425வது பதிவு இலவச மென்பொருட்கள் உங்களுக்காக

நண்பர்களே நம் கணினி திரையினை படம்பிடிக்க எத்தனையோ டூலகள் இருந்தாலும் இலவசமாக அதுவும் ஒபன் சோர்ஸ் டூல் போல வராது என்பது என் கருத்து.  ஏன் என்றால் ஒபன் சோர்ஸ் அல்லாத மென்பொருட்கள் அனைத்தும் ஒரு முறை இலவசம் தந்தாலும் அதன் பிறகு புதியதாக அப்டேட் செய்தால் கட்டாயம் அந்த புதிய மென்பொருளினை காசு கொடுத்துதான் வாங்க வேண்டும்.  அதே ஒபன் சோர்ஸ் என்றால் கட்டாயம் மேம்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.  இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம் என்பதே அதன் தனிச்சிறப்பு.
இந்த ஸ்கீரின்ஷாட் எடுக்கும் மென்பொருள் அளவு மிகச்சிறியது வெறும் 600கேபி அளவுடையது இந்த மென்பொருள்

இந்த மென்பொருளின் பெயர் Greenshot எனபதாகும்.  இந்த மென்பொருள் உபயோகித்து பாருங்கள் உங்களுக்கே தெரியும் இதன் மகத்துவம்.

இந்தமென்பொருளை தரவிறக்க சுட்டி


விண்டோஸ் 7 கணினியில் மட்டும் உபயோகப்படுத்தப்படும் 100 வகையான விண்டோஸ் 7 தீம்கள் உங்களுக்காகசுட்டி இந்த மென்பொருள் வெறும் 2.97எம்பி மட்டுமே

எந்த ஒரு வீடியோ டிவிடியில் இருந்தும் AVI, DivX, Mpeg கோப்புகளாக மாற்றும் ஒரு ஒபன் சோர்ஸ் மென்பொருள் உங்களுக்காக இந்த மென்பொருள் மிக அருமை என்று இதை உபயோகித்தவர்கள் கூறுகின்றனர்.  நான் இனிமேல்தான் உபயோகிக்க போகிறேன்.  இந்த மென்பொருள்
டிவிடியில் இருந்து Xvid/Divx, MPEG-4, H.264/AVC, QuickTime, Flash Video, Ogg, WebM, AC.3, MP3, MP4/AAC  போன்ற கோப்புகளாக மாற்ற முடியும்.

மென்பொருள் தரவிறக்க சுட்டி

பல வேலைகளுக்கு நடுவில் அனைவருக்கும் உதவும் மிக உன்னதமான மென்பொருட்கள் அறிமுகப்படுத்துகிறேன்.  அதை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டியது உங்கள் கடமை.  உங்களுடைய பின்னூட்டங்களும் என்னை ஊக்கப்படுத்தும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.  இந்த பதிவு என்னுடைய 425வது பதிவாகும்.


நன்றி மீண்டும் வருகிறேன்

18 ஊக்கப்படுத்தியவர்கள்:

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

Recent Post

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

என்னைப் பற்றி

My photo

System Administrator  Part time Blogger

இதுவரை பதிவு செய்தவை