சட்டரீதியான பிடிஎப் ஜில்லா மற்றும் காஸ்பர்ஸ்கை இண்டெர்நெட் செக்யூரிட்டி இலவசம்

நண்பர்களே பொங்கல் விடுமுறையை அனைவரும் கொண்டாடியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.  புதிய படங்களை நிறைய பேர் பார்த்து இருப்பீர்கள் அதை விமர்சனமும் எழுதி இருப்பீர்கள்.  நாமும் நம் பங்குக்கு புதிய மென்பொருட்களை அதுவும் சட்டரீதியான மென்பொருட்களை அறிமுகபடுத்தவும் வந்து விட்டேன்.  அத்துடன் என் உடல்நலம் தேற பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி. 

பிடிஎப் உபயோகிப்பாளர்கள் தினமும் நிறைய மென்பொருட்கள் நிறுவி இருப்பார்கள்.  பிடிஎப் கோப்பிலிருந்து வேர்டு, இமெஜ், அனிமேஸன் SWF கோப்பாக மாற்ற என்று நிறைய நிறுவி வன்தட்டில் இடம் அதிகமாக ஆக்கிரமித்திருக்கும்.  இதற்கெல்லாம் ஒரெ மென்பொருளாக இருந்தால் சுலபமாக இருக்காது. 

இதற்கான ஒரே தீர்வாக பிடிஎப் ஜில்லா என்று ஒரு மென்பொருள் உள்ளது இது $29.95 விலையுள்ள மென்பொருள் இப்பொழுது இலவசமாக தரப்படுகிறது.   மென்பொருளை தரவிறக்க சுட்டி

இந்த சலுகை எவ்வளவு நாள் நீடிக்கும் என்று உறுதியாக கூற முடியாது உடனே உபயோகித்துக் கொள்ளுங்கள்.


மைக்ரோசாப்ட் மேதமேடிக்ஸ்
கணக்கு என்றாலே நிறைய பேர் காததூரம் ஒடி விடுவார்கள்.  அது போன்ற கணக்கை கண்டு பயப்படுபவர்கள் மைக்ரோசாப்ட் வழங்கும் மென்பொருள் கொண்டு சுலபமாக கணக்கு போடலாம்.  இந்த மென்பொருள் முக்கியமாக மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.  இந்த மென்பொருள் மூலம் சுலபமாக அனைத்து வகை கணக்குகளையும் போட முடியும்.  இந்த மென்பொருளின் பெயரே மேதமேடிக்ஸ் தான்.  இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி


 காஸ்பர்ஸ்கை இண்டெர்நெட் செக்யூரிட்டி  2011 - 1 வருடத்திற்கு இலவசம்
காஸ்பர்ஸ்கை இண்டெர்நெட் செக்யூரிட்டி எப்பொழுதும் இந்தியாவில் மட்டும் இலவசமாக தர கூடாது என்று ஏதாவது சபதம் எடுத்துள்ளார்களா என்று தெரியவில்லை.  அனைத்து நாடுகளிலும் அவ்வப்பொழுது இலவசமாக தருகிறார்கள்.  
இங்கு கூட பொங்கலுக்கும் தீபாவளிக்கும் போனஸ் கொடுப்பது போல இலவசமாக காஸ்பர்ஸ்கை தங்கள் மென்பொருளை தரலாம்.  இதோ இந்த ஸ்பானிய வலைத்தளத்திலும் ஒரு வருடத்திற்கு இலவசமாக தருகிறார்கள்.  முடிந்தால் முயற்சி செய்து பார்க்கலாம். மற்ற நாட்டு நண்பர்கள்.  வலைத்தள சுட்டி இந்த வலைத்தளத்தினை கூகிள் ட்ரான்ஸ்லேட்டர் மூலம் மாற்றிய பிறகு வந்தது சுட்டி

 


ஒரு அறிவிப்பு 

இந்த வலைத்தளம் மூலம் எனக்கு எதுவும் எந்த ஆதாயமும் கிடைக்காமல் இருந்த நேரத்தில் தமிழ் கம்ப்யூட்டர் நிறுவனம் மட்டுமே எனக்கு சிறு உதவி செய்து வருகிறது.  என் படைப்புகளை வெளியிட்டு அதன் மூலம் வரும் சிறு தொகையை எனக்கு அளித்து வருகின்றனர்.    நானும் கஷ்டப்பட்டு தான் இந்த பதிவுகளை எழுதுகிறேன்.  அதனால் நான் எழுதும் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் உபயோகமானவை என்றே நம்புகிறேன்.  இவ்வாறிருக்கையில் வரும் நண்பர்கள் என் வலைத்தளத்தில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்து பார்ப்பதன் மூலம் என்னால் மாதம் ஒரு சிறு தொகையை ஈட்ட முடியும் என்று நம்புகிறேன்.  ஆகையால் பதிவுகளை படிக்கும் நண்பர்கள் விளம்பரங்களை கிளிக் செய்து வருவாயை ஈட்ட உதவி செய்ய வேண்டுகிறேன். உதவுங்கள் இன்னும் தரமான ஆக்கங்களை உருவாக்க உதவுங்கள்.  அத்துடன் இந்த பதிவுகள் தரமுள்ளதாக இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் இதனை பற்றி தெரியபடுத்துங்கள்.  அனைத்து திரட்டிகளிலும் நீங்கள் போடும் ஒட்டுகளினால் இன்னும் உலகம் முழுக்க தமிழர்கள் அனைவருக்கும் போய்ச் சேர வாய்ப்பு கிடைக்கும். 


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை