நண்பர்களே உங்களிடம் உள்ள பிடிஎப் கோப்புகளை வேர்ட் கோப்பிற்கு மாற்ற மிகவும் சுலபமான மென்பொருள் PDF TO Word Converter இந்த மென்பொருள் சட்டரீதியான மென்பொருள் பாக்ஸாப்ட் நிறுவனத்திலிருந்து வெளி வந்துள்ளது இந்த மென்பொருளை தரவிறக்க இங்கே செல்லவும் சுட்டி
உங்கள் கணினியில் உள்ள Vulnerable அதாவது தீங்கு நிரல்கள் மற்றும் பழைய மென்பொருட்கள் காலவாதியான மென்பொருட்கள் மூலம் சில நேரங்களில் உங்கள் கணினி பாதிக்க வாய்ப்பு உள்ளது அந்த மாதிரி நேரங்களில் இந்த மென்பொருள் மூலம் உங்கள் கணினியை ஆராய்ந்தால் உங்கள் கணினியில் Vulnerable மென்பொருட்கள் மற்றும் கோப்புகளை கண்டறிந்து நீக்கிவிடும். இந்த மென்பொருள் பிசிவேர்ல்ட் மற்றும் ஜிடிநெட் பத்திரிக்கை நிறுவனத்தினர் பரிந்துரைத்துள்ளனர். மிகவும் வேகமான மற்றும் சுலபமான மென்பொருள் இது ஒவ்வொரு கணினியிலும் இருக்க வேண்டியது என்று கூறியுள்ளார்கள். இந்த மென்பொருளின் பெயர் பிஸிசெக்யூனியா இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி
இந்த நேரத்தில் ஒரு முக்கிய விஷயத்திற்காக பாரட்ட வேண்டியது உள்ளது. அதுதான் மைக்ரோசாப்ட் நிறுவனம் துவக்கப்பட்டு சரியாக இந்த வருடத்தோடு 25 வருடம் முடிகிறது. விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டு மூன்று ஆண்டுகள் கழித்துதான் விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது. இப்பொழுது விண்டோஸ் 7 வெளியிடப்பட்டு சக்கை போடு போடுகிறது. அத்துடன் இவர்கள் வெளியிட்ட விண்டோஸ் எம் இ மற்றும் விண்டோஸ் விஸ்டா மட்டுமே தோல்வியுற்றது.
விண்டோஸ் முதல் பதிப்பின் படம் கீழே
அடுத்த மாதம் டிசம்பர் மாதம் கிறிஸ்தவ நண்பர்கள் மட்டுமல்ல உலகெமே எதிர்பார்க்கும் நன்னாள் கிறிஸ்து அவதரித்த தினம் வர போகிறது. அனைவரும் உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு கட்டாயம் ஒரு பரிசு கொடுப்பீர்கள் பரிசின் மேலே லேபிள் கடைகளில் கிடைக்கும் இருந்தாலும் இந்த வலைத்தளத்தில் இருந்து எடுத்து ஒட்டி பாருங்களேன் கிறிஸ்துமஸ் லேபிள் எடுக்க சுட்டி
நீங்கள் படிக்கும் பதிவு நாலு பேரிடம் செல்ல வேண்டுமென்றால் கட்டாயம் அனைத்திலும் ஒட்டு போடுங்கள் உங்களை போல பலரும் தமிழில் தொழில்நுட்பத்தையும் அரிய வலைத்தளங்களையும் அறிந்து கொள்ளட்டும். ஆகையால் கட்டாயம் ஒட்டு போடவும்.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...