மிர்ரர் கிரியேட்டர் மற்றும் ஆறு மாதத்திற்கான இலவச ஆட்- வேர் மென்பொருள்

நண்பர்களே நிறைய எழுத முடியவில்லை காரணம் உடல் நலம் பாதிக்கப்பட்டு அலுவலகம் கூட செல்ல முடியாமல் படுத்த படுக்கை நான்கு நாட்களாக என்னையும் வைரஸ் காய்ச்சல் தீண்டிவிட்டதுதான்.  இப்பொழுதும் எழுதும் மனநிலை மற்றும் உடல்நிலை இல்லாவிட்டாலும் என்னை ஆதரித்து வரும் நண்பர்களுக்கும் பதிவுகலக நண்பர்களுக்கும் என் நன்றியையும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தைப்பொங்கல் நல்வாழ்த்தையும் கூறவே இதை எழுதுகிறேன்.  அனைவருக்கும் இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்.  இனிய கரும்பினை போல் அனைவரின் வாழ்விலும் இனிப்பு சேர இறைவனை பிரார்த்திக்கிறேன்.


மிர்ரர் கிரியேட்டர்

நிறைய நண்பர்கள் எப்பொழுதும் கோப்புகளை அப்லோடு செய்து அனைவருக்கும் பகிர்ந்தளித்துக் கொண்டிருப்பார்கள்.  ஆனால் அவர்கள் ஒவ்வொரு தளத்திற்கும் தனித்தனியாக சென்று அப்லோடு செய்ய வேண்டும்.  ஆனால் இந்த தளத்தின் மூலம் ஒரு முறை அப்லோடு செய்தாலே பதினான்கு தளங்களுக்கும் அப்லோடு செய்யப்பட்டு தனி தனி லின்க் கிடைத்து விடுகிறது.  அவர்களுக்கும் இந்த தளம் ஒரு வரப்பிரசாதம் ஒரே நேரத்தில் 14 தளங்களில் நம் கோப்புகளை பதிவேற்ற முடியும். 


அந்த 14 தளங்களில் மிகவும் முதன்மையான ரேபிட்ஷேர், ஹாட்பைல், டெபாசிட்பைல், ஜித்து, சென்ட்ஸ்பேஸ், பைல்பேக்டரி, மெகாஷேர், மெகாஅப்லோடு, மீடியாபயர் போன்ற தளங்கள் ஆகும்.  அத்துடன் தரவேற்றம் முடிந்த பிறகு அந்த தளம் வழியாக தரவிறக்கமும் தருகிறார்கள்.  தளத்தில் அப்லோடு செய்தவுடன் அவர்கள் ஒரு தரவிறக்க லின்க் மற்றும் அதன் ஷார்ட்கட் லின்க் ஒன்று தருகிறார்கள் அதை நம் நண்பர்களுக்கு தந்தால் அல்லது எங்கு வேண்டுமானாலும் உபயோகடுத்திக் கொள்ளலாம்.   இந்த வலைத்தளத்தின் பெயர் மிர்ரர் கிரியேட்டர்


உதாரணத்திற்கு நான் WinX DVD author மென்பொருளினை தரவேற்றியிருக்கிறேன் வேண்டும் என்பவர்கள் தரவிறக்கிக் கொள்ளலாம்.  இது ஒரு வீடியோ கன்வெர்டர் மென்பொருள் மிகவும் அருமையான வேகமான மென்பொருள் ஆகும்.  கன்வெர்ட் செய்த பிறகு நேரடியாக சிடி மற்றும் டிவிடியில் எரிக்க முடியும்.  இது ஒரு சலுகையின் போது எனக்கு கிடைத்தது அதை நீங்கள் உபயோகபடுத்திக் கொள்ள இங்கே தருகிறேன். 

WinX DVD Author மென்பொருள் தரவிறக்க 14 தளங்களின் முகவரிகள்


WinX DVD Author லைசென்ஸ் எண் தரவிறக்க 14 தளங்களின் முகவரிகள்


லாவாசாப்ட் நிறுவனத்தின் ஆறு மாதத்திற்கான இலவச மென்பொருள் தரவிறக்க இங்கே செல்லுங்கள் சுட்டி  இந்த மென்பொருள் மிகவும் உபயோகமான மென்பொருள்.  உங்கள் கணினியின் தீங்கு நச்சு நிரல்களிலிருந்து உங்களை பாதுகாக்கும். 


அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
ஒரு அறிவிப்பு 

இந்த வலைத்தளம் மூலம் எனக்கு எதுவும் எந்த ஆதாயமும் கிடைக்காமல் இருந்த நேரத்தில் தமிழ் கம்ப்யூட்டர் நிறுவனம் மட்டுமே எனக்கு சிறு உதவி செய்து வருகிறது.  என் படைப்புகளை வெளியிட்டு அதன் மூலம் வரும் சிறு தொகையை எனக்கு அளித்து வருகின்றனர்.    நானும் கஷ்டப்பட்டு தான் இந்த பதிவுகளை எழுதுகிறேன்.  அதனால் நான் எழுதும் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் உபயோகமானவை என்றே நம்புகிறேன்.  இவ்வாறிருக்கையில் வரும் நண்பர்கள் என் வலைத்தளத்தில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்து பார்ப்பதன் மூலம் என்னால் மாதம் ஒரு சிறு தொகையை ஈட்ட முடியும் என்று நம்புகிறேன்.  ஆகையால் பதிவுகளை படிக்கும் நண்பர்கள் விளம்பரங்களை கிளிக் செய்து வருவாயை ஈட்ட உதவி செய்ய வேண்டுகிறேன். உதவுங்கள் இன்னும் தரமான ஆக்கங்களை உருவாக்க உதவுங்கள்.  அத்துடன் இந்த பதிவுகள் தரமுள்ளதாக இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் இதனை பற்றி தெரியபடுத்துங்கள்.  அனைத்து திரட்டிகளிலும் நீங்கள் போடும் ஒட்டுகளினால் இன்னும் உலகம் முழுக்க தமிழர்கள் அனைவருக்கும் போய்ச் சேர வாய்ப்பு கிடைக்கும். நன்றி மீண்டும் வருகிறேன்

12 ஊக்கப்படுத்தியவர்கள்:

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

Recent Post

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

என்னைப் பற்றி

My photo

System Administrator  Part time Blogger

இதுவரை பதிவு செய்தவை