நண்பர்களே ஒரு முழுமையான பிடிஎப் எடிட்டர் வாங்குவதென்றால் இந்திய
மதிப்ப்பில் குறைந்தபட்சம் 2000கும் மேல் செலவாகும். இப்படி இருக்கையில்
யாரும் காசு கொடுத்து வாங்காமால் பைரேட் என்ற திருட்டு மென்பொருட்கள்
உபயோகிக்கின்றனர். இந்த மாதிரி திருட்டு பொருட்கள் தரவிறக்குபவர்களுக்கு
தங்கள் கணினியில் தேவையில்லாத நச்சு தீங்கு நிரல்களும் நிறுவப்படும் என்பது
தெரிவதில்லை.
இதற்கு பதில் சில ஒபன் சோர்ஸ் மென்பொருட்கள் உள்ளன. அதை தரவிறக்கி உபயோகப்படுத்தலாம். அப்படி இல்லையென்றால் இலவசமாக சில நேரம் சில நாட்களுக்கு மட்டும் கொடுப்பார்கள். அதை உபயோகப்படுத்துங்கள். அது போல தான் நான் அறிமுகபடுத்த மென்பொருளும் கூட. பிடிஎப் எடிட்டர் தேவையில்லை என்று சொல்பர்வர்கள் குறைவு. அவர்களுக்காகவே இந்த மென்பதிவு
Wondershare என்ற நிறுவனத்தின் புதிய மென்பொருள் தயாரிப்பு ஆகும் இது. இவர்கள் இதுவரை வீடியோ மென்பொருட்கள் தயாரித்து வெளியிட்டிருந்தனர். பிறகு மேக் கணினிக்கான பிடிஎப் எடிட்டர் தயாரித்து வெளியிட்டனர். இப்பொழுது விண்டோஸுக்கான பிடிஎப் கன்வெர்ட்டர் தயாரித்து பீட்டா அளவில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பீட்டா மென்பொருள் முற்றிலும் இலவசமாகும். ஆனால் நூறு நாட்கள் மட்டுமே வேலை செய்யும். இந்த மென்பொருளை நீங்கள் தரவிறக்கி கணினியில் நிறுவிக் கொள்ளலாம். அத்துடன் ஆக்டிவேசன் கோடு எதுவும் தேவையில்லை.
WonderShare PDF Editor Beta மென்பொருள் குறித்த தகவல்கள் மற்றும் போட்டி விதிமுறைகள் குறித்த சுட்டி
இவர்களின் தளத்தில் பீட்ட வெர்சன் குறித்த உங்கள் அனுபவங்களை அல்லது உங்கள் கருத்துக்களை மூன்று முறை அல்லது அதற்கு மேல் Feedback கொடுத்தால் நீங்கள் இந்த Wondershare PDF Editor வெளிவரும்போது உங்களுக்கான பிடிஎப் எடிட்டரினை பரிசாக வெல்ல வாய்ப்பு உள்ளது. சுட்டி இங்கு சென்று உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
Wondershare PDF Editor மென்பொருள் தரவிறக்க சுட்டி
இந்த வாய்ப்பு ஏப்ரல் ஐந்தாம் தேதி முதல் முப்பதாம் தேதி வரை கலந்து கொள்ளும் வாசகர்களுக்கு மட்டும்.
அது மட்டுமல்லாமல் பேஸ்புக்கில் வழியாக இவர்களின் பதிவை பகிர்ந்தால் 30$ மதிப்புள்ள PDF To Powerpoint மென்பொருள் வெல்ல வாய்ப்புள்ளது.
போட்டியில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு குலுக்கல் முறையில் வாரம் ஒரு முறை PDF Converter Pro 79.95$ மதிப்புள்ள PDF Converter Pro.
சரி இந்த மென்பொருள் மூலம் என்ன செய்ய முடியும்.
எந்த ஒரு வகை பிடிஎப் கோப்புகளையும் எடிட் செய்ய முடியும்.
எந்த ஒரு பிடிஎப் கோப்பினையும் வேர்ட் அல்லது .TXT கோப்பாக சேமிக்க முடியும்.
1000 பக்கம் உள்ள பிடிஎப் கோப்பினை பிரிக்க அல்லது சேர்க்க முடியும்.
மீண்டும் ஒரு புதிய பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...