கெட்ட பன்றிகள் விளையாட்டு மற்றும் அனைத்து பொருட்கள் வாங்க ஒரு இணையத்தளம்

நண்பர்களே மிக அதிக நாட்கள் கழித்து உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.  நிறைய நாட்கள் எழுத நேரம் இருந்தும் நம் நண்பர்கள் பலர் எழுதுவதை கவனித்து மட்டுமே வந்தேன் சில பதிவுகளுக்கு பின்னூட்டமும் இட்டிருந்தேன்.   அதை தொடர்ந்து இதோ ஒரு புதிய பதிவு எழுத்யிருக்கிறேன்.  உங்களுடைய ஆதரவும் பின்னூட்டமும் தொடர்ந்து தர வேண்டிக் கொள்கிறேன்.


விளையாட்டு அனைவருக்கும் பிடித்தமானது அதுவும் Rovio நிறுவனத்தினரால் வெளியிடப்பட்ட Angry Birds அனைவருக்கும் பிடித்து போனது குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் இணைந்து விளையாடி சந்தோசப்பட்டனர்.

அவர்களின் அடுத்த படைப்பாக செப்டம்பர் 27 அன்று புதியதொரு விளையாட்டை அறிமுகப்படுத்துகின்றனர்.  அதே Angry Birds வில்லனை வைத்து உருவாக்கப்பட்ட விளையாட்டிற்கு Bad Piggies என்ற பெயரிடப்பட்டுள்ளது.  அதுகுறித்த ஒரு வீடியோ ட்ரெய்லர் கீழே


இந்த விளையாட்டு முதலில் ஐபோன், ஆன்ட்ராய்டு, மேக் கணினிகளில் வெளியிடுகிறது.  பிறகு அனைத்து விண்டோஸ் போன்களிலும் விண்டோஸ் இயங்குதளத்திலும் வெளியிடுகிறது.



இது ஒரு ஆன்லைன் ஷாப்பிங் தளமாகும்.  பெயர் ஷாப்க்ளூஸ்  இந்த தளத்தில் பல உபயோகமான பொருட்கள் விலை குறைவாக கிடைக்கிறது.  நான் நிறைய வாங்கியிருக்கிறேன்.  அத்துடன் நீங்கள் நூறு ரூபாய்க்கு பொருள் வாங்கினல் அதில் ஒரு ரூபாய் உங்களுக்கு Clues Bucks என்ற பெயரில் திருப்பி உங்களுக்கு தருகிறார்கள்.  முயற்சி செய்து பாருங்கள்.  வாங்குமுன் நன்றாக Terms & Conditions படித்து விட்டு வாங்கவும்.




பதிவை வெளியிட்ட பிறகு ஒரு மின்னஞ்சல் ஹுசனம்மாவிடம் இருந்து தேவை சில நிமிடங்கள் என்று தலைப்பிட்டு அனுப்பியிருந்ந்தார்கள்
பதிவருக்கு ஒரு பிரச்சனை என்றால் எத்தனை பதிவர்கள் ஓடிவருகிறார்கள் என்பதற்கு ஹுசைனம்மா ஒரு சாட்சி பிரபல பதிவர் சங்கீதாவின் அக்கா பெண்ணுக்கு என்ன நோய் என்று பார்த்தால் திடீரென்று இரண்டு இரண்டாக தெரிவது தான் "Double Vision "இந்த நோய் சிலருக்கு மட்டுமே வருவதாக கூறியுள்ளார்கள்.  அத்துடன் இந்த நோயை தீர்க்க மருந்து இல்லை எனவும் அந்த நோயின் தீவிரத்தை தடுக்க மட்டுமே மருந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 
மருந்தின் பெயர்: REBIFF 44 MG
மருந்தின் விலை: 4400 /-
இந்த மருந்து இதை விட விலை குறைவாக வேறு எங்கும் கிடைத்தால் தெரியபடுத்தவும் முடிந்தால் வாங்கி அனுப்பவும்.   அந்த பெண் அந்த நோயிலிருந்து மீண்டு வர கடவுளை வேண்டுவோம்.  அத்துடன் அந்த பெண் நோயிலிருந்து மீண்டு வர உங்களால் முயன்ற பண உதவி செய்யவும் 

Benificiary Name: GEETHA SURESH
Bank Name: ANDHRA BANK
Branch Name:Adyar
A/C Number: 070310011013916

IFSC CODE:ANDB0000703
Address: Andhra Bank
ADAYAR Branch
NO 30 1st Main Road,
Gandhi Nagar, Adyar Chennai - 600 020
இது குறித்த முழு பதிவு இங்கே சுட்டி

இன்றைக்கு இவ்வளவுதான் திரும்பவும் அடுத்த பதிவில் உங்களை சந்திக்கிறேன்.

உங்கள் பின்னூட்டமும் உற்சாகமும் என்னை பலம் கொள்ள வைக்கிறது.


 நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை