நண்பர்களே உங்கள் பின்னூட்டமும் உற்சாகமும் எவ்வளவு வேலைகளுக்கிடையிலும் ஒரு பதிவு போட வேண்டும் என்று போட்டு வருகிறேன் இதற்கு உங்கள் உற்சாகமும் வேண்டும் அத்துடன் முடிந்த்வரை படிப்பவர்கள் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். முடிந்த்வரை விளம்பரக் கணைகளை தொட்டு பாருங்கள். நன்றி இனி பதிவிற்கு செல்வோம்.
புதிய யூட்யூப் இன்டெர்பேஸ்
இதுவரை கூகிள் நிறுவனம் தன்னுடைய ஜிமெயில்
மற்றும் கூகிள் ரீடருக்கு மட்டும் இடைமுகப்பை (Interface)
மாற்றியிருந்தது. அடுத்ததாக தன்னுடைய வீடியோ தளமான யூட்யூப் தளத்திற்கும்
புதிய பொலிவினை வழங்குகிறது. ஆனால் இது இன்னும் நடைமுறைக்கு வர இன்னும்
சிறிது நாட்களாகும் என்று தெரிகிறது. சில கோடிங் மாற்றத்தின் மூலம் நாமும்
அந்த புதிய இடைமுகப்பை பெற முடியும். இதற்கு நீங்கள் உங்கள் கூகிள்
மூலம் யூட்ய்பில் நுழைந்து கொள்ளுங்கள்.
பிறகு நீங்கள் பயர்பாக்ஸ் உபயோகிப்பவர்கள் என்றால் Ctrl+Shift+K
அழுத்தினால் பயர்பாக்ஸ் மேலே டெவலப்பர்களுக்கான Console Box வரும் அங்கு
கீழுள்ள வார்த்தையை காப்பி செய்து பேஸ்ட் செய்யுங்கள். பிறகு ஒரு என்டர்
தட்டுங்கள். உங்கள் youtube பக்கத்தினை F5 கொடுத்து Refresh செய்து
பாருங்கள்.
document.cookie="VISITOR_INFO1_LIVE=ST1Ti53r4fU";
இதே நீங்கள் கூகிள் குரோம் உபயோகிப்பவர்கள் என்றால் Ctrl+Shift+J கொடுத்து Console Box செல்லலாம்.
உங்களின் புதிய அனுபவத்திற்கு தயாரகுங்கள்.
ஒரு குறுஞ்செய்தி
அடுத்து மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிடப் போவது விண்டோஸ் 8 இதில் இலவசமக
மைக்ரோசாப்டின் விண்டோஸ் செக்யூரிட்டி எஸ்ஸென்டியல்ஸ் ஆன்டி வைரஸ் இணைத்து
வழங்க போவதாக அறிவித்துள்ளது. இது மைக்ரோசாப்ட் உபயோகிப்பவர்களுக்கு ஒரு
மகிழ்ச்சியான செய்தி இந்த செய்தி ஆன்டிவைரஸ் தயாரித்து வழங்கும்
நிறுவனத்திற்கு அதிர்ச்சியான செய்தியும் ஆகும்.
கீழே Grand Theft Auto V Trailer உங்களுக்காக
Grand Theft Auto என்பது மிகவும் அனைவராலும் விரும்பபடக்கூடிய ஒரு
விளையாட்டாக இருக்கிறது. இதன் ஐந்தாம் பாகம் விரைவில் வெளியாக
இருக்கிறது. இந்த விளையாட்டின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது. செம
சூப்பராக இருக்கிறது கிராபிக்ஸ்.
கணினி ஆன் மற்றும் ஆப் செய்யப்பட்டது எப்பொழுது
உங்கள் கணினி எந்த நேரத்தில் இருந்து உங்கள் ஆன் மற்றும் ஆப் செய்யப்பட்டது
என்பதை தெரிந்து கொள்ள இந்த மென்பொருள் மிகவும் உபயோகமாக இருக்கும். இது
கடந்த மூன்று வாரங்கள் வரை உங்கள் கணினி எந்த நேரத்தில் ஆன் செய்து
வைக்கப்பட்டது எந்த நேரம் உபயோகப்படுத்தப்பட்டு அணைக்கப்பட்டது என்ற
தகவல்கள் காட்டும். இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி
நண்பர்களே Start Trek படத்தின் வரலாறு குறித்த புகைப்படம். இந்த Star Trek சீரியல் மிகவும் பிடிக்கும். அடுத்த படம் 2012ல் அல்லது 2013ல் வெளியாகும் என தகவல் .
விண்டோஸ் எக்ஸ்பியில் நாம் முதலில் இன்ஸ்டால் வரும் டெஸ்க்டாப் படம் பச்சை பசேலன இருக்கும் புல்வெளி தோற்றம். இத் மிகவும் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும். இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட பருவம் வசந்த காலம் ஆகும். வசந்த நேரம் தவிர மற்ற காலத்தில் இந்த படம் போல் தான் இருக்கும்.
மிகவும் அதிகமாக உபயோகப்படுத்தப்படும் ஆன்டி வைரஸில் எது அதிகமாக உலகம் முழுவதும் உபயோகப்படுத்தபடுகிறது என்பதை விளக்கும் படம். கீழே இந்தபடத்தை தந்தவர்கள் நம் பதிவில் முன்னர் அறிமுகப்படுத்திய 19 ஆன்டி வைரஸ்கள் கொண்டு சோதிக்கும் ஆன்லைன் ஸ்கேனர் தளத்தினர் தான் 19 ஆன்டிவைரஸ்கள் கொண்டு சோதிக்க சுட்டி
வெளிநாட்டில் மற்றும் உள்நாட்டில் நமது வலைத்தளத்தினை படிப்பவர்கள் முடிந்தவரை வலைத்தளத்தினை பற்றி அடுத்தவருக்கு சொல்லவும். விளம்பரங்களையும் கிளிக் செய்தால் உதவியாக இருக்கும். இதுவரை நம் தளத்தினை பின் தொடர்பவர்கள் 790 பேர் ரீடர்கள் மூலம் படிப்பவர்கள் 2270 பேர் வலைத்தளத்தினை பின் தொடரும் அனைவருக்கும் மிக்க நன்றி
நண்பர்களே நாம் எப்பொழுதும் வேர்ட் எக்ஸல் போன்றவற்றிற்கு நாடுவது
மைக்ரோசாப்டைதான். ஏன் என்றால் அது மிகவும் சுலபமாக இருக்கும்
கையாள்வதற்கு என்பதாலேயே அதை உபயோகிக்கிறோம். இத்தனைக்கும் அந்த
மென்பொருள் இலவசமில்லை பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும் ஆனால் இந்தியாவில்
மைக்ரோசாப்ட் ஆபிஸ் திருட்டு காப்பி எடுத்துதான் உபயோகிக்கிறார்கள்.
இதற்கு பதில் இலவசமாக கிடைக்கும் ஒபன் ஆபிஸ் போன்ற மென்பொருட்களை
பயன்படுத்தலாம். இப்பொழுது ஒரு ஆபிஸ் வெளி வந்திருக்கிறது. அதன் பெயர்
கிங்க்சாப்ட் KingSoft Office Suite 2012 இது ஒரு இலவச மென்பொருள்.
இந்த மென்பொருள் மூலம் வேர்ட், எக்ஸல், பவர்பாயிண்ட், போன்றவைகளை உருவாக்க முடியும்.
அது மட்டுமல்லாமல் மைக்ரோசாப்ட் வேர்ட் எக்ஸல் பவர்பாயிண்ட் போன்ற கோப்புகளையும் எடிட் செய்ய முடியும்.
நேரடியாக பிடிஎப் கோப்பாகவும் சேமிக்க முடியும்.
மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010 கோப்புகளையும் எடிட் செய்ய முடியும்.
மென்பொருளுக்குள் டேப் வசதி உண்டு என்பதால் சுலபமாக அடுத்த கோப்பிற்கு சுலபமாக தாவலாம்.
இந்த மென்பொருளை உபயோகிக்க வெறும் 256எம்பி ராம் இருந்தால் போதும் பென்டியம் 3 சிஸ்டம் போதுமானது.
நண்பர்களே நம் கணினியில் உள்ள தேவையற்ற கோப்புகளை நீக்க நிறைய முறைகளை பின்பற்றுவோம். அதில் ஒன்று சிசி கீளினர் உபயோகப்படுத்துவது. இன்னொரு முறை நாமளே நீக்குவது தேவையில்லாத டெம்பரவரி கோப்புகள், இண்டெர்நெட் குக்கீகள் போன்றவற்றை நாமளே நீக்குவது. நாமளே நீக்குவது என்பது மிகவும் சிரமமான விஷயம் என்பதால்தான் சிசிகீளினர் போன்ற மென்பொருட்கள் வந்து நம் கணினியின் பளுச்சுமையை குறைத்துள்ளது.
சிசி கிளீனர் போன்ற ஒரு மென்பொருள்தான் ப்ளீச் பிட் Bleach Bit
இந்த மென்பொருள் ஒரு திறந்த நிலை மென்பொருள் என்பதால் இன்னும் நிறைய பேர் இதை மேம்படுத்துவார்கள் என்று கட்டாயம் நம்பலாம்.
இந்த மென்பொருள் 90க்கும் மேற்பட்ட அப்ளிகேசன்களை ஆதரிக்கிறது.
இந்த மென்பொருள் போர்ட்டபிள் மற்றும் கணினியில் நிறுவக்கூடிய வகையில் கிடைக்கிறது.
இந்த மென்பொருள் விண்டோஸ் அனைத்து வெர்சன்கள் மற்றும் லினக்ஸ் ஆதரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
கணினியில் தொடர்ச்சியாக வேலை செய்யும் நண்பர்கள் சிறிது நேரம் கூட ஓய்வு இல்லாமல் வேலை செய்வார்கள். இது போல் தொடர்ச்சியாக வேலை செய்பவர்களுக்கு சிறிது நேரம் ஒய்வு எடுக்க ஞாபகமூட்டும் ஒரு சிறு மென்பொருள் இது. இந்த மென்பொருளை நிறுவி விட்டு இவ்வளவு நேரத்திற்கு நினைவூட்டுமாறு நேரத்தினை செட் செய்து கொண்டால் போதுமானது. எந்த கலர் வேண்டுமோ அந்த கலர் செட் செய்து கொண்டால் நீங்கள் செட் செய்த நேரத்திற்கு நேரத்துடன் நீங்கள் செட் செய்த வண்ணமும் உங்கள் கணினி மாறி உங்களை ஓய்வு எடுக்க சொல்லி நினைவூட்டும். இந்த மென்பொருளின் பெயர் ஃபேட் டாப் Fade Top
யூட்யூப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த யூட்யூப் தளத்தில் கோடிக்கணக்கான வீடியோக்கள் உள்ளன. அந்த வீடியோக்களில் சில கல்வி சம்பந்தமான வீடியோக்களும் உள்ளது. ஒவ்வொரு வீடியோக்களும் பார்ட் 1 பார்ட் 2 என்று வரிசைப்படுத்தி ஒரு 20 பார்ட் வரை யூட்யூபில் வெளியிட்டுருப்பார்கள். அது போன்ற ஒன்றுக்கும் மேற்பட்ட தொடர்ச்சியான வீடியோக்களை தரவிறக்க இந்த பயர்பாக்ஸ் ஆடு ஆன் மிகவும் பேருதவியாக இருக்கும். இது போன்ற எந்த ஒரு வீடியோக்களையும் தரவிறக்க ஆடு ஆன் உபயோகமாக இருக்கும்.
Firefox ByTubeD Add-On Installer
Panda Antivirus Pro 2012
ஆன்டி வைரஸ் வரிசையில் பான்டா ஆன்டிவைரஸுக்கு தனி இடம் உண்டு எப்பொழுதுமே. பான்டா ஆன்டிவைரஸ் நிறுவனம் இப்பொழுது ஆறு மாதத்திற்கான பான்ட ஆன்டிவைரஸ் ப்ரோ 2012னை இலவசமாக
வழங்குகிறது. இந்த மென்பொருளை தரவிறக்க உங்களிடம் பேஸ்புக் கணக்கு இருந்தால் போதும். Facebook.com/PandaUSA இந்த லிங்கை கிளிக் செய்து செல்லுங்கள் கீழுள்ளது போல் ஒரு படம் வரும்
நீங்கள் Like Button கிளிக் செய்த பிறகு இது போல வரும்.
அவ்வளவுதான் உடனே தரவிறக்க வேண்டியதுதான்.
இது எதற்காக தெரியுமா இன்னும் நிறைய கஸ்டமர்களை தன் வசம் இழுக்க வேண்டி இது போன்று இலவசம் தருகிறார்கள் அதுவும் பேஸ்புக் கணக்கு வழியாக.
உங்களிடம் பேஸ்புக் கணக்கு இல்லை என்பவர்கள் இங்கே இருந்து நேரடியாக பான்ட ஆன்டிவைரஸ் ப்ரோ 2012னை இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம். Panda Antivirus PRO 2012 Download Link
அனைவருக்கும் நன்றி இது என்னுடைய 420வது பதிவு இது உங்களால்தான் என்னால் சாதிக்க முடிந்தது இன்னும் நிறைய எழுத உங்கள் கமெண்ட்ச் மற்றும் விளம்பர கிளிக்குகளும் மட்டுமே ஊக்கப்படுத்தும்.
நண்பர்களே உங்கள் கணினிக்கு ஒரு வருடத்திற்கான இண்டெர்நெட் செக்யூரிட்டி வேண்டுமா அதுவும் டெக்னிக்கல் சப்போர்ட்டுடன் 24x7 Technical support. Firewall, Antivirus, Malware போன்றவற்றை நீக்க வேண்டுமா. அத்துடன் $500க்கான இலவச காப்பீடு வேண்டுமா. விண்டோஸ் எக்ஸ்பி விண்டோஸ் 7 போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தையும் ஆதரிக்கும் இண்டெர்நெட் செக்யூரிட்டி மென்பொருள் வேண்டுமா?ஆம் என்றால் இந்தாருங்கள்.
கொமோடோ இண்டெர்நெட் செக்யூரிட்டி 2011 Comodo Internet Security Pro 2011 இப்பொழுது ஒரு வருடத்திற்கான இண்டெர்நெட் செக்யூரிட்டி 2011 மென்பொருளை இலவசமாக வழங்குகின்றனர்.
இந்த மென்பொருளில் உள்ள சிறப்பம்சங்கள் கீழே ( உடனே அனைவருக்கும் அறிய வேண்டுமென்பதால் தமிழுக்கு மொழிபெயர்க்கவில்லை மன்னிக்கவும் தோழர்களே)
Firewall
Comodo's Firewall consistently ranks among the highest in industry tests.
Defense+ Technology
Proactive protection to automatically isolate threats from suspicious files so they can't cause harm actually preventing infections not just detecting them. Cloud based whitelisting of trusted publisher easily identifies a safe file and vendor.
Auto Sandbox Technology™
To reduce interruption to the user, unknown files can only run in a secure virtual environment where they can't damage Windows, its registry, or important user data.
Minimal Interruptions
Comodo Internet Security Pro 2011 relieves you of the responsibility of deciding whether to block or allow untrusted files – it makes the decisions for you. Game Mode suppresses operations that could interfere with a user’s gaming experience such as alerts, virus database updates or scheduled scans.
Spyware Scanning
Spyware Scanner detects and cleans malware infections in PC registry and disks.
Cloud based Antivirus
Cloud based antivirus scanning detects malicious file even if a user does not have up-to-date virus definitions.
Unlimited GeekBuddy Support
Expert support offering 24/7 live chat service to assist with everything from setup to virus removal and Windows issues at no additional charge.
இந்த மென்பொருளை இயக்க 128எம்பி ராம் இருந்தால் போதும்
இந்த மென்பொருள் எத்தனை நாளைக்கு இலவசம் என்று தெரியாது. உடனே தரவிறக்கி கொள்ளுங்கள் நண்பர்களே
ஒரு அறிவிப்பு
இந்த வலைத்தளம் மூலம் எனக்கு எதுவும் எந்த ஆதாயமும் கிடைக்காமல் இருந்து வருகிறது. ஆனாலும் தொடர்ந்து பல பதிவுகளை கஷ்டப்பட்டு தான் இந்த பதிவுகளை எழுதுகிறேன். அதனால் நான் எழுதும் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் உபயோகமானவை என்றே நம்புகிறேன். இவ்வாறிருக்கையில் வரும் நண்பர்கள் என் வலைத்தளத்தில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்து பார்ப்பதன் மூலம் என்னால் மாதம் ஒரு சிறு தொகையை ஈட்ட முடியும் என்று நம்புகிறேன். ஆகையால் பதிவுகளை படிக்கும் நண்பர்கள் விளம்பரங்களை கிளிக் செய்து வருவாயை ஈட்ட உதவி செய்ய வேண்டுகிறேன். உதவுங்கள் இன்னும் தரமான ஆக்கங்களை உருவாக்க உதவுங்கள். அத்துடன் இந்த பதிவுகள் தரமுள்ளதாக இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் இதனை பற்றி தெரியபடுத்துங்கள். அனைத்து திரட்டிகளிலும் நீங்கள் போடும் ஒட்டுகளினால் இன்னும் உலகம் முழுக்க தமிழர்கள் அனைவருக்கும் போய்ச் சேர ஒரு உங்கள் ஒட்டு ஒரு வாய்ப்பாக அமையும்
நண்பர்களே இந்தியாவில் இணைய பயனாளிகள் 1998 ல் இருந்ததற்கும் இப்பொழுது இருப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. அதை நம் கண்முன் கொண்டு நிறுத்துகிறது இந்த புகைப்படம்.
நாம் இப்பொழுது கணினியில் வைரஸ் வந்தால் ஆன்டி வைரஸ் மூலம் நீக்குகிறோம். அந்த வகையில் இது வரை எத்தனையோ வைரஸ்களும் ஆன்டி வைரஸ்களும் வந்தாலும் முதன் முதலில் விண்டோஸை தாக்கிய வைரஸ் மற்றும் காப்பாற்றிய ஆன்டிவைரஸ் பற்றி எத்தனை பேருக்கு தெரியும். தெரிந்து கொள்வோமே! நாமும்!
முதன் முதலில் கணினியை தாக்கிய வைரஸின் பெயர் ப்ரெய்ன் வைரஸ் Brain Virus இந்த வைரஸ் தாக்கிய ஆண்டு 1986. இந்த வைரஸ் பழைய மாடலான 360k ப்ளாப்பி மூலம் பரவியது. இதை உருவாக்கியது பாகிஸ்தான் என்றும் இன்றுவரையில் நம்பபடுகிறது. இந்த வைரஸ் குறித்த Wikipedia பக்கம் சுட்டி
இந்த வைரஸ் 1987ல் Bernd Fix என்ற ஆன்டி வைரஸால் தடுக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் குறித்த விக்கி சுட்டி
கூகிள் நிறுவனம் இப்பொழுது நிறைய வசதிகள் செய்து வருகிறது அதன் வரிசையில் கூகிள் டாக்ஸ் தளத்தில் நீங்கள் இனி பின்வரும் இந்த வகை கோப்புகளையும் திறந்து பார்க்க முடியும்.
Microsoft Excel (.XLS and .XLSX)
Microsoft PowerPoint 2007 / 2010 (.PPTX)
Apple Pages (.PAGES)
Adobe Illustrator (.AI)
Adobe Photoshop (.PSD)
Autodesk AutoCad (.DXF)
Scalable Vector Graphics (.SVG)
PostScript (.EPS, .PS)
TrueType (.TTF)
XML Paper Specification (.XPS)
ஒரு அறிவிப்பு
இந்த வலைத்தளம் மூலம் எனக்கு எதுவும் எந்த ஆதாயமும் கிடைக்காமல் இருந்து வருகிறது. ஆனாலும் தொடர்ந்து பல பதிவுகளை கஷ்டப்பட்டு தான் இந்த பதிவுகளை எழுதுகிறேன். அதனால் நான் எழுதும் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் உபயோகமானவை என்றே நம்புகிறேன். இவ்வாறிருக்கையில் வரும் நண்பர்கள் என் வலைத்தளத்தில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்து பார்ப்பதன் மூலம் என்னால் மாதம் ஒரு சிறு தொகையை ஈட்ட முடியும் என்று நம்புகிறேன். ஆகையால் பதிவுகளை படிக்கும் நண்பர்கள் விளம்பரங்களை கிளிக் செய்து வருவாயை ஈட்ட உதவி செய்ய வேண்டுகிறேன். உதவுங்கள் இன்னும் தரமான ஆக்கங்களை உருவாக்க உதவுங்கள். அத்துடன் இந்த பதிவுகள் தரமுள்ளதாக இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் இதனை பற்றி தெரியபடுத்துங்கள். அனைத்து திரட்டிகளிலும் நீங்கள் போடும் ஒட்டுகளினால் இன்னும் உலகம் முழுக்க தமிழர்கள் அனைவருக்கும் போய்ச் சேர ஒரு உங்கள் ஒட்டு ஒரு வாய்ப்பாக அமையும்.
நண்பர்களே நம் கணினியில் ஆன்டிவைரஸ் வேண்டும் என்றால் முதலில் நம் கணினியில் குறைந்த பட்சம் 512 எம்பி நினைவகம் வேண்டும் அதோடு ப்ரோஸசர் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் மேல் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் நம் கணினியில் ஆன்டிவைரஸால் வேலை செய்ய இயலும் 512 எம்பி நினைவகம் நம் பென்டியம் 4 வகைகளில் மட்டுமே அப்கிரேடு செய்ய இயலும் அதோடு அந்த வகை கணினிகளுக்கு மட்டுமே நினைவகங்கள் மார்கெட்டுகளிலும் கிடைக்கிறது அப்பொழுது பென்டியம் 3 மற்றும் அதற்கு முந்தைய கணிகளில் விண்டோஸ் எக்ஸ்பி நிறுவி விட முடியும் ஆனால் ஆன்டி வைரஸ் நிறுவினால் உங்கள் கணினியில் நினைவகத்தை மேம்படுத்துங்கள் என்று பிழைச்சொல் வரும். சரி இது போன்ற பயனர்களுக்காகவே ஒரு ஆன்டி வைரஸ் உள்ளது. அதுவும் ஒரு வருட சட்டரீதியான இலவச உரிமத்துடன் தந்தால் யாராவாது வேண்டாம் என்று சொல்வீர்களா? யாரும் சொல்ல மாட்டீர்கள். இன்னும் பென்டியம் 3 வகை கணினிகள் உபயோகிக்கும் நண்பர்களையும் வாசகர்களையும் எனக்கும் உங்களுக்கும் தெரியும். அவர்களுக்காக இந்த மென்பொருள். இந்த மென்பொருள் மற்ற ஆன்டி வைரஸக் காட்டிலும் சிறப்பாக செயல்படுகிறது என்பதை மற்ற ஆன்டிவைரஸுடன் சோதித்து பார்க்கப்பட்டதில் இது மிகவும் சிறப்பாக உள்ளதாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் நிறுவ உங்கள் கணினியில் குறைந்தது 450 மெகாஹெர்ட்ஸ் உள்ள ப்ரோஸசர், 256எம்பி நினைவகம், 200எம்பி கொள்ளளவுக்கு மேற்பட்ட வன் தட்டு வேண்டும். விண்டோஸ் எக்ஸ்பி அதற்கு மேற்பட்ட அனைத்து விண்டோஸ்களிலும் சிறப்பாக செயல்படும்.
டொரண்ட் வழியாக திரைப்படங்கள் தர விறக்குவோம் அதற்கு நாம் ஒவ்வொரு தடவையும் இணைய உலாவியை திறந்து அதன் வழியாக டொரண்ட் தேடுபொறி வழியாக நமக்கு தேவையான திரைப்படங்களை தேடி அதன் பிறகு அதை தரவிறக்குவோம். சில நேரங்களில் அந்த திரைப்படங்களின் தரம் நன்றாக இருக்காது.
இவை அனைத்தையும் ஒரே மென்பொருள் வழியாக தேடவும் உயர்தர திரைப்படங்களை தரவிறக்கவும் இந்த மென்பொருள் மிகவும் உபயோகமாகவும் சுலபமாகவும் உள்ளது உபயோகித்து பார்த்ததில் மிகவும் பிடித்து போன மென்பொருளாக எனக்கு ஆகிவிட்டது. இந்த மென்பொருளை நீங்கள் உபயோகித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு மென்பொருளை தரவிறக்க சுட்டி இந்த மென்பொருளின் பெயர் ZButterfly.
உங்கள் ஊக்கமே எனக்கு சிறந்த மருந்து இன்ட்லியில் ஓட்டும் பதிவில் பின்னூட்டம் இட்டால் இன்னும் சிறப்பாக எழுத ஊக்கமாக இருக்கும்.
நண்பர்களே மிகவும் பிரபல ஆன்டி வைரஸ் நிறுவனம் ஏவிஜி தன் ஏவிஜி ஆன்டி வைரஸ் மென்பொருளை இலவசமாக ஒரு வருடத்திற்கு தருகிறது. இந்த மென்பொருள் மிகவும் பிரபலமானது. ஏவிஜி இண்டெர்நெட் செக்யூரிட்டி 2011. இந்த மென்பொருளை தரவிறக்க நீங்கள் செய்ய வேண்டியது. உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் எவ்வாறு உங்களுக்கு இந்த செய்தி தெரிய வந்தது. என்று குறிப்பிட்டால் போதும் உங்கள் மின்னஞ்சல் முகவரி 2 அல்ல்து 3 நாட்களுக்குள் ஒரு வருடத்திற்கான இலவச கீ வந்து விடும். நீங்கள் இந்த பாரத்தை முடித்தவுடன் மென்பொருளுக்கான தரவிறக்க லின்க் வந்து விடும்.
ஒரு வருடத்திற்கான ஏவிஜி இண்டெர்நெட் செக்யூரிட்டி 2011 பெற பதிவு செய்ய வேண்டிய இணையதள முகவரி சுட்டி
நண்பர்களே உங்கள் கணினிக்கு ஆன்டி வைரஸ் மென்பொருள் ஆறுமாதத்திற்கான இலவச மென்பொருள் வேண்டுமா. இந்த மென்பொருள் பெயர் புல்கார்ட் இண்டெர்நெட் செக்யூரிட்டி BullGuard Internet Security 10இந்த மென்பொருள் ஆன்டிவைரஸ், ஆன்டிஸ்பைவேர், பயர்வால், ஸ்பம்பில்டர், உங்கள் கணினி டேட்டாக்களை அவர்கள் தளத்தில் பேக் - அப் எடுத்து வைக்க 5 ஜிபி இலவச இடம் போன்றவை இலவசமாக தருகிறார்கள்.
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இந்த தளத்திற்கு சென்று உங்கள் பெயர் மற்றும் உண்மையான மின்னஞ்சல் முகவரி கொடுத்தால் போதும். அக்டோபர் பதினைந்தாம் தேதி உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஆறு மாத்திற்கான புல்கார்ட் இண்டெர்நெட் செக்யூரிட்டி மென்பொருள் இலவ்சமாக அனுப்பி வைப்பார்கள்.
இன்றே உங்களுக்கான மென்பொருளுக்கு உங்கள் பெயர் மின்னஞ்சல் முகவரியை கொடுத்து பதிவு செய்து கொள்ளுங்கள்.
உங்கள் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு பனி விலங்கான பெங்குவின் தீம் இலவசமாக பெற இங்கே சொடுக்குங்கள். சுட்டி
நீங்கள் சில நேரம் உங்கள் கணினி இல்லாமல் உங்கள் கணினியில் அல்லது இணையதள மையங்களில் உலாவும் போது சில மென்பொருட்கள் இல்லாமல் தவிக்க நேரிடலாம். இந்த மாதிரி நேரங்களில் உங்களுக்கு ஆபாத்பாந்தவனாக உதவிக்கு ஓடி வருகிறது ஒரு இனிய இணைய தளம். இந்த இணையதளத்தில் உங்களுக்காக அனைத்து வகையான மென்பொருட்களும் உள்ளது. இணையதள சுட்டி இதற்கு முதலில் 26 எம்பி அளவுள்ள ஒரு பிரவுசர் ப்ளக் இன் நிறுவ வேண்டும். இப்பொழுது எல்லாம் எல்லா இணையதள மையங்களிலும் மிக நல்ல வேகத்தில் இணையம் இருப்பதால் 26 எம்பி என்பது பெரிய விசயமே இல்லை என்பதால் முயற்சி செய்து பார்க்கலாம்.