பிடிஎப் மாற்றி ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் இலவச Ariel சலவைத்தூள்

நண்பர்களே ரொம்ப நாட்களாக எழுத வில்லை ஒரு வகையான சோம்பேறித்தனமும் இதுவரை என்ன எழுதிவிட்டோம் என்று ஒரு கடுப்பும் என் மீது தோன்றியதால்தான் இதுவரை ஒன்றும் எழுதவும் இல்லை சில நேரங்களில் நம் கண்முன்னே சில மென்பொருட்கள் உபயோகப்படுத்தும் பொழுதுதான் அது பற்றி தெரியவருகிறது.
சரி இப்பொழுது இன்றைய பதிவிற்கு வருகிறேன்.

எந்த ஒரு கோப்பையும் பிடிஎப் மாற்ற நிறைய மென்பொருட்களை நான் தந்திருக்கிறேன்.  இப்பொழுது அறிமுகப்படுத்த போகின்ற மென்பொருள் விண்டோஸ், மேக், மற்றும் ஆன்ட்ராய்டு மொபைல்,  ஐஓஎஸ் மொபைல் போன்ற சாதனங்களிலும் வேலை செய்யும் ஒரு பிடிஎப் மாற்றி மென்பொருள் ஆகும்.  




இந்த பிடிஎப் மாற்றி மென்பொருளின் பெயர் Sonic PDF Creator Mobile இந்த மென்பொருளை தரவிறக்க கீழே செல்லுங்கள்.
இந்த மென்பொருள் ஒரு ஒபன் சோர்ஸ் மென்பொருள் என்பதே இதன் தனிச்சிறப்பாகும்.
இந்த மென்பொருளின் விண்டோஸ் பதிப்பினை தரவிறக்க சுட்டி  விண்டோஸ் மென்பொருள் ஒரு ட்ரையல் வெர்சன் மட்டுமே!

ஆன்ட்ராய்டு மொபைல் மற்று டேப்லட்டுகளுக்கான சுட்டி




 ஐபோன்களுக்கான மென்பொருள் தரவிறக்க சுட்டி

முன்பு ஒரு பதிவில் அனைவருக்கும் இந்தியர்கள் அனைவருக்கும் இலவச வீட்டு உபயோக பொருட்கள் குறித்து தெரிவித்திருந்தேன் . அதை பற்றி படித்து தெரிந்து கொள்ள சுட்டி

இதில் இப்பொழுது என்ன வென்றால் முன்பு ரெஜிஸ்டர் செய்து இருந்தால் இப்பொழுது Ariel Color & Style 500g இலவசமாக தருகிறார்கள்.  ஏற்கனவே Ariel சாம்பிள் பெற்றிருந்தாலும் இந்த இலவச Ariel Color & Style 500g உண்டு.  ஏரியல் சலவைத்தூள் இலவசமாக பெற சுட்டி


நன்றி மீண்டும் வருகிறேன்.

» Read More...

சட்டரீதியான வொன்டர்ஷேர் பிடிஎப் எடிட்டர் மென்பொருள் இலவசமாக

நண்பர்களே ஒரு முழுமையான பிடிஎப் எடிட்டர் வாங்குவதென்றால் இந்திய மதிப்ப்பில் குறைந்தபட்சம் 2000கும் மேல் செலவாகும்.  இப்படி இருக்கையில் யாரும் காசு கொடுத்து வாங்காமால் பைரேட் என்ற திருட்டு மென்பொருட்கள் உபயோகிக்கின்றனர்.  இந்த மாதிரி திருட்டு பொருட்கள் தரவிறக்குபவர்களுக்கு தங்கள் கணினியில் தேவையில்லாத நச்சு தீங்கு நிரல்களும் நிறுவப்படும் என்பது தெரிவதில்லை. 

இதற்கு பதில் சில ஒபன் சோர்ஸ் மென்பொருட்கள் உள்ளன.  அதை தரவிறக்கி உபயோகப்படுத்தலாம்.  அப்படி இல்லையென்றால்  இலவசமாக சில நேரம் சில நாட்களுக்கு மட்டும் கொடுப்பார்கள்.  அதை உபயோகப்படுத்துங்கள்.   அது போல தான் நான் அறிமுகபடுத்த மென்பொருளும் கூட.  பிடிஎப் எடிட்டர் தேவையில்லை என்று சொல்பர்வர்கள் குறைவு.  அவர்களுக்காகவே இந்த மென்பதிவு

Wondershare என்ற நிறுவனத்தின் புதிய மென்பொருள் தயாரிப்பு ஆகும் இது.  இவர்கள் இதுவரை வீடியோ மென்பொருட்கள் தயாரித்து வெளியிட்டிருந்தனர்.  பிறகு மேக் கணினிக்கான பிடிஎப் எடிட்டர் தயாரித்து வெளியிட்டனர். இப்பொழுது விண்டோஸுக்கான பிடிஎப் கன்வெர்ட்டர் தயாரித்து பீட்டா அளவில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பீட்டா மென்பொருள் முற்றிலும் இலவசமாகும். ஆனால் நூறு நாட்கள் மட்டுமே வேலை செய்யும்.  இந்த மென்பொருளை நீங்கள் தரவிறக்கி கணினியில் நிறுவிக் கொள்ளலாம்.  அத்துடன் ஆக்டிவேசன் கோடு எதுவும் தேவையில்லை.



WonderShare PDF Editor Beta மென்பொருள் குறித்த தகவல்கள் மற்றும் போட்டி விதிமுறைகள் குறித்த  சுட்டி

இவர்களின் தளத்தில் பீட்ட வெர்சன் குறித்த உங்கள் அனுபவங்களை அல்லது உங்கள் கருத்துக்களை மூன்று முறை அல்லது அதற்கு மேல் Feedback கொடுத்தால்  நீங்கள் இந்த Wondershare PDF Editor வெளிவரும்போது உங்களுக்கான பிடிஎப் எடிட்டரினை பரிசாக வெல்ல வாய்ப்பு உள்ளது.   சுட்டி  இங்கு சென்று உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.


Wondershare PDF Editor மென்பொருள் தரவிறக்க  சுட்டி

இந்த வாய்ப்பு ஏப்ரல் ஐந்தாம் தேதி முதல் முப்பதாம் தேதி வரை கலந்து கொள்ளும் வாசகர்களுக்கு மட்டும்.

அது மட்டுமல்லாமல்  பேஸ்புக்கில் வழியாக இவர்களின் பதிவை பகிர்ந்தால் 30$ மதிப்புள்ள PDF To Powerpoint மென்பொருள் வெல்ல வாய்ப்புள்ளது.

போட்டியில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு குலுக்கல் முறையில் வாரம் ஒரு முறை PDF Converter Pro 79.95$ மதிப்புள்ள PDF Converter Pro.

சரி இந்த மென்பொருள் மூலம் என்ன செய்ய முடியும்.

எந்த ஒரு வகை பிடிஎப் கோப்புகளையும் எடிட் செய்ய முடியும்.

எந்த ஒரு பிடிஎப் கோப்பினையும் வேர்ட் அல்லது .TXT கோப்பாக சேமிக்க முடியும்.

1000 பக்கம் உள்ள பிடிஎப் கோப்பினை பிரிக்க அல்லது சேர்க்க முடியும்.


மீண்டும் ஒரு புதிய பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

இந்தியர்கள் அனைவருக்கும் இலவச வீட்டு உபயோக பொருட்கள்


நண்பர்களே முதலில் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.  இந்த புத்தாண்டில் புதிய பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.    இந்த புத்தாண்டில் ஒரு புதிய தளத்தை உங்களிடத்தில் அறிமுகப்படுத்த போகிறேன்.


அந்த தளத்தின் பெயர் ரிவார்ட்மீ (Reward Me)  இந்த தளத்தில் நீங்கள் சென்று பதிவு செய்து கொள்ளுங்கள்.

அங்கு உள்ள சில சாம்பிள் பொருட்களை கிளிக் செய்து அதில் கேட்கும் சில எளிமையான கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொன்னால் போதும் உங்கள் வீட்டு முகவரி கேட்கபடும் உங்கள் சரியான முகவரி கொடுத்தால் உங்களுக்கு நீங்கள் தேர்ந்தெடுத்த இலவச பொருட்களை வீட்டிற்கே கொண்டு வந்து கொடுப்பார்கள்.

இந்த இலவசங்கள் நீங்கள் ஆர்டர் செய்த தேதியிலிருந்து நான்கு முதல் எட்டு வாரத்திற்குள் உங்களை வந்தடையும்.

எந்த ஒரு பணமும் கொடுக்க தேவையில்லை.

இந்த தளத்தில் தரும் இலவச பொருட்கள் அனைவருக்கும் உபயோகிக்க வண்ணம் இருக்கிறது.

Ariel Soap Powder

Head & Shoulders Shampoo

Olay Total Effects

Pantene Pro V

Pambers

Gillette Fusion

Oral B

Duracell

Whisber

Herbal Essences

இன்னும் நிறைய பொருட்கள் சேர்க்கப்படும் என்றும் உறுதியாக நம்பலாம்.

இது எல்லாம் உண்மை கிடையாது என்பவர்கள் ரெஜிஸ்டர் செய்ய தேவையில்லை.  நம்பவும் தேவையில்லை

நான் உண்மையில் சோதித்து பார்த்து எனக்கு வந்த இலவச பொருட்கள் பிறகுதான் இந்த பதிவை எழுதுகிறேன்.

ரிவார்ட் மீ தளத்தில் இணைய சுட்டி

இது இந்தியாவில் வசிப்பவர்களுக்கு மட்டுமே இந்த இலவச பொருட்கள் கிடைக்கும்.

இந்த பதிவில் படங்கள் அனைத்தும் என் கைப்பேசியில் எடுத்தவையாகும்.  எனக்கு கிடைத்ததை போல அனைவருக்கும் உபயோகப்படட்டும் என்ற நோக்கத்துடன் இந்த தளத்தினை அறிமுகம் செய்திருக்கிறேன்.  மேலுள்ள பொருட்கள் நான் ஒரு மாதத்திற்கு முன் கேட்டிருந்தவை நேற்று எனக்கு கூரியர் தபாலில் வந்தது.  


அடுத்து பிடிஎப் கோப்புகளை சுலபமாக வேர்ட் கோப்புகளாக மாற்ற இந்த மென்பொருளை உபயோகியுங்கள் மிகவும் வேகமாகவும் சுலபமாகவும் இருக்கும்.  அத்துடன் ஒரே நேரத்தில் 500 பிடிஎப் கோப்புகள் வரை வேர்டு கோப்புகளாக மாற்ற முடியும் இந்த மென்பொருளால்.



பிடிஎப்லிருந்து வேர்டுக்கு  மாற்ற மென்பொருள் தரவிறக்க சுட்டி




நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை