கணினியின் முந்தைய வெர்சன் டைப்ரைட்டரின் கடைசி கம்பெனி மூடப்பட்ட கதை

நண்பர்களே எல்லோருக்கும் முதலில் என் மன்னிப்பை தெரிவித்து விடுகிறேன்.  சில பல கல்யாண வேலைகள் மற்றும் அலுவலக வேலைகள் வெளியூர் பயணங்கள் என்று போன மாதம் முழுவதும் அலைந்ததால் பதிவுகள் போன ஏப்ரல் மாதத்தில் ஒரு பதிவுகள் கூட வெளியிட முடியவில்லை அனைவரும் பதிவுகள் எப்பொழுது வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.  எனக்காக காத்திருந்தமைக்கு நன்றி இனி பதிவுகள் வழக்கம் போல தொடர்ந்து வெளி வரும்.  தொடர்ந்து தங்கள் ஆதரவை தர வேண்டுகிறேன்.  இந்த நேரத்தில் என் தம்பி குருபரனுக்கு ஏப்ரல் 17ஆம் தேதி திருமணம் முடிந்தது. அவர்களுக்கு உங்கள் வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.  அத்துடன் மே நான்காம் தேதி என் மகனின் ஐந்தாவது பிறந்தநாளும் சிறப்பாக கொண்டாடினோம்.  என் மகனுக்கு உங்கள் ஆசிர்வாதங்களை அளியுங்கள் உங்கள் ஆசிர்வாதங்களே அவனுக்கு துணை.  இனி பதிவுக்கு செல்வோம்.

கூகிள் தொடர்புகள் 10,000ல் இருந்து 25,000 உயர்வு

கூகிளில் புதிய புதிய சிறப்பம்சங்கள் வெளிவந்து கொண்டிருக்கும். அப்படி வந்துள்ள ஒரு சிறப்பம்சம் உங்களுடைய கூகிள் Contactல் இதுவரை 10,000 தொடர்புகள் வரை மட்டுமே சேமிக்க முடியும். இதை 25,000 என உயர்த்தியிருக்கிறது.  அத்துடன் ஒவ்வொரு தொடர்பும் 32கேபிக்கு மேல் சேமிக்க முடியும் என்பதையும் இனி 128கேபி என உயர்த்தியிருக்கிறார்கள்.  இன்னும் நிறைய கூகிளில் இருந்து புதிய சிறப்பம்சங்கள் வரும் வாரங்களில் வெளி வரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

உங்களிடம் ஒரு டெராபைட் வன்தட்டு இருந்தால் அதில் நிறைய எம்பி3 பாடல்கள் மற்றும் வீடியோக்கள் புகைப்படங்கள் என நிறைய சேமித்து வைத்திருப்பீர்கள்.  ஒவ்வொரு வருடம் ஒவ்வொரு பாடல்கள் காப்பி செய்யும் பொழுது அதில் பழைய பாடல்கள் வீடியோக்களும் காப்பி செய்து இருப்பீர்கள்.  ஆனால் உங்களுக்கு தெரியாது.  ஒரு கோப்பு இரண்டு அல்லது மூன்று இடத்தில் இருக்கும்.  இதனால் உங்கள் வன்தட்டினை முழுதாக உபயோகிக்க முடியாமல் கோப்புகள் இரட்டிப்பாக அடைத்து இருக்கும்.  இதை தவிர்க்க உங்களிடம் சூப்பர் டிடியுப் இருந்தால் போதும்.  இதன் மூலம் உங்கள் கோப்பில் இரண்டு மூன்று ஒரே மாதிரியான கோப்புகளை தேடி கொடுக்கும்.  இதனால் இதில் உங்களுக்கு தேவையான கோப்பினை வைத்து கொண்டு தேவையில்லாத கோப்பினை நீக்கி விடலாம்.

இந்த சூப்பர் டிடியுப்பில் உள்ள சிறப்பம்சங்கள் பற்றி சில வரிகள் கீழே

இந்த மென்பொருள் 7ஜிப் மற்றும் ரேர், ஜிப் போன்ற கோப்பினுள்ளும் தேடும் தன்மையுடது.

ஆடியோ கோப்புகளை அதன் டேகினை கொண்டு தேடும் திறன் உடையது.

இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி

இந்த மென்பொருள் குறித்த மேலதிக தகவல்கள் குறித்த சுட்டி


டைப்ரைட்டரின் கடைசி பேக்டரியும் மூடப்பட்டது

கணினி வந்த பிறகு டைப்ரைட்டர்களில் டைப் அடிக்கும் வழக்கம் வழ்க்கொழிந்து விட்டது.  ஆனால் இன்னமும் நம் ஊரில் பத்தாவது முடித்த உடன் டைப்ரைட்டர் கிளாஸ் செல்லும் பழக்கம் உள்ளது.  இன்னமும் வழக்காடு மன்றங்களிலும் டைப்ரைட்டர் உபயோகப்படுத்தும் பழக்கம் உள்ளது.  இவர்களுக்கு எல்லம் ஒரு வருத்தமான செய்திதான் இது டைப்ரைட்டரை  உருவாக்கி வெளியிட்டு வந்த கடைசி நிறுவனமான Godrej and Boyce மும்பையில் உள்ள தனது கடைசி பேக்டரியை மூடி விட்டது.  
இந்தியாவில் இன்னும் ஒரு நூறுக்கும் குறைவான டைப்ரைட்டர்களே விற்பனைக்கு வைத்துள்ளன.  2009ஆம் ஆண்டு வாக்கில் 10,000 முதல் 12,000 டைப்ரைட்டர்கள் வரை விற்ற அந்த நிறுவனம்.  அந்த நிறுவனத்தி மூடும் பொழுது வெறும் 200 டைப்ரைட்டர்களே விற்றிருக்கிறது. இதனால் இந்த நிறுவனம் தன்னுடைய கடைசி டைப்ரைட்டரி பேக்டரியையும் மூடி விட்டது.  இனி கணினி காலம் அனைத்து அரசு அலுவலகங்களிலும் மற்றும் பயிற்சி நிறுவனங்களும் என்ன செய்ய போகின்றன புதிய டைப்ரைட்டருக்கு என்று தெரியவில்லை.  இனி டைப்ரைட்டரினை அருங்காட்சியங்களில் மட்டுமே காண இயலும் என்ற நிலைமை வர இன்னும் சில வருடங்களே உள்ளது.


உங்கள் பாஸ்வேர்டினை உடைக்க எவ்வளவு நாட்கள் ஆகும்

அனைவரும் இப்பொழது மெயில் ஐடி அல்லது ஏதாவது ஒரு இணையதளத்தில் நுழைய லாகின் ஐடி வைத்திருப்பார்கள்.  அதன் பாஸ்வேர்ட் அவர்களுக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்கும்.  உங்களுடைய பாஸ்வேர்டினை உடைக்க அதாவது ஹேக் செய்ய எவ்வளவு நாட்கள் பிடிக்கும் என்று தெரிந்து கொள்ள ஆசையா இங்கே செல்லுங்கள் இந்த தளத்தின் பெயர் How Secure Is My Password?  இந்த தளத்தில் உங்கள் பாஸ்வேர்டினை கொடுத்தால் எவ்வளவு நாளில் உங்கள் பாஸ்வேர்டினை கண்டுபிடிக்க முடியும் என்று கூறிவிடுவார்கள்.  ஆனால் இந்த  தளத்தில் உங்கள் உண்மையான பாஸ்வேர்டினை கொடுக்காலம் வேறு ஏதாவது கொடுத்து முயற்சி செய்யலாம்.  ஜாலியாக சும்ம நுழைந்த்து முயற்சித்து பாருங்களேன் இணைய தள சுட்டி என் பாஸ்வேர்டினை கொடுத்த பொழுது வந்த விடை கீழே உள்ள படத்தில் உள்ளது
 
ஒரு அறிவிப்பு 

இந்த வலைத்தளம் மூலம் எனக்கு எதுவும் எந்த ஆதாயமும் கிடைக்காமல் இருந்து வருகிறது. ஆனாலும் தொடர்ந்து பல பதிவுகளை  கஷ்டப்பட்டு தான் இந்த பதிவுகளை எழுதுகிறேன்.  அதனால் நான் எழுதும் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் உபயோகமானவை என்றே நம்புகிறேன்.  இவ்வாறிருக்கையில் வரும் நண்பர்கள் என் வலைத்தளத்தில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்து பார்ப்பதன் மூலம் என்னால் மாதம் ஒரு சிறு தொகையை ஈட்ட முடியும் என்று நம்புகிறேன்.  ஆகையால் பதிவுகளை படிக்கும் நண்பர்கள் விளம்பரங்களை கிளிக் செய்து வருவாயை ஈட்ட உதவி செய்ய வேண்டுகிறேன். உதவுங்கள் இன்னும் தரமான ஆக்கங்களை உருவாக்க உதவுங்கள்.  அத்துடன் இந்த பதிவுகள் தரமுள்ளதாக இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் இதனை பற்றி தெரியபடுத்துங்கள்.  அனைத்து திரட்டிகளிலும் நீங்கள் போடும் ஒட்டுகளினால் இன்னும் உலகம் முழுக்க தமிழர்கள் அனைவருக்கும் போய்ச் சேர ஒரு உங்கள் ஒட்டு ஒரு  வாய்ப்பாக அமையும்

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை