உங்கள் கோப்புகளை சோதிக்க 19 வகையான ஆன்டி வைரஸ்

நண்பர்களே டிவிடியிலிருந்து ISO கோப்பாக மாற்றவும் ISO கோப்பிலிருந்து டிவிடிக்கு எழுதவும் ஒரு இலவச மென்பொருள்.  இந்த மென்பொருள் CD, DVD5, DVD9, BD25 and BD50 இந்த வகைகளில் எழுத முடியும்.   
என்கிரிப்ட் செய்யப்பட்ட டிவிடிக்களையும் இந்த மென்பொருள் மூலம் நிறைய டிவிடி நகல்கள் உருவாக்க முடியும்.  இந்த மென்பொருள் அனைத்து விண்டோஸ் வெர்சன்களிலும் வேலை செய்யும். 


மென்பொருளின் பெயர் BDlot DVD ISO Master

இந்த மென்பொருள் அளவு 2.5எம்பி மட்டுமே

இந்த மென்பொருள் குறித்து மேலும் அறிந்து கொள்ள சுட்டி

மென்பொருளை தரவிறக்க சுட்டி

உங்களிடம் உள்ள ஒரு கோப்பை நீங்கள் நிறுவியிருக்கும் வைரஸ் உள்ளதா என்று சோதிப்பீர்கள்.  அந்த சோதனை முடிவில் வைரஸ் இல்லை என்று வந்த பிறகு உங்கள் நண்பருக்கு பென் ட்ரைவ் அல்லது மின்னஞ்சல் மூலம் கோப்பினை அனுப்புகிறீர்கள்.  அதை அவர் தரவிறக்கும் பொழுது அவருடைய ஆன்டி வைரஸ் வைரஸ் இருக்குது என்று தெரிவித்தால் எப்படி இருக்கும்.  நாம் வைரஸ் சோதனை செய்த பிறகு  அவருடைய கணினியில் மட்டும் நமது கோப்பில் வைரஸ் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா??


ஒரு நிமிடம் பொறுங்கள் அனைத்து ஆன்டிவைரஸ்களும் எல்லா வைரஸ்களுக்கு எதிராக போராடுவதில்லை சில வைரஸ்களை தவறவிடுகின்றனர்.  அதனால் அவர்களை நொந்து கொள்வதில் பிரயோஜனம் இல்லை.  இதற்கு வழி இல்லையா என்றால் வழி இருக்கிறது.  மல்டிபிள் வைரஸ் ஸ்கேனர் கொண்டு சோதிப்பது.  இது மாதிரி மல்டிபிள் ஆன்டிவைரஸ் ஸ்கேனர் மென்பொருள் இல்லை என்று நினைப்பீர்கள் உண்மைதான்.  நிறுவும் வகையிலான பொருள் இல்லை ஆனால் ஆன்லைன் மென்பொருள் உண்டு.  ஆம்  இந்த வலைத்தளம் பெயர் மெட்டஸ்கேன் META SCAN
இந்த வலைத்தளம் 19 வகையான ஆன்டி வைரஸ்களை கொண்டு சோதித்து அறிகிறது.

AVG
Eset
F-Prot
Avira
McAfee
Quick Heal
Avast
Bit Defender
Bullgard
Calmwin
Emisoft
Kingsoft
Norman
Sophos
Norton
Virusbuster
Fortinet
F-Secure
GFI

மேலுள்ள அனைத்து வைரஸ் என்ஜின்கள் கொண்டும் சோதித்து அறியப்படுகிறது

இந்த வலைத்தளத்தில் 40 எம்பி வரை உள்ள கோப்புகளை சோதித்து அறியலாம்.

வலைத்தள முகவரி சுட்டி


அனைவருக்கும் ரம்ஜான் மற்றும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.


நன்றி மீண்டும் வருகிறேன்.

» Read More...

உங்கள் புகைப்படத்தை எடிட் செய்ய 100+ டூல்கள் ஒரே வலைத்தளத்தில்

நண்பர்களே உங்களிடம் உள்ள புகைப்படத்தை ஆன்லைனில் எடிட் செய்ய அருமையான தளத்தை இங்கே அறிமுகப்படுத்திகிறேன்.  இந்த வலைத்தளத்தில் இல்லாத வசதிகளே இல்லை என்று கூறலாம் போல உள்ளது.   எந்த ஒரு புகைப்படத்தையும் JPG, PNG, BMP, மற்றும் ஐகான் கோப்புகளாக மாற்ற முடியும்.

கான்ட்ராஸ்ட், பிரைட்னஸ், ஷார்ப்னெஸ் போன்றவைகளை குறைக்க ஏற்ற முடியும்.

புகைப்படத்தை எந்த கோணத்திலும் திருப்பவும், 3டி முறையில் சுழற்றவும் முடியும்.

இது போல 100க்கும் மேற்பட்ட டூல்கள் உள்ளன.

இந்த வலைத்தளத்தின் சுட்டி

இந்த வலைத்தளம் இந்தியிலும் இயங்குகிறது.  விரைவில் தமிழிலும் எதிர்பார்க்கலாம்.



கூகிள் இமெயிலில் போட்டோக்களை இணைப்பதாக இருந்தால் Labs சென்று enable செய்ய வேண்டும்.  இப்பொழுது அது இல்லாமல் நேரடியாக போட்டோக்களை ட்ராக் அன்ட் ட்ராப் முறையில் போட்டோக்களை இணைக்க முடியும் என்று கூகிள் அறிவித்துள்ளது.


சிடி மற்றும் டிவிடி எழுத நாம் எப்பொழுதும் உபயோகிப்பது நீரோ என்ற மென்பொருளாகும்.  இந்த மென்பொருளை விட வேகமாக டிவிடியில் எழுத மேஜிக் பர்னர் என்ற மென்பொருள் மிக நன்றாக இருக்கிறது.  இந்த மென்பொருள் மூலம் அனைத்து விதமான டிவிடிக்கள் சிடிக்கள் ப்ளூ ரே டிவிடிக்களை எழுத முடியும்.

மேஜிக் பர்னர் மென்பொருளை தரவிறக்க சுட்டி


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை