நண்பர்களே நாம் நம்முடைய முக்கியமான தகவல்கள் அடங்கிய கோப்புகள் அல்லது தேவையில்லாத கோப்புகளில் Del கீ கொண்டு நீக்குவோம். அல்லது Shift+Del கீ கொண்டு நீக்குவோம். வெறும் Del கீ கொண்டு நீக்கினால் Recycle Bin பகுதிக்கு சென்று விடும் அங்கிருந்து நாம் மீட்டுக் கொள்ளலாம். அதே Shift+Del கொண்டு நீக்கினால் Restoration என்ற மென்பொருள் கொண்டு மீட்டெடுக்கலாம். இது போன்ற மென்பொருட்களை கொண்டு மீட்டெடுத்தால் யார் வேண்டுமானாலும் நம் கோப்புகளை திருட்டுதனமாக மீட்டெடுத்து உபயோகிக்கலாம். அப்படி செய்யாமல் இருக்க வேண்டுமென்றால் Eraser என்ற மென்பொருளை கொண்டு நீக்கினால் அந்த கோப்புகள் யார் கைக்கும் கிடைக்காத வண்ணம் வன்தட்டிலிருந்து மிகவும் பாதுகாப்பாக நீக்கிவிடலாம்.
இந்த மென்பொருள் அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையில் உபயோகிக்கப்பட்டு மிகவும் பாதுகாப்பான மென்பொருள் என்று சான்றளிக்கப்பட்டுள்ளது.
இந்த மென்பொருள் ஒரு ஒபன் சோர்ஸ் மென்பொருளும் கூட
இந்த மென்பொருள் விண்டோஸ், லினக்ஸ், மற்றும் மேக் கணினிகளில் பயன்படுத்தும் வண்ணம் தனி தனி மென்பொருளாக கிடைக்கிறது.
இந்த மென்பொருளை கடந்தா வாரம் மட்டும் 30000க்கும் மேற்பட்டவர்கள் தரவிறக்கி உபயோகித்து நன்றாக உள்ளது என்று கூறியிருக்கிறார்கள்.
இந்த மென்பொருள் வெளிவந்த வருடம் 2006
Eraser 6.0.8.2273 இந்த மென்பொருளை தரவிறக்க
சுட்டி
விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் விஸ்டாவில் அனைவருக்கும் ஒரு பிரச்சனை வரும் அந்த பிரச்சனை என்னவென்றால் விண்டோஸ் எக்ஸ்பியில் உள்ளது போல Start மெனு இல்லாததே பிரச்சனை. இதை தீர்ப்பதற்கு ஒரு மென்பொருள் உள்ளது அதுதான்
Start Menu XP இந்த மென்பொருளை நிறுவி உங்களுக்கு ஸ்டார்ட் பாருக்கு ஏற்றவாறு குரூப்கள் உருவாக்கிக் கொள்ளலாம். இந்த மென்பொருளை தரவிறக்க
சுட்டிபெரிய பெரிய வலை முகவரிகளை சிறியதாக மாற்ற நாம் bit.ly, goo.gl, is.gd,mcaf.ee போன்ற வலைத்தளங்களுக்கு சென்று பெரிய வலை முகவரிகளை சிறிய முகவரியாக மாற்றி மின்னஞ்சல் செய்வோம்.
அது போல செய்ய ஒவ்வொரு தளத்திற்கும் செல்லாமல் நம் வலை உலாவியிலிருந்து செய்ய சிறு மென்பொருட்கள் உள்ளது. அதை நிறுவினால் போதும்.
பயர்பாக்ஸ் Firefox உலாவியில் நிறுவ நீட்சி
சுட்டி இது கூகிள், மெக்காபி, மற்றும் பிட் லி போன்ற வலைத்தளங்கள் செல்லாமல் வலை முகவரிகளை சுருக்கலாம்.
பிட் லி வலை முகவரி சுருக்கி மென்பொருள்
பயர்பாக்ஸ் Firefox வலை உலாவியில் நிறுவ நீட்சி
சுட்டி
கூகிள் குரோம் வலை உலாவியில் பிட்லி வலை முகவரி சுருக்கி நீட்சி
சுட்டி இந்த நீட்சிகள் இரண்டும் பிட்லி வலைத்தளத்தை மட்டுமே கொண்டு செயல்படுகிறது.
கூகிள் வலை முகவரி சுருக்கி நீட்சி குரோம் வலை உலாவியில் மட்டுமே செயல்படும். கூகிள் குரோமிற்கான நீட்சி
சுட்டி
ஒரு அறிவிப்பு
இந்த வலைத்தளம் மூலம் எனக்கு எதுவும் எந்த ஆதாயமும் கிடைக்காமல் இருந்து வருகிறது. ஆனாலும் தொடர்ந்து பல பதிவுகளை கஷ்டப்பட்டு தான் இந்த பதிவுகளை எழுதுகிறேன். அதனால் நான் எழுதும் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் உபயோகமானவை என்றே நம்புகிறேன். இவ்வாறிருக்கையில் வரும் நண்பர்கள் என் வலைத்தளத்தில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்து பார்ப்பதன் மூலம் என்னால் மாதம் ஒரு சிறு தொகையை ஈட்ட முடியும் என்று நம்புகிறேன். ஆகையால் பதிவுகளை படிக்கும் நண்பர்கள் விளம்பரங்களை கிளிக் செய்து வருவாயை ஈட்ட உதவி செய்ய வேண்டுகிறேன். உதவுங்கள் இன்னும் தரமான ஆக்கங்களை உருவாக்க உதவுங்கள். அத்துடன் இந்த பதிவுகள் தரமுள்ளதாக இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் இதனை பற்றி தெரியபடுத்துங்கள். அனைத்து திரட்டிகளிலும் நீங்கள் போடும் ஒட்டுகளினால் இன்னும் உலகம் முழுக்க தமிழர்கள் அனைவருக்கும் போய்ச் சேர ஒரு உங்கள் ஒட்டு ஒரு வாய்ப்பாக அமையும்.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே அனைவருக்கும் வணக்கம் பல அலுவல்களிடையே இந்த பதிவை எழுதிக் கொண்டிருக்கிறேன். நிறைய வேலைகள் வந்து குவிவதால் பதிவு எழுத தனியாக நேரம் கிடைப்பதில்லை. ஏன் என்றால் ஒரு மென்பொருளோ அல்லது இணையத்தளத்தினை அறிமுகப்படுத்தும் பொழுது அதன் பயன்கள் மட்டுமல்லாது அதனுடைய தீமைகளைதான் அதிகம் சோதிக்க வேண்டும் ஏதும் வைரஸ் அல்லது ஸ்பைவேர் உள்ளதா என்று சோதித்து அதன் பிறகு அதன் பயன்கள் பற்றி எழுத முடியும்.
ஒரு சிறு மென்பொருள் பற்றி எழுத குறைந்தது 3 மணி நேரமாவது வேண்டும். அப்பொழுதுதான் அதை பற்றி பாமரனும் புரியும்படி தெளிவாக எழுத முடியும். அதனால்தான் கடும் அலுவல் வேலைகளுக்கிடையில் இந்த பதிவு எழுதுகிறேன். இந்த பதிவில் நிறைய பேர் ஏன் கூகிள் ரீடரில் நீங்கள் குடுப்பதில்லை என்று கேட்கிறார்கள். நான் முழு பதிவும் கூகிள் ரீடரில் கொடுத்தால் என் வலைத்தளத்திற்கு வரும் எண்ணிக்கையும் அவர்களின் மனதில் இந்த பதிவு பற்றி என்ன நினைக்கிறார்கள்.
அவர்களுக்கு இந்த பதிவு உபயோகமாக இருக்கிறதா என்று நான் தெரிந்து கொள்ள முடியாது. அதனால்தான் கூகிள் ரீடரில் முழு பதிவினையும் வெளியிட இயலவில்லை. என் நிலையினை புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். இனி பதிவிற்கு செல்வோம்.
நாம் அனைவரும் வானிலை தெரிந்து கொள்ள கூகிள் அல்லது யாகூ உதவியை நாடுவோம் அல்லது நம் கணினியில் நிறுவும் வானிலை அறிவிக்கும் மென்பொருள் மூலமாக அறிந்து கொள்வோம். அந்த மென்பொருள் வெறும் வானிலை அறிவிப்பு மட்டுமே காட்ட முடியும். Win Thunder இந்த மென்பொருள் மூலம். வானிலை அறிவிப்பு மட்டுமல்லாமல் உங்கள் அப்ளிகேசன்களுக்கு ஒரு ஷார்ட்கட்டாகவும் உபயோகிக்கலாம். இந்த மென்பொருளை தரவிறக்க
சுட்டி
விண்டோஸ் 7ல் டாஸ்க்பாரில் நாம் உபயோகப்படுத்தும் மென்பொருட்களின் ஐகான்கள் மட்டுமே இருக்கும். அந்த மென்பொருட்களின் பெயர்கள் இல்லாமல் வெறும் ஐகான் மட்டுமே இருப்பதால் என்ன மென்பொருள் என்று தெரிந்து கொள்ள இயலாது. அதற்கு இந்த மென்பொருளை உபயோகித்து எப்பொழுது வேண்டுமானல் முழு ஐகானுடன் டெக்ஸ்ட் தெரியுமாறு செய்ய முடியும் வேண்டாம் என்றால் மறைக்கவும் முடியும். இந்த மென்பொருளை நிறுவ Install செய்ய கூட தேவையில்லை. நேரடியாக உபயோகிக்கலாம். தரவிறக்க
சுட்டி
மென்பொருள் நிறுவிய பிறகு எப்படி இருக்கும் என்று காட்டும் படங்கள் கீழே
நம்முடைய வீடியோ டிவிடியிலிருந்து எந்த ஒரு வீடியோவிற்கும் கன்வெர்ட் Video Converter செய்ய மிகவும் உபயோகமாக இருக்கும் ஒரு மென்பொருள் இப்பொழுது சட்டரீதியாக இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த மென்பொருள் மூலம் எந்த ஒரு வீடியோ டிவிடியையும் உங்களுக்கு தேவையான பார்மெட்டில் மாற்ற உதவுகிறது.
டிவிடியில் இருந்து AVI கோப்பாக மாற்றும் போது டிவிடியில் சப்டைட்டில் இருந்தால் சேர்த்து கன்வெர்ட் செய்து தரக்கூடியது இந்த மென்பொருள்
இந்த மென்பொருளினி பெயர்
WinX DVD Ripper Platinum KungFu Edition
இந்த மென்பொருளினை சட்டரீதியான லைசென்ஸ் பெற மேலுள்ள
சுட்டி கிளிக் செய்யுங்கள். கிளிக் செய்தவுடன் ஒரு பக்கத்திற்கு கூட்டி செல்லும் அங்கு அந்த மென்பொருளை தரவிறக்க மற்றும் லைசென்ஸ் இருக்கும்.
இந்த மென்பொருள் 2012 மே 31 தரவிறக்க முடியும். அத்துடன் மே 31க்குள் இந்த மென்பொருளை ஆக்டிவேசன் செய்து கொள்ள வேண்டும் இல்லாவிடில் இந்த மென்பொருள் வேலை செய்யாது.
ஒரு எச்சரிக்கை - Ant Video Downloader என்ற பயர்பாக்ஸ் நீட்சி உபயோகப்படுத்துபவர்களின் தகவல்கள் அதை உருவாக்கியவருக்கு அனுப்படுவதாக செய்தி வந்துள்ளது. முடிந்தவரை அந்த நீட்சி உபயோகிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
ஒரு அறிவிப்பு
இந்த வலைத்தளம் மூலம் எனக்கு எதுவும் எந்த ஆதாயமும் கிடைக்காமல் இருந்து வருகிறது. ஆனாலும் தொடர்ந்து பல பதிவுகளை கஷ்டப்பட்டு தான் இந்த பதிவுகளை எழுதுகிறேன். அதனால் நான் எழுதும் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் உபயோகமானவை என்றே நம்புகிறேன். இவ்வாறிருக்கையில் வரும் நண்பர்கள் என் வலைத்தளத்தில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்து பார்ப்பதன் மூலம் என்னால் மாதம் ஒரு சிறு தொகையை ஈட்ட முடியும் என்று நம்புகிறேன். ஆகையால் பதிவுகளை படிக்கும் நண்பர்கள் விளம்பரங்களை கிளிக் செய்து வருவாயை ஈட்ட உதவி செய்ய வேண்டுகிறேன். உதவுங்கள் இன்னும் தரமான ஆக்கங்களை உருவாக்க உதவுங்கள். அத்துடன் இந்த பதிவுகள் தரமுள்ளதாக இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் இதனை பற்றி தெரியபடுத்துங்கள். அனைத்து திரட்டிகளிலும் நீங்கள் போடும் ஒட்டுகளினால் இன்னும் உலகம் முழுக்க தமிழர்கள் அனைவருக்கும் போய்ச் சேர ஒரு உங்கள் ஒட்டு ஒரு வாய்ப்பாக அமையும்
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...