokia 6303     

மூன்று மாதத்திற்கு இலவசமாக 100 எம்பி தரவிறக்கம் தருகிறார்கள் செய்தி சுட்டி

நீங்கள் வைத்திருக்கும் வீடியோ கோப்பில் இருந்து புகைப்படம் எடுக்க இந்த மென்பொருள் இதில் படம் ஒடிக் கொண்டிருக்கும் போது மவுசை பிடித்து இழுத்து விட்டால் போதும் உடனே புகைப்படம் கிடைக்கும் அதாவது Drag and Drop வசது உண்டு.  சுட்டி




நீங்கள் வைத்திருக்கும் பிடிஎப் கோப்பில் எடிட் செய்ய முடியாதபடி கடவுச்சொல் கொடுத்து பாதுகாத்து வைத்திருப்பர்.  அவ்வாறு உள்ள கோப்புகளை இந்த மென்பொருள் கொண்டு கடவுச்சொல் நீக்கலாம். இது ஒரு இலவசமான சட்டரீதியான மென்பொருள். இந்த தளத்தில் சென்று உங்கள் பெயர் மற்றும் மின்னஞ்சல் கொடுத்தால் போதும் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு உங்களுக்கு லைசென்ஸ் கோடு அனுப்பி விடுவார்கள்.  இணையதள சுட்டி
மென்பொருளை தரவிறக்க சுட்டி


இது ஒரு விடுமுறை கொண்டாட்ட அறிவிப்பு ஆதலால் எவ்வளவு காலத்திற்கு இந்த சலுகை நீடிக்கும் என்று கூற முடியாது முந்துங்கள் நண்பர்களே. நீங்கள் முந்தினால் உங்கள் நண்பர்களுக்கும் கொடுத்து உதவுங்கள். 


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

ட்ரைவர் அனைத்தும் தானாக மேம்படுத்த மென்பொருள்

நண்பர்களே அனைவர் வீட்டிலும் கணிணி இணைய இணைப்பு இல்லாமல் இருக்கவில்லை பெரும்பாலும்.  அதனால் அனைவரும் அவ்வப்போது உபயோகப்படுத்து வன்பொருட்களுக்கு ட்ரைவர் அப்டேட் செய்வது அவசியம்.  ஒவ்வொரு முறையும் நாம் ஒவ்வொரு வன்பொருளுகும் ட்ரைவர் தேடி அப்டேட் செய்வது என்பது இயலாத காரியம். இதற்கு வருகிறது இலவச டிவைஸ் டாக்டர்.  இந்த மென்பொருளை நிறுவி விட்டால் ஒவ்வொரு வன்பொருட்களுக்கும் அப்பொழுது என்ன புதிய ட்ரைவரோ அதை தானாக தரவிறக்கி நிறுவி விடும்.  மென்பொருள் தரவிறக்க சுட்டி


உங்கள் புகைப்படத்தை காலண்டராக மாற்றி அனைவருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டுமா இங்கு சென்று உங்கள் குழந்தைகள் புகைப்படத்தை கொடுத்து ஒரு காலண்டாராக மாற்றி வீட்டில் தொங்க விட விருப்பமா வெவ்வேறு அளவுகளில் காலண்டர் பெற இணையத்தளம்.  சுட்டி





உங்கள் விண்டோஸ் எக்ஸ்பியில் ஒரு மென்பொருளில் வேலை செய்யும்பொழுது அது மினிமைஸ் ஆகும் அந்த மினிமைஸ் ஆன கோப்பில் ஒரு தம்ப்நெயில் உடன் மினிமைஸ் ஆக உட்கார இந்த மென்பொருள் உபயோகபடுகிறது மிகவும் உபயோகமானது கீழுள்ள புகைப்படம் பாருங்கள் புரியும். இது விண்டோஸ் எக்ஸ்பியில் மட்டுமே வேலை செய்யும்.  சுட்டி


போட்டோக்கள் குறித்த ஒரு புதிய வலைத்தளம் சுட்டி
 வாருங்கள் கருத்து சொல்லுங்கள்
நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

Advance System Care சட்டரீதியான மென்பொருள் இலவசமாக

நண்பர்களே உங்கள் கணிணியில் உள்ள வன்தட்டுகளை டிபிராக் செய்தல், ரெஜிஸ்டரி கிளீன் செய்தல் இதையெல்லாம் செய்யும் Advance System Care Pro மென்பொருள் இலவசமாக சட்ட ரீதியானது உங்களுக்காக.



இங்கு சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுங்கள் நேரடியாக உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு தரவிறக்க இணைப்பும் லைசென்ஸ் கோடும் வந்து விடும்.

இணையதள சுட்டி




நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

வீடியோ பார்க்க, வெட்ட, மாற்ற புகைப்படம் மாற்ற அனைத்திற்கும் ஒரே மென்பொருள் இலவசமாக

நண்பர்களே நாம் எப்பொழுதும் வீடியோக்களை பார்க்க ஒரு ப்ளேயர் அந்த வீடியோவை கட் செய்ய வேறோரு மென்பொருள் வீடியோவை வேறொரு கோப்பின் வடிவாக மாற்ற ஒரு மென்பொருள்   உங்கள் போட்டோவினை வேறொரு அளவிற்கு மாற்ற போட்டோவினை ஸ்லைடு ஷோவாக மாற்ற என்று பலதரப்பட்ட மென்பொருட்களை பயன்படுத்துவோம்.


இதன்மூலம் காலநேரமும் கணிணியில் செய்திறன் மற்றும் வன் தட்டின் இடமும் அதிகரிக்கும் ஸ்டார்ட் மெனுவில் அது ஒரு நீளத்திற்கு தனியாக இடத்தினை அடைத்துக் கொண்டிருக்கும்.  இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஒரு நான்கு மென்பொருள் என்ஜினியர் சேர்ந்து ஒரு ஒபன் சோர்ஸ் மென்பொருளை உருவாக்கி இலவசமாக கொடுத்திருக்கின்றனர். இந்த மென்பொருளின் பெயர் மீடியா கோப்.


இந்த மென்பொருள் ஆதரிக்கும் கோப்பின் வடிவங்கள்

வீடியோ - mp3, wav, aac, wma, flac, m4a, ac3, rmvb, mp4, 3gp, wmv, mov, avi, divx, mpg, flv, mkv, vob இது சில மட்டுமே இன்னும் நிறைய

சப்டைட்டில் இல்லாத திரைப்படங்களில் சப்டைட்டில் தனியாக சேர்க்க முடியும்.

மேற்கூறிய அனைத்து கோப்புகளும் வீடியோ மாற்றியாக செயல்படும்.  இந்த கோப்புகளிலிருந்து எம்பி3 பிரித்தெடுக்க முடியும்.

புகைப்படங்கள் -  jpg, bmp, gif, tiff, png, emf, wmf

மென்பொருளின் அளவு 7.92 எம்பி மட்டுமே.

முற்றிலும் இலவசம் மென்பொருள்

மென்பொருள் தரவிறக்க சுட்டி 




நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை