நண்பர்களே Start Trek படத்தின் வரலாறு குறித்த புகைப்படம். இந்த Star Trek சீரியல் மிகவும் பிடிக்கும். அடுத்த படம் 2012ல் அல்லது 2013ல் வெளியாகும் என தகவல் .
விண்டோஸ் எக்ஸ்பியில் நாம் முதலில் இன்ஸ்டால் வரும் டெஸ்க்டாப் படம் பச்சை பசேலன இருக்கும் புல்வெளி தோற்றம். இத் மிகவும் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும். இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட பருவம் வசந்த காலம் ஆகும். வசந்த நேரம் தவிர மற்ற காலத்தில் இந்த படம் போல் தான் இருக்கும்.
மிகவும் அதிகமாக உபயோகப்படுத்தப்படும் ஆன்டி வைரஸில் எது அதிகமாக உலகம் முழுவதும் உபயோகப்படுத்தபடுகிறது என்பதை விளக்கும் படம். கீழே இந்தபடத்தை தந்தவர்கள் நம் பதிவில் முன்னர் அறிமுகப்படுத்திய 19 ஆன்டி வைரஸ்கள் கொண்டு சோதிக்கும் ஆன்லைன் ஸ்கேனர் தளத்தினர் தான் 19 ஆன்டிவைரஸ்கள் கொண்டு சோதிக்க சுட்டி
வெளிநாட்டில் மற்றும் உள்நாட்டில் நமது வலைத்தளத்தினை படிப்பவர்கள் முடிந்தவரை வலைத்தளத்தினை பற்றி அடுத்தவருக்கு சொல்லவும். விளம்பரங்களையும் கிளிக் செய்தால் உதவியாக இருக்கும். இதுவரை நம் தளத்தினை பின் தொடர்பவர்கள் 790 பேர் ரீடர்கள் மூலம் படிப்பவர்கள் 2270 பேர் வலைத்தளத்தினை பின் தொடரும் அனைவருக்கும் மிக்க நன்றி
நண்பர்களே நாம் எப்பொழுதும் வேர்ட் எக்ஸல் போன்றவற்றிற்கு நாடுவது
மைக்ரோசாப்டைதான். ஏன் என்றால் அது மிகவும் சுலபமாக இருக்கும்
கையாள்வதற்கு என்பதாலேயே அதை உபயோகிக்கிறோம். இத்தனைக்கும் அந்த
மென்பொருள் இலவசமில்லை பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும் ஆனால் இந்தியாவில்
மைக்ரோசாப்ட் ஆபிஸ் திருட்டு காப்பி எடுத்துதான் உபயோகிக்கிறார்கள்.
இதற்கு பதில் இலவசமாக கிடைக்கும் ஒபன் ஆபிஸ் போன்ற மென்பொருட்களை
பயன்படுத்தலாம். இப்பொழுது ஒரு ஆபிஸ் வெளி வந்திருக்கிறது. அதன் பெயர்
கிங்க்சாப்ட் KingSoft Office Suite 2012 இது ஒரு இலவச மென்பொருள்.
இந்த மென்பொருள் மூலம் வேர்ட், எக்ஸல், பவர்பாயிண்ட், போன்றவைகளை உருவாக்க முடியும்.
அது மட்டுமல்லாமல் மைக்ரோசாப்ட் வேர்ட் எக்ஸல் பவர்பாயிண்ட் போன்ற கோப்புகளையும் எடிட் செய்ய முடியும்.
நேரடியாக பிடிஎப் கோப்பாகவும் சேமிக்க முடியும்.
மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010 கோப்புகளையும் எடிட் செய்ய முடியும்.
மென்பொருளுக்குள் டேப் வசதி உண்டு என்பதால் சுலபமாக அடுத்த கோப்பிற்கு சுலபமாக தாவலாம்.
இந்த மென்பொருளை உபயோகிக்க வெறும் 256எம்பி ராம் இருந்தால் போதும் பென்டியம் 3 சிஸ்டம் போதுமானது.