தேவதை பிறந்தநாள் மற்றும் பல மென்பொருட்கள்

நண்பர்களே யுஎஸ்பி ட்ரைவ் மற்றும் யுஎஸ்பி சம்பந்தப்பட்ட பொருட்களை நிறுத்துவதற்கு இந்த மென்பொருள் மிகவும் உபயோகமாக இருக்கும்.  இது ஒரு திறந்த நிலை மென்பொருள் என்பது இன்னும் சிறப்பு வாய்ந்தது.  அத்துடன் இது விண்டோஸ் அனைத்திலும் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது..  இதை இன்னும் மேம்படுத்த நினைப்பவர்கள் இவர்கள் தளத்தில் இருந்து Source Code எடுத்து மாற்றங்கள் செய்தும் கொள்ளலாம்.  இந்த மென்பொருள் வெறும் 1 எம்பிக்குள் அடங்கிவிடும்.  அத்துடன் இது ஒரு போர்ட்டபிள் மென்பொருளாகும்.  இந்த மென்பொருளின் பெயர் USB Disk Ejector இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி

இன்று மொபைல் போன்கள் இல்லாதவர்களை பார்ப்பது அரிதான ஒன்றாக இருக்கும் நேரத்தில் இதுவரை வெளிவந்த மொபைல் போன்களில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்த மொபைல் போன்கள் குறித்த வரலாற்று தகவலகள் இந்த புகைப்படத்தில் உள்ளது.  இதில் 1973ல் வெளிவந்த மொபைலில் இருந்து தற்பொழுது வெளியான எல்ஜியின் 3டி ஸ்மார்ட் போன் வரை பட்டியலிடப்பட்டுள்ளது.     1999ல் வெளி வந்த 3210 மொபைல் எனக்கு பிடித்த மாடலாகும். 


இப்பொழுதுதான் பயர்பாக்ஸின் உலாவி புதுப்பிக்கப்பட்டு Firefox 8.0 வெளிவந்தது.  அதற்குள் அடுத்த பதிப்பு வெளியிட தயாராகி வருகிறது பயர்பாக்ஸ் நிறுவனம்.  அடுத்த Firefox 9.0 பீட்டா வெர்சனை உபயோகித்து பார்க்க சுட்டி  இது ஒரு பீட்டா வெர்சன் என்பதினை மனதில் கொண்டு தரவிறக்கம் செய்து உபயோகப்படுத்தவும்.

நவம்பர் பதினைந்து என் வாழ்வில் மறக்கவே முடியாத நாள்  நான் மிகவும் எதிர்பார்த்த விசயம் நடந்தேறிய நாள் அன்று என்ன நாள் என்று நினைக்கீறீர்கள் போன வருடம் நவம்பர் 15 2010 அன்று எனக்கு பெண் குழந்தை வடிவில் தேவதை அவதரித்த நாள் ஆம் என் பெண்ணின் முதல் வருட பிறந்தநாள் நண்பர்களின் ஆசிர்வாதமும் வாழ்த்துக்களும் என் பெண்ணை இந்த உலகில் தைரியத்துடன் மகிழ்ச்சியுடனும் வாழ வைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.  அண்ணனும் தங்கையும் எவ்வளவு மகிழ்வாக இருக்கும் புகைப்படம் இவர்களுக்காகவே என் அனைத்து கஷ்டங்களையும் தாங்கும் பக்குவம் வந்துவிட்டது.
 



படங்களை பெரிதாக பார்க்க கிளிக் செய்து பார்க்கவும்.

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

சட்டரீதியான USB Ejector மென்பொருள் மற்றும் கோப்புகள் மீட்டெடுக்க மென்பொருள்

நண்பர்களே நில நாட்களுக்கு முன் USB பொருட்களை பாதுகாப்பது குறித்து ஒரு பதிவிட்டிருந்தேன். அந்த பதிவின் சுட்டி  அதில் ஒரு குறிப்பாக USB பொருட்களை நிறுத்தும் பொழுது சரியாக நிறுத்த ஏதாவது ஒரு நல்ல மென்பொருளை கொண்டு நிறுத்தலாம்.  அதில் ஒன்று USB Ejector Tool என்ற மென்பொருள்.  அந்த மென்பொருள் போல Safely Remove நிறுவனம் ஒரு USB Eject செய்ய மென்பொருள் வழங்குகிறது.

இந்த மென்பொருள் மூலம் எந்த ஒரு USB பொருளையும் நிறுத்த முடியும்.

Mouse மூலம் மட்டுமல்லாமல் Keyboard hotkeys மூலம் நிறுத்த முடியும்.  இதனால் மவுஸ் மூலம் நிறுத்த தேவையில்லை.

நாம் உபயோகிக்கும் கார்டு ரீடர் போன்றவற்றில் Eject செய்தால் மொத்தமாக நிறுத்தி விடும் ஆனால் இந்த மென்பொருள் மூலம் கார்டு ரீடரில் கூட ஒன்றன் பின் ஒன்றாக மெமரி கார்டுகளை நிறுத்த முடியும்.

இந்த நிறுவனத்தின் மென்பொருளின் புதிய பதிப்பு USB Safely Remove 4.7 என்ற பதிப்பாகும்.  இந்த பதிப்பினை இவர்கள் இலவசமாக தருகின்றனர்.

இந்த மென்பொருளை தரவிறக்க இந்த சுட்டிக்கு செல்லுங்கள்  USB நிறுத்த மென்பொருள் இணையப்பக்க சுட்டி

இந்த சுட்டியில் உங்கள் முழு பெயர் அமெரிக்கர்கள் போல தர வேண்டும் உதாரணத்திற்கு என் பெயர் Vadivelan என்றால் Vadi Velan என்று தர வேண்டும்.

பிற்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி தாருங்கள்.

பிறகு இந்த மென்பொருள் குறித்த உங்கள் கருத்தினை வேண்டு என்றால் அடுத்துள்ள Comments பெட்டியில் பதியவும்.

பிறகு I Want License என்ற பட்டனை தட்டினால் போதும் உங்களுக்கான லைசென்ஸ் மற்றும் மென்பொருள் தரவிறக்க சுட்டியுடன் உங்கள் மின்னஞ்சல் முகவரி அடுத்த விநாடியே வந்து விடும்.

இந்த மென்பொருளினை உங்கள் வாழ்நாள் முழுக்க உபயோகப்படுத்தலாம்.  (Life Time License Using)

முக்கியமாக இந்த மென்பொருள் அடுத்த இருபத்தி நான்கு மணிநேரம் மட்டுமே இலவசமாக வழங்கப்படுகிறது.  முந்துபவர்களுக்கு லைசென்ஸ் கட்டாயம் கிடைக்கும்.


Google + என்ற சமூகதளம் பேஸ் புக் சமூகதளத்தினை பின் தள்ளிவிட்டது இதன் அடுத்த ஒரு புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  பேஸ்புக் தளத்தில் உள்ளது போன்று Google + சமூகதளத்திலும் விளையாட்டுக்களினை விளையாடலாம் என்பதே அந்த மாற்றம்.  இது குறித்த Googleன் அறிவிப்பு இந்த சுட்டியில் சுட்டி  நன்றி கூகிள்



உங்கள் கணினியில் சில நேரங்களில் வைரஸ் அல்லது மால்வேர் வந்து உங்களுடைய கோப்புகள் சேதமாகலாம்.  அந்த நேரத்தில் உங்களுக்கு எப்படி இருக்கும். மிகவும் மோசமாக இருகுக்ம்.  அது போல நேரும் நேரத்தில் உங்களுக்கு இந்த FileRecovery என்ற மென்பொருள் மிகவும் உதவியாக இருக்கும்.

இந்த மென்பொருள் எந்த வகையான கோப்புகளை உங்களுக்கு மீட்டெடுக்க உதவும் என்ற பட்டியலை கீழே காணலாம்.

  1. சேதமான வேர்ட் கோப்புகள் (.doc, .docx, .docm, .rtf)
  2. சேதமான எக்ஸல் கோப்புகள்  (.xls, .xla, .xlsx)
  3. சேதமான ஜிப் மற்றும் ரேர் கோப்புகள்  (.zip, .rar)
  4. சேதமான வீடியோ கோப்புகள் (.avi, .mp4, .mov, .flv, .wmv, .asf, .mpg)
  5. சேதமான புகைப்பட கோப்புகள் JPEG, GIF, TIFF, BMP, PNG or RAW images (.jpg, .jpeg, .gif, .tiff, .bmp, .png)
  6. சேதமான பிடிஎப் கோப்புகள் (.pdf)
  7. சேதமான அக்ஸஸ் டேட்டாபேஸ் கோப்புகள் (.mdb, .mde, .accdb, .accde)
  8. சேதமான பவர் பாய்ண்ட் கோப்புகள்  (.ppt, .pps, .pptx)
  9. சேதமான ஆடியோ கோப்புகள்  (.mp3, .wav)

இந்த மென்பொருள் நூறு சதவீதம் இலவசமான மென்பொருள்.  இதில் எந்த ஒரு தீங்கு நச்சுநிரலும் கிடையாது.  அத்துடன் விளம்பரங்களும் கிடையாது.   இந்த மென்பொருளை வாழ்நாள் முழுவதும் உபயோகித்துக் கொள்ளலாம்.

இந்த மென்பொருள் விண்டோஸ் 7 வரை உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை ஆதரிக்கிறது.

இந்த மென்பொருளை தரவிறக்க  சுட்டி

இந்த மென்பொருள் குறித்த வலைத்தளம் சுட்டி

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

சட்டரீதியான நோவா பிடிஎப் கிரியேட்டர் டெஸ்க்டாப் எடிசன்

நண்பர்களே எந்த ஒரு கோப்பிலிருந்தும் பிடிஎப் ஆக மாற்ற சட்டரீதியான இலவச மென்பொருள் ஒன்று உங்களுக்காக.  இந்த மென்பொருளை நிறுவினால் சாதாரண பிரிண்டர் போலவே நிறுவப்படும் நீங்கள் எந்த ஒரு கோப்பிலிருந்தும் ப்ரிண்ட் கொடுக்கும் பொழுது பிடிஎப் கோப்பாக மாற்றிக் கொள்ளலாம்.  இந்த மென்பொருள் இலவசமாக பெற நீங்கள் செய்ய வேண்டியது இது மட்டுமே  உங்கள் பெயர் மின்னஞ்சல் முகவரி மட்டும் கொடுத்தால் போதுமானது.

உங்கள் பெயர் மின்னஞ்சல் முகவரி கொடுத்து பதிவு செய்தால் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அவர்கள் ஒரு லைசென்ஸ் அடங்கிய மெயில் அனுப்புவார்கள்.  அதில் Registration name மற்றும் Registration Key அனுப்பி இருப்பார்கள்.  முக்கியமாக அதில் உள்ள Registration name என்ன இருக்கிறதோ அதைதான் கொடுக்க வேண்டும் வேறு பெயர் கொடுத்தால் பதிவு ஆகாது.

முதலில் இந்த பக்கத்திற்கு செல்லவும் Nova PDF Promo Page

Free Registration பகுதியில் உங்கள் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி கொடுக்கவும்.

மென்பொருளை இங்கே இருந்து தரவிறக்கி கொள்ளவும்.  Nova PDF Download Link

பிறகு இந்த பகுதிக்கு சென்றால் உங்களுடைய Registration Key எவ்வாறு Register செய்ய வேண்டும் என்று தெளிவாக படங்களுடன் விளக்கப்பட்டிருக்கும்.  How to Nova PDF Key Registration With Pictures


சென்ற பதிவில் யுஎஸ்பி பென் ட்ரைவ் எப்படி பாதுகாக என்று சில தகவல்கள் கொடுத்து இருந்தேன்.  முக்கியமான தகவல் ஒன்று விட்டு போனது.  அதை கீழே கூறியிருக்கிறேன்.  மனதில் கொள்ளுங்கள்.


உங்கள் பென் ட்ரைவினை ஹார்ட்டிஸ்கில் செய்யும் டிபிராக் செய்யவே கூடாது.  ஏன் என்றால் உங்கள் பென் ட்ரைவில் தகவல்கள் தொடர்ச்சியாக ஒரு ஒழுங்குமுறையோடு இருக்கும்.  ஹார்ட் டிஸ்க்கில் அப்படி கிடையாது வேறு வேறு இடங்களில் உங்கள் கோப்புகள் துண்டு துண்டாக பதியப்படும்.  அதனால் ஹார்ட் டிஸ்க்கினை டிபிராக் செய்யலாம்.  பென் ட்ரைவினை டிபிராக் செய்யவே கூடாது.

சென்ற முறை எழுதிய பதிவை  அடுத்த நான்கு நாட்களுக்குள்ளாக இந்த வலைத்தளத்தில் அப்படியே சில மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளனர்.    இதற்காக  என் வலைத்தளத்திற்கு லின்கும் இல்லை மற்றும் நன்றியும் இல்லை.  இனிமேல் எடுப்பவர்க்ளாவது என் வலைத்தளத்திற்கு லின்க் கொடுங்கள். அல்லது நன்றி என்று வலைத்தளத்தின் பெயரையாவது குறிப்பிடுங்கள்.  சென்ற முறை எழுதிய வலைப்பதிவின் லின்க் கீழே

http://www.gouthaminfotech.com/2011/06/usb-drive-use-safely-easily-guidelines.html

காப்பி பேஸ்ட் செய்த என் பதிவு வெளியிட்டவர்களின் பதிவு கீழே



http://www.lankasritechnology.com/view.php?224Q09rc2025nBZd4e2yyOldacb0eCAAeddeAoMMe0bcadlOK3e4dZBnB3303cr90Q42


  நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

யுஎஸ்பி பென் ட்ரைவினை பாதுகாக்க எளிய வழிகள் நான்கு

நண்பர்களே உங்களிடம் இருக்கும் யூஎஸ்பி பென் ட்ரைவை பாதுகாக்க சில வழிகள் இங்கே கூறுகிறேன்.  முடிந்தவரை இந்த வழிகளை உபயோகித்து பென் ட்ரைவினை அதிக நாட்கள் உபயோகியுங்கள்.

இப்பொழுதெல்லாம் யூஎஸ்பி பென் ட்ரைவ் இல்லாதவர்களை பார்ப்பது மிகவும் அரிது.  கணினி எப்படி எல்லோருக்கும் தெரிந்திருக்கிறதோ அது போல் பென் ட்ரைவினையும் தெரியும் ஏன் என்றால் இப்பொழுது வரும் ம்யூசிக் சிஸ்டங்கள் எல்லாம் யூஎஸ்பி பென் ட்ரைவ் ஆதரிக்கும் வகையில் வெளிவருகிறது.  அது போலவே எல்சிடி, எல்இடி டிவிக்களும் டிவிடி ப்ளேயர்களும் பென் ட்ரைவினை ஆதரிக்கும் வகையில் வெளிவருகிறது.  அதனால் எல்லோருக்கும் பென் ட்ரைவினை பாதுகாக்கும் வழிகள் தெரிந்து கொள்ள ஆசை வருகிறது.  பென் ட்ரைவ் மட்டுமலாலம் யூஎஸ்பி பொருட்களை பாதுக்காக்க வழிகள் சில கீழே கொடுத்துளேன். 

Disabled Autorun ஆட்டோ ரன் நிறுத்தம்

பென் ட்ரைவினை கணினியில் செருகியவுடன் ஆட்டோ ரன்  ஆகும்.  இதனால் இதில் உள்ள கோப்புகள் எந்த மென்பொருள் மூலம் திறக்க வேண்டும் என்று விண்டோஸ் காட்டும்.  இதன் மூலம் வைரஸ்களும் எளிதாக தொற்றும் பென் ட்ரைவினில்.  இதை முதலில் தடுக்க வேண்டும்.  இதற்கு AutoRun Disable செய்ய வேண்டும். 
 
இதற்கு மைக்ரோசாப்டிலேயே தனியாக பேட்ச் மென்பொருள் கிடைக்கிறது.  இதை நிறுவினால் உங்கள் கணினியில் சிடி, டிவிடி, பென் ட்ரைவ் எது போட்டாலும் தானாக ப்ளே செய்யாது.  அதாவது Auto Play Run தானாக நடக்காது.

Microsoft Auto Run Disabled Patch Download Link

Scan Your Pen Drive -  பென்ட்ரைவினை சோதித்தல்

ஒவ்வொரு முறை உங்கள் பென் ட்ரைவினை கணினியில் செருகும் பொழுது உங்கள் கணினியில் உள்ள ஆன்டிவைரஸால் கட்டாயம் சோதிக்க வேண்டும்.  இதன் மூலம் கணினியிலும் வைரஸ் வராமல் தடுக்க முடியும்.  அத்துடன் பென் ட்ரைவினில் வைரஸ் இருந்தாலும் தடுக்க முடியும்.
 
அதற்கு உங்கள் கணினியில் நல்ல ஆன்டிவைரஸ் கட்டாயம் நிறுவி இருக்க வேண்டும்.  ஆன்டிவைரஸ் நிறுவுவதோடு நின்று விடாமல் உங்கள் ஆன்டி வைரஸ் தினமும் அப்டேட் ஆகிறதா என்றும் சோதித்துக் கொள்ளுங்கள்.  பென் ட்ரைவினை செருகியவுடன் உங்கள் கணினியில் Go To > My Computer > சென்று அங்கு உங்களுடைய பென் ட்ரைவினை Right Click செய்து Scan செய்யவும்.


Avira Free Antivirus Download Link


Safely Remove Your Pen Drive  பென் ட்ரைவினை பாதுகாப்பாக நிறுத்துதல்

இது முக்கியமான ஒன்று நிறைய நண்பர்கள் எப்பொழுதும் இந்த தவறினை செய்கிறார்கள்.  அது என்னவென்றால் பென் ட்ரைவில் இருக்கும் கோப்புகளை நேரடியாக பென் ட்ரைவ் வழியாக திறப்பது.  சரி திறப்பது கூட பரவாயில்லை அந்த கோப்பினை பென் ட்ரைவில் வைத்து கொண்டே வேலை செய்வது.  இதனால் என்னாகிறது பென் ட்ரைவ் தொடர்ந்து வேலை செய்ய வேண்டி வரும்.  இதனால் சீக்கிரம் பென் ட்ரைவ் பழுதாகிறது.  இதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் பென் ட்ரைவில் எந்த கோப்பினை எடிட் செய்ய விரும்புகிறீர்களோ அதை கணினியில் சேமித்து விட்டு பிறகு கணினியில் இருந்து எடிட் செய்யுங்கள். அதுவே மிகவும் சிறந்தது. 



அடுத்து யூஎஸ்பியை நிறுத்தாமல் அப்படியே பென் ட்ரைவினை பிடுங்குவது.  எல்லோருமே யூஎஸ்பி பொருட்களான பென்ட்ரைவ், டிவிடி ட்ரைவ் பாக்கெட் ஹார்ட் டிஸ்க்குகள் போன்றவற்றை விண்டோஸில் இணைந்திருக்கும் மென்பொருட்கள் வழியாக நிறுத்திய பிறகே எடுக்க வேண்டும்.
 
அப்படி இல்லாவிடில் சிறு மென்பொருட்கள் இருக்கிறது.   யூஎஸ்பியை நிறுத்துவதற்கென்றே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.  அதன் மூலம் நமக்கு தேவையான யூஎஸ்பி பென்ட்ரைவ் அல்லது வேறு எந்த யூஎஸ்பி வன் பொருட்களையும்  இந்த மென்பொருட்கள் மூலம் நிறுத்திய பிறகு எடுக்கலாம்.

USB Removal or Ejector Tool Download Link



General Tips - சில பொதுவான வழிமுறைகள்

அடுத்து நம் உபயோகிக்கும் பென்ட்ரைவினை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்வதற்காக வைத்திருக்கிறோம் என்பதற்காக அதை எப்பொழுதும் கழுத்திலேயே மாட்டி வைத்திருப்பது அல்லது மிகவும் சூடான பகுதிகளில் வைப்பது போன்றவைகளை கட்டாயம் தவிருங்கள் அத்துடன் வீட்டினுள் கணினி ஸ்பீக்கர் அல்லது ஹோம் தியேட்டர்கள் மீது பென் ட்ரைவினை வைப்பதையும் தவிர்த்து விடுங்கள்.  ஏன் என்றால் இதில் எல்லாமே காந்தசக்தி இருப்பதால் சுலபத்தில் உங்கள் டேட்டாக்கள் யூஎஸ்பி பென்ட்ரைவில் இருந்து காணாமல் போய் விடும்.   சில நேரங்களில் யூஎஸ்பி பென் ட்ரைவ் தண்ணீரில் விழுந்து விட்டால் உடனே எடுத்து துடைத்து விட்டு கணினியில் உபயோகப்படுத்தாதீர்கள்.   தண்ணீரில் விழுந்த பென் ட்ரைவினை 48 மணி நேரங்கள் கழித்தே உபயோகிக்கவும்.
 
அந்த இடைவெளியில் உங்கள் பென் ட்ரைவினை சமையல் செய்து வைத்த பாத்திரத்தில் மிதமான சூடு இருக்கும் பட்சத்தில் அதன் மேல் வைத்தால் ஓரளவு தண்ணீர் இழுக்கும் அது போல உங்கள் அரிசி வைத்திருக்கும் பாத்திரத்தில் போட்டு வைத்தால் உங்கள் பென் ட்ரைவில் இருக்கும் நீர் சுலபமாக வெளியேற்றப்படும்.  ஏன் என்றால் அரிசி நீரினை அதிகளவு உறிஞ்சும் தன்மை உடையது. 

இந்த பதிவின் மூலம் அனைவரும் தங்கள் பென்ட்ரைவ் மட்டுமல்லாமல் யூஎஸ்பி பொருட்களையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். 

உங்கள் உற்சாகமிக்க பின்னூட்டங்கள் என்னை இன்னும் புதிய பதிவுகள் எழுத ஊக்கப்படுத்தும். 

நன்றி மீண்டும் வருகிறேன்.

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை