டொரண்ட் தரவிறக்க மட்டும் மென்பொருள் மற்றும் புதிய விளையாட்டுகள்

நண்பர்களே நாம் ஒவ்வொரு படங்களையும் டொரண்ட் என்னும் மென்பொருளை உபயோகப்படுத்தி தரவிறக்கி படம் பார்ப்பவர்கள்தான் அதிகம்.  அவ்வாறு  தரவிறக்கும் போது உங்கள் படங்கள் தரவிறக்கிக் கொண்டிருக்கும் பொழுதே தரவேற்றமும் செய்யும்.   அதாவது நீங்கள் ஒரு படத்தை Download செய்யும் போதே அந்த படம் Uploadம் செய்யப்படும்.  இது போல் நடக்காமல் இருக்க ஒரு மென்பொருள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.  அதன் பெயர் BitThief பிட்தீப்.  இந்த மென்பொருள் மூலம் நீங்கள் எந்த ஒரு டொரண்ட் கோப்பையும் Upload செய்யாமல் Download மட்டும் செய்யலாம்.  இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி

இந்த மென்பொருள் விண்டோஸ், லினக்ஸ் மற்றும் மேக் கணினிகளில் இயக்க என்று தனித்தனி மென்பொருட்கள் வெளியிடப்பட்டுள்ளது.

பிட்தீப் இணையதள சுட்டி

நிறைய பேர் சிறு வயதில் சா பூ த்ரி என்ற விளையாட்டு ( விளையாட்டின் பெயர் சரிதானே தப்பாக இருந்தால் திருத்தவும்)  அது போன்று வெளிநாட்டில் Rock Paper Scissiors என்ற விளையாட்டு மிகவும் பிரசித்தமானது.  இந்த விளையாட்டு இப்பொழுது கணினியுடன் ஆடுவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.  இந்த விளையாட்டை விளையாட சுட்டி

இந்த விளையாட்டு குறித்த மேலதிக தகவல்கள் குறித்த விக்கிபீடியா பக்கம் சுட்டி


விண்டோஸ் எக்ஸ்பியில் மற்றும் விண்டோஸ் 7க்கான கேட்ஜெட் பேக் தரவிறக்க சுட்டி

பல கடின வேலைகளுக்கிடையில் இந்த சிறு பதிவு மன்னிக்கவும் நண்பர்களே வேலை அதிகம்

ஒரு அறிவிப்பு 

இந்த வலைத்தளம் மூலம் எனக்கு எதுவும் எந்த ஆதாயமும் கிடைக்காமல் இருந்து வருகிறது. ஆனாலும் தொடர்ந்து பல பதிவுகளை  கஷ்டப்பட்டு தான் இந்த பதிவுகளை எழுதுகிறேன்.  அதனால் நான் எழுதும் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் உபயோகமானவை என்றே நம்புகிறேன்.  இவ்வாறிருக்கையில் வரும் நண்பர்கள் என் வலைத்தளத்தில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்து பார்ப்பதன் மூலம் என்னால் மாதம் ஒரு சிறு தொகையை ஈட்ட முடியும் என்று நம்புகிறேன்.  ஆகையால் பதிவுகளை படிக்கும் நண்பர்கள் விளம்பரங்களை கிளிக் செய்து வருவாயை ஈட்ட உதவி செய்ய வேண்டுகிறேன். உதவுங்கள் இன்னும் தரமான ஆக்கங்களை உருவாக்க உதவுங்கள்.  அத்துடன் இந்த பதிவுகள் தரமுள்ளதாக இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் இதனை பற்றி தெரியபடுத்துங்கள்.  அனைத்து திரட்டிகளிலும் நீங்கள் போடும் ஒட்டுகளினால் இன்னும் உலகம் முழுக்க தமிழர்கள் அனைவருக்கும் போய்ச் சேர ஒரு உங்கள் ஒட்டு ஒரு  வாய்ப்பாக அமையும்.


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

400வது பதிவு மற்றும் SARDU உருவாக்குவது எப்படி?

நண்பர்களே இன்று பலவகையான Rescue Disk களை இணைத்து ஒரு USB Disk வழியாக Boot செய்வது எப்படி என்று பார்க்க போகிறோம்.  இது போல் செய்வதால் என்ன பலன் என்றால் சுலபமாக எந்த கணினியிலும் Rescue Disk வழியாக Boot செய்யலாம்.   பலவகையான Anti Virus மற்றும் Utitlity களை எந்த கணினியில் Bootable ஆக கையாள முடியும்.   இந்த வகைய Rescue USB Disk களை கொண்டு எந்த ஒரு கணினியிலும் உள்ள பிரச்சனைகளை தீர்க்க மிகவும் உதவியாக இருக்கும். இது கணினி சர்வீஸ் என்ஜினியர்களுக்கு மிகவும் பேருதவியாக இருக்கும்.


இது போன்ற USB டிஸ்க் தயாரிக்க குறைந்த பட்சம் 2 ஜிபி பென் ட்ரைவ் இருத்தல் நலம்.


முதலில் பென்ட்ரைவை பார்மெட் செய்து கொள்ளுங்கள்.

பென்ட்ரைவை பார்மெட் செய்யும் போது  FAT 32 ஆக பார்மெட் செய்து கொள்ளுங்கள்.

பிறகு இந்த சுட்டியில் இருந்து SARDU ( Shardana Antivirus Rescue Disk Utility) தரவிறக்கிக் கொள்ளுங்கள்.    SARDU தரவிறக்க சுட்டி

தரவிறக்கிய பிறகு அது ஒரு Zip கோப்பாக இருக்கும்.  அந்த கோப்பை Extract செய்து கொள்ளுங்கள்.

Extract செய்த போல்டரில் இருந்து SARDU மென்பொருளை திறக்கவும். 

அதில் உங்களுக்கு தேவையான அத்துடன் உங்கள் பென் ட்ரைவ் கொள்ளளவுக்குள் தேவையான ஆன்டி வைரஸ் மற்றும் யூட்டிலிட்டிகளை தரவிறக்கிக் கொள்ளுங்கள். 

தரவிறக்கம் முடிந்தவுடன் ஒருமுறை மென்பொருளை மூடிவிட்டு திரும்பவும் திறக்கவும். 
 


( நீங்கள் தரவிறக்கிய கோப்புகள் எந்த ட்ரைவில் நீங்கள் SARDU மென்பொருளை இயக்கினீர்களோ அந்த போல்டரில் ஒரு ISO என்ற போல்டர் உருவாகி அதற்குள் அனைத்து ஆன்டிவைரஸ் ரெஸ்க்யூ கோப்புகள் மற்றும் மென்பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். தேவையென்றால் அந்த கோப்புகளை தனி தனி சிடிக்களில் தனி தனி  ரெஸ்க்யூ சிடிக்களாகவும் எரிக்கலாம்.)

மென்பொருளை திறந்த பிறகு Make USB என்று வலது புறத்தில் உள்ள பட்டனை அழுத்தவும்.

அவ்வளவுதான் முடிந்தவுடன் உங்கள் ரெஸ்க்யூ யூஎஸ்பி ட்ரைவை எங்கு வேண்டுமானாலும் பூட்டபிளாக உபயோகபடுத்தலாம்.

இதற்கு தேவையானவை உங்கள் கணினியில் USB பென் ட்ரைவ் குறைந்தது 2 ஜிபி, இணைய சேவை,  மற்றும் SARDU மென்பொருள்.



இதுவரை பதிவு படித்தவர்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு


நண்பர்களே இது என்னுடைய 400வது பதிவு இதுவரை என்னை ஊக்கமளித்து மேலே கொண்டுவந்த அனைத்து நண்பர்களுக்கும் பதிவர்களுக்கும் இன்ட்லி, தமிழ்10, திரட்டி, தமிழ்மணம் போன்ற திரட்டி நண்பர்களுக்கும்.  எந்த ஒரு நன்றியையும் கூறமால் என் பதிவுகளை தாங்களாகவே Republish அல்லது காப்பி  பேஸ்ட் செய்த சக திருட்டு நண்பர்களுக்கும்.  ஒன்றுமே வருமானம் இல்லாத நிலையில் தமிழ் கம்ப்யூட்டர் என் வலைப்பூவில் வந்த பதிவுகளை தங்கள் புத்தகத்தில் வெளியிட்டு அதன் மூலம் சிறு வருமானம் தந்த தமிழ் கம்ப்யூட்டர் நிறுவனத்திற்கும் அதன் நிறுவனருக்கும்.  என்னால் திரட்டிகளில் இணைக்க முடியாத பொழுது என் பதிவுகளை திரட்டிகளில் இணைத்த கேபிள்ஷங்கர் மற்றும் வால்பையன் அவர்களுக்கும் எனது கோடான கோடி நன்றிகள். 


இத்தனை பதிவுகளுக்கு பிறகு சில நூறு ரூபாய்கள் செலவு செய்து கூகிள் நிறுவனத்தின் கூகிள் ஆட்ஸ் வாங்கியிருக்கிறேன்.  இதன்  மூலமாவது சிறு வருமானம் வர வழி வகுத்துக் கொடுங்கள்.  இந்தியா மட்டுமல்லாமல் வெளி நாடுகளில் வசிக்கும் நண்பர்கள் தங்கள் பதிவுகளை படிக்கும் பொழுது தாங்கள் ஒரு கிளிக் செய்தால் மிகவும் உதவியாக இருக்கும்.  செய்வீர்கள் என்று நினைக்கிறேன்.   என்றும் உங்கள் ஆதரவையும் பங்களிப்பையும் நாடி நிற்கும்  உங்களில் ஒரு நண்பன்.



நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

பிடிஎப் கோப்பிலிருந்து வேர்ட் கோப்பிற்கு மாற்ற மென்பொருள் நிறைய மென்பொருட்கள் உங்களுக்காக

நண்பர்களே உங்களிடம் உள்ள பிடிஎப் கோப்புகளை வேர்ட் கோப்பிற்கு மாற்ற மிகவும் சுலபமான மென்பொருள்  PDF TO Word Converter  இந்த மென்பொருள் சட்டரீதியான மென்பொருள் பாக்ஸாப்ட் நிறுவனத்திலிருந்து வெளி வந்துள்ளது இந்த மென்பொருளை தரவிறக்க இங்கே செல்லவும் சுட்டி


உங்கள் கணினியில் உள்ள Vulnerable அதாவது தீங்கு நிரல்கள் மற்றும் பழைய மென்பொருட்கள் காலவாதியான மென்பொருட்கள் மூலம் சில நேரங்களில் உங்கள் கணினி பாதிக்க  வாய்ப்பு உள்ளது அந்த மாதிரி நேரங்களில்  இந்த மென்பொருள் மூலம் உங்கள் கணினியை ஆராய்ந்தால் உங்கள் கணினியில் Vulnerable மென்பொருட்கள் மற்றும் கோப்புகளை கண்டறிந்து நீக்கிவிடும்.  இந்த மென்பொருள் பிசிவேர்ல்ட் மற்றும் ஜிடிநெட் பத்திரிக்கை நிறுவனத்தினர் பரிந்துரைத்துள்ளனர்.  மிகவும் வேகமான மற்றும் சுலபமான மென்பொருள் இது ஒவ்வொரு கணினியிலும் இருக்க வேண்டியது என்று கூறியுள்ளார்கள். இந்த மென்பொருளின் பெயர் பிஸிசெக்யூனியா இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி  


இந்த நேரத்தில் ஒரு முக்கிய விஷயத்திற்காக பாரட்ட வேண்டியது உள்ளது.  அதுதான் மைக்ரோசாப்ட் நிறுவனம் துவக்கப்பட்டு சரியாக இந்த வருடத்தோடு 25 வருடம் முடிகிறது.  விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டு மூன்று ஆண்டுகள் கழித்துதான் விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது.  இப்பொழுது விண்டோஸ் 7 வெளியிடப்பட்டு சக்கை போடு போடுகிறது.  அத்துடன் இவர்கள் வெளியிட்ட விண்டோஸ் எம் இ மற்றும் விண்டோஸ் விஸ்டா மட்டுமே தோல்வியுற்றது.

விண்டோஸ் முதல் பதிப்பின் படம் கீழே


அடுத்த மாதம் டிசம்பர் மாதம் கிறிஸ்தவ நண்பர்கள் மட்டுமல்ல உலகெமே எதிர்பார்க்கும்  நன்னாள் கிறிஸ்து அவதரித்த தினம் வர போகிறது.  அனைவரும் உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு கட்டாயம் ஒரு பரிசு கொடுப்பீர்கள் பரிசின் மேலே லேபிள் கடைகளில் கிடைக்கும் இருந்தாலும் இந்த வலைத்தளத்தில் இருந்து எடுத்து ஒட்டி பாருங்களேன்  கிறிஸ்துமஸ் லேபிள் எடுக்க சுட்டி


 

நீங்கள் படிக்கும் பதிவு நாலு பேரிடம் செல்ல வேண்டுமென்றால் கட்டாயம் அனைத்திலும் ஒட்டு போடுங்கள் உங்களை போல பலரும் தமிழில் தொழில்நுட்பத்தையும் அரிய வலைத்தளங்களையும் அறிந்து  கொள்ளட்டும்.   ஆகையால் கட்டாயம் ஒட்டு போடவும்.

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

அலுவலகத்தில் இருந்து வீட்டுக் கணினியை தொடர்பு கொள்ள எளிய வழி

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 496க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி 

நண்பர்களே உங்கள் வீட்டு கணினியில் உள்ள கோப்புகளை அலுவலக கணினியில் இருந்து கொண்டு பார்ப்பது எப்படி இதற்கு டீம் வீவர் வழியாக பார்க்கலாம் என்று கூறுவீர்கள்.  சரிதான் ஆனால் டீம் வீவர் திறந்து வைத்து அதில் வரும் ஐடி மற்றும் கடவுச் சொல் கொடுத்தால்தான் எதிர்ப்பக்கம் உள்ள கணினியை பார்க்க முடியும்.  ஆனால் இந்த மென்பொருள் மூலமாக எதிர்ப்பக்கம் உள்ள கணினி ஆன் செய்திருந்தால் மட்டும் போதும் இதை எப்படி செய்வது என்று சொல்கிறேன்.

இதற்கு தேவை ஒரு ஜிமெயில் ஐடி மற்றும் ஜிப்ரிட்ஜ் மென்பொருள்

முதலில் ஜிபிரிட்ஜ் மென்பொருளை இங்கு இருந்து தரவிறக்கி கொள்ளுங்கள்.  சுட்டி


பின்னர் இந்த மென்பொருளை உங்கள் வீட்டில் உள்ள கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள்.

நிறுவிய பிறகு உங்கள் கணினியில் உங்களுடைய ஜிமெயில் ஐடி மற்றும் கடவுச்சொல் கேட்கும்.  கொடுங்கள் பிறகு AutoStart மற்றும் Remember me என்பதனை தேர்வு செய்து கொள்ளுங்கள் வேண்டும் என்றால்.

AutoStart தேர்வு செய்தால் விண்டோஸ் ஆன் செய்த பிறகு தானாகவே ஜிபிரிட்ஜ் அப்ளிகேசன் திறக்கும்.

Remember me என்பதை தேர்வு செய்தால் உங்கள் ஜிமெயில் ஐடி மற்றும் கடவுச்சொல் நினைவில் வைத்திருக்கும்.

இந்த இரண்டையும் தேர்வு செய்வது நல்லதே.

பிறகு உங்கள் கணினியில் இது போல டாஸ்க்மேனஜரில் அமர்ந்து கொள்ளும்.

இது போல இரண்டு பக்கமும் செய்து கொள்ளுங்கள்.



அடுத்து நீங்கள் எந்த கணினியை நீங்கள் பார்க்க விரும்புகிறீர்களோ அந்த கணினியில் டாஸ்க்மேனஜரில் அமர்ந்துள்ள  ஜிப்ரிட்ஜில் வலது கிளிக் செய்து அதில் Show GBridge என்பதனை தேர்வு செய்யுங்கள்.

பிறகு DesktopShare என்பதனை கிளிக் செய்தால் அதில் வரும் Configure GBridge DesktopShare (VNC) என்பதனை கிளிக் செய்யுங்கள்


அங்கு முதலில் Allow என்பதனை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

அடுத்து இரண்டாவது பெட்டியில் Allow after Verify DesktopShare password (use built-in VNC server)  என்ற பட்டனை தேர்வு செய்தால் கீழே ஒரு கடவுச்சொல் பெட்டி திறக்கும் அங்கு நீங்கள் ஒரு புது கடவுச்சொல் கொடுத்துக்கொள்ளுங்கள். ( உ.ம் - 12345@12345) பிறகு ஒகே பட்டனை அழுத்தி வெளி வாருங்கள்.

 அடுத்து உங்கள் எதிர்ப்பக்கம் உள்ள கணினியில் ஜிப்ரிட்ஜ் திறந்து அதில் உங்கள் வீட்டுக் கணினியில் கொடுத்த ஜிமெயில் ஐடி மற்றும் கடவுச்சொல் கொடுத்தால் உங்கள் வீட்டுக் கணினியை உங்கள் ஜிபிரிட்ஜில் உள்ள MyComputers பகுதியில் தெரியும்.


அந்த கணினியை வலது கிளிக் செய்து  Access Gbrige builtin VNC என்பதனை தேர்வு செய்யுங்கள் இப்பொழுது கடவுச்சொல் கேட்கும் நீங்கள் அந்த கணினியில் கொடுத்த ஒரு கடவுச்சொல் கொடுத்தீர்கள் அல்லவா ( உ.ம் - 12345@12345)  அதை இங்கே கொடுங்கள் முடிந்தது.


இது போல செய்ய ஜிபிரிட்ஜ் மென்பொருள், ஜிமெயில் ஐடி, இரண்டு பக்கமும் இணையம் இருந்தால் போதும்

இந்த மென்பொருள் மூலம் ஜிமெயில் நண்பர்களுக்கு அழைப்பு அனுப்பி கூகிள்சாட் செய்ய முடியும்.

இரண்டு கணினிகளுக்கு இடையே Sync செய்ய முடியும்.


ஜிபிரிட்ஜ் மென்பொருள் தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருள் மூலமாக நிறைய பயன்கள் உண்டு நீங்களும் முயற்சித்து பாருங்களேன்.

ஜிபிரிட்ஜ் குறித்த விக்கிபீடியாவின் விரிவான பதிவு சுட்டி




நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை