நண்பர்களே நம் கணினி திரையினை படம்பிடிக்க எத்தனையோ டூலகள் இருந்தாலும் இலவசமாக அதுவும் ஒபன் சோர்ஸ் டூல் போல வராது என்பது என் கருத்து. ஏன் என்றால் ஒபன் சோர்ஸ் அல்லாத மென்பொருட்கள் அனைத்தும் ஒரு முறை இலவசம் தந்தாலும் அதன் பிறகு புதியதாக அப்டேட் செய்தால் கட்டாயம் அந்த புதிய மென்பொருளினை காசு கொடுத்துதான் வாங்க வேண்டும். அதே ஒபன் சோர்ஸ் என்றால் கட்டாயம் மேம்படுத்திக் கொண்டே இருப்பார்கள். இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம் என்பதே அதன் தனிச்சிறப்பு.
இந்த ஸ்கீரின்ஷாட் எடுக்கும் மென்பொருள் அளவு மிகச்சிறியது வெறும் 600கேபி அளவுடையது இந்த மென்பொருள்
இந்த மென்பொருளின் பெயர் Greenshot எனபதாகும். இந்த மென்பொருள் உபயோகித்து பாருங்கள் உங்களுக்கே தெரியும் இதன் மகத்துவம்.
இந்தமென்பொருளை தரவிறக்க
சுட்டி
விண்டோஸ் 7 கணினியில் மட்டும் உபயோகப்படுத்தப்படும் 100 வகையான விண்டோஸ் 7 தீம்கள் உங்களுக்காக
சுட்டி இந்த மென்பொருள் வெறும் 2.97எம்பி மட்டுமே
எந்த ஒரு வீடியோ டிவிடியில் இருந்தும் AVI, DivX, Mpeg கோப்புகளாக மாற்றும் ஒரு ஒபன் சோர்ஸ் மென்பொருள் உங்களுக்காக இந்த மென்பொருள் மிக அருமை என்று இதை உபயோகித்தவர்கள் கூறுகின்றனர். நான் இனிமேல்தான் உபயோகிக்க போகிறேன். இந்த மென்பொருள்
டிவிடியில் இருந்து Xvid/Divx, MPEG-4, H.264/AVC, QuickTime, Flash Video, Ogg, WebM, AC.3, MP3, MP4/AAC போன்ற கோப்புகளாக மாற்ற முடியும்.
மென்பொருள் தரவிறக்க
சுட்டி
பல வேலைகளுக்கு நடுவில் அனைவருக்கும் உதவும் மிக உன்னதமான மென்பொருட்கள் அறிமுகப்படுத்துகிறேன். அதை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டியது உங்கள் கடமை. உங்களுடைய பின்னூட்டங்களும் என்னை ஊக்கப்படுத்தும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். இந்த பதிவு என்னுடைய 425வது பதிவாகும்.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே இதுவரை எழுதிய பதிவுகள் அனைத்தையும் காண ஒரு சுட்டி உருவாக்கி வலது பக்கம் கொடுத்து வைத்துள்ளேன் புதியதாக நம் வலைத்தளத்திற்கு வரும் நண்பர்கள் நேரடியாக அங்கு சென்று அந்த சுட்டி மூலம் நான் எழுதிய பதிவுகளை காண முடியும். அத்துடன் நிறைய கேள்விகள் வருகிறது அதுவும் பின்னூட்டப் பெட்டியிலே வருவதால் இனி தனியாக ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதுவும் வலது பக்கம் மேலே முதலிலேயே கொடுத்திருக்கிறேன். உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க.. இனி பாராட்டு என்றால் பின்னூட்டப்பெட்டியிலும் திட்டுவதாக அல்லது ஏதாவது தவறு செய்திருந்தால் அல்லது உங்கள் மனதில் தோன்றும் கணினி குறித்த சந்தேகங்களுக்கு உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க என்ற பகுதியிலும்
கேட்கவும். எனக்கு தெரிந்ததை உங்களுக்கு சொல்கிறேன். நண்பர்களே இதுவரை கொடுத்து வந்த ஆதரவை இனியும் தரவேண்டுகிறேன்.
கேள்விகள் கேட்க
சுட்டி
அனைத்து பதிவுகளையும் காண
சுட்டி
நாம் கணினியில் உள்ள வீடியோ மற்றும் புகைப்படங்களை நம்மால் ஸ்கிரின் சேவராக உபயோகப்படுத்த முடியும். அதுபோல பவர்பாய்ன்ட் கூட ஸ்கிரின் சேவராக உபயோகப்படுத்தலாம். ஆனால் டெக்ஸ்ட் கோப்புகளான நோட்பேட் மற்றும் மைக்ரோசாப்டில் உருவாக்கி வேர்ட் கோப்புகளான டெக்ஸ்ட் கோப்புகளை ஸ்கீரின் சேவராக கொண்டுவர முடியுமா? முடியும் அதை எப்படி செய்வது. முதலில் இந்த மென்பொருளை தரவிற்க்கிக் கொள்ளுங்கள். பிறகு இந்த மென்பொருளை திறந்து உங்களுக்கு தேவையான டெக்ஸ்ட் கோப்பினை தேர்வு செய்யுங்கள். பிறகு உங்களுக்கு இந்த ஸ்கீரின் சேவர் எவ்வளவு நேரத்தில் செயல்பட வேண்டும் என் தீர்மானித்துக் கொள்ளுங்கள். முடிந்தது இனி நீங்கள் உங்கள் கணினியை எவ்வளவு நேரம் உபயோகப்படுத்தாமல் இருக்கிறீர்களோ அப்பொழுது தானாக இந்த மென்பொருள் இயங்கி டெக்ஸ்ட் கோப்பினை ஸ்கீரின் சேவராக அலங்கரிக்கும். இந்த மென்பொருளின் யார் வேண்டுமானாலும் மேம்படுத்தலாம் என்பதே. அதாவது இது ஒரு திறந்த நிலை கட்டற்ற மென்பொருள். இந்த மென்பொருளின் பெயர்
கோடுசேவர்
மென்பொருளை தரவிறக்க
சுட்டி
நெருப்பு நரி உலாவி உபயோகப்படுத்துபவர்களுக்கான நீட்சிகள்
டவுண்லோடு ஸ்டேடஸ்பார்
நீங்கள் நெருப்பு நரி உலாவி வழியாக இணையத்தில் கோப்புகள் தரவிறக்கும் பொழுது அந்த கோப்புகள் எவ்வளவு வேகமாக தரவிறக்குகிறது. இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் தரவிறக்கும் வேகம் என்ன என்பதனை தெரிந்து கொள்ள இந்த நீட்சி மிகவும் உபயோகமாக இருக்கும்.
நீட்சி தரவிறக்க
சுட்டி
பாக்ஸ்டேப்
நீங்கள் பார்க்கும் தளங்களை 3டி போன்று காண இந்த நீட்சி உதவுகிறது. அத்துடன் இதில் ஸ்பீடு டயல் வசதியும் உள்ளது. நீங்கள் அடிக்கடி செல்லும் தளங்களை ஸ்பீடு டயல் மூலம் விரைவாக அணுகவும் உதவுகிறது.
நீட்சி தரவிறக்க
சுட்டி
வெப் 2 பிடிஎப்
நீங்கள் காணும் எந்த ஒரு தளத்தையும் ஒரு பிடிஎப் கோப்பாக மாற்றி தர இந்த நீட்சி உதவுகிறது.
நீட்சி தரவிறக்க
சுட்டி
பிடிஎப் அன்லாக்கர்
உங்களிடம் ஒரு நண்பர் ஒரு முக்கியாமான பிடிஎப் தருகிறார். அத்துடன் சொல்கிறார் அதன் கடவுச்சொல் மறந்து விட்டது என்று கூறினால் எப்படி இருக்கும் மிகவும் அதிர்ச்சயடைய மாட்டீர்கள். என்னடா இது முக்கியமான கோப்பாயிற்றே. இதன் கடவுச்சொல் எதுவும் எடிட் செய்ய முடியாதே கடவுச்சொல் தெரிந்தால்தானே திறக்கவே முடியும். நம்முடைய மேலதிகாரி உடனே வேண்டும் என்று சொன்னாரே என்ன செய்வது என்று ஒரு குழப்பமான மனநிலைக்கு தள்ளப்படுவீர்கள். அவ்வாறு நடந்தால் குழப்பமடையாமால் மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் உடனே இந்த மென்பொருளை தரவிறக்குங்கள். நேரடியாக திறக்கலாம் இது ஒரு நேரடி மென்பொருள். கணினியில் நிறுவ தேவையே இல்லை என்பதன் சிறப்பு.
இந்த மென்பொருள் பெயர் பிடிஎப் அன்லாக்கர். இந்த மென்பொருளை கடவுச்சொல் கொடுத்திருந்தாலோ அல்லது பிரிண்ட் செய்யமுடியாமல் தடை செய்யப்பட்டிருந்தாலோ கூட இதனால் இந்த பிரச்சனைகளை அனாசியமாக களைந்து உங்களுக்கு உடனே கொடுத்துவிடும்.
இந்த மென்பொருளை தரவிறக்க
சுட்டி
நன்றி. மீண்டும் வருகிறேன்.
» Read More...